|
ஒரு புதிய வரலாற்றின்
துவக்கம்!
பேரா. பிரபாத்
பட்நாயக்
“வால்ஸ்டிரீட்டை
ஆக்கிரமிப்போம்”
எனும் மாபெரும்
போராட்டம், அமெரிக்காவின்
மக்கள் தொகையில்
மூன்றில் இரண்டு
பங்கி னருடைய ஆதரவோடு
நடந்துவருகிறது. சர்வதேச அளவில்
இந்த இயக்கம் ஏற்படுத்தி
யுள்ள தாக்கம்
குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா விலேயே
ஏறத்தாழ 100 நகரங்களிலும்,
உல கின் பிற பகுதிகளில்
உள்ள எண்ணற்ற நகரங்களிலும்,
இந்த இயக்கம் அந்தந்த
நகரங் களின் பொருளாதார
மற்றும் வாழ்க்கைத்
தரத் திற்கு ஏற்றவாறு
தன்னை தகவமைத்துக்
கொண்டு பரவியுள்ளது.
தனக்கென ஒரு
சொந்த வடிவினைக்
கொண்டுள்ளது.
ஆனால், இந்த இயக்கத்தின்
முக்கியத் துவம்
என்பது, வெறுமனே
எத்தனை பேர் இந்த
இயக்கத்தின் கீழ்
அணி திரண்டு வரு
கின்றனர் என்பதிலோ
அல்லது எந்தச்
சூழ லில் இருந்து
அல்லது பின்னணியில்
இருந்து வந்துள்ளனர்
என்பதிலோ இல்லை.
மாறாக, சமீபத்திய
மக்கள் எழுச்சிகளில்
இருந்து இது மாறுபட்டு
நிற்பதற்கு மூன்று
முக்கியமான, தெளிவான
காரணங்கள் உள்
ளன. இந்த காரணங்களினாலேயே
இந்த இயக்கம்,
வரலாற்று ரீதியாக
முற்றிலும் ஒரு
புதிய எதிர்ப்பியக்கமாக,
அறவழி எதிர்ப்பின்
ஒரு புதிய துவக்கமாக
உள்ளது.
முதல் அம்சம்
முதலாவதாக இந்த
இயக்கம் ஒட்டு
மொத்த முதலாளித்துவ
அமைப்பு முறைக்கு
சவாலாக அமைந்துள்ளது.
சமீபத்திய காலங்
களில் பல வருடங்களாக
நடைபெற்று வரும்
மக்கள் எதிர்ப்பியக்கங்கள்
அல்லது எழுச்சி
கள் பொதுவாக சில
குறிப்பிட்ட பிரச்சனைகள்
சார்ந்ததாக, அல்லது
குறிப்பிட்ட சில
திட்டங்களுக்கு
எதிரானதாக, அல்லது
சில குறிப்பிட்ட
கொள்கைகளுக்கு
எதிரான தாகவே அமைந்துள்ளன.
உதாரணத்திற்கு
நமது நாட்டை எடுத்துக்கொண்டோமானால்,
சிறப்புப் பொருளாதார
மண்டலங்களை எதிர்த்த
எதிர்ப்பியக்கங்கள்,
அல்லது போஸ் கோ
நிறுவனத்தை எதிர்த்த
இயக்கங்கள், அணு
உலைகளுக்கு எதிரான
இயக்கங்கள் அல்லது
வன உரிமைகளுக்கான
இயக்கங் கள் அல்லது
பழங்குடியின மக்களின்
நலன் களை பாதுகாப்பதற்காக
இயக்கங்கள் அல்
லது நில அபகரிப்பிற்கு
எதிரான இயக்கங்கள்
என்று பல்வேறு
இயக்கங்கள் நடைபெற்று
வந்துள்ளன.
இந்த எதிர்ப்பியக்கங்கள்
ஒருபோதும் ஒட்டுமொத்த
முதலாளித்துவ
அமைப்பு முறைக்கு
எதிரானதாக அமையவில்லை.
இப் போராட்டங்கள்
முதலாளித்துவ
அமைப்பு முறைக்கு
அச்சுறுத்தல்
விளை விக்கும்
அள விற்கு வீரியமானவையாக
அமையவில்லை. அதன்
காரணமாக, முதலாளித்துவ
அமைப்பு முறையானது
சிலவற்றை இந்த
பக்கம் மறைத்துக்கொண்டு,
அந்தப் பக்கம்
பேச்சு வார்த்தை
நடத்திக்கொண்டு,
ஏதேனும் ஒரு தீர்வினை
எட்டிக்கொண்டு
தன்னுடைய இருப்பினை
உறுதிசெய்து கொண்டது.
ஆனாலும், தனக்கு
சவாலாக அமைந்த
இப் படிப்பட்ட
எதிர்ப்பியக்கங்களை
ஒரு போதும் முதலாளித்துவம்
வரவேற்றது இல்லை.
விரும்புவதும்
இல்லை.
கடந்த நூற்றாண்டில்
பெரும் பகுதி முத
லாளித்துவம், சோஷலிசம் , தொழிலாளி
வர்க்க சர்வாதிகாரம்,
காலனியாதிக்கத்தி
லிருந்து விடுதலை
என “பெரும் பெரும்
நிகழ் வுகள்” நிறைந்த
காலகட்டமாக இருந்தது.
ஆனால், தற்போது
இவை எதுவும் இல்லாத,
“பின் நவீனத்துவக்”
காலகட்டத்தில்
நுழைந் துள்ளதாக
நம்பப்படுகிறது.
இது அடிப்படை
யில் எதனைக் குறிக்கிறது
என்றால், தற்போ
தைய காலகட்டம்
என்பது முதலாளித்துவத்
தின் இறுதி வெற்றியினை
ஏற்றுக்கொண்ட
காலகட்டமாகக்
கருதப்படுகிறது.
உலக அளவில் சமீபத்திய
பிரபலமான போராட்டங்கள்
எல்லாம், முதலாளித்துவ
அமைப்பு முறை அந்த
குறிப்பிட்ட பகுதியில்
கொஞ்சம் நல்லவிதமாக
செயல்படவேண் டும்
என்பதற்காக, அல்லது
இந்த சமூகத்தில்
மிகவும் பரிதாபகரமான
நிலையில் உள்ள
ஏழைகள் மற்றும்
“ஒதுக்கப்பட்ட
மக்கள்” இந்த முதலாளித்துவ
அமைப்பு முறைக்குள்
ளேயே மனிதத் தன்மையுடன்
நடத்தப்பட வேண்டும்
என்பதற்காக நடத்தப்படும்
இயக் கங்களாகவே
அமைந்துள்ளன.
இதற்கெல்லாம்
நேர் எதிர்மாறாக
“வால்ஸ்டிரீட்டை
ஆக்கிரமிப்போம்”
என்ற இந்த இயக்கம்,
மேற்கூறிய மாதிரியான
எந்த வொரு பிரத்யேகமான
கோரிக்கைகளையும்
கொண்டதாக இல்லை.
இன்னும் சரியாகச்
சொல்லப்போனால்,
இந்த இயக்கம் ஒட்டு
மொத்தமாக முதலாளித்துவ
அமைப்பு முறையை
மறுதலிக்கும்
ஒரு எழுச்சியாகக்
கொள்கை அளவில்
அமைந்துள்ளது
என்பது தான்.
இந்த மறுதலிப்பு
என்பது விஞ்ஞானப்
பூர்வமான ஒரு சிக்கலான
விவாதப் பொரு ளின்
அடிப்படையில்
எழுந்ததல்ல. இது
உணர்வுகளின் அடிப்படையில்
எழுந்த இயக்கம்
மட்டுமே. முதலாளித்துவ
அமைப்பு முறையின்
அனைத்துவிதமான
சட்ட திட்டங் களையும்
எதிர்க்கக்கூடியவர்களை
பிரதி நிதித்துவப்படுத்துவதாக
இவர்களது போராட்
டம் அமைந்துள்ளது.
மீண்டும் “பெரும்
போராட்ட நிகழ்வுகளின்”
காலம் திரும்பி
வரு கிறது என்பதுதான்
இந்த எழுச்சியின்
பொருள்.
இந்த “ஆக்கிரமிப்பாளர்கள்”
ஒட்டு மொத்த முதலாளித்துவ
அமைப்பு முறையை
தொடர்ந்து ஏற்றுக்கொள்வதை
கேள்விக்குள்
ளாக்கி, அதனை விவாதப்
பொருளாக்கியுள்
ளனர். அவர்கள்
முதலாளித்துவ
கட்டமைப்பு முறைக்குள்ளேயேயான
ஒரு கோரிக்கைக்
காகப் போராடவில்லை.
மாறாக, ஒட்டுமொத்த
மாக முதலாளித்துவ
அமைப்புமுறையையே
மறுதலிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட
கொள்கை ரீதியான
மறுதலிப்பு என்பதுதான்
எந்தவொரு அமைப்பிற்கும்,
சோஷலிசம் உட்பட,
தடை களை மீறிச்செல்லத்
தேவையான ஆரம்பப்
புள்ளியாக அமையும்.
“ஆக்கிரமிப்பாளர்களின்”
இந்த இயக்கம் சோஷலிச
அல்லது மார்க்சியக்
கொள்கை யால் கவரப்பட்டு,
அதன் தாக்கத்தின்
காரண மாக எழுந்ததல்ல
என்பது உண்மைதான்.
என்றாலும், மார்க்சியத்தின்
வலிமை அதன் உண்மைத்
தன்மையில் உள்ளது
என்பது உறு தியான
ஒன்றாக இருப்பதால்,
இந்த இயக் கமும்
முதலாளித்துவ
அமைப்பு முறையை
மறுதலிக்கும்
தனது கொள்கை முடிவில்
உறுதியாக இருக்கும்பட்சத்தில்,
நிச்சயமாக ஒரு
காலகட்டத்தில்
மார்க்சியத்துடன்
ஒத் துப்போக வேண்டிய
தேவை ஏற்படும்.
தன் னுடைய பாதையில்
மார்க்சியப் பார்வையை
ஏற்றுக்கொள்ள
வேண்டிய அவசியமும்,
தன்னை பொருத்தமாக
தகவமைத்துக் கொள்ளவேண்டிய
சூழலும் இவ்வியக்கத்
திற்கு ஏற்படும்.
அதற்காக ஒட்டுமொத்த
“வால்ஸ்டிரீட்டை
ஆக்கிரமிப்போம்”
இயக் கமும் இந்தத்
திசை வழியில் தன்னை
தக வமைத்துக் கொள்ளும்
என்று சொல்ல வர
வில்லை. ஆனால்,
எப்போது இந்த எழுச்சி
முதலாளித்துவ
அமைப்புமுறையை
மறு தலிக்கக்கூடிய
ஒரு கொள்கை ரீதியான
போராட்டமாகத்
துவங்கி, முதலாளித்துவ
அமைப்பு முறையைவிட்டு
விலகி நகரத் துவங்கியதோ,
அப்போதே இது ஒரு
புதிய வரலாற்றின்
துவக்கமாக உள்ளது
என் பதையே இங்கு
சுட்டிக்காட்டுகிறோம்.
இதற் கான அடிப்படை
என்பது 2008ம் ஆண்டு
ஏற் பட்ட முதலாளித்துவ
நெருக்கடி யில்
இருந்து வந்தது.
ஆனால் அதற்கான
விழிப் புணர்வு
என்பது தற்போதைய
இந்த “வால்ஸ் டிரீட்டை
ஆக்கிரமிப்போம்”
இயக்கத்தில் இருந்துதான்
எழுந்துள்ளது.
இரண்டாவது அம்சம்
இந்த எழுச்சியின்
இரண்டாவது முக்கிய
மான அம்சம் என்னவென்றால்,
தார்மீக “நெறி
முறை” என்பதைத்
தாண்டி, “சொத்து”
என் பதை இந்த இயக்கம்
கேள்விக்குள்ளாக்கி
யுள்ளது. பன்னாட்டு
நிதி மூலதனத்தின்
மையமான வால்ஸ்டிரீட்டை
முற்றுகையிடு
வது என்பதே, இந்த
எழுச்சி நிதி மூலதனத்
தின் மீதான தாக்குதல்
என்பதற்கான அடையாளமே.
நிதி மூலதனத்தின்
மீதான தாக்குதல்
என்பதும், முதலாளித்துவத்திற்
குரிய சொத்தின்
மீதான தாக்குதல்
என்பதும் ஒரே பொருளுடையதல்ல
என்பது உண் மையே.
ஆனாலும், வளர்ச்சியடைந்த
முதலா ளித்துவத்தின்
உச்சபட்ச வடிவத்தை
பிரதி நிதித்துவப்படுத்துவதாக
சம காலத்திய நிதி
மூலதனம் உள்ளது
என்ற உண்மையின்
அடிப் படையில்,
தற்போதைய நிதி
மூலதனத்தின் மீதான
தாக்குதல் என்பது
சம காலத்திய முத
லாளித்துவத்தின்
மீதான தாக்குதலையே
குறிக்கிறது. எனவே இது முதலாளித்
துவத்தின் மீதான
தாக்குதலே ஆகும்.
சமகாலத்திய முதலாளித்துவ
அமைப்பு முறை கட்டாயமாக
இது போன்ற தடைகளில்
இருந்து தன்னை
தற்காத்துக்கொள்ளத்
தேவையான நடவடிக்கைகளை
எதிர்ப்பு இயக்கங்களுக்கு
எதிராக அவிழ்த்துவிடும்.
அதற்கும் மேலாக,
நிதி முதலாளித்துவத்
திற்கு முந்தைய
முதலாளித்துவ
வடிவத் திற்குத்
திரும்புவதன்
மூலம் ஏதேனும்
ஒரு ஒப்பந்த நடவடிக்கைக்குக்கூட
தயாராகும், ஆனால்,
இந்த புராதன முதலாளித்துவம்
தான் நிதி முதலாளித்துவ
அமைப்புமுறைக்
குக் காரணமானது
என்பதையும், இந்த
நிதி முதலாளித்துவ
அமைப்பு முறை முத
லாளித்துவ அமைப்பு
முறையில் தவிர்க்க
முடியாதது என்பதையும்
நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
சுருக்கமாக சொல்வ
தென்றால், நிதி
முதலாளித்துவ
அமைப்பு முறையின்
மீதான தாக்குதலின்
உள்ளார்ந்த அம்சம்
என்பது, முதலாளித்துவத்திற்குரிய
சொத்துக்களை தாண்டிய
ஒரு புதிய அமைப்பு
முறைக்கான உறுதிமொழி
என்பதாகும்.
“வால்ஸ்டிரீட்டை
ஆக்கிரமிப்போம்”
என்ற இந்த இயக்கம்
தார்மீக “நெறி
முறையை” தாண்டிச்
சென்றுள்ளது என்பதற்
காக, அது எந்த நெறிமுறையாலும்
எழுச்சியூட் டப்படவில்லை
என்று சொல்ல முடியாது.
உண்மையில்
இது மிக வலிமையான
நெறி முறை உள்ள
இயக்கமாகும்.
கடந்தகால குரல்
களின் எதிரொலி
ஏதேனும் இந்த இயக்கத்
தில் இருக்குமானால்,
அவை மார்ட்டின்
லூதர் கிங் மற்றும்
மகாத்மா காந்தியின்
குரல்களாக இருக்கும்.
ஆனால், மார்ட்டின்
லூதரோ அல் லது
மகாத்மா காந்தியோ
முதலாளித்துவத்திற்
குரிய சொத்தினை
கேள்விக்குள்ளாக்க
வில்லை. ஆனால்
இந்த இயக்கம் மிகச்
சரியாக முதலாளித்துவத்திற்குரிய
சொத் தினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
“நெறிமுறையை”
தாண்டி “சொத்து”
மீதான தாக்குதல்
என்பதற்கான நல்ல
உதா ரணத்தை நமது
நாட்டிலேயே காணலாம்.
2 ஜி ஸ்பெக்ட்ரம்
வழக்கில் உள்ள
“ஊழல்” என் பதும்,
ஒரு அரசு அலுவலகத்தில்
வேலை பார்க்கும்
ஒரு ஊழியர், ஒரு
ஆவணத்தை ஒரு இடத்தில்
இருந்து இன்னொரு
இடத் திற்கு நகர்த்த
லஞ்சத் தொகையாக
ரூ.50 கேட்பதும்
ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
அப் படியானால்,
இந்த இரண்டிலுமே
“நெறி முறை” என்பதுதான்
“சொத்தை”விட அதிக
மாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது
என் பது தெரிகிறது.
இப்படி சொல்வதனால்
“நெறி முறை” குறித்த
அக்கறை என்பது
தவறானது என்று
பார்க்க வேண்டியதில்லை.
அல்லது ஒரு
பைலை நகர்த்த ரூ.50
கேட்பது கண்டிக்
கத்தக்கதல்ல என்று
சொல்லவில்லை.
மாறாக, 2ஜி ஸ்பெக்ட்ரம்
ஊழலில் எப்படி
மறைமுகமாக சொத்துரிமை
தொடர்பான கேள்வி
இருந்ததோ, அதேபோன்ற
கேள்வி தான் ரூ.50
லஞ்சமாகக் கேட்பதிலும்
உள்ளது என்று சொல்கிறோம்.
எனவே, தற்போதைய
தேவை என்பது “நெறிமுறை”
என்பதைத் தாண்டி
“சொத்துரிமை” என்ற
கட்டமைப்பின்
உள்ளார்ந்த தன்மையை
நோக்கி இந்தியப்
போராட்டங்கள்
நகர வேண்டியுள்ளது.
முதலாளித்துவ
சொத்தின் மீதான
தாக்குதல்
சமகாலத்திய இந்தியாவில்
இதுவரை எழுந்த
எந்தவொரு மிகப்பெரிய
எழுச்சி இயக் கமும்,
தப்பித் தவறிகூட
முதலாளித்துவத்திற்
குரிய சொத்துரிமை
பற்றி கேள்வியை
எழுப்ப வில்லை.
அதேநேரத்தில்
அமெரிக்காவில்
இதுபோன்ற தார்மீக
நெறிமுறைகளின்
அடிப் படையில்
எழுந்த இயக்கம்
“சொத்து” குறித்த
கேள்வியினை நேரடியாக
எழுப்புகிறது.
இது ஏன் என்ற
கேள்விக்கு இந்த
இரண்டு நாடு களின்
வெவ்வேறு அரசியல்,
சமூக, பொருளா தாரச்
சூழலைப் பொறுத்து
விடை கிடைக்கும்.
அமெரிக்காவைப்
பொறுத்தவரையில்,
அங்கு தற்போது
வேற்றுமை என்பது
மொத்த மக்கள் தொகையில்
ஒரு சதமானம் உள்ள
செல்வந் தர்களுக்கும்,
மற்றும் நெருக்கடியினால்
பாதிக்கப்பட்டுள்ள
மீதி 99 சதமான நடுத்தர
மற்றும் இதர பகுதி
மக்களுக்கும்
இடையில் எழுந்துள்ளது.
அதேநேரம் இந்தியாவைப்
பொறுத்தவரையில்,
நமது மக்கள் தொகையில்
கணிசமாக முக்கிய
அங்கம் வகிக்கும்
நடுத் தர வர்க்கத்தின்
ஒரு பகுதியினர்
சமீப கால மாக நல்ல
பொருளாதார நிலையில்
உள்ளனர். அதனால்,
அவர்கள் இன்னும்
எதிர்ப்பியக்கங்
களுக்குத் தயாராக
இல்லை. ஒரு
சதமான பிரி வினரின்
“நெறிமுறை” என்பதில்
இருந்து “சொத்துரிமை”
பற்றிய கேள்வி
என்பது வேறா னது
என்ற புரிதலின்
அடிப்படையில்
அவர் கள் போராடத்
தயாராக இல்லை.
மூன்றாவது அம்சம்
கார்ல் மார்க்ஸ்
முதலாளித்துவத்திற்கு
எதிரான மனப்போக்கு
அல்லது சிந்தனை
என்பது முதலில்
தொழிலாளர்கள்
மத்தியில் தான்
எழும் என முன்னரே
கூறியுள்ளார்.
இதற்கு தொழிற்சங்க
இயக்கம் மற்றும்
அதன் நடவடிக்கைகள்
சரியான உதாரணம்.
மேலும் அவர் இப்படிப்பட்ட,
முதலாளித்துவத்திற்கு
எதிரான சிந்தனைப்
போக்கு, முதலாளித்துவ
அமைப்பு முறையின்
அரசமைப்பின் தன்
மையை புரிந்துகொள்ளக்கூடியதாக
மாற வேண்டும் என்பதில்
மிகுந்த அக்கறை
கொண்டிருந்தார்.
“தத்துவத்தின்
வறுமை” என்ற நூலில்,
முதலாளித்துவ
அமைப்பு முறைக்குப்
பின்னால் முதலாளித்துவ
அரச மைப்புமுறை
நின்று, அதனை தாங்கிப்
பிடித் துக்கொண்டுள்ளது
என்பதனை தொழிலாளர்
கள் தங்கள் அனுபவங்களின்
மூலம் உணர் கின்றனர்
என்று கூறியுள்ளார்.
நிதி மூலதனத்திற்கு
எதிரான எந்தவொரு
எதிர்ப்பிற்கும்
முன்பு, முதலாளித்துவ
அரச மைப்பு முறைக்கு
எதிரான எதிர்ப்பு
இருக்கும். இதுதான் சமகாலத்தில்
உள்ள முதலாளித்
துவ அமைப்பு முறைக்கு
தரச்சான்றாக அமைகிறது.
ஆனாலும் பல
நேரங்களில் முதலாளித்துவத்திற்கு
எதிரான எதிர்ப்பு
என்பது எழாமலே
உள்ளது என்பது
நாம் கவ னிக்க
வேண்டிய அம்சமாக
உள்ளது. உதார
ணமாக “வால்ஸ்டிரீட்டை
ஆக்கிரமிப்போம்”
என்ற இயக்கத்திற்கு
தற்போதைய “அரேபிய
எழுச்சி” என்பதும்
ஒரு உந்துசக்தியாக
அமைந்தது என்பது
கவனிக்கத்தக்கது.
ஆனால், இந்த
அரேபிய எழுச்சியில்
எதிர்ப் புகள்
என்பது, மிகப்பெரும்பாலும்
ஆட்சியி லிருக்கும்
அரசுகளுக்கு எதிரானதாகவே
இருந்தது என்பது
கவனிக்கத்தக்கது.
ஆனால், இந்த
எதிர்ப்புகள்
இந்த அரசு களுக்குப்
பின்னால் உள்ள
நிதி மூலதனத் திற்கு
எதிரான எதிர்ப்புகளாக
அமைய வில்லை.
எனவேதான், ஏகாதிபத்தியம்
மிக எளிதாக இதுபோன்ற
பிரபலமான பெரும்
எழுச்சிகளை ஊடுருவித்
தாண்டி நிற்க முடி
கிறது. ஆனால்,
இதற்கு நேர்எதிர்மாறாக
“வால்ஸ்டிரீட்
ஆக்கிரமிப்பு”
இயக்கம் நேரடியாக
நிதி மூலதனத்தை
குறிவைத்துத்
தாக்கு கிறது.
மேலும் இந்த
இயக்கம், திரைமறை
விற்குப் பின்னால்
அமெரிக்க மற்றும்
பிற அரசுகள் நிதி
மூலதனத்துடன்
கொண்டுள்ள நெருக்கத்தினை
ஊடுருவிச் சென்றுள்ளது.
இது குறிப்பிடத்தகுந்த
சாதனையாகும்.
“வால்ஸ்டிரீட்டை
ஆக்கிரமிப்போம்”
இயக்கத்திற்கு
எந்தவொரு அஜெண்டாவும்
இல்லை, தெளிவான
யுத்த தந்திரம்
இல்லை, அதில் முதலாளித்துவ
அமைப்பு முறையை
அச்சுறுத்தக்கூடிய
எந்தவொரு சவாலும்
இல்லை, எனவே “ஒன்றும்
இல்லாத இயக் கம்”
என்ற அடிப்படையில்
புறந்தள்ளிவிடக்
கூடியது என்று
கருதப்படுகிறது.
இருந்தபோதிலும்,
ஆண்டு கொண்டிருக்கும்
நிதி மூலதனத்திற்கு
எதிரான ஒரு புதிய
எழுச்சி அலையின்
முதல் அடையாளமாக
இது அமைகிறது.
“வரலாற்றின்
முடிவில்” நாம்
நிற்பதற்குப்
பதிலாக, ஒரு புதிய
வரலாற்றின் துவக்கத்தில்
நாம் தற்போது இருக்கிறோம்.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி
(அக்.31-நவ-6)
தமிழில்:
ஆர்.எஸ்.செண்பகம்,
திருநெல்வேலி
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம
MBBS(Srilanka)
Phd(Liverpool,
UK)
'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........'
(முறிந்த
பனை நூலில் இருந்து)
(இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்)
Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call.
From: Broken Palmyra
வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம்
(சாகரன்)
புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம்
பிரபாகரனுடன்
இறுதி வரை இருந்து
முள்ளிவாய்கால்
இறுதி சங்காரத்தில்
தப்பியவரின் வாக்குமூலம்
தமிழகத்
தேர்தல் 2011
திமுக,
அதிமுக, தமிழக
மக்கள் இவர்களில்
வெல்லப் போவது
யார்?
(சாகரன்)
என் இனிய
தாய் நிலமே!
தங்கி
நிற்க தனி மரம்
தேவை! தோப்பு அல்ல!!
(சாகரன்)
இலங்கையின்
7 வது பாராளுமன்றத்
தேர்தல்! நடக்கும்
என்றார் நடந்து
விட்டது! நடக்காது
என்றார் இனி நடந்துவிடுமா?
(சாகரன்)
வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010
(சாகரன்)
பாராளுமன்றத்
தேர்தல் 2010
தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி
1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்......
நடந்த
வன்கொடுமைகள்!
(fpNwrpad;> ehthe;Jiw)
சமரனின்
ஒரு கைதியின் வரலாறு
'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்...
மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும்
(சாகரன்)
இலங்கையில்
'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம்
(சாகரன்)
ஜனாதிபதி
தேர்தல்
எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்?
பத்மநாபா
ஈபிஆர்எல்எவ்
ஜனாதிபதித்
தேர்தல்
ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்)
சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள்
(சேகர்)
அனைத்து
இலங்கைத் தமிழர்களும்
ஒற்றுமையான இலங்கை
தமது தாயகம் என
மனப்பூர்வமாக
உரிமையோடு உணரும்
நிலை ஏற்பட வேண்டும்.
(m. tujuh[g;ngUkhs;)
தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு
ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா?
(சாகரன்)
ஜனவரி இருபத்தாறு!
விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....?
(மோகன்)
2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!!
'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்'
(சாகரன்)
சபாஷ் சரியான
போட்டி.
மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா.
(யஹியா
வாஸித்)
கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்!
(சதா. ஜீ.)
தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை
மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா?
(சாகரன்)
கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும்
(சாகரன்)
சூரிச்
மகாநாடு
(பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி
(சாகரன்)
பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!!
(மோகன்)
தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு
பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல்
(சாகரன்)
இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம்
(சாகரன்)
ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும்
(சாகரன்)
அடுத்த
கட்டமான அதிகாரப்பகிர்வு
முன்னேற்றமானது
13வது திருத்தத்திலிருந்து
முன்னோக்கி உந்திப்
பாயும் ஒரு விடயமே
(அ.வரதராஜப்பெருமாள்)
மலையகம்
தந்த பாடம்
வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா?
(சாகரன்)
ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.!
(அ.வரதராஜப்பெருமாள்)
|