|
||||
|
ஐரோப்பாவும் அமரிக்காவும்
எந்தக் கணத்திலும்
சரிந்து விழலாம்(இரண்டாம்
பகுதி)
(சபா நாவலன்) முன்னைய
பகுதியின் தொடர்ச்சி:
ஐரோப்பாவும் அமரிக்காவும்
எந்தக் கணத்திலும்
சரிந்து விழலாம்(1) இன்று
ஏகாதிபத்திய நாடுகள்
தமது அழிவிற்கான
நாட்களை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது. அழிந்து
போவதற்கு இன்னமும்
பத்து வருடங்கள்
காத்திருக்க வேண்டிய
அவசியமில்லை என்ற
நிலை உருவாகிவிட்டது.புற்று
நோய் பீடித்த நோயாளி
போன்று மரணம் நிரந்தரமாகிவிட்டது.
நாட்கள் கணக்கிடப்படுகின்றன. மரணப்படுக்கையிலும்
உலகின் ஒவ்வொரு
மனிதனையும் மிரட்டிவருகின்ற
ஏகபோகங்கள் சரிந்து
விழுவதற்கு இன்னும்
ஐந்து ஆண்டுகள்
அதிகமானதே. முதலாளித்துவத்தின்
வெற்றியென மார்தட்டிக்கொண்ட
ஐரோப்பிய ஒன்றியத்தின்
யூரோ இன்று கேள்விக்குள்ளகியுள்ளது.
ஜேர்மனி ஏற்கனவே
தனது சொந்தப் பணத்தை
அச்சடிக்க ஆரம்பித்துவிட்டது.
முன்னைய அமரிக்க
ஜனதிபதி ஜோர்ஜ்
புஷ் இன் சர்வதேச
பொருளாதார ஆலோசகரும்,
டொச் வங்கியின்
ஆலோசகருமான பைப்பா
மல்க்ரென் இத்தகவலை
தெரிவித்துள்ளார். யூரோவின்
வீழ்ச்சியோடு
ஐரோப்பிய ஒன்றியம்
மயானத்திற்கு
அனுப்பப்பட்டுவிடும். யூரோவிலிருந்து
மார்க் இற்கும்,
பிரஞ் பிராங்கிற்குமான
மாற்றத்தின் போது
திருடப்படும்
பணத்தின் ஒருபகுதியை
இன்னும் சில நாட்கள்
வாழ்வதற்காகவும்,
கீன்ஸ் இன் வழிமுறையைத்
தற்காலிகமாகப்
பிரயோகிப்பதற்காகவும்
பயன்படுத்திக்
கொள்வார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தோடு
ஒட்டிக் கொண்ட
கிழக்கைரோப்பிய
நாடுகள் இருளின்
விழிம்பிற்குள்
இழுத்துவரப்படும்.
பொருளாதாரக்
கணக்கீட்டைச்
சரியாகப் பிரயோகித்தால்
யூரோவிற்கு அடுத்ததாக
அமரிக்க டொலரின்
நிரந்தர அழிவு
ஆரம்பிக்கும். அமரிக்க
டொலரின் ஆதிக்கத்தில்
கட்டியமைக்கப்பட்டிருக்கும்
ஏகபோக சாம்ராஜ்யம்
சரிவடையும். டோலரையும், அமரிக்காவையும்
அதன் துணை ஏகாதிபத்தியங்களையும்
இணைத்துக் கட்டப்பட்ட்ருக்கும்
மண் சுவர் இடிந்துவிழும்.
வர்த்தக அமைப்புமுறை
அதன் ஒழுங்கமைப்பு,
சட்டம், ஒழுங்கு,
மதம் அதன் புனிதம்
குறித்த கற்பனை,
குடும்பம் அதன்
தூய்மை குறித்த
புனைவுகள், சொத்து
தொடர்பான விருப்பு
என்ற எல்லாமே கேள்விக்கு
உள்ளாகும். உலகின்
ஒவ்வொரு மனிதனையும்
ஏதாவது ஒரு வகையில்
பாதிக்கவிருக்கும்
டொலரின் சரிவு
உலகைக் குலுக்கிய
ரஷ்யப் புரட்ட்சியின்
பத்து நாட்களைவிடப்
பலமான அதிர்வுகளை
ஏற்படுத்தும்.
ஐரோப்பாவிலும்
அமரிக்காவிலும்
மனிதர்கள் பெரும்பகுதி
மக்கள் இழப்பதற்கு
உயிரைத் தவிர வேறேதும்
இல்லை என்ற நிலையை
வந்தடைவது தவிர்க்க
முடியாததாகிவிடும். ஏகாதிபத்தியங்கள்
மரணித்துப் போகும்
காலகட்டத்தைத்
தெளிவாக வரையறுப்பதற்கு
கீன்ஸ் இன் கோட்பாடே
போதுமானது. சரிந்து
விழுந்து கொண்டிருந்த
பொருளாதாரத்தைத்
தற்காலிகமாகத்
தூக்கி நிறுத்த
கீன்ஸ் முன்வைத்த
ஒடுக்குமுறைக்
கோட்பாட்டை ஐரோப்பிய,
அமரிக்க அரசுகள்
பயன்படுத்த ஆரம்பித்திருந்தன.
அதாவது வீழ்ச்சி
ஏற்படும் வேளைகளில்
பொருளாதாரத்தில்
அரசு தலையிட்டு
அதனை ஊக்குவிக்கும்
வழிமுறையைக் கையாள்வதற்கான
அனைத்துப் பொறிமுறைகளையும்
ஏற்படுத்திக்கொண்டன.
சமூகதின் இயக்கத்தை
முற்றாகப் புறக்கணித்த
முட்டாள் தனமான
இவரின் கோட்பாடு
பெரு முதலாளிகளின்
பணப்பசிக்குத்
தீனி போட்டது. தொந்தரவின்றி
சுதந்திரமாக உலவ
விடப்பட்ட பெரு
முதலாளிகள் தமக்குச்
சேவை செய்வதற்கான
அரசுகளையும் அவற்றின்
அதிகாரக் நாற்காலியில்
உட்கார்ந்து கொள்ளப்
போகிறவர்களையும்
கூடத் தீர்மானித்தனர்.
பொதுவாக பொருளாதர
நெருக்கடிக்கையை
சுதாகரித்துக்
கொள்வதற்காக அரசுகள்
பணத்தை முதலீடு
செய்கின்ற காலப்பகுதிகளில்
ஐரோப்பாவில் “இடதுசாரிகள்”
என அழைக்கப்படுவோர்
ஆட்சிக்கு அமர்த்தப்பட்டனர்.
நெருக்கடி
சீர் செய்யப்படும்
நிலையை அடைந்ததும்
“வலது சாரிகள்”
என்று அழைக்கப்பட்டோர்
ஆட்சிப் பொறுப்பில்
அமர்த்தப்பட்டனர்.
விரல் விட்டு
எண்ணத்தக்க பெரு
முதலாளிகளுக்குச்
சேவை செய்வதற்காகவே
ஊடகங்களிலிருந்து
கருத்தை உருவாக்கும்
அனைத்துச் சாதனங்களும்
செயற்பட்டன. உலகின் ஒவ்வொர்
அங்கமும் ஒரு குறித்த
பொறிமுறைக்குக்
கீழ் வலிந்து இயக்கப்பட்டது. கீன்ஸ்
இன் கோட்பாடு தற்காலிகமாக
அழிவிலிருந்து
தக்கவைப்பதற்கான
வலுவை வழங்கிய
அதே வேளை 1970 ஆம் ஆண்டு
மேற்கின் முதலாளித்துவ
அமைப்பில் மற்றொரு
நெருக்கடி உருவாகின்றது. இன்றைய அளவில் நாம் காணுகின்ற மாக்ரோ பொருளாதாரம் (Macro economy) இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அதன் உயிரை உற்பத்தி செய்கிறது. மிகப் பெரும் நிறுவனங்கள் உருவாகின்றன. சிறிய நிறுவனங்கள், நுண்ணிய உற்பத்திகள் எல்லாம் பெரும் நிறுவனங்களால் விழுங்கப்படுகின்றன. மத்திய தர வர்க்கத்தின் உற்பத்தித் திறனுடைய ஒரு பகுதி தொழிலாளர்களாக மாற்றமடைகின்றனர். தொழிலாளர் மத்தியிலிருந்து கூலி உயர்வுப் போராட்டங்கள் ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் உருவாகின்ற காலப்பகுதியாக 60 களின் பிற்பகுதி முழுவதையும் காணலாம்.
இந்தக்
காலப்பகுதியில்
தான் பிரான்சில்
மாணவர் எழுச்சியும்
மக்கள் எழுச்சியும்
உருவான காலம். மேற்கின் பலபகுதிகளில்
அரச எதிர்ப்புப்
போராட்டங்கள்
உருவாகின. தொழிலாளர்களின்
எழுச்சியே இவற்றின்
அடிப்படையான காரணமாக
அமைந்திருந்தது.
நவீன தொழில் வளர்ச்சி
உருவாக்கிய பெரு
நிறுவனங்களின்
கூலிச் சுரண்டலுக்கு
எதிராகத் தொழிலாளர்களின்
போராட்டங்கள்
அரசுகளைத் தற்காலிகமாகவேனும்
நிலைகுலையச் செய்திருந்தன.
இங்கிலாந்து
மிகப் பெரிய வேலை
நிறுத்தத்தைச்
சந்தித்தது. அமரிக்கா, தொழிலாளர்
வேலை நிறுத்தத்தால்
நிலைகுலைந்தது. இறுதியில்
பின் நவீனத்துவம்
போன்ற பிற தத்துவங்கள்
அரசுகளுக்கு எதிரான
போராட்டங்களின்
திசை வழிகளை மாற்றியமைத்தன. குறிப்பாக
பிரஞ்சுக் கம்யூனிசக்
கட்சியின் பிறழ்வுகளில்
வெறுப்படந்த மத்திய
தர வர்க்கத்தின்
மேலணிகளைச் சார்ந்த
அறிவுஜீவிகள்
பெரும் மக்கள்
திரள் எழுச்சிகளுக்கு
எதிரான குறுகிய
போராட்டங்களை
முன்வைத்தனர்.
குறுங் கதையாடல்
என்ற தத்துவப்
பிறழ்விற்குள்
இதனை உட்படுத்திக்
கொண்டனர். இவற்றின் தாக்கங்கள்
இலத்தீன் அமரிக்க
நாடுகள் வரை பரவியது. அரசுகளின் நிலை குலைவை மறுசீரமைக்கும் நோக்கில் கருத்தியல் தளத்தில் கல்வி சார் நிறுவனங்கள் ஊடாக இவ்வாறான தத்துவங்கள் உருவாகின. 1968 ஆம் ஆண்டு மாணவர் எழுச்சிக்குப் பின்னரும் தொடர்ந்த பிரஞ்சு மாவோயிசக் கட்சிகளைச் சீர்குலைப்பதில் சிந்தனைத் தளத்தில் முதலளித்துவம் சார்ந்து பின்னவீனத்துவம் போன்ற தத்துவங்கள் நடத்திய இப் போராட்டங்கள் பெரும் பங்காற்றியது எனலாம்.
இதற்கு
அப்பால் பிரித்தானியவில்
மாக்ரட் தட்சரின்
அதிகாரமும் அமரிக்காவில்
ரொனால்ட் ரீகனின்
அதிகாரமும் இணைந்து
முன்வைத்த நவ தாராள
வாத (Neo-Liberalism) கொள்கை
மேற்கின் 1970 இற்குப்
பின்னான அமைப்பியல்
நெருக்கடியைத்
தற்காலிகமாகச்
சீர்செய்தது. நவ
தாராளவாதம் என்பது
காலனியத்திற்குப்
பின்னான காலப்பகுதில்
மறு காலனியாக்கதிற்காக(Re-colonisation) தெளிவான
வரையறுக்கப்பட்ட
கோட்பாடுகளைக்
கொண்டிருந்தது. இன்றை
முதலாளித்துவம்
என்பது நவதாராளவாதமும்,
கீனேஸ் இன் கோட்பாடும்
இணைந்த கலவைa
(mixture of neo-liberal and Keynesian theory). அமரிக்காவிலும்
பிரித்தானியாவிலும்
உருவான நவ தாராளவாதம்
உலகம் முழுவதும்
பரவ ஆரம்பிக்கிறது.
80 களின் பின்னான
காலப்பகுதி முழுவதும்
நவதாராளவதத்திற்கான
காலகட்டம். உலகம் முழுவதும்
நவதாராளவார்தக்
கோட்பாடு பிரயோகிக்கப்பட்ட
போதே அது உலக மயமாதல்
(Globalisation) என அழைக்கப்பட்டது. இராணுவ
மயமாக்கல் (militarisation) , வன்முறை என்பன
நவ தாரளவதத்தின்
அடிப்படையாக அமைந்திருந்தது.
கலாச்சார வன்முறை
கலாச்சார உலகமயமாதல்
(cultural globalisation) என அழைக்கப்பட்டது.
பொருளாதார வன்
முறை பொருளாதார
உலகமயமாக்கல்(Economic globalisation ) என அழைக்கப்பட்டது.
இந்த வன்முறைக்கு
எதிரான மக்கள்
இயக்கங்கள் ஒரு
புறத்தில் நேரடி
இராணுவ ஒடுக்குமுறைக்கு
உள்ளாகின, மறு
புறத்தில் தன்னார்வ
நிறுவனங்கள்(Non governmental organisations –NGO) உருவாக்கப்பட்டன.
தன்னார்வ நிறுவனங்கள்
போராட்டங்களை
திட்டமிட்டுக்
திசை மாற்றின.
நவதாராளவாதம்
உருவாக்கிய மெகா
பணமுதலைகளின்
பணக் கொடுப்பனவில்
இயங்கும் இந்த
நிறுவனங்கள் மக்கள்
எழுச்சிகளைக்
கட்டுப்படுத்தி
உலகின் ஒவ்வொரு
பகுதிகளையும்
சுரண்டலுக்கு
ஏதுவான பிரதேசங்களாக
மாற்றியமைத்தன.
இதனையே சந்தைக்கு
உகந்த பிரதேசங்கள்
(Marketable regions) என அழைத்தார்கள். சமூகத்தின்
கணக்கிடக் கூடிய
மேலணி (Upper fraction of the society) ஒன்றின்
வருமானம் அளவின்றி
அதிகரித்தது. மூலதனத்தின்
கட்டற்ற இயக்கம்(Free movement) , சுதந்திர
வர்த்தகம்(Free market) என்பன
உலகமயமான நவ தாராளவாதத்தின்
(globalised neo liberalism) அடி நாதமாக
அமைந்திருந்தது. தொழிலளர்கள்
மீது புதிய விதிகளைப்
பிரயோகித்தது. இப்புதிய விதிகள்
தொழிலாளர்களின்
வாங்கும் சக்தியை
(Purchasing power) கூட மேல்தட்டு
வர்க்கத்தின்
கட்டுப்பாட்டினுள்
வைத்திருக்க உதவியது. தொழிலாளர்கள்
இடையேயான போட்டியை
உலக மயமான நவதாராளவதம்
உருவாக்கியது. ஐரோப்பியத்
தொழிலாளிக்கு
வழங்கப்படும்
சராசரி மாதாந்த
ஊதியம் $1300 டொலர்கள்.
இலங்கை, இந்தியா
போன்ற நாடுகளில்
ஊதியத் தொகை 100 டொலர்கள்
மிக அதிகமான தொகை.
லத்தீன் அமரிக்க
மற்றும் ஆபிரிக்க
நாடுகள் சிலவற்றில்
இதன் தொகை $50 இற்கும்
அதிகமாவதில்லை.
இது தொழிலாளர்கள்
இடையே போட்டியை
உருவாக்கியது.
மேற்கில் வாழ்கின்ற
தொழிலாளி நிரந்தரமான
பய உணர்வுடனேயே
வாழ்கின்ற நிலை
உருவானது. முதலீட்டாளர்கள்
அவர்களின் இறுதி
இரத்ததையும் உறிஞ்சிச்
சுவைப்பதற்கு
இது வழி செய்தது. மேற்கு
நாடுகளில் திட்டமிட்ட
வேலையற்ற நிலையை
உருவாக்கியது. நவீன தொழில்
நுட்பம் உருவாக்கிய
தகவல் தொழில் நுட்பத்தின்
மூளை உழைப்பாளிகள்
கூட இதே வழிகளில்
சுரண்டப்பட்டனர்.
நிரந்தரமான
பய உணர்வு அவர்கள்
மத்தியில் ஏற்படுத்தப்பட்டது.
சுதந்திரம்
என்ற தலையங்கத்தில்
உருவாக்கப்பட்ட
அடிமைகளாக அவர்கள்
மாற்றப்பட்டனர். ஆக,
இரண்டாம் உலக யுத்தத்தின்
பின்னர் எழுபதுகள்
வரை ஏற்பட்ட தொழிலாளர்
எழுச்சிகளையும்
பிரச்சனைகளையும்
எதிர்கொள்ளவதற்கான
வழிமுறைகள நவ தாராளவாதம்
ஏற்படுத்திக்கொடுத்தது.
அனைத்திற்கும்
மேலாக தொழிலார்களின்
ஊதியத்தைக் கட்டுப்படுத்தும்
அதிகாரத்தையும்
மேல்தட்டு முதலாளிகளுக்கு
வழங்கியது. தனது
மிருகத்தனமான
பிடிக்குள் தொழிலாளர்களை
ஒடுக்கி வைத்திருந்த
முதலாளித்துவம்
அவர்களின் சுகாதார
வசதி, சமூக நலத்
திட்டங்கள், கல்வி
என்ற அனைத்தையுமே
படிப்படியாகக்
கேள்விக்குள்ளாக்கியது. குறித்த
சில நபர்களின்
சொத்தாகப் பெருக்கெடுத்த
பணம் படிப்படியாக
மூலதனமாக மாற ஆரம்பிதத்து. அளவுக்கு அதிகமாகப்
பெருகிய பணத்தினைக்
கையாள்வதற்கான
பொறிமுறை ஒன்று
பின்னதாக ஏற்படுத்தப்பட்டது.
80 களின் இறுதியிலிருந்து
பங்கு சந்தை என்பதே
பணத்தைக் கையாள்வதற்கான
மத்திய நிறுவனமாக
உருவாகியது. இந்த
மத்திய நிறுவனத்தின்
பங்கு தாரர்கள்
பணச் சுற்று ஒன்றை
ஏற்படுத்திக்கொண்டனர். வங்கிகள்
சாதரண மக்களுக்குக்
கடன் வழங்கின.
அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்கான
வழிமுறைகளையும்
ஏர்படுத்தின. இதனூடாக்
மேற்கில் மக்களிடம்
எஞ்சியிருந்த
பணம் கூட வங்கிப்
பொருளாதாரத்தில்
தங்கியிருப்பதாக
அமைந்தது. வங்கிப்
பொருளாதாரம் கடனாளிச்
சமூகம் ஒன்றை உருவாக்கியது.
உணவு, உடை, இருப்பிடம்
போன்ற அனைத்து
வசதிகளையும் வங்கிக்கடன்
ஊடகவே 99 வீதமான
மேற்கின் மக்கள்
பெற்றுக்கொண்டனர்.
வங்கிகளும்
அதனூடாக ஏற்படுத்தப்பட்ட
கடன் பொறிமுறையும்
(Credit mechanism) பணத்தை உறிஞ்சிக்கொள்ள,
கடன் தொகையைத்
திருப்பிச் செலுத்த
முடியாத நிலைக்கு
மக்கள் வந்தடைகின்றனர். பணச் சுற்றில்
லாபத்தைப் பெற்றுக்கொண்ட
பெரு நிறுவன உடமையாளர்கள்
தமது பணத்தோடு
பாதுகாப்பாக சென்றுவிடுகின்றனர்.
இறுதியில்
வங்கிகள் வீழ்ச்சிய்டைகின்றன.
நவ தாராளவாதமும்
அதன் உலக மயமாக்கலும்
தோல்வியடைந்துவிடுகின்றது. அரசுகளிடம்
பணம் இருப்பில்
இல்லாத நிலையில்,
பிணைகளை வழங்கி
உள்நாட்டு வெளி
நாட்டுக் கடன்களை
அரசுகள் பெற்றுக்கொள்கின்றன. கடன் தொகை எல்லைகடந்து
போகின்றது. கீன்ஸ் இன் கோட்பாட்டின்
அடிப்படையில்
அரசு வேலையில்லாத்
திண்டாட்டத்தைக்
கையாள முடியாத
நிலைக்குத் தள்ளப்படுகின்றது.
அது பொருளாதாரத்தின்
ஊக்கியாகத் தொழிற்பட
முடியாத நிலை உருவாகின்றது. ஆக,
அமரிக்க, ஐரோப்பிய
நாடுகள் நிலைகுலைந்து
போய்விட்டன. இன்னமும்
இவற்றை எல்லாம்
எதிர்கொள்வோம்
என்றும் புதிய
உலக ஒழுங்கு விதி
ஒன்றை உருவாக்குவோம்
என்று 2008ம் ஆண்டிலிருந்து
முதலாளித்துவத்தின்
விசுவாசிகள் கூற
ஆரம்பித்தனர்.
2007ம் ஆண்டு செப்டெம்பர்
மாதத்திலிருந்து
அமரிக்க அரசின்
கடன் தொகை ஒரு
நாளைக்கு 3.99 பில்லியன்
டொலர்கள் என்ற
அளவில் அதிகரிக்கின்றது.
தொடர்ச்சியான
அதிகரிப்பை தற்காலிகமாகவேனும்
அவர்களால் நிறுத்த
முடியவில்லை.
புதிய உலக ஒழுங்கு
என்ற ஒன்றை அவர்களால்
மருந்திற்குக்
கூடக் கண்டுபிடிக்க
முடியவில்லை. ஐரோப்பா
அமரிக்காவை விடக்
கேவலமான நிலையை
நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. மேற்கின் போராடப்
பயிற்றப்பட்ட
தொழிலாளர்களை
அமைதியாகப் பேணிவந்த
சமூக நலத் திட்டங்களை
நீக்கி தொடரும்
கடன் தொகையைத்
தற்காலிகமாக நிறுத்த
முனைகின்றனர். ஐரோப்பா
எங்கும் வேலையில்லாத்
திண்ட்டாடம் உச்சத்தைத்
தொட்டுள்ளது. மக்களின் கொள்வனவுத்
திறன் அற்றுப்
போனதால் உற்பத்தியும்
நிதி மூலதந்தின்
வங்கிப் பொறிமுறையும்
அழிந்து போகின்றது.
வேலையற்றோருக்கான
உதவித்தொகை 2012 இல்
அரைவாசியாகக்
குறைக்கப்படும்
நிலை காணப்படுகின்றது.
இலவசக் கல்விக்கு
நிதி வழங்க முடியாத
அரசுகள் கல்வியைத்
தனியார் மயப்படுத்துகின்றன.
ஐரோப்பா எங்கும்
போராட்டங்கள்
தொடர்கின்றன.
மாணவர்கள்,
தொழிலாளர்கள்,
மத்திய தர உழைப்பாளிகள்,
வேலையற்றோர் என
ஒருவர்பின் ஒருவராக
இணைந்து கொள்கின்றனர். உள்
நாட்டில் முரண்பாடுகளி
உருவாக்கி மக்களை
மோத விடுவதும்,
வெளி நாடுகளில்
பெரும் போரைத்
திட்டமிட்டு நடத்துவதும்
தான் அவர்களால்
இறுதியாக முன்வைக்கப்படும்
தீர்வாக அமையும்.
மத்திய கிழக்கிலிருந்து
எரிபொருளைத் திருடிவிடலாம்
எனக் கனவு காண்கின்றன
ஏகபோக நாடுகள். அங்கெல்லாம்
சூழல் அவர்களுக்கு
எதிரானதாகவே இருக்கின்றது. கிரேக்கத்தின்
தொழிலாளர்கள்
மிகச் சிறந்த உதாரணத்தை
வழங்கியிருக்கிறார்கள். கிரேக்க அரசு
மக்களிடமிருந்து
எஞ்சியுள்ள பணத்தைப்
பறித்துக்கொள்வதற்காக
நில வரியை அதிகரித்து.
அதனை உடனடியாக
அறவிடப் போவதாகவும்
அறிவித்தது. மின்சாரக் கட்டணம்
அரவிடும் போது
அதனோடு இணைத்தே
நில வரியையும்
அறவிடப்போவதாக
கிரேக்க அரசு அறிவித்தது.
கடந்த வாரம்
நில வரி செலுத்தாதவர்களுக்கு
மின்சாரத்தைத்
துண்டித்துவிடுமாறு
மின்சார சபைக்கு
அரசு அறிவித்தது.
மின்சார சபை ஊழியர்கள்
பொதுமக்களின்
மின்சாரத்தைத்
துண்டிக்க மறுத்ததோடு
மட்டுமன்றி 3 மில்லியன்
பணத்தைச் செலுத்தமல்
காலம்கடத்திய
சுகாதார அமைச்சின்
தலைமையத்தின்
மின்சாரத்தைத்
துண்டித்துள்ளனர். நவ
தாராளவாதம் உலகமயமான
வேகத்தை விட பலமடங்கு
விசையோடு தொழிலாளர்கள்
செயற்பட ஆரம்பித்துள்ளனர். அதிகாரத்தை
அவர்கள் கையகப்படுத்தும்
திறனை வளர்த்துக்க்கொள்கிறார்கள். எது
எவ்வாறாயினும்
ஐரோப்பிய அமரிக்க
அமைப்பு முறை முற்றாகச்
சீர்குலைந்து
விட்டது. இன்னும் சில
ஆண்டுகள் மட்டுமே
அவை நிலைத்திருக்க
முடியும். இன்னும்
ஐந்து ஆண்டுகள்
நிலைத்திருக்குமா
என்பது கூடச் சந்தேகத்திற்கு
இடமானதே! இதற்கான
பொருளியல் கணிதக்
கணிப்பீடு அடுத்த
பகுதியில் வெளியாகும். (இன்னும்
வரும்..) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |