Contact us at: sooddram@gmail.com

 

நியாயப்படுத்துவது நியாயமல்ல!

பேருந்து, பால் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி, மக்களை வதைத்துள்ள அதிமுக அர சுக்கு கண்டனம் அதிகரித்து வருகிறது. பேருந் தில் ஏறுபவர்களும், பால் வாங்கச் செல்பவர் களும் அதிர்ச்சியில் உறைவதோடு, அரசு மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக முதல்வர் ஜெயலலிதா பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை நியாயப்படுத்தி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விலை உயர்வை அறிவித்த அறிக்கையைப் போன்றே, இந்த அறிக்கையிலும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அரசுப் போக்குவரத்து கழகங்கள், ஆவின் பால் நிலையம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக் கும் ஆட்சேபணை இருக்கப்போவதில்லை.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இல வச பஸ் பாஸ் உட்பட பல்வேறுகட்டணப்பாக்கி களைபோக்குவரத்துக்கழகங்களுக்குவழங்காமல் அவற்றை நலிவடையச் செய்வதில் அரசுக்கு முக்கியப் பங்கு உண்டு. தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களின் வசதிக்காகவே ஆவின் நிறு வனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இப்போது அரசு பால் விலையை உயர்த்தி அறிவித்துள்ளதால் தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்திவிட் டன. இதனால் அவர்களுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படப்போவதில்லை. இன்னும் சொல்லப் போனால் தனியார் பஸ் முதலாளிகளுக்கும், தனியார் பால் நிறுவனங் களுக்கும் ஆதரவான ஒரு அறிவிப்பையே அதிமுக அரசு வெளியிட்டுள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டார் ஹெல்த் என்ற தனியார் நிறுவனத்திடம் காப்பீட்டுத் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்து வந்தார். இவர் ஆட் சிக்கு வந்தவுடன் பொதுத்துறை காப்பீட்டு நிறு வனங்களின் உதவியுடன் காப்பீட்டுத் திட் டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக, திமுக அரசின் பாதையில் தனியார் காப்பீட்டு நிறுவனத் துடன்தான் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவீன தாராளமயமாக்கல் கொள்கையை பின்பற்றுவதில் திமுக போட்டுக்கொடுத்த அதே வழித்தடத்தில்தான் அதிமுக அரசும் பயணிக் கிறது. அதனால்தான் கொஞ்சம் கூட கூசாமல் மக்கள் தலையில் தாங்க முடியாத அளவுக்கு சுமையை சுமத்த துணிந்துள்ளது அதிமுக அரசு.

இந்த கட்டண உயர்வை விமர்சிக்கும் எதிர்க் கட்சிகளை தனது அறிக்கையில் சாடியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் விலைவாசியை குறைப்பேன், தடையில்லா மின்சாரம் வழங்குவேன் என்று தான் கூறினாரே தவிர, ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கட்டணங்களை உயர்த்து வேன் என்று கூறவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகு சட்டப்பேரவையில் கூட இதுகுறித்த விவாதத்தை நடத்தவில்லை. இந்நிலையில் விமர்சிப்பவர்களை விமர்சிப்பதில் எந்தநியாயமு மில்லை. மக்கள் குரலைத்தான் இடதுசாரிகள் எதிரொலிக்கிறார்கள் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். வீண் பிடிவாதம் விபரீதத் திற்கே இட்டுச் செல்லும் என்ற கடந்த கால அனுபவம் அதிமுகவுக்கு நிறையவே உண்டு.

மத்திய அரசுக்கு எதிராக போராட ஜெய லலிதா முன்வருவாரானால், இடதுசாரிக்கட்சிகள் அவருக்கு துணை நிற்பார்கள். அதைவிடுத்து வாக் களித்த மக்களை தண்டிப்பது நியாயமல்ல.

(தீக்கதிர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com