Contact us at: sooddram@gmail.com

 

யானை வரும் பின்னே!’

துனீஷியாவில் விரட்டியடிக்கப் பட்ட பென் அலி, எகிப்தில் விரட்டி யடிக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக், லிபியாவில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த முகமது கடாபி போன்றவர் களுக்கு சற்றும் குறைவில்லாதவர்தான் சிரியாவின் பஷார் அல் - அசாத்.

இவரது ஆட்சியில், எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த பூமியில் கூட 32 சதவீத மக்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். நாள் ஒன் றுக்கு 2 டாலருக்கும் குறைவாகவே வரு மானம் கிடைக்கும் நிலையில் இருக் கிறார்கள். மிக நீண்ட ஆண்டுகளாக மக்கள் இயக்கங்கள் மீதான ஒடுக்கு முறை தொடர்கிறது. அசாத்தின் அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசே!

ஆனால், அசாத் அரசை வீழ்த்தி விட்டு அங்கு அமரப்போவது யார் என் பதே இப்போதைய மிக முக்கியமான கேள்வி. துருக்கி, சவூதி அரேபியா ஆகிய வற்றின் ஆதரவோடு, அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்டு ஒரு அரசு அமையு மானால், அது சிரிய மக்கள் மீதான முன் னெப்போதும் இல்லாத தாக்குதலாகவே அமையும். லிபியாவில் அமெரிக்க கைப் பாவை அரசு ஆட்சியில் அமர்த்தப்பட் டிருப்பதை உலகம் பார்க்கிறது. அவர்கள் லிபியாவில் கோரத்தாண்ட வம் ஆடி வருகிறார்கள் என்பதையும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக் கிறது.

ஏற்கெனவே சன்னி பிரிவு முஸ்லிம் களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பிரிவினைவாத கோஷத்தோடு அசாத்துக்கு எதிராக வும், அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் போராட்டம் என்ற பெயரில் படு கொலைகளை அரங்கேற்றிக்கொண்டி ருக்கிற முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப் பின் கையில் அரசு ஒப் படைக்கப் படுமானால் சிரியாவில் ஷியா பிரிவு மக்களுக்கும், சன்னி பிரிவு மக்களுக் கும் இடையிலான மோதலாக - நிரந்தர மோதலாக வெடிக்கும். அந்நாட்டில் ரத்த ஆறு ஓடும்!

சிரியாவில் உள்நாட்டுப் போர் துவங்கியுள்ளது. இதற்காகவே காத்திருந்த ஏகாதிபத்திய ஓநாய்கள் அந்நாட்டை கொத்திக் குதறி கபளீகரம் செய்ய தயாராகிவிட்டன. ஆப்கானிஸ்தான், இராக், லிபியா வரிசையில் சிரியாவும்...! லிபியாவை தாக்கி நொறுக்குவதற்கு, ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவாக நிற்கும் அரபு லீக், தீர்மானம் நிறைவேற்றி வழிசெய்து கொடுத்ததைப் போலவே, சிரியாவின் பஷார் அல் - அசாத் அரசுக்கு கெடு விதித்து அரபு லீக் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிரியாவுக்குள் அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் மக்கள் மீது அசாத் அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறையை நிறுத் திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது அரபுலீக். அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை; ஆனால் மேற்கத்திய நாடுகளோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஏகாதிபத்திய நாடுகளிடம் சரணடைந்துவிடு என்று சொல்லாமல் சொல்லியிருக்கிற அரபுலீக்கின் தீர்மானம், ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’என்பதைப் போல சிரியா மீது அமெரிக்காவும் நேட்டோ படைகளும் எந்தநேரமும் போர் தொடுக்கலாம் என்பதை முன்னறிவிக்கிறது.

அரபு நாடுகளில் மிகவும் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ள சிரியாவில், இளம் தலைவர் என்ற போதிலும் நீண்டகாலமாக தனது குடும்பத்தின் ஆட்சியை நிலைநாட்டி வருகிற பஷார் அல் -அசாத்தின் அரசுக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டத்தை, இதர அரபு நாடுகளில் செய்ததைப் போலவே அமெரிக்காவும், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஏகாதிபத்திய சக்திகளும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.

சிரியாவின் அரசுக்கு எதிராக, இப்பிரதேசத்தில் அமெரிக்காவின் கைக்கூலிகளாக செயல்பட்டு வரும் துருக்கி, சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகள், தீவிரமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. சிரியாவில் நடக்கும் போராட்டத்தை மேற்கு உலகிற்கு ஆதரவானதாக மாற்றும் பணியில் அமெரிக்காவின் இந்த ஏஜெண்ட்டுகள் முழுமையாக ஈடுபட்டுள்ளன. இவர்களது உதவியோடு சிரியா தேசிய கவுன்சில் என்ற அமைப்பு, அந்நாட்டில் போராட்டத்தை நடத்தி வருகிறது. மறுபுறத்தில் முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப்பும் போராட்டம் நடத்துகிறது.


அரபு உலகில் ஏகாதிபத்தியத்திற்கும், அதன் கைக்கூலி ஆட்சியாளர்களுக்கும் எதிராக எழுந்துள்ள மகத்தான மக்கள் கிளர்ச்சிகளை தனக்கு சாதகமாக மாற்றுவதில் அமெரிக்க ஏகாதி பத்தியமும் அதன் இளைய கூட்டாளிகளான பிரிட்டனும் பிரான்சும், முஸ்லிம் மக்களில் ஷியா - சன்னி என்ற இரண்டு பிரிவு மக்களிடையே நிலவும் முரண்பாட்டை - மோதலை - பகைமையை மிகத் தெளிவாகப் பயன்படுத்தி காய் நகர்த்துகின்றன.

இவர்களில் சன்னி பிரிவு ஆளும் வர்க்கங்களை சேர்ந்த அரபு ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் காலிலேயே விழுந்து கிடக் கிறார்கள். சவூதி அரேபியாவும், துருக்கியும், கத்தாரும், ஜோர்டானும், ஏமனும், பக்ரைனும் இதற்கு சான்று.

மாறாக ஷியா பிரிவைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் ஒருபுறத்தில் அமெரிக்காவுக்கு எதிராக நிற்கிறார்கள். ஆனால் உள்நாட்டில் மக்களுக்கு எதிராகவும் நிற்கிறார்கள். ஈரானும், சிரியாவும், லிபியாவும், லெபனானும் இதற்கு சான்று.

இந்த நாடுகளுக்கு இடையிலும், இந்நாடுகளுக்குள் இருபிரிவு மக்களுக்கு இடையிலும் நிலவும் தீராத பகைமையை தனது எண்ணெய் வெறிக்காக பயன்படுத்துகிறது அமெரிக்கா.

லிபியாவைத் தொடர்ந்து சிரியாவை கைப்பற்றுவது, அடுத்ததாக ஈரானுக்கு வைக்கும் குறியாகும். இதன்மூலம் ஈரானுக்கும், இதர நாடுகளுக்கும் ஆதரவாக நிற்கிற ரஷ்யாவுக்கும் - சீனாவுக்கும் அமெரிக்கா விடுகிற மறைமுக மிரட்டலாகும்.

அமெரிக்கப் பொருளாதாரம் நிலைத்து நிற்கமுடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சூழலில், அரபு உலகில் இருக்கும் ஒட்டுமொத்த எண்ணெய் வளத்தையும் முழுமையாக சூறையாடியே தனது பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியும் என்ற பின்னணியில், சிரியாவில் உள்நாட்டுப் போரை தூண்டிவிட்டுள்ளது. இந்த உள்நாட்டுப் போர், அமெரிக்காவின் போராக மாறும் அபாயம் அதி கரித்துள்ளது.

அமெரிக்கா போர் தொடுத்தால், லிபியாவைப் போல், அந்த நாட்டோடு முடிந்துவிடாது. சிரியாவைத் தொடர்ந்து ஈரானே இலக்கு என்பதால், தன்னை தற்காத்துக் கொள்ள சிரியாவையும் பாதுகாப்பது ஈரானுக்கு அவசியமாகிவிடும். எனவே ஈரானும் களத்தில் குதிக்கும். ஈரான் குதித்தால் அதற்கு எதிராக அமெரிக்காவோடு துருக்கியும் களமிறங்கும். அரபு பிரதேசமே போர்க்களமாக மாறும்!

(எஸ்.பி.ராஜேந்திரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com