|
||||
|
ஏ-9 பயணிகளின்
உயிர் சாரதிகளின்
கைகளில்
கொழும்பு- கண்டி
வீதியான ஏ-9
வீதியில்
வவுனியா முதல் யாழ்ப்பாணம்
வரையிலான
பாதையில்
பயணிப்போர்
பெரும் அச்சத்துடனேயே
தமது பயணத்தைத்
தொடரும் மன நிலையிலுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
இதன் உண்மைத்தன்மைப்
பற்றி ஆராய்ந்தால்
அதில் நிச்சயம் உண்மை இல்லாமலில்லை
என்பதுவும்
தெரிகிறது.
இவ்வீதியால்
பயணத்தை மேற்கொள்ளும்
பயணிகள் தெரிவிக்கும்
மயிர்க்கூச்செறிய
வைக்கும்
கதைகளைக்
கேட்டால்
வடபகுதிக்கு
ஏ-9 வீதியால்
புதிதாக செல்ல முனையும்
மக்கள் நிச்சயம் தயக்கம் காட்டவே செய்வர். அந்தளவிற்கு எமது சாரதிகளின்
சாகங்கள்
நிறைந்த வாகனச் செலுத்தல்கள்
இடம்பெறுகின்றன.
முப்பது வருட கால
யுத்தம் முடிவடைந்த
நிலையில்
யாழ்ப்பாணத்தையும்
கொழும்பையும்
இணைக்கும்
பிரதான வீதியான ஏ-9
வீதி கடந்த
இரண்டரை வருடங்களுக்கு
முன்பாகத்
திறக்கப்பட்டு
இப்போது அப்பாதையால்
இருபத்துநான்கு
மணிநேரமும்
பயணம் செய்ய மக்களுக்குச்
சுதந்திரம்
வழங்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து
யாழ்ப்பாணத்தை
இணைக்கும்
இந்தப் பிரதான வீதி வழியாக
கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணத்திற்கும்,
யாழ்ப்பாணத்திலிருந்து
கொழும்பிற்கும்
தினமும் ஆயிரக்கணக்கான
வாகனங்கள்
பயணிக்கின்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள்
பயணம் செய்கின்றனர்.
விடுதலைப் புலிகள் தமது கட்டுபாட்டில்
வன்னியை வைத்திருந்தபோது
இப்பாதையைப்
பொதுமக்கள்
பயன்படுத்த
முடியாத நிலை காணப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு
சமாதான காலத்தில்
அரசாங்கத்தினதும்,
புலிக ளினதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன்
வடபகுதி மக்கள் இப்பாதையைப்
பயன்படுத்த
அனுமதிக்கப்பட்டனர்.
அதற்கு முன்னர்
யாழ். - கொழும்பு
போக்குவரத்து
நிலைமை எப்படி இருந்தது என்று அப்பகுதி
மக்களுக்குத்தான்
தெரியும்.
ஆகாய விமானத்தில்
ஒரு வழிப்பயணத்திற்கு
பதினையாயிரம்
ரூபாவைச்
செலவு செய்த காலமும்
இருந்தது. அதற்கும் மேலாக எவ்வளவு காசு கொடுத்தாலும்
இங்கிருந்து
அங்கோ அல்லது அங்கிருந்து
இங்கோ செல்லவே முடியாத நிலையிலும்
ஒரு காலமும்
இருந்தது.
அதனைவிட கிளாலி ஏரியூடாக உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு இடுப்பளவு
தண்ணீரில்
நடந்து அவரசத் தேவைகளுக்காக
குடாநாட்டிலிருந்து
கொழும்பு
வந்த மக்களது
சோக உணர்வுகளும்
நிறையவே உள்ளன.
இன்று அரசாங்கம்
மக்களைச்
சுதந்திரமாக
அப்பாதையால்
செல்ல அனுமதித்துள்ளது. யாரும் செல்லலாம்.
எவ்விதமான கட்டுப்பாடும்
கிடையாது.
சோதனைக் கெடுபிடி
என்று எதுவுமே கிடையாது இறங்கி ஏறி பொதிகளைத்
திறந்து காட்டி செல்ல வேண்டியதில்லை.
நடுநிசியானாலும் பாதுகாப்பான
பயணத்தை இந்த ஏ-9 வீதியூடாக
மக்கள் மேற்கொள்ளக்
கூடியதாக
உள்ளது. இந்தச் சந்தோசமான
செய்திக்குள்ளும்
ஏ-9வீதியில் பயணம் செல்ல
மக்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள்
என்று சொன்னால் எவரும் அதனை நம்பவே
மாட்டார்கள்.
ஆனால் நம்பக்
கூடியதாக
அங்கு தினமும் சம்பவங்கள்
இடம்பெறுகின்றன.
அதுதான் கட்டுக்கடங்காத
வாகன விபத்துகள்.
இரவு வேளைகளில்
மட்டுமல்லாது
பகலிலும்
மிகமோசமாக
தமதிஷ்டப்படி
வாகனங்களைச்
செலுத்தும்
சாரதிகளால்
இந்த கோரமான
பல விபத்துக்கள்
நடைபெறுவதுடன்
உயிரிழப்புக்கள்,
அங்கவீனங்கள்
பலவற்றுக்கும்
பயணிகள் முகங்கொடுக்க
நேரிடுகிறது.
இதற்கு உடனடியாக
நடவடிக்கை
எடுத்தே ஆகவேண்டும்.
போட்டிபோட்டுச் கொண்டு
ஓடும் வாகனச் சாரதிகளின்
கட்டுப்பாட்டை
இழந்து பல விபத்துகள்
இடம்பெகின்றன.
அத்துடன் பணத்தைக்
குறியாகக்
கொண்டு போதிய ஓய்வெடுக்காமல்
தொடர்ச்சியாக
நித்திரைத்
துக்கத்துடன்
ஓடும் சாரதிகளாலும்
பல விபத்துக்கள்
ஏற்படுகின்றன.
வவுனியா முதல் யாழ்ப்பாணம்
வரையிலான
பாதையில்
முக்கால்
வாசிப்பகுதி
காட்டுப்பகுதி. அங்கு
போதிய வீதி விளக்குகளோ,
பாதை சமிக்கைகளோ
கிடையாது.
சனநடாமாட்டமில்லாத பகுதி என்பதால் போக்குவரத்துப்
பொலிஸாரையும்
அங்கு எதிர்பார்க்க
முடியாது.
இவற்றைவிட பாதைகளில்
ஆங்காங்கே
குண்டும்
குழியும்
காணப்படுகிறது.
பாதைகளின் இருமருங்கிலும்
குழிகள் உள்ளன. இவற்றையெல்லாம் கருத்திற்
கொண்டுதான்
சாரதிகள்
வாகனத்தைச்
செலுத்த வேண்டும்.
ஆனால் இவை எதனையும் பயணிகள் சேவைகளை நடத்துவோர்
கவனிப்பதாகத்
தெரியவில்லை.
கவனித்திருந்தால் இத்தனை
விபத்துக்கள்
இக் குறுகிய
காலத்தில்
இடம்பெற்றிருக்க
வாய்ப்பில்லை.
எனவே பயணிகள்
சேவை நடத்துவோர்
தமது சாரதிகளுக்கு
முறையான அறிவுறுத்தல்களை
வழங்க வேண்டும்.
பொலிஸாரும் இவ்விடயத்தில்
தமது பங்களிப்பு
என்ன என்பது
குறித்துச்
சிந்திக்க
வேண்டும்.
அதேபோன்று வீதி அபிவிருத்தி
அதிகார சபையினரும்
சில தற்காலிக
சமிக்கை முறைகளைச்
சாரதிகளின்
கவனத்திற்குக்
கொண்டுவரும்
வகையில் ஏற்பாடுகளைச்
செய்ய வேண்டும்.
இந்த மூன்று பிரிவினையும்
நம்பியே பொதுமக்கள்
தூரப் பிரதேசங்களுக்கு
இரவு வேளைகளிலும்
தமது குழந்தை
குஞ்சுகளுடன்
பயணம் செய்கிறார்கள். எனவே நம்பி வரும்
மக்களை நட்டாற்றில்
விட்ட கதையாக ஏனோதானோ என்று நடந்து
கொள்ள வேண்டாம்.
பொறுப்புடன் நடந்து
உங்களது உயிர்களையும்,
உங்களை நம்பிவரும்
பயணிகளது
உயிர்களையும்
காப்பாற்றிக்
கொள்ள உதவிபுரியுங்கள்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |