சோசலிசத்திற்கான
போராட்டம்
ஏ.கே. பத்மநாபன்
நவம்பர்
7, இருபதாம் நூற்றாண்டில்
மனிதகுல முன்னேற்றத்தில்
வரலாற்றுச் சிறப்புமிக்க
அளவில் மாபெரும்
மாற்றங்களை உருவாக்கிய
- மகத்தான புரட்சியின்
விளை வாக ‘உலகையே
குலுக்கிய’- மாபெரும்
நவம் பர் புரட்சியின்
95ஆவது ஆண்டு தினமாகும்.
சோவியத் ரஷ்யாவில்
உழைக்கும் மக்கள்
ஜார் மன்னனுக்கு
எதிராக நடத்திய
புரட்சிகர மான
போராட்டங்கள்
வெற்றிபெற்றதை
அடுத்து உழைக்கும்
மக்களின் தலைமையில்
புதியதோர் சமுதாயத்தை
அமைத்தனர்.
அனைத்துவிதமான
பிற்போக்கு சக்தி
களும் ஒன்றாகத்
திரண்டு, தொழிலாளர்
வர்க் கத்தின்
தலைமையில் அமைந்த
இப்புதிய அரசை
முடிவுக்குக்
கொண்டுவர மேற்
கொண்ட முயற்சிகள்
வரலாற்றின் ஒரு
பகுதி யாகும்.
இவர்கள் தொடர்ந்த
முயற்சிகளுக்கு
இரண்டாம் உலகப்
போரும் ஒரு வாய்ப்பாக
அமைந்தது. சோவியத்
யூனியனின் லட்சக்
கணக்கான தொழிலாளர்களும்,
விவசாயி களும்,
ஆயுதந் தாங்கிய
வீரர்களும், வீராங்
கனைகளும் தங்களின்
வீரஞ்செறிந்த
பல் வேறுவிதமான
நடவடிக்கைகளின்
மூலமும், அளப்பரிய
தியாகத்தின் மூலமும்
நாஜிக் களின் பாசிச
சக்திகளை முறியடித்து,
தங்கள் தாய்நாட்டையும்,
மனித சமுதாயத்தையும்
பாது காத்தனர்.
இக்கால கட்டத்தில்
கிழக்கு ஐரோப்பிய
நாடுகள் பலவும்
சோசலிச நாடுகளாக
மாறின. மாபெரும்
சீனப் புரட்சியும்
நடைபெற்றது. காலனியாதிக்கமும்
பல நாடுகளில் ஒன்றன்
பின் ஒன்றாக முடிவுக்கு
வரத் தொடங்கியது.
உலகின் பல நாடுகளிலும்
தொழிலாளர் வர்க்க
இயக்கங்கள் தங்கள்
தளங்களை விரி வாக்கின.
வீரஞ்செறிந்த
போராட்டங்கள்
பல வற்றை நடத்தின.
அவற்றின் மூலமாக
ஏகாதி பத்திய மற்றும்
முதலாளித்துவ
சக்திகளுக்கு
சவாலாக அமைந்தன.
சோவியத் யூனியன்
சோசலிச நடவடிக்
கைகள் மூலம் அடைந்த
முன்னேற்றம்தான்
பல முதலாளித்துவ
நாடுகளையும் தங்கள்
நாடுகளிலும் வேலையில்லாதோருக்கான
உதவிகள், சுகாதாரத்
திட்டங்கள், ஓய்வூதியம்
போன்ற எண்ணற்ற
நலத்திட்டங்களை
அமல் படுத்திட
நிர்ப்பந்தித்தன
என்பதையும் அவற்
றின் மூலமாக தங்கள்
நாடுகளில் ‘கம்யூனிசம்
பரவாமல் தடுத்திட’
முயற்சித்தன என்பதை
யும் எவரும் மறுக்க
முடியாது. இத்தகைய
நலத்திட்டங்கள்
மூலமாக முதலாளித்துவ
அமைப்புமுறையும்
நல்லதொரு முறைதான்
என்று மக்களுக்குக்
காட்டிட அவை முயன்றன.
எழுபத்தைந்து
ஆண்டுகளுக்குள்,
‘நம் பிக்கை நட்சத்திரமாக’
விளங்கிய சோவியத்
யூனியன் பின்னடைவுகளைச்
சந்தித்தது. தொடர்ந்து சோவியத்
யூனியனும் கிழக்கு
ஐரோப்பிய நாடுகளும்
முறிந்து விழுந்ததை
உலகம் கண்டது.
இப்பின்னடைவுகளுக்கான
பல்வேறு காரணிகள்
குறித்து இப்போது
நாம் ஆராயப்போவதில்லை.
ஆயினும், இப்பின்ன
டைவுகள் அல்லது
தோல்விகள் என்பவை
சோசலிச அமைப்பு
முறையின் காரணமாக
ஏற்பட்டவை அல்ல,
மாறாக சோசலிசக்
கொள்கைகளையும்
திட்டங்களையும்
அமல் படுத்துவதில்
ஏற்பட்ட தோல்விகளே
இவற் றிற்கான காரணங்களாகும்.
முதலாளித்துவ
அமைப்பு முறைக்கு
மாற்று சோசலிசம்
மட்டுமே என்பது
இன்னமும் தொடர்கிறது.
இப்பின்னடைவுகளுக்குப்
பிந்தைய, கடந்த
இருபத்தோரு ஆண்டுகளில்
ஏகாதி பத்திய சக்திகள்,
மக்கள் மீதான தாக்குதல்
களை தொடர்ந்து
மேற்கொண்டு வந்ததை
நாம் பார்த்தோம்.
ஏகாதிபத்திய
உலகமயமும், நவீன
தாராளமய முதலாளித்துவமும்
அனைத்துவித மான
மனிதசமுதாயத்தின்
மீதும் தாக்கு
தலைத் தொடுத்தன.
முதலாளித்துவ
உலகத்திற்கு இப்போது
ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு
ஒருசில பிரிவி
னரின் ‘பேராசை’யே
காரணம் என்று கற்பிக்
கப்படுகிறது.
முதலாளித்துவத்தின்
உண்மை யான குரூர
முகத்தை மூடி மறைப்பதற்கான
முயற்சியே இது.
உச்சபட்ச லாபம்
என்பதே முதலாளித்துவ
முறையின் அடிப்படை.
இவ் வாறு தங்கள்
லாபத்தை உச்சபட்ச
அளவிற்கு எய்திட,
உலகின் எந்தப்
பகுதிக்குள்ளும்
நுழைந்து, அங்குள்ள
உழைக்கும் மக்களையும்
அங்குள்ள இயற்கை
வளங்களையும் கொள்
ளையடிப்பதைத்
தீவிரப்படுத்துவதற்கும்
இது அனைத்து விதமான
முயற்சிகளையும்
மேற் கொள்ளும்.
ஏற்றத்தாழ்வுகள்
ஆழமாகியுள்ளன
சோவியத் யூனியன்
வீழ்ச்சியடைந்ததால்
ஏற்பட்ட வெற்றிடத்தை,
சோசலிசத்திற்கு
எதி ராக அரசியல்
ரீதியாகவும், தத்துவார்த்த
ரீதி யாகவும் தாக்குதல்
தொடுத்திட பயன்படுத்திக்
கொள்ளப்பட்டது.
ஆயினும், 2008க்குப்
பின் னர் முதலாளித்துவத்திற்கு
ஏற்பட்டுள்ள நெருக்கடி,
முதலாளித்துவத்திற்கு
வக் காலத்து வாங்குபவர்களுக்கு,
முதலாளித் துவமே,
முதலாளித்துவம்
ஒன்றே சிறந்த முறை
என்று சித்தரிப்பதில்
மிகுந்த அள விற்கு
சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சோவியத் யூனியன்
வீழ்ச்சியடைந்தபோது,
‘வரலாறு முடிவுக்கு
வந்துவிட்டது’
என்று கூறி அதனைக்
கொண்டாடியவர்கள்,
இப் போது முதலாளித்துவமே
சிறந்த முறை என்று
உயர்த்திப்பிடிக்க
முடியாமல் தடுமாறிக்
கொண் டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ
உலகத்தின் அனைத்துப்
பகுதிகளிலும்
வாழும் மக்கள்
வறுமை நிலைக்குத்
தள்ளப்படுவது
அதிகரித்து வரு
வதும், பணக்காரர்களுக்கும்
ஏழைகளுக்கும்
இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளும்
அதி கரித்து வருவதும்,
குறிப்பாக நமது
நாட்டில் இவை அதிகரித்திருப்பதும்,
முதலாளித்துவ
அமைப்பின் குரூர
முகத்தை மிகத்
தெளி வாகக் காட்டத்
துவங்கியுள்ளன.
அதிகரித்து வரும்
ஏற்றத் தாழ்வுகளால்
மக்கள் மத்தியில்
எழுந்துள்ள கோபமும்
விரக்தியும் அவர்கள்
மத்தியில் ‘‘ஒரு
விழுக்காட்டினருக்கு
எதி ராக 99 விழுக்காட்டினர்’’
என்னும் முழக்
கத்தை எழுப்பச்
செய்து, இதனை மிகவும்
தெளிவாக்கி யிருக்கிறது.
‘‘வால்ஸ்டிரீட்டைக்
கைப்பற்றுவோம்’’
என்னும் இயக்கம்
நீடித்து நிலைத்து
நிற்கவில்லை என்ற
போதிலும், முதலாளித்துவ
உலகின் எதார்த்த
உண்மை களை மக்களின்
கவனத்திற்குக்
கொண்டுவந் ததில்
அது வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியாவில், புதுப்பணக்காரர்களின்
எண் ணிக்கையும்,
பில்லியனர்களின்
(சுமார் ஐயா யிரம்
கோடி ரூபாய்க்கும்
அதிகமாக வைத் திருப்பவரை
பில்லியனர் என்று
கூறலாம்) எண்ணிக்கையும்
அதிகரித்திருப்பதை
வைத்து, இவை நாட்டின்
முன்னேற்றத் திற்கும்
வளர்ச்சிக்கும்
எடுத்துக்காட்டுக
ளாகும் என்று நம்
ஆளும் வர்க்கம்
காட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால், மக்கள்
மத்தியில் ஊட்டச்சத்தின்மை,
வறுமை, வேலை யில்லாத்
திண்டாட்டம் ஆகியவையும்
அதி கரித்திருக்கின்றன.
பசி-பஞ்சம்-பட்டினி
(ாரபேநச) குறித்து
சமீபத்தில் வெளியான
சர்வே ஒன்று, நாட்டில்
17 விழுக்காட்டினர்
மிகவும் ‘வறிய
நிலை’யில் (‘ரடவசய
ாரபேசல’) இருப்ப
தாகவும், அவர்களுக்கு
ஒரு நாளைக்கு
1600 கலோரி சக்தி
அளவிற்குக் கூட
உணவு கிடைப்பதில்லை
என்றும், எப்படியாவது
உயிர்வாழ்வதற்குத்
தேவையான உணவே அவர்களுக்குக்
கிடைக்கிறது என்றும்
கூறி யிருக்கிறது.
நாட்டில் உள்ளோரில்
15-49 வய துக்கு இடையேயுள்ளவர்களில்
34.2 விழுக் காடு ஆண்களும்,
35.6 விழுக்காடு பெண்
களும் கிட்டத்தட்ட
மிகவும் பஞ்சைப்
பராரிகளாகவே இருக்கின்றனர்
என்றும் அந்த சர்வே
கூறுகிறது.
ஒரு பக்கத்தில்
இவ்வாறு பில்லியனர்
களும், புதுப்
பணக்காரர்களும்
அதிகரிப்பதும்,
மறுபக்கத்தில்
கோடானு கோடி குழந்தை
களும், வயதுவந்தோரும்
பட்டினிக் கொடுஞ்
சிறைக்குள் தள்ளப்படுவதும்
ஆகிய இத்த கைய
முரண்பாடான சூழ்நிலைதான்
இன் றைய முதலாளித்துவ
அமைப்பு முறையின்
விளைவாகவும் இருந்து
வருகிறது.
இத்தகைய நிலைமை
இந்தியாவுக்கு
மட்டுமானதல்ல,
உலகில் உள்ள அனைத்து
முதலாளித்துவ
நாடுகளின் நிலைமையும்
இதுதான். பெரும்பான்மையாகவுள்ள
உழைக் கும் மக்களின்
உழைப்பை பயன்படுத்திக்
கொண்டு, ஒருசில
முதலீட்டாளர்கள்
கொள்ளை லாபம் ஈட்ட
வேண்டும் என்பதை
அடிப்படை யாகக்
கொண்டுள்ள எந்தவொரு
முதலாளித் துவ
சமுதாயத்திலும்
மக்களின் அடிப்படைப்
பிரச்சனைகளைத்
தீர்க்க முடியாது.
சோசலிச சோவியத்
யூனியன் வலுவாக
இருந்தவரையில்,
அமெரிக்கா மற்றும்
இதர ஏகாதிபத்திய
சக்திகள் உலக விவகாரங்களில்
தலையிட்டபோது,
அவற்றை எதிர்கொண்டு
முறியடிக்கக்கூடிய
விதத்தில் சவாலாக
இருக்க முடிந்தது.
சோவியத் யூனியன்
முயற் சிகள் உலகப்
போருக்கு எதிராகவும்
சமா தானத்திற்காகவும்
நடைபெற்ற போராட்
டங்களை வலுப்படுத்திட
உதவின. அமெரிக்
காவின் ராணுவத்
தலையீடுகளை வலுவாக
எதிர்கொண்டு முறியடிப்பதற்கும்,
பல நாடு களில்
நடைபெற்ற விடுதலைப்
போராட்டங் களுக்கு
உதவிக்கரம் நீட்டுவதற்கும்
சோவி யத் யூனியன்
முன்வந்தது.
இன்றைய தினம்,
அமெரிக்க ஏகாதிபத்திய
வாதிகள் உலகம்
முழுவதையும் தங்கள்
மேலா திக்கத்தின்கீழ்
கொண்டுவருவதற்கான
முயற் சிகளில்
வெறித்தனமாக இறங்கியிருக்கின்
றனர். இவர்கள்
உலகைத் தங்களின்
கட்டுப் பாட்டிற்குள்
கொண்டுவருவதற்காக
மேற் கொள்ளப்படும்
தத்துவார்த்த,
அரசியல் மற்றும்
ராணுவரீதியான
அனைத்து முயற்சிகளும்
அநேகமாக எவ்விதத்
தங்குதடையுமின்றி
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
லத்தீன் அமெரிக்க
நாடுகளின் வளர்ச்சிப்
போக்குகள்
இத்தகைய சூழ்நிலையிலும்
கூட, லத்தீன் அமெரிக்க
நாடுகளின் வளர்ச்சிப்
போக்குகள் மகிழ்ச்சியளிக்கக்கூடிய
விதத்தில் இருக்
கின்றன. அமெரிக்க
ஏகாதிபத்தியவாதிகளின்
கொல்லைப்புறமாகக்
கருதப்படும் இந்
நாடுகள், ஏகாதிபத்தியவாதிகளும்
அவர் களின் தொங்குசதைகளும்
தங்கள் மீது பூட்
டிய விலங்குகளை
உடைத்துத் தூள்தூளாக்
கிக் கொண்டு, ஜனநாயக
அமைப்புமுறையை
உருவாக்கி வளர்ந்து
கொண்டிருக்கின்றன.
கியூபாவுடன்
ஒன்றிணைந்து நின்று,
இங் குள்ள பல இளம்
ஜனநாயக நாடுகள்
அமெ ரிக்காவின்
மேலாதிக்கத்திற்கு
சவாலாக எழுந்துள்ளன.
19ஆம் நூற்றாண்டில்
சைமன் பொலிவார்
என்பவரால் தொடங்கப்பெற்ற
பொலிவாரியன் புரட்சியின்
இறுதி இலக்கு சோசலிசமே
என்று 2006இல் சாவேஸ்
பிர கடனம் செய்தார்.
அத்தகைய பொலிவாரியன்
சோசலிசத்தை அல்லது
பொலிவாரியன் மாற்றை
உருவாக்கிட அவை
நடவடிக்கைகளைத்
தொடங்கியுள்ளன.
ஆயினும், முன்பு
நிகரகுவா மற்றும்
வெனி சுலா ஆகிய
நாடுகளில் நாம்
பார்த்ததைப் போல,
இந்த அரசாங்கங்கள்
அமெரிக்க ஏகாதி
பத்தியவாதிகளின்
நேரடி அச்சுறுத்தலின்
கீழ் இருக்கின்றன.
லத்தீன் அமெரிக்க
நாடுகளின் வளர்ச்சிப்போக்குகள்
ஏகாதிபத்திய சக்தி
களுக்கு ஒரு பின்னடைவேயாகும்.
அதே சமயத்தில்
சர்வதேச அரங்கத்தில்
ஒரு வர வேற்கத்தக்க
வளர்ச்சிப் போக்காகும்.
ஒருதுருவக் கோட்பாடு
என்னும் ஏகாதி
பத்தியவாதிகளின்
ஆதிக்க நடவடிக்கை
களுக்கு எதிராக
நடைபெறும் போராட்டத்தில்,
ஷாங்காய் ஒத்துழைப்பு
(ளுாயபோயi ஊடிடியீநசயவiடிn),
பிரிக்ஸ் (க்ஷசுஐஊளு-க்ஷசயணடை,
சுரளளயை, ஐனேயை,
ஊாiயே, ளுடிரவா
ஹகசiஉய) போன்று
பிராந் திய ரீதியாக
அமைப்புகள் உருவாகி
வலுப் பட்டு வருவது,
பல்துருவக் கோட்பாட்டை
வலுப்படுத்தும்
ஆக்கப்பூர்வமான
வளர்ச் சிப்போக்குகளாகும்.
நவம்பர் புரட்சியின்
படிப்பினைகள்
சோவியத் யூனியன்
வீழ்ச்சியடைந்த
போது, அதைக் கொண்டாடியவர்கள்
கூட, இப் போது ஏகாதிபத்திய
தாக்குதல்களை
எதிர்த்து முறியடிக்கக்கூடிய
அளவில் வலுவான
மாற்று சக்தி இல்லையே
என்று வேதனை யுடன்
புலம்புவதைக்
கேட்க முடிகிறது.
இத்தகைய சூழ்நிலையில்தான்,
நவம்பர் புரட்சியின்
படிப்பினைகள்
மிகுந்த முக்கியத்
துவம் உடையவைகளாக
மாறுகின்றன. முத லாளித்துவத்தால்
உழைக்கும் மக்களின்
பிரச் சனைகளை எப்போதுமே
தீர்த்துவைக்க
முடி யாது. அதேபோன்று உலகில்
அமைதியைக் கொண்டுவரவும்
அதனால் முடியாது.
நாம் நம்முடைய
கோரிக்கைகளுக்காகவும்
பல் வேறு பிரச்சனைகளுக்காகவும்
இயக்கங் களையும்,
போராட்டங்களையும்
நாள்தோறும் நடத்துகையில்,
இந்த அடிப்படை
உண் மையை ஒருபோதும்
மறந்திடக்கூடாது.
மனித சமுதாயத்தின்
வரலாறு என்பது
வர்க்கப் போராட்டங்களின்
வரலாறேயாகும்.
இத்தகைய போராட்டங்கள்
உழைக்கும் மக்கள்
திரளினரை வர்க்க
அடிப்படையில்
ஒன்றி ணைத்து வளர்த்திடும்.
ஓர் ஒன்றுபட்ட
தொழி லாளர் வர்க்கம்,
ஒரு வர்க்கக் கண்ணோட்
டத்தின் அடிப்படையில்
மட்டுமே, உழைக்
கும் மக்களின்
அனைத்துப் பிரிவினரின்
போராட்டங்களையும்
தலைமையேற்று முன்னெடுத்துச்
செல்ல முடியும்.
இத்தகைய ஒன்றுபட்ட
போராட்டங்கள்,
ஒரு சுரண்டலற்ற
சுதந்திர இந்தியாவைக்
கட்டமைக்க வேண்
டும் என்கிற நமது
இறுதி லட்சியத்துடன்
முறையாக இணைக்கப்பட
வேண்டும்.
இதுதான், 1970ஆம் ஆண்டு
சிஐடியு சங் கத்தின்
அமைப்பு மாநாட்டில்
நிறைவேற்றப் பட்ட,
சங்கத்தின் அமைப்புச்
சட்டத்தில் பொறித்துள்ளதுபோன்று,
இந்திய தொழிற்சங்க
மையத்தின் (சிஐடியு)
இறுதி லட்சியம்.
அது கீழ்க்கண்டவாறு
பிரகடனம் செய்கிறது:
‘‘தொழிலாளர் வர்க்கத்தின்
மீதான சுரண்டலை
அனைத்து உற்பத்தி,
விநியோகம் மற்றும்
பரிவர்த்தனைச்
சாதனங்களையும்
சோசலிசமயப்படுத்துவதன்
மூலமும் ஒரு சோசலிச
அரசை நிறுவுவதன்
மூலமும் மட் டுமே
முடிவுக்குக்
கொண்டுவர முடியும்
என்று சிஐடியு
நம்புகிறது. எனவே,
சிஐடியு சோசலிச
சிந்தனைகளை உயர்த்திப்பிடிப்
பதன் மூலம் சமூகத்தை
அனைத்து விதமான
சுரண்டலிலிருந்தும்
முழுமையாக விடுதலை
செய்ய வேண்டும்
என்பதில் உறுதியாய்
நிற்கிறது.’’
எனவே, நமது போராட்டம்
சோசலிசத் திற்கான
போராட்டமே. நமது இறுதி லட்
சியத்தை அடையும்
வரை ஒன்றுபடுவோம்,
போராடுவோம், முன்னேறுவோம்.