|
||||
|
விடுதலை
புலிகளை வெளிநாடுகளில்
பின்தொடரும்
மர்ம நபர்கள்!
அடுத்த குறி யார்?
விடுதலைப்
புலிகள் நெடியவன் அணி தளபதி
பரிதி பாரிஸில் சுட்டுக் கொல்லப்பட்ட
சம்பவத்தையடுத்து,
காரியங்கள்
வேகமான நடக்க தொடங்கியுள்ளன. நெடியவன் அணியைச்
சேர்ந்த முக்கியஸ்தர்கள்
சிலரை ‘அடையாளம் தெரியாத’ நபர்கள் பின்தொடர்வதாக
கூறப்படுகிறது.
இதையடுத்து, நெடியவன்
அணியைச் சேர்ந்த வேறு சில
தளபதிகளும்,
செயல்பாட்டாளர்களும்
இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம்
என்று அந்த அணியைச்
சேர்ந்தவர்களே
கூறத் தொடங்கியுள்ளனர்.
முக்கியமாக இந்த மாதம் விடுதலை
புலிகளின்
மாவீரர் தினம் வருவதால்,
செயல்பாட்டாளர்கள்
வெளியே நடமாட வேண்டிய
தேவைகள் உள்ளன. இந்த சந்தர்ப்பத்தை
வைத்து, நெடியவன் அணியைச் சேர்ந்த வேறு சிலரும்
குறிவைக்கப்பட
சாத்தியம்
மிக அதிகம்
என்றே சொல்லலாம்.
இந்தக் கொலையை
செய்தவர்கள்,
அவர்கள் யாராக இருந்தாலும்,
பரிதியையே
கொல்ல கூடிய அளவுக்கு
திட்டமிடக்
கூடியவர்களாக
உள்ளார்கள்.
கொலை செய்துவிட்டு,
இயல்பாக அந்த இடத்தை
விட்டு அகன்று செல்லக்கூடிய
அனுபவசாலிகளாகவும்
உள்ளார்கள். “பரிதி தனிப்பட்ட
பிரச்னையால்
கொல்லப்படவில்லை”
என்கிறது
நெடியவன்
அணி. “இயக்க வேலைகளில்
ஈடுபட்ட காரணத்தாலேயே
அவர் கொல்லப்பட்டார்”
என்றும் அவர்களது அணி வெளியிட்டுள்ள
அறிக்கைகளில்
கூறப்படுகிறது.
இதனால், வெளிநாடுகளில்
இயக்க வேலைகளில்
ஈடுபடும்,
நெடியவன்
அணியைச் சேர்ந்த மற்றையவர்களின்
உயிர்களுக்கும்
அச்சுறுத்தல்
உள்ளதை அந்த அணி
உணர்ந்துள்ளது. நெடியவன் அணி ஆதரவு
அமைப்பான,
பிரான்ஸ்
தமிழர் மனித உரிமை
மையம் விடுத்துள்ள
அறிக்கையில்,
“கடந்த 8-ம்
தேதி, இரவு
9.00 மணிக்கு,
தளபதி பரிதி தனது
பல சகாக்களுடன்
வெளிவரும்
வேளையில்,
பருதியின்
தினசரி நடமாட்டங்ககளை
நன்கு தெரிந்துள்ள
கொலையாளி,
பரிதியை அவரது பல
சகாக்கள்
முன்னிலையில்,
தனது கைத்
துப்பாக்கியால
சுட்டுப்
படுகொலை செய்துள்ளான்”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது
மிகவும் அபாயகரமான
விவகாரம். அந்த அணியின்
ஒரு தளபதி,
அதுவும் கர்னல் அந்தஸ்து பெறும் அளவுக்கு ராணுவ அனுபவசாலி,
அவரது பல சகாக்களுடன்
வந்த வேளையில்
கொல்லப்பட்டிருக்கிறார்!
அந்த அணியை சேர்ந்த மற்றைய முக்கியஸ்தர்களில்
எத்தனை பேர் பல
சகாக்களுடன்
எப்போதும்
நடமாட முடியும்?
பல சகாக்களுடன்
நடமாடினாலும்,
இப்படியான
சூழ்நிலையில்
உயிர் தப்ப முடியுமா?
பரிதியால்
முடியவில்லையே! அதே பிரான்ஸ் தமிழர் மனித உரிமை
மையம் விடுத்துள்ள
அறிக்கையில்,
“உருது மொழி பேசும்
சிலர் பாரிஸில், முக்கியமாக
லாச்சப்பல்,
காடினோட்
கடைத் தெருக்களில்
தமிழ் செயற்பாட்டாளர்களை
பின் தொடருவதையும்,
கண்காணிப்பதையும்
எம்மில் பலர் அவதானித்துள்ளோம்”
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து,
சிலர் பின்தொடரப்படுகிறார்கள்
என்பது உறுதியாகிறது. அதுவும் ஏற்கனவே
ஒரு கொலை
விழுந்துவிட்ட
நிலையில்,
எதற்காக பின்தொடரப்படுகிறார்கள்?
பின்தொடரும் ஆட்கள்
கொலைகாரர்களா?
தகவல் கொடுப்பவர்களா? பின்தொடர்பவர்
தமிழர் அல்லது சிங்களவர்
என்றால், முகத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆனால், உருது மொழி பேசும்
நபர் என்றால்,
எத்தனை பேருக்கு அவர்களை அடையாளம் கண்டுகொள்ள
முடியும்? அதுவும்
பாகிஸ்தானின்
தாஃப்தான்
முதல் மாண்ட் வரையிலான எல்லைப் பகுதி நகரங்களை
சேர்ந்தவர்கள்
என்றால், தோற்றத்தில்
ஈரானியர்கள்
போல இருப்பார்கள். பின்னால் வரும் ஆட்களில் யாரை சந்தேகப்படுவது? “இந்த விவகாரங்களுக்கு,
பாகிஸ்தான்
புலனாய்வு
பிரிவினர்
உதவுவதாக
நம்பப்படுகிறது”
என்றும் தமிழர் மனித உரிமை
மையம் விடுத்துள்ள
அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. அது நிஜமானால்,
இது மகா
பயங்கர விஷயம். பாகிஸ்தான்
உளவுத்துறை
ஐ.எஸ்.ஐ. அநேக வெளிநாடுகளில்
மிக துல்லியமான
உளவு நெட்வெர்க்
வைத்திருக்கிறது. அவர்களது உளவாளிகள்
ஒருபுறம்
என்றால், மறுபுறம் அவர்களது லெஷ்கர்-இ-தொய்பா தொடர்பு. ஐ.எஸ்.ஐ.யின் அநேக நிழல் வேலைகளை
முடித்துக்
கொடுப்பவர்கள்,
லெஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர்தான்.
ஐரோப்பிய நாடுகள்
மற்றும் கனடாவில் இவர்கள்தான்,
ஐ.எஸ்.ஐ. கைகாட்டும்
ஆட்களை கணக்கு முடிப்பவர்கள். ஐ.எஸ்.ஐ.யின்
மற்றொரு ‘கணக்கு முடித்துக்
கொடுக்கும்’
இயக்கம், ஹக்கானி நெட்வெர்க். இவர்களது ஆட்களும்
தற்போது வெளிநாட்டு
ஆபரேஷன்களில்
உள்ளார்கள். ஜலாலுதீன்
ஹக்கானி, அவரது மகன்
சிராஜூதீன்
ஹக்கானி ஆகியோரின்
வழிநடத்தலில்
இயங்கும்
தீவிரவாத
அமைப்பு அது. பாகிஸ்தானிலும், ஆப்கானிலும்
சி.ஐ.ஏ.வால்
அடையாளம்
கண்டுகொள்ளப்படும்
ஹக்கானி நெட்வெர்க்
தளபதிகள்,
ஐ.எஸ்.ஐ. உதவியுடன்
ஐரோப்பாவுக்கும்,
கனடாவுக்கும்
வந்து சேர்கிறார்கள்.
அதன்பின், ஐ.எஸ்.ஐ. கொடுக்கும்
அசைன்மென்ட்களை
செய்து முடிக்கிறார்கள். இப்போது
புரிகிறதா
நிலைமையின்
பயங்கரம்? விடுதலைப்
புலிகள் இயக்கம் ஆயுதப் போராட்டம்
நடத்திய இயக்கம். தற்போது ஒரு கொலை விழுந்துவிட்ட
நிலையில்
அந்த அமைப்பின்
முக்கியஸ்தர்கள்
வெளிநாடுகளில்
ஆயுதங்களுடன்
நடமாடுவார்கள்
என்று ஊகிக்கலாம்.
தவிர, முக்கிய
நபர்களுக்கு
மெய்பாதுகாவலர்
வசதிகளும்
நிச்சயம்
நெடியவன்
குழுவால்
ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கும். அத்துடன்
தளபதிகள்
உயிருக்கு
பயந்து ஒதுங்கக்கூடிய
ஆட்களுமல்ல.
அச்சுறுத்தலை
எதிர்கொண்டு
களம் இறங்குவார்கள். ஆனால்,
வெளியே இயக்க வேலைகளில்
ஈடுபடும்
சிவில் செயற்பாட்டாளர்களுக்கு
எவ்வகை பாதுகாப்பு
ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன
என்று தெரியவில்லை. நிச்சயம் ஏதாவது
ரகசிய பாதுகாப்பு
ஏற்பாடுகள்
நெடியவன்
அணி தலைமையால்
செய்யப்பட்டிருக்கும். (நன்றி: விறுவிறுப்பு) இப்படி அவர்களே கூறுகின்றார்கள் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |