Contact us at: sooddram@gmail.com

 

தமிழீழ விடுதலை புலிகளின் பிரான்சிய தலைவரான பரிதி என்றழைக்கப்படும் மதீந்திரன்; புலிகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தில் பலியானார்

(டி.பி.எஸ்.ஜெயராஜ்)

தமிழீழ விடுதலை புலிகளின்(எல்.ரீ;ரீ.ஈ) பிரான்சிய தலைவரான நடராஜா மதீந்திரன்; கடந்த நவம்பர் 8 ந்திகதி வியாழக்கிழமை இரவு  உந்துருளியில் வந்த இனந்தெரியாத கொலைகாரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 49 வயதான பரிதி என்கிற பெயராலும் அழைக்கப்பட்ட மதீந்திரன்; எல்.ரீ;ரீ.ஈ யின் முன்னணி அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழவிற்கு(ரி.சீ.சீ) தலைவராக இருந்தார். ஸ்ரீலங்காவில் புலிகளின் அங்கத்தவராக பணியாற்றியபோது ரீகன் என்கிற இயக்கப் பெயரால் அழைக்கப்பட்ட மதீந்திரன்;,பரீசிலுள்ள 341, பைரனீஸ் வீதியிலுள்ள, ரி.சீ.சீ அலுவலகத்துக்கு முன்னால் வைத்து இரவு சுமார் 9.20 மணியளவில் கொல்லப்பட்டார். பிரான்சிலுள்ள ஊடகங்கள் வெளிப்படுத்தும் தகவல்களின்படி பரிதி என்கிற மதீந்திரன் அல்லது ரீகன் என்றழைக்கப் படுபவர், தனது வீட்டுக்குச் செல்வதற்காக ரி.சீ.சீ அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது, உந்துருளியில் வந்த இரண்டு மனிதர்கள் வெகு சமீபத்தில் வைத்து அவரைச் சுட்டுள்ளார்கள்.ஒரு துப்பாக்கி குண்டினால் காயமடைந்த மதீந்திரன் அங்கிருந்து ஓடுவதற்கு முயற்சி செய்திருக்கிறார், ஆனால் அருகிலிருந்த பேரூந்து நிறுத்துமிடத்தில் அவர் கீழே விழுந்து விட்டார்.

அந்த உந்துருளி கொலைகாரர்கள், தலைக்கவசம் அணிந்து தங்கள் முகத்தை மறைத்து முகமூடி அணிந்திருந்தார்கள். கீழே விழுந்த மதீந்திரனை நோக்கித் திரும்பிய  அந்த இருசக்கர வண்டி அவருக்கு அருகில் வந்து அவருக்கு மிக நெருக்கமான தூரத்தில் வைத்து மீண்டும் இரண்டு முறை அவரை நோக்கித் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து ஓடி மறைந்தது. மதீந்திரன்; தலத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறது,மற்றும் மருத்துவ ரீதியான வார்த்தைகளில் சொல்வதானால் மருத்துவ மனையில் அனுமதிக்கும்போது உயிரிழந்திருந்தார்.அவரது உடலை மூன்று ரவைகள் துளைத்திருந்தன. கொலையை விசாரணை செய்யும் பிரான்சிய காவல்துறையினர் எல்.ரீ;ரீ.ஈ யின் இரு பிரிவினருக்கு இடையில் உள்ள உள்ளக மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என எண்ணுகிறார்கள்.

எல்.ரீ;ரீ.ஈ யின் முன்னாள் அதியுயர் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனால் பிரான்சிலுள்ள இயக்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட மதீந்திரன்;, பிரான்சிலுள்ள எல்.ரீ;ரீ.ஈயின் பெரும்பாலான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பெரும் பகுதிக்கு தலைமையேற்றிருந்தார்.

பரிதி என்கிற மதீந்திரன்; பிரான்சிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழவிற்கு(ரி.சீ.சீ) அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாளர் அல்லது இணைப்பாளர் ஆக கடமையாற்றி வந்தார். எனினும் அவர் முன்பு கைது செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதின் காரணமான சில சட்டப் பிரச்சினைகளினால்  அவர் மரணமடைந்த அந்த நேரத்தில் உத்தியோகபூர்வமாக அவர் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை, ஆனால் உத்தியோகபூர்வமற்ற முறையில் அவர் எல்.ரீ;ரீ.ஈயின் தலைவராக கடமையாற்றி வந்தார்.

வெளிநாட்டிலுள்ள ஏனைய புலித் தலைவர்களைப் போலில்லாது பரிதி ஒரு வண்ணமயமான வரலாற்றை தனது பின்புலமாக கொண்டிருந்தார். மேற்கில் பாதுகாப்பாக குடியேறிய பின்னர் தங்களை புலிப் போராளிகள் என்று அழைத்துக் கொள்ளும் மற்றவர்களைப் போன்ற ஒருவரல்ல பரிதி. ஸ்ரீலங்கா யுத்த களங்களில் புலிகளின் இரும்புக் கவசம் போல முழுதாக தன்னை அர்ப்பணித்துப் போராடிய எல்.ரீ;ரீ.ஈ அங்கத்தவர்.

நடராஜா மதீந்திரன்; ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியின் ஒரு பாகமாகிய யாழ்ப்பாண கரையோர தீவாகிய நாரந்தனையை பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர், அங்கு அவர் தனது க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தாலும் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறிவிட்டார்.

1983 ஜூலை தமிழர் எதிர்ப்பு நிகழ்ச்சி இடம்பெற்றபோது, உணர்ச்சி பெருக்கில் பொங்கி எழுந்த சில எண்ணிக்கையான தமிழ் இளைஞர்கள் பல்வேறு தமிழ் இயக்கங்களில் இணைந்தார்கள். மதீந்திரன்; தன்னை எல்.ரீ;ரீ.ஈயில் இணைத்துக் கொண்டார். மதீந்திரன் இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெற்ற இரண்டாவது குழுவில் ஒருவராவர். மதீந்திரன்;,பானு மற்றும் ஐடியாஸ் வாசு போன்றவாகளுடன் இணைந்து வட இந்திய மாநிலமான ஹிமாச்சால் பிரதேசத்தில் பயிற்சி பெற்றவர்.

றீகன்

மதீந்திரன் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனின் பெயரை தனது இயக்கப் பெயராக மேற்கொண்டார். எனினும் அவர் தனது பெயரை எழுதும் போதும்போது ஜனாதிபதியின் பெயரில் இருந்ததைவிட ஆங்கில எழுத்தான ஒரு ‘ஏ’ யை நீக்கியே றீகன் என்கிற தனது பெயரை எழுதிவந்தார். பயிற்சியின் பின்னர் சில காலம் தமிழ் நாட்டில் மௌனமாக இருந்த பின்னர் றீகன் என்கிற மதீந்திரன்; ஸ்ரீலங்காவின் வடபகுதிக்கு திரும்பினார்.

மன்னார் மாவட்ட தளபதி விக்டரின் கீழ் றீகன் கடமையேற்றுக் கொண்டார். விக்டர் கொல்லப்பட்டதும் மற்றும் இரண்டு இராணுவத்தினர் உயிருடன் கைதிகளாக பிடிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற அடம்பன் போரில் றீகனும் பங்கேற்றிருந்தார். விக்டரின் மரணத்தின் பின்னர் மன்னார் மாவட்ட எல்.ரீ;ரீ.ஈ தலைமையை ராதா பொறுப்பேற்றார், றீகன் அவரின் கீழும் பணியாற்றினார்.

1987ல் முன்னாள் யாழ் மாவட்ட தளபதி சதாசிவம்பிள்ளை கிருஸ்ணகுமார் என்கிற கிட்டு ஒரு குண்டுத் தாக்குதலில் அகப்பட்டு ஒரு காலை இழந்த பின்னர் ராதா யாழ்ப்பாணத்துக்கு நகர்ந்தார். றீகனும் ராதாவுடன் யாழ்ப்பாணத்துக்குச் சென்றார்.1987ல் நடைபெற்ற வடமராட்சி நடவடிக்கைக்கான போரில் றீகன் காயமடைந்தார்.

ஜூலை 29,1987 ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டு அமைதி நிலவியபோது றீகன் சிகிச்சைக்காக தமிழ் நாட்டுக்குச் சென்றார். அவரது முழங்காலின் பின்பக்க மேற்புறத்தில் காயம் ஏற்பட்டதின் விளைவாக அவரது பெரோனியல் நரம்பு பழுதடைந்தது. இது பாத விழுகை எனும் நோயின் நிலைக்கு அவரை கொண்டு சென்றது.

இந்த நிலையை ஒருவகை ஊனம் எனலாம்,பலமற்ற பாதங்கள் காரணமாக நடப்பதற்கு சிரமம் ஏற்படலாம். பாத விழுகை ஏற்பட்ட நபர்கள் கணுக்காலுக்கு மேல் தங்கள் பாதங்களை உயர்த்த முடியாமலிருக்கும். இந்த நிலமை காரணமாக  காற் பெருவிரல்களை நிலத்திலிருந்து விடுவிப்பதற்காக  அந்த நபர் பாதிக்கப்பட்ட தனது பாதத்தை உயரத் தூக்க வேண்டியிருக்கும்.

றீகன் தமிழ் நாட்டிலிருந்தபோது சென்னையிலுள்ள எல்.ரீ;.ரீ.ஈ அலுவலகத்துக்கு பொறுப்பாக இருந்த கஸ்ட்ரோவுடன் தங்கியிருந்தார். அதன் காரணமாக அவர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். 1987ல் எல்.ரீ;.ரீ.ஈக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில் யுத்தம் வெடித்தபோது,தமிழ் நாட்டிலிருந்து அநேக எல்.ரீ;.ரீ.ஈ அங்கத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்கள். 1989ல் இந்திய அதிகாரிகளால்  இந்தியாவிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் யாவரும் ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் 82 பேர்கள் காங்கேசன்துறையில் தடுத்து வைக்கப்பட்டார்கள். றீகன் என்றழைக்கப்படும் மதிதரனும் அவர்களில் ஒருவர்.

1990 களில் இந்திய இராணுவம் முற்றாக வாபஸ் பெறப்பட்டதும் தடுத்து வைக்கப்பட்டிருந்த சகல எல்.ரீ.ரீ.ஈ யினரும் விடுதலை செய்யப்பட்டார்கள். ரணசிங்க பிரேமதாஸவினால் பேச்சுக்கள் மூலம் உருவாக்கப்பட்ட சமாதானம் குறுகிய காலமே உயிர் வாழ்ந்தது, அது ஜூன் 1990 ல் சீர்குலைந்து முழு அளவிலான போர் வெடித்தது.

காயமடைந்தது

இந்தச் சமயத்தில் றீகன் வட பகுதி தீவகப் பிரதேசங்களின் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றிருந்தார்.அவரது பிராந்திய அரசியற் பொறுப்பாளர் கஸ்ட்ரோ. 1990 ஆகஸ்ட் செப்ரம்பர்  காலப் பகுதிகளில் இராணுவம் எல்.ரீ.ரீ.ஈ யினை தீவகப் பகுதியில் இருந்து விரட்டியது மற்றும் கடற்படை இணைந்து நடத்திய  ஒப்பறேசன் மேஜர் என்கிற குறியீட்டுப் பெயருடைய இந்தத் தாக்குதலில் றீகன் மீண்டும் காயமடைந்தார்.
அவர் தமிழ் நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக வேண்டி இரகசியமாக படகுப் பயணம் ;செய்து இந்தியாவுக்கு சென்றார். அவர் அங்கு பல மாதங்கள் தங்கியிருந்தார். அப்போதுதான் எல்.ரீ.ரீ.ஈ முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை 1991 மே 21ல் கொலை செய்தது. அதனால் அங்கு பலமான தேடுதல் நடைபெற்றது. றீகன் கேரளாவுக்கு நகர்ந்து ஒரு மட்டுபடுத்தப்பட்ட அளவில் தன்னை வெளிப்படுத்தாமல் சமாளித்து வந்தார்.

ராஜீவின் மறைவுக்கு பின் உருவான நிலமைகளின் மாற்றங்களினால் விரக்தியுற்ற றீகன் இயக்கத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவர் தலைமையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டு தனது சொந்த முயற்சிகளின் துணையினால் பிரான்சை அடைந்தார். அவர்  பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ கிளைகளுடன் எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தாது அங்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தன்னை வெளிக்காட்டாமல் வாழ்ந்தார்.

அந்தக் கட்டத்தில்தான் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ  பிரதி தலைவர் கோபால்சாமி மகேந்திரராஜா என்கிற மாத்தையா, பிரபா – பொட்டு அம்மான் ஜோடியினரால் காட்டிக் கொடுத்தல் குற்றம் சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டார். பின்னர் அவர் கொல்லப்பட்டார். எல்.ரீ.ரீ.ஈ உடன் கருத்து வேறுபாடு கொண்ட பிரான்சிலுள்ள சிலர் மாத்தையாமீது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பரீசில் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். றீகனும் இதில் சம்பந்தப் பட்டிருந்தார்.

அப்போது எல்.ரீ.ரீ.ஈ யின் சர்வதேச பேச்சாளராக இருந்த லோறன்ஸ் திலகர் பிரான்சை தளமாகக் கொண்டியங்கி வந்தார். றீகனின் தொடர்பினைப்பற்றி ஸ்ரீலங்காவிலுள்ள தலைமையிடம் திலகர் முறைப்பாடு செய்தார்.இதன் விளைவாக றீகன் தனக்கு பாதுகாப்பின்மை உள்ளது எனக்கருதி பரீசை விட்டு வெளியேறியிருந்தார். அதன்பின்னர் அவர் எல்.ரீ.ரீ.ஈ அரசியலில் எந்தவித தொடர்பும் கொள்ளாது தனியான ஒரு வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.

பரீசிலிருந்து இந்த ஒதுங்கியிருப்பு பயனுள்ள ஒன்று என்று நிரூபித்தது. சில வருடங்களின் பின் குற்றமற்ற றீகன் குடியுரிமை பெற்று பிரான்சிய கடவுச்சீட்டுக்கு உரித்தாளியானார்.

ஒஸ்லோவின் அனுசரணையுடன் நடைபெற்ற யுத்த நிறுத்தம் 2002ல் அமைதி நிலையை ஏற்படுத்தியது. மதீந்திரனுக்கு இப்போது ஸ்ரீலங்காவுக்கு அதுவும் எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டிலுள்ள வன்னிக்கு விஜயம் செய்ய ஆசை ஏற்பட்டது. அவர் தன்னுடைய பழைய தோழர் கஸ்ட்ரோவை தொடர்பு கொண்டார்,அவர் எல்.ரீ.ரீ.ஈ தலைமையிடம் அனுமதி பெற்று பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை பெற்றுக் கொடுத்தார்.

டேசன்

மதீந்திரன் என்கிற றீகன் பின்னர் பிரான்சிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு பயணமானார். அவர் சில நாட்கள் கிளிநொச்சியில் தங்கியிருந்தபோது எல்.ரீ.ரீ.ஈ காவல்துறை தலைவரான பாலசிங்கம் மகேந்திரன் என்கிற நடேசனைச் சந்தித்தார். றீகனுடன் பேசும்பொழுது அவர் ஒரு பிரான்சியப் பிரஜை என்பதை நடேசன் அறிந்து கொண்டார்.

வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ நிருவாகத்தின் பொறுப்பு, கேபியிடமிருந்து கஸ்ட்ரோவிடம் கைமாறியிருந்தது.தனது முறைக்கு கஸ்ட்ரோவும் தற்போது கடமையிலிருந்த கிளை அலுவலர்கள் கேபியின் வ்pசுவாசிகள் என அவர் நினைத்தபடியால் அவர்களை  நீக்கி வந்தார். பிரான்சிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ தலைவரான மனோ என்கிற வேலும்மயிலும் மனோகரன் என்பவரும் நீக்கப்பட்டிருந்தார். அதனால் பிரான்சில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனிடம் பிரான்சிற்கு பொறுப்பானவராக றீகனை நியமிக்கலாம் என நடேசன் ஆலோசனை தெரிவித்திருந்தார். கஸ்ட்ரோவும் அதை ஏற்றுக் கொண்டிருந்தார். றிகன் எல்.ரீ.ரீ.ஈ யிலிருந்து விலகிய சந்தர்ப்பம் மற்றும் மாத்தையா எதிர்ப்பு சுவரொட்டி அரங்கம் போன்றவற்றை பொருட்படுத்தாது றீகன்தான் அதற்கு பொருத்தமானவர் என்று பிரபாகரன் எண்ணினார்.

நடேசன் மற்றும் கஸ்ட்ரோ ஆகியோர் றீகனைச் சந்தித்து அந்த வாய்ப்பை  வழங்கினார்கள், ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மதீந்திரன் தயங்கினார். பின்னர் அவரது முன்னாள் தோழர்கள் மற்றும் மூத்த தோழர்களான பானு மற்றும் ஜெயம் ஆகியோரும் மதீந்திரனை சந்தித்து அதனை  ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டனர். எனினும் றீகன் அந்த அழைப்பை நேரடியாக பிரபாகரனிடமிருந்தே கேட்க விரும்பினார்.

ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு றீகன் பிரபாகரனை நேருக்கு நேர் சந்தித்தார். பிரபாகரன் அந்த வாய்ப்பை அவருக்கு நேரடியாகவே வழங்கியபொழுது மதீந்திரனால் அதை மறுக்க முடியவில்லை. அவர் அதை ஏற்றுக்கொண்டு பிரான்சின் புதிய எல்.ரீ.ரீ.ஈ தலைவரானார்.

இளங்குமரன் மற்றும் தமிழேந்தி ஆகியோரின் முயற்சியினால் எல்.ரீ.ரீ.ஈ  தனது இயக்தின் அங்கத்தவர்கள் மற்றும் கலைச் சொற்களின் பெயர்களை தமிழாக்கம் செய்துகொண்டிருந்தது. எனவே மதீந்திரனை திரும்பவும் இயக்கத்துக்குள் உள்வாங்கியபோது அவரது இயக்கப் பெயரான றீகன் என்பதை சூரியன் என்கிற பொருள்படும்; பரிதி என மாற்றம் செய்யப்பட்டது.

இப்போது பரிதி என பெயர் மாற்றப்பட்ட மதீந்திரன் வெளிச்சத்தின் நகரமான பரீசுக்கு 2003ன் பிற்பகுதியில் திரும்ப வந்து, பிரான்சில் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்கிற முன்னணி அமைப்பின் பெயரில் பிரான்சில் எல்.ரீ.ரீ.ஈ இயங்கி வந்தது. அதன் தலைமையகம் பரீசிலுள்ள இலக்கம் 341,பைரனீஸ் வீதியில் அமைந்திருந்தது. ரி.சீ.சீ என்கிற தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின்  புதிய தலைவராக பரிதி மாறினார்.

முந்தைய விதிமுறைகளின் ஒரு கணிசமான வெளிப்பாடுகளைக் கொண்டு  எச்சரிக்கையாக பரிதி செயற்பட்டதுடன் இப்போது செய்தி வெளியீடுகள்;, அறிவிப்புகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் என்பனவற்றை ரி.சீ.சீ யின் பெயரில் வெளியிடாமல் எல்.ரீ.ரீ.ஈ  - பிரான்ஸ் என்கிற தலைப்பின் கீழ் வழங்கி வரலானார். இத்தகைய திடீர் நகர்வுகளின் நீண்ட கால தாக்கத்தை உணரத் தவறிய பிரபாகரன் மற்றும் கஸ்ட்ரோ ஆகியோர் அதனை பெரிதும் வரவேற்றனர்.

ஆனால் இது மட்டுமன்றி பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈயினர் ஒரு முன்னோடியற்ற வகையில் செயற்பட ஆரம்பித்தனர். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்  போன்ற  கருக்களை உருவாக்கிய உலகப் புகழ்பெற்ற ஒரு நாடான பிரான்சில்தான் தாங்கள் வாழ்கிறோம் என்கிற உண்மையை உணராமல் புலிகள், ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தாங்கள் பயன்படுத்திய முறைகளையும் மற்றும் தந்திரங்களையும் இங்கேயும் பின்பற்றலானார்கள். புரட்சிகரமான பிரான்சில்  தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் ஒரு பயங்கரப் பிரதேசமாக மாறின.

பிரான்ஸ் காவல்துறையினர் 2006ல் எல்.ரீ.ரீ.ஈ யினரை சுற்றி வளைத்து தொடர்ச்சியான சோதனைகள் பலவற்றின் மூலம் மதீந்திரன் உட்பட அநேக எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களைக் கைது செய்தார்கள். 2008 ஒக்ரோபரில், 22 எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள் பிரான்சில் வழக்கு விசாரணக்கு உட்பட்டாhகள். குற்றம் சாட்டப் பட்டிருந்த  பெரும்பாலானவர்கள்மீது, பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான குற்றவியல் சதி, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்கியமை அல்லது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி  மேற்கொள்வதற்காக மோசடி புரிந்தமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன. முதன்மை குற்றவாளியாக பரிதி நிறுத்தப்பட்டிருந்தார். நாட்டிலுள்ள 75,000 தமிழர்களிடமிருந்து ஐந்து மில்லியன் யுரோக்களை கப்பமாகக் கோரியதாக  எல்.ரீ.ரீ.ஈ மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ முன்னணியான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் கூண்டிலேற்றப் பட்டிருந்தது.

நவம்பர்  2009ல் நடந்த நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள்  தண்டிக்கப்பட்டார்கள். குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 20 பேர்கள் தண்டனை பெற்றார்கள். ஒரு பிரான்சிய ஏ.எப்.பி  அறிக்கையின்படி அந்தக் குழுவின் தலைவரான நடராஜா மதீந்திரனுக்கு ஸ்ரீலங்காவிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ  பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியுதவி செய்வதற்காக,7.4 மில்லியன் அமரிக்க டொலர்களை பரீசிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழும் தமிழ் சமூகத்தினரிடமிருந்துக் வரி அறவிட்டதுக்காக ஏழு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய 19 பேருக்கும் 6 வருட சிறைத்தண்டனை அல்லது அதனிலும் குறைவாக வழங்கப்பட்ட அதேவேளை ஒருவர் விடுதலையும் பெற்றார். நீதிமன்றம், பிரான்சிலுள்ள தமிழர்களின், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவானது எல்.ரீ.ரீ.ஈயின் முகவர் நிலையமாக உள்ளதாக தீர்ப்பளித்த பின்னர் அது கலைக்கப்பட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தது.

மேன்முறையீடு

அந்த தீர்ப்புக்கு எதிராக பரிதியும் மற்றவர்களும் மேன்முறையீடு செய்து பிணையில் வெளியே வந்தார்கள். ரி.சீ.சீ அதன் தடைக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட மேன்முறையீடு நிலுவையில் உள்ளதால் தற்சமயம் இயங்கி வருகிறது. அந்த மேன்முறையீடுகளுக்கான தீர்ப்பை நீதிமன்றம் வெகு விரைவில் வழங்க இருந்தது. இதற்கிடையில் பரிதி அவர்களும் அடிக்கடி காவல் நிலையத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என்பது உட்பட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியவராக இருந்தார். மேலும் அவர் ரி.சீ.சீ அலுவலகத்தில் பதவி வகிப்பதிலிருந்து விலக்கப் பட்டிருந்தார், ஆனாலும் அவர் அதை தொடர்ந்து அலட்சியம் செய்து வந்தார். பரிதி கொல்லப்பட்ட சமயத்தில் பரிதியையும் அவரது நடவடிக்கைகளையும்  கண்காணிப்பதற்காக பிரான்சிய காவல்துறையினர்,ஒரு விசேட கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில்  நடந்தேறிய ஒரு நிகழ்வாக கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 30 ந்திகதி அவர்;மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் பரிதி பாதிக்கப்பட்டார். பரிதியும் அவரது இரண்டு உதவியாளர்களும் பரீசிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்களது வாகனத்தை நோக்கிச் செல்லும்போது ஆறு பேரைக் கொண்ட ஒரு குழவினர் அவர்களை சுற்றி வளைத்தார்கள்.

அவர்களில் மூவர் தலை முகம் என்பனவற்றை கழுத்துவரை மறைத்து கண்கள், வாய் முகத்தின் சிறிய பகுதி என்பனவற்றை மட்டும் வெளிக்காட்டும் துணியால் செய்த பலகிளாவா என்றழைக்கப்படும் தொப்பியை அணிந்திருந்தார்கள். கையில் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த இந்த முகமூடி அணிந்தவர்கள் அவற்றை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். மற்ற மூவரும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் இருவர் பரீசிலிருந்த முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ   அங்கத்தவர்கள் என்று பின்னர் பரிதி அவர்களை அடையாளம் கண்டுகொண்டார். அந்த தாக்குதல்தாரிகளின் நோக்கம் பரிதியை கொல்வதல்ல, ஆனால் அவருக்கு காயங்களை ஏற்படுத்த விரும்பினார்கள்.

அந்த தாக்குதல்காரர்கள் தாங்கள் பயன்படுத்திய இரும்புக் கம்பிகளைத் தவிர யப்பானிய சமுராய் வாள் வகையை சேர்ந்த கட்டான எனப்படும் ஒரு வகை ஆயதத்தையும் பயன்படுத்தினார்கள். கட்டான வட்டமான அல்லது சதுரமான பாதுகாப்பு கவசத்தையும் மிதமான வளைவுகளைக் கொண்ட ஒற்றை முனைக் கத்தியையும் மற்றும் இரண்டு கைளாலும் பயன்படுத்த தக்க வகையில் நீண்ட பிடியினையும் கொண்டது. அந்த கூரிய கத்தியின் நீளம் வழக்கமாக 60 செ.மீ அல்லது 23.6 அங்குலத்திலும் கூடியது.

அந்த தாக்குதலாளிகள் சமுராய் வாளினை பயன்படுத்தி பரிதியை சீவியது மட்டுமன்றி இரும்புக் கம்பிகளைக் கொண்டும் சில அடிகளையும் அடித்தார்கள். அவரது இரண்டு உதவியாளர்களும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டபோதும் அவர்கள் மீது வாள் வீச்சு நடத்தப்படவில்லை. பரிதி ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார், அவரது  காயத்துக்கு 27 தையல்கள் போடப்பட்டன. பரிதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அப்போது ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டது, ஏனெனில் அவர் எல்.ரீ.ரீ.ஈ  யின் ஒரு உயர்ந்த நிலை உத்தியோகத்தர் என்பதோடு பல வருடங்களாக பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு பல வருடங்களாக தலைமையேற்று இருந்தவராகும்.

போட்டி

வெளிநாட்டிலுள்ள புலிகளின்  உட் போட்டிகள் காரணமாக கொலை செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ  யின் மிக மூத்த தலைவர் என்கிற வகையில் பரிதி கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் ஒரு தீவிர முன்னேற்றம் உள்ளது. அப்படியான தாக்குதல்கள் வேறு பல இடங்களிலும் நடந்துள்ளன, ஆனால் பரிதி கொல்லப்பட்டதில் மிகவும் முக்கியத்துவம் உள்ளது என ஊகிக்க வேண்டியுள்ளது, ஏனெனில் கொலையின் தன்மையும் மற்றும் அதேபோல கொலை செய்யப்பட்டவர் இயக்கத்தில் பெற்றிருந்த சிரேஷ்ட நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.

வெளி நாட்டில் வாழும் எல்.ரீ.ரீ.ஈ யினரிடையே நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியினை இந்தச் சம்பவத்தின் தன்மையும் நோக்கமும் வெகு திறமையாக வெளிப்படுத்துகிறது. இரண்டு மூத்த புலிச் செயற்பாட்டாளர்களுக்கு விசுவாசத்தை பிரகடனப்படுத்தும் இரண்டு பரந்த பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று நோர்வேயை தளமாக கொண்ட நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன. மற்றது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலிருந்து இயங்கி வரும் விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி.

தமிழ் புலம் பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிகளிடையே தற்பொழுது நடைபெற்று வரும் உள்ளக அதிகாரப் போட்டியினைப் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டுமானால், ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்டவைகளைப் பற்றிய ஒரு சுருக்கமான மீள் கண்ணோட்டத்தை அலசுவது அவசியம்.

மே 2009ல் முல்லைத்தீவில் ஏற்பட்ட இராணுவத் தோல்வி காரணமாக எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் மற்றும் மிகப் பெருந்தொகையான மூத்த தளபதிகளும் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தார்கள். இதன் விளைவாக ஸ்ரீலங்காவிலிருந்து கணிசமான அளவில் எல்.ரீ.ரீ.ஈ அழிக்கப்பட்டது.

எனினும் எல்.ரீ.ரீ.ஈ  யின் வெளிநாட்டு கட்டமைப்பு அப்படியே முழுமையுடன் இருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் தலைமை ஆயுதக் கொள்வனரான செல்வராசா பத்மநாதன் எல்.ரீ.ரீ.ஈ  யின் சர்வதேச உறவுகளை வழி நடத்தும் தலைமையினை ஏற்று அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய சேவை மூப்பை பயன்படுத்தி வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ  தலைவராக மாறும் கேபியின் முயற்சியினை புலம் பெயர் சமூகத்திலுள்ள ஒரு பகுதியினர் கடுமையாக எதிர்த்தார்கள்.

முன்னர் எல்.ரீ.ரீ.ஈ யின் பல்வேறு வெளிநாட்டு கிளைகள் மற்றும் முன்னணி அமைப்புகள் என்பனவற்றை வன்னியிலிருந்து இயங்கிவந்த வீரகத்தி மணிவண்ணன் என்கிற கஸ்ட்ரோவே கட்டுப்படுத்தி வந்தார். யுத்தம் விரிவடையத் தொடங்கியதும் வன்னியிலிருந்த தலைமையகத்துக்கும் மற்றும் புலம்பெயர் சமூகத்திலிருந்த எல்.ரீ.ரீ.ஈ  கட்டமைப்புகளுக்கும் இடையில் தொடர்பாடல்களை மேற்கொள்வது சிரமமாக இருந்தது, இதனால் ஒஸ்லோவிலிருந்த நெடியவனை கஸ்ட்ரோ தனது பிரதிநிதியாக நியமித்தார். எல்.ரீ.ரீ.ஈ  யின் வெளிநாட்டு கட்டமைப்பு நெடியவனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

நெடியவன்

கேபி முன்பு ஒருமுறை புலிகளின் வெளிநாட்டு கிளைகளுக்கு பொறுப்பாக இருந்தார். எனவே பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ  யின் தலைமைப் பொறுப்பை ஏற்க கேபி முயற்சித்தார். அதற்கு நெடியவனும் அவரது குழுவினரும் வெளிநாட்டு கட்டமைப்பின் மீதுள்ள தங்கள் கட்டுப்பாடு கைநழுவிப் போவதை விரும்பாததால், கடுமையாக எதிர்த்தார்கள். மிகவும் கடுமையான பகைமை மற்றும் மோதல்களின் பின்னர் பிரதானமாக வெளிநாட்டில் நிலை கொண்டிருந்த  செல்வாக்கு மிக்க எல்.ரீ.ரீ.ஈ  புலனாய்வுப் பிரிவினர் சிலரது முயற்சி காரணமாக ஒரு தற்காலிக சமாதானம் உருவானது.

இந்த புதிய அமைப்பின்படி மீள்கட்டமைக்கப்பட்ட வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் தலைமைப் பொறுப்பை கேபி ஏற்றுக் கொண்டார். ஸ்ரீலங்காவிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ  செயற்படாத நிலையில் வெளிநாட்டில் இயங்கிய புலிகள் அமைப்பே எல்.ரீ.ரீ.ஈ  இயக்கம் எனக் கருதப்பட்டது. புதிய தலைமை, பல்வேறு பிரிவுகளுக்கும் மற்றும் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக பல்வேறு செயலாளர்களையும் கொண்டிருந்தது. அதன் தலைமை செயலாளராக கேபி அதன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். கட்டமைப்பு எனக்கூறப்படும் எல்.ரீ.ரீ.ஈ   கிளைகளைக் கொண்ட வலையமைப்பின் நிருவாகத்துக்கு பொறுப்பாக நெடியவன் இருந்தார்.

மீள்கட்டமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ யினுள் தனது தலைமைத்துவத்தை உறுதியாக நிலைநாட்டும் முன்னரே, கேபி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார். இது நெடியவன் பக்கம் அதிர்ஸ்டக் காற்றை வீசச் செய்தது. அவருடைய வழியிலிருந்து கேபி வெளியேறி விட்டதால், வெளிநாட்டுக் கட்டமைப்பின் மீதுள்ள தனது பிடியினை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது நெடியவனுக்கு இலகுவாக இருந்தது. நெடியவன் குழுவினர் இப்போது கேபியை ஒரு துரோகி என்று குறைகூறி அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவருக்கு குழிதோண்ட முயற்சித்தது.

எனினும் நெடியவனுக்கும் சில தடங்கல்கள் ஏற்பட்டன. அவர்களுக்குள் தலைவராக ஐரோப்பாவில் விநாயகம் தோன்றினார். விநாயகம் என்கிற சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தி எல்.ரீ.ரீ.ஈ  புலனாய்வுப் பிரிவில் ஒரு மூத்த தலைவர். முல்லைத்தீவு தோல்வி ஏற்பட்டபோது அவர் வன்னியில் இருக்கவில்லை.

விநாயகம் பின்னர் ஸ்ரீலங்காவிலிருந்து தப்பி சில காலம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கழித்த பின்னர், பிரான்சை நோக்கி பயணப்பட்டார், அங்கு அவர் அரசியல் தஞ்சம் கோரியதாக அறிவிக்கப்பட்டது. அவர் இப்போது பிரான்சுக்கும் அண்டை நாடான ஜேர்மனிக்கும் இடையே பறந்து கொண்டிருக்கிறார்.

நெடியவன் மற்றும் கேபி இடையே தற்காலிக சமாதானம் ஏற்படுவதற்கு பொறுப்பாக இருந்தவர்களில் விநாயகமும் ஒருவர், மற்றும் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ  யினை மீள் கட்டமைப்பு செய்வதற்கும் அவர் உதவியுள்ளார். அப்போது அவர் கதிர்காமத்தம்பி அறிவழகனின் கீழ் இயங்கி வந்தார். உலகெங்கும் சிதறிக் கிடந்த எல்.ரீ.ரீ.ஈ  புலனாய்வு செயற்பாட்டாளர்களுடன் விநாயகம் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை ஒரு ஒத்திசைவான குழுவாக ஒன்றாக்கி வார்த்தெடுப்பதற்கு அவர் முயன்று வந்தார்.
விநாயகம்
ஆரம்பத்தில் விநாயகமும் மற்றும் நெடியவனும் ஒன்றாகத்தான் பணியாற்றி வந்தார்கள், ஆனால் விரைவிலேயே அந்தக் கூட்டணி பிளவுபட்டது.
இதற்கான பிரதான காரணம், நிதி,வர்த்தகம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் சொத்துக்கள் மற்றும் பணம் தேடும் வாய்ப்புகள் யாவும் ஒட்டுமொத்தமாக நெடியவனின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததுதான், அதை விநாயகத்துடன் பங்கிட அவர் மறுத்துவிட்டார்.

விநாயகம் இப்போது கேபியின் தலைமையின் கீழ் மீள் கட்டமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் வழங்கலானார். அப்போது நிறுவப்பட்ட தலைமைச் செயலகம் தான் எல்.ரீ.ரீ.ஈ யின் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு தலைமையகம் என அவர் அறிவித்தார். அந்த நிலையிலிருந்து விநாயகமும் மற்றும் அவரது குழுவினரும் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் முழு கட்டமைப்பினதும் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் நெடியவனும் மற்றும் அவரது விசுவாசிகளும் இதை எதிர்ப்பது இயற்கைதானே.

இதுதான் அதிகாரப் போராட்டத்துக்கான புதிர். வருடாந்த நவம்பர் 27 மாவீரர் நாள் நெருங்கி வரும் சமயத்தில் இரு பிரிவினரும் மேடை கொண்டாட்டங்கள் மற்றும் தமிழ் புலம் பெயர் சமூகத்தி;ன்மீதுள்ள தங்கள் பிடியினை வலுப்படுத்தும் முயற்சியில் போட்டிபோட்டு வருகிறார்கள். நெடியவனின் பிரிவின் மடிப்புகளுக்குள் எஞ்சியிருந்த பரிதி ஐரோப்பாவிலுள்ள மிகவும் முக்கியமான ஒரு எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர் ஆகும். எனவே பிரான்சிய காவல்துறையினர் மற்றும் அதேபோல தமிழ் புலம்பெயர் சமூகததின் அறிவுள்ள ஒரு பிரிவினர், இந்த அதிகாரப் போட்டியின் காரணமாகத்தான் பரிதி கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறார்கள்.

இந்தப் புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் உலகின் பல பாகங்களிலுமுள்ள அநேக எல்.ரீ.ரீ.ஈ  தலைவர்கள் தாக்கப்பட்டதை கண்டிருக்கிறது. சில சம்பவங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன, சில அறிவிக்கப்படாமலே போய்விட்டன. வெளிநாட்டு புலிகளின் உள்ளக மோதலில் பரிதி மீதான தாக்குதல் மட்டும்தான் புதிய ஒன்றல்ல, ஆனால் விவாதப்படி அது மிகவும் உயர்வான விவரங்கள் அடங்கிய மிகவும் தீவிரமான ஒரு சம்பவம் ஆகும்.

(நன்றி: மொழி பெயர்பாளர் தேனி குமார்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com