|
||||
|
ஈழத் தமிழர்கள்
கொலையை வேடிக்கை பார்த்ததா
ஐ.நா.?
கேள்வி எழுப்பும்
உள் பரிசீலனைக்
குழு!
'இலங்கையில் நடந்த
இறுதிக் கட்டப் போரில் மக்களைக் காப்பாற்ற
ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறி விட்டது. மிக அபாயகரமான
போர் சூழலில்
வெகுதிறமையான
முடிவை எடுத்திருக்க
வேண்டும்.
மக்களைக் காப் பாற்றும் நடவடிக்கைகளை
முன்னெடுக்காமல்
போனது இந்த அமைப்பின்
செயல்பாடு
மற்றும் அணுகுமுறைக்கான
மிகப்பெரும்
தோல்வி’ - ஐ.நா. மீது இப்படி பகீர் குற்றச்
சாட்டை வைத்துள்ளது,
அந்த அமைப்பின் உள்பரிசீலனைக்
குழு.
ஈழப்போர் சமயத்தில்
ஐ.நா. எடுத்த நிலைப்பாடுகள்
குறித்து
ஐ.நா. அமைப்பின் உள்பரிசீலனைக்
குழு ஆய்வு
செய்தது.
ஆய்வின் முடிவில்,
அந்தக் குழு தயாரித்த
முக்கிய அறிக்கையின்
(இறுதி வடிவத்துக்கு
முந்தைய நிலை அறிக்கை)
நகல் ஒன்று
பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு
லீக் ஆனது.
அந்த அறிக்கையை
அடிப்படையாக
வைத்து, மீண்டும் இலங்கைப் புயல் வீசுகிறது.
இந்த விவகாரம் குறித்துப்
பேசும் பி.பி.சி-யின்
செய்தியாளர் ஒருவர்,
''26 ஆண்டுகள்
நடத்தப்பட்ட
போரில் லட்சக்கணக்கான
மக்கள் கொல்லப்பட்டனர். இறுதிக் கட்டப்
போரின் கடைசி நான்கைந்து
மாதங்களில்
மட்டும் 40 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர்
கொல்லப்பட்டதாக
ஐ.நா-வின் முந்தைய அறிக்கை சொன்னது. ஐ.நா-வின் உறுப்பினர்கள்
யுத்தக்களத்தில்
தொடர்ந்து
இருந்திருந்தால்,
இலங்கை அரசின் வீரியம் குறைந்து இருக்கும்
என்பதே இப்போது வெளியாகி இருக்கும்
அறிக்கையின்
அடிப்படை
சாராம்சம்.
ஐ.நா-வின் யுத்தக்கால
செயல்பாடுகள்
குறித்து
அந்தக்குழு
கடுமையான
கேள்விகளை
எழுப்பி இருக்கிறது.
குறிப்பாக, 2008 செப்டம்பரில்
ஐ.நா. தனது ஊழியர்களை
யுத்தக்களத்தில்
இருந்து திரும்பப்
பெற்றுக்கொண்ட
முடிவு குறித்து அழுத்தமாக
கேள்விகளை
முன்வைத்து
இருக்கிறார்கள்.
'உங்களுடைய
பாதுகாப்பை
இனிமேலும்
நாங்கள் உறுதிப்படுத்த
முடியாது’
என்று, இலங்கை அரசு எச்சரித்ததும்,
இந்த திரும்பப்பெறுதல்
நடந்ததை கேள்வியாக்கி
இருக்கிறார்கள்.
இப்போது பிரிட்டனில்
தஞ்சம் அடைந்து இருக்கும்
ஒரு தமிழ்ப்பள்ளி
ஆசிரியை, 'ஐ.நா. குழுவினர் யுத்தக்
களத்தைவிட்டு
கிளம்பியபோது,
போக வேண்டாம்
என்று எவ்வளவோ தடுத்தும்
அழுதும் கெஞ்சியும்
பார்த்தோம்.
ஆனால், அவர்கள்
எங்களது கோரிக்கைகளுக்கு
காதுகொடுக்கவே
இல்லை. அவர்கள் தொடர்ந்து
யுத்தக் களத்தில் இருந் திருந்தால்,
இன்றைக்கு
அப்பாவித்
தமிழர்கள்
பலரும் உயிரோடு இருந்திருப்பார்கள்’
என்று எங்கள் செய்தியாளரிடம்
குமுறினார்
‘இலங்கை அரசு தொடர்ந்து
பிரஷர் கொடுத்ததன்
விளைவாக, மிகஅதிகமான
மக்கள் ஷெல் அடித்துக்
கொல்லப்பட்ட
விவகாரத்தை
ஐ.நா. அழுத்தமாக எழுப்பவில்லையோ...’
என்ற விமர்சனத்தையும்
அந்தக்குழு
சுட்டிக்காட்டி
இருக்கிறது.
அமைதிக் காப்பாளர்கள்
தொடர்ந்து
யுத்தக் களத்தில் இருந்திருக்க
வேண்டும்,
அங்கே என்னென்ன நடக்கிறது
என்பதையும்
உலகுக்கு
உடனுக்குடன்
உணர்த்தி
இருக்க வேண்டும் என்பதையும்
அறிக்கை அழுத்திச்
சொல்கிறது.
தமிழர்களுக்கு எதிரான
யுத்தக் காலத்தின்
இறுதி மாதங்களில்,
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின்
கூட்டம் ஒன்றுகூட நடத்தப்படவில்லை.
ஐ.நா-வின் உயர்மட்டக்
குழுவும்
ஃபார்மாலிட்டி
ஆலோசனை கூட செய்யவில்லை
என்கிறார்கள்.
எங்களுடைய முன்னாள்
ஸ்ரீலங்கா
செய்தியாளர்
ஒருவர், 'மிகக் குரூரமாக
நடத்தப்பட்ட
போர்க்குற்றங்கள்
குறித்து
ஐ.நா. மௌனத்தை மட்டுமே
பதிலாகத்
தந்தது’ என்று கடுமையாகக்
குறிப்பிட்டதையும்
இந்த இடத்தில்
நினைவுகூர
வேண்டி இருக்கிறது.
அதேநேரம்,
இலங்கை அரசின் ராணுவம், பயங்கரவாதிகள்
கூட்டம் போன்று மக்கள் வசிக்கும்
பகுதிகளில்
செயல்பட்டதைச்
சுட்டிக்காட்டி,
உலகப் போர்நடைமுறை
விதிகள் கடைப்பிடிக்கப்பட
வேண்டும்
என்று ஐ.நா. அந்த நேரத்தில்
முயற்சி மேற்கொண்டதையும்
இந்த அறிக்கை
சுட்டிக்காட்டத்
தவறவில்லை.
ஆனால், அந்த முயற்சிக்கு
எந்தப் பலனும் இல்லை'' என்கிறார்
அவர்.
ஐ.நா-வின் முன்னாள்
உயர் அதிகாரியும்
அறிக்கை அளித்திருக்கும்
ஆய்வுக்குழுவின்
தலைவருமான
சார்லஸ் பெட்ரே, 'குழு கண்டறிந்த
விஷயங்களை
இந்த அறிக்கை
மிகத் துல்லியமாகப்
பிரதிபலிக்கிறது’
என்று அதிர்ச்சிகளுக்கு
வலுசேர்த்து
இருக்கிறார்.
அறிக்கையின் உள்ளடக்கங்கள்
வெளியான பிறகு பல
தளங்களில்
இருந்தும்
விமர்சனங்களும்
கண்டனங்களும் கருத்துகளும்
குவிந்த வண்ணம் இருக்கின்றன. 'பொதுமக்களைப்
பாதுகாக்கும்
கடமையில்
இருந்து ஐ.நா. தவறி இருப்பது தெளிவாகத்
தெரிகிறது.
ஐ.நா-வின் கரங்கள்
கட்டப்பட்டு
இருப்பது
புலன் ஆகிறது. சென்சிட்டிவான சமயங்களில்
ஐ.நா. அமைப்புக்கு
அரசியல் மற்றும் அதிகார ரீதியில் ஆலோசனைகளையும்
அறிவுரை களையும் வழங்குவதற்கு
ஆட்களே இல்லை’ என்று
உலக நாடுகள்
பலவற்றில்
இருந் தும் கண்டன
விமர்சனங்கள்
கிளம்பி இருக்கின்றன.
இந்த விவகாரத்தில்
ஐ.நா-வின் பதில் என்ன? ''அறிக்கை நகல் வெளியானது
பற்றி சொல்வதற்கு
ஒன்றும் இல்லை. இறுதி அறிக்கை
பொதுச்செயலாளரின்
கரங்களுக்கு
வந்து, அவர் அதை
வாசித்த பிறகு வெளியிடப்படும்''
என்கிறார்
ஐ.நா-வின் செய்தித்தொடர்பாளர்
மார்டின்
நெசிர்கி.
இறுதி அறிக்கை வெளியாகும்போது,
ஐ.நா-வின் இந்த பலவீனப்
பக்கங்கள்
எடிட் செய்யப்படவே
அதிக வாய்ப்பு
இருக்கிறது
என்கிறார்கள். ஆபத்தில் அலறும்
மக்களைக்
காப்பாற்ற
முடியாத ஓர் அமைப்பு
இருந்து என்னதான் பயன்?
- எஸ்.ஷக்தி |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |