Contact us at: sooddram@gmail.com

 

தாக்கரேக்களின் இந்தியா!

(சமஸ்)  

பால் தாக்கரே முதன்முதலில் எனக்கு அறிமுகமானது கையில் நுரை ததும்பும் பீர் கோப்பையுடன் குளிர் கண்ணாடி அணிந்த ஒரு புகைப்படத்தில். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில், மேடையில் அனாயசமாக பைப்பில் புகைபிடிப்பார். இந்தியாவின் நவீனக் கலாசார நுழைவாயிலான மும்பையில் இருப்பவர்களை பால் தாக்கரேவின் இந்தத் தோற்றம் ஈர்த்தது இயல்பானது. தாக்கரேவின் ஆரம்ப கால நண்பர்கள் இளவயதில் இருந்தே அவர் நவீன அடையாளத்துடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், மெட்ரோபாலிடன் கலாசாரத்துக்கு முன்மாதிரியாகச் சொல்லப்படும் மும்பை, வேற்று மாநிலத்தவர்களை ஓட ஓடத் துரத்தும் கலாசாரத்துக்கும் முன்மாதிரியானது தாக்கரேவால்தான்.
 
"இது சுதந்திர நாடு; நான் சுதந்திரமானவன்; யாருக்கு நான் பயப்பட வேண்டும்?"என்று கேட்பவர் தாக்கரே. பேச்சு - பாவனையில் மட்டும் அல்ல;  அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் சுதந்திரத்தின் உச்சத்தை அவர் அனுபவித்தார். அதேசமயம், அவருடைய சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான மக்களின் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது.

 

தென்னிந்தியாவில் இருந்து செல்லும் ரயில்களைச் "சுருக்கெழுத்தாளர்களின் ரயில்கள்" என்று அழைத்ததில் தொடங்கி, கடைசிக் காலத்தில் "ஒரு பீகாரி நூறு நோய்களுக்குச் சமம்" என்பது வரை அவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளும் உயிர்களை விலையாகக் கேட்டன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, "கரசேவையில் பங்கேற்றதற்காக கர்வம் கொள்கிறேன்" என்றார். மும்பையில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களின்போது அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன. எதையும் பெற மறுத்த போலீஸார் ஊடகங்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, வெறும் ஏழு புகார்களை மட்டும் பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தார்கள்.

பின்னாளில் பா.ஜ.க.- சிவசேனா ஆட்சிக்கு வந்தபோது அவையும் காணாமல் அடிக்கப்பட்டன. மும்பை கலவரங்களில் சிவசேனையின் கொலைக்கரங்களை ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அம்பலப்படுத்தியது. ஆனால், தாக்கரேவுக்கு எதிராக அரசால் கண்ணை அசைக்கக்கூட முடியவில்லை.

பல முறை அவருடைய சர்ச்சைக்குரிய எழுத்துகள், பேச்சுகள் சார்ந்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனைகூட விதித்தது. ஆனால், மேல் முறையீடுகள், அரசியல் தலையீடுகள் காரணமாக அனைத்திலிருந்தும் அவர் தப்பினார்.

பால் தாக்கரே மாதிரி வேறு யாராவது நடந்துகொண்டிருந்தால், அவர் தன் வாழ்வின் பெரும் பகுதியைச் சிறையில் செலவிட வேண்டி இருந்திருக்கும். ஆனால், சட்டத்தால் அவரை நெருங்கவே முடியவில்லை. 1950-களில் அவருடைய அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்தஒன்றுபட்ட மகாராஷ்டிரம் இயக்கம்உச்சத்துக்குப் போனபோது, 105 பேர் உயிரிழந்தனர்.

அரசாங்கம் தாக்கரேவைக் கைது செய்து புனே எரவாடா சிறையில் அடைத்தபோது, மும்பை வீதிகள் தீப்பற்றி எரிந்தன. ஒருகட்டத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தாக்கரே கோரிக்கை விடும்படி அரசாங்கம் சிறையில் இருந்த தாக்கரேவிடம் கெஞ்சியது. அரசாங்கத்திடம் அன்றைக்கு ஏற்படுத்திய பயத்தை, தான் சாகும் வரை அப்படியே இருக்குமாறு பார்த்துக்கொண்டார் தாக்கரே.

அடிப்படையில் பால் தாக்கரே ஒரு தீவிரமான தேசியவாதி. ஆரம்ப நாட்களில் அவர் எந்த அளவுக்கு தேசியவாதியாக இருந்தாரோ, பின்னாளில் அதே அளவுக்கு இனவாதியாகவும் மாறினார். ஒரு தேசியவாதியை இனவெறியை நோக்கித் தள்ளியது எது? இந்தக் கேள்விக்கான பதில்தான் பால் தாக்கரேவிடம் இருந்து இந்திய ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை.

பால் தாக்கரேவுக்கு ஹிட்லரை ரொம்பப் பிடிக்கும். "ஹிட்லரின் எல்லா நடவடிக்கைகளையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அவர் ஓர் அற்புதமான ஆளுமை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயுமே ஒரு ஹிட்லர் இருக்கிறார். எனக்கும் ஹிட்லருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்" என்று சொல்வார் தாக்கரே.

உண்மைதான். ஒவ்வொருவருக்குள்ளும் ஹிட்லர் மட்டும் இல்லை. இங்கே தாக்கரேவும்கூட இருக்கிறார். தெலங்கானா, ஹரித்பிரதேசம், பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், மிதிலாஞ்சல், போடோலாந்து, கூர்காலாந்து, கட்ச், விதர்பா என்று இன்றைக்கு இந்தியாவில் தனி மாநிலக் கோரிக்கைகளோடு நிற்கும் ஒவ்வொருவரின் அரசியலிலும் தாக்கரேவின் அரசியல் இருக்கிறது.

தமிழ்நாடு வரை ஊடுருவிவிட்ட மண்ணின் மைந்தன் அரசியலில் தாக்கரே இருக்கிறார். அவர் வெற்றி பெற்று காட்டிய இனவாத அரசியல் சம கால இந்திய அரசியல் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உருவெடுத்து நிற்கிறது. மறுக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளில் இருந்தும் உணர்வுகளில் இருந்தும் தாக்கரேக்கள் உத்வேகம் பெறுகிறார்கள்.

பழக்கதோஷத்தின் காரணமாக, ‘இவருடைய மரணம் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டதுஎன்று பால் தாக்கரேவுக்கும் பலர் இரங்கல் உரை எழுதலாம். ஆனால், ஒரு பால் தாக்கரே ஓராயிரம் பால் தாக்கரேக்களை உருவாக்கிவிட்டுப் போய் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இந்தியாவின் பிரச்னையும் அதுதான்!

(நன்றி: விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com