Contact us at: sooddram@gmail.com

 

பரோட்டா பயங்கரம்!

கல்லூரி மேடைகளின் வாயிலாக கருத்துகளைப் பரிமாறிவரும் நிகழ்ச்சி 'தமிழ் மண்ணே வணக்கம்.’ தர்மபுரி ஜெயம் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்டு டெக்னாலஜியில் அரங்கேறிய இந்த நிகழ்ச்சியில், ''நீங்கள் நல்ல பொறியாளர்களாகவோ அல்லது தொழிலதிபர்களாகவோ இந்தச் சமூகத்தில் தடம் பதிப்பதைத் தாண்டி, நல்ல அறம் சார்ந்த மனிதர்களாக வரவேண்டும். துறைசார்ந்த அறிவைத் தாண்டி, உங்கள் தொழில்நுட்பத்தின் மூலமாக உங்களை இந்த இடத்துக்குக் கொண்டுவந்த மண்ணுக்கு... கிராமத்து மக்களுக்கு... நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை உங்களுக்குள்ளே வரவேண்டும்'' என்று பேச்சை ஆரம்பித்தார் மருத்துவர் கு.சிவராமன்.

தொடர்ந்து பேசிய அவர், ''இன்றைக்கு பல ஆயிரக்கணக்கான உணவுக்கூறுகள் நம்முடைய உணவில் கலந்துவிட்டன. 30 வயது இளைஞருக்கு சர்க்கரை நோய் வருவதற்கும், 20 வயது பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் நம்முடைய கண்களுக்குத் தெரியாமல் உணவுகளில் கலந்துவிட்ட அந்த உணவுக்கூறுகள்தான் காரணம். ஆனால் இன்று என்ன நடக்கிறது? ஒரு கோழி வறுவலுக்கு 108 ரசாயனங்களைத் தெளிக்கிறார்கள். அந்த ரசாயனங்கள் அனைத்தும் நம்முடைய மக்களைத் தொற்றாத நோய்க்கூட்டத்தில் சிக்கவைக்கிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் பேசிய ஒரு பேராசிரியர், 'நம்முடைய அடுத்த தலைமுறையின் மரணத்தைக் கண்ணால் பார்க்கப்போகிற முதல் தலைமுறை நாம்தான்’ என்று எச்சரித்தார். இன்றைக்குப் பலருக்கு சிறுதானியங்களைப் பற்றியே தெரியாது.

குதிரைவாலி, தினை அரிசி, கம்பு, கேழ்வரகு இவற்றின் முன்னால் நாம் ருசித்துக்கொண்டிருக்கும் பீட்ஸாவும், பர்கரும் நிற்கவே முடியாது. இன்றைய பெரும்பாலான பெண்களுக்கு ரத்தச்சோகை இருக்கிறது. அது கர்ப்பக்காலத்தில்தான் அவர்களுக்கே தெரியவருகிறது என்பது இன்னும் வேதனை. மாதவிடாய்க் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் ரத்தத்தை இழக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு இயல்பாகவே இரும்புச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. அந்த இரும்புச்சத்து முழுக்க முழுக்க நிரம்பியது நம்முடைய கம்பு. இப்படி ஒவ்வொரு சிறுதானியங்களிலும் பல சிறப்புகள் இருக்கின்றன. அதேபோலத்தான் நம் ஊரில் விளையும் வாழைப்பழத்துக்கு ஈடு உலகில் எங்காவது உண்டா? இரவு சாப்பிடக்கூடிய உணவான பரோட்டாவில், 'அலாக்ஸான்’ என்ற பொருள் கலக்கப்பட்டிருக்கிறது. அந்த அலாக்ஸான், எலிகளுக்குச் செயற்கையாக சர்க்கரை நோயை வரவழைத்து சோதனை செய்வதற்காகப் பயன்படுத்தப்படுவது. நீங்கள் பரோட்டா சாப்பிட்டால், நிச்சயம் உங்களை அல்லது உங்களது சந்ததியினரை சர்க்கரை நோய் தாக்கும். ஆக, இவையெல்லாம் நமது அடுத்த தலைமுறையினரையும், இந்த மண்ணையும் அழிப்பதற்கான முயற்சிகள். இதிலிருந்து மீள்வதற்கு நாம் நிச்சயம் சிறுதானியங்கள் பக்கம் திரும்பியாக வேண்டும்'' என்று முடித்தார்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன், ''நேற்றைய வரலாறு தெரியாதவனுக்கு இன்றைக்கு நடப்பது எதுவும் புரியாது. இன்றைய நிதர்சனம் புரியாதவனுக்கு நாளை பற்றிய சிந்தனை அறவே இருக்காது. நாம் ஏன் இந்த மண்ணை வணங்க வேண்டும், நாம் வணங்க இந்த மண்ணுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு கல்வெட்டானது, வரலாற்றை மாற்றி அமைக்கக்கூடியது, தெளிவுபடுத்தக்கூடியது. இந்தியாவுடைய வரலாற்றை பிரிட்டிஷ், மேலைநாட்டவர்கள் எல்லாம் மிகக் கொச்சையாக எழுதிக் கொண்டிருந்தபோது, பேரரசர் அசோகர் காலத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர்தான், இந்தியாவைப் பற்றிய உலகின் பார்வையே தலைகீழாக மாறியது. ஒன்றல்ல... இரண்டல்ல... 4,000 ஆண்டு கால வரலாறு இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை உணர்த்தியது அசோகர் கால கல்வெட்டுகள். அந்த அசோகர் கால கல்வெட்டுகளில், தமிழகத்தைச் சேர்ந்த சேர, சோழ, பாண்டியர்களின் குறிப்புகளைத் தவிர, இந்த தர்மபுரியில் இருக்கிற தகடூரைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

1,000 மைல்களைத் தாண்டியிருந்த ஓர் அரசனுக்கு, சுமார் 3,000 வருடங்களுக்கு முன்னால் இங்கிருந்த மக்களையும், மன்னர்களையும் பற்றி தெரிந்து இருக்கின்றது என்றால், நீங்கள் இருக்கிற இடம் எவ்வளவு தூரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது என்பதை பற்றிய அறிவும், அறிதலும் வேண்டும் என்பதற்காகத்தான் ஜூனியர் விகடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. எங்கோ இருக்கும் ஒரு மண்ணினுடைய வரலாற்றை தெரிந்துகொள்வதைவிட, நாம் இருக்கும் மண்ணின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்''என்று தன் பேச்சை நிறைவு செய்தார்.
(தர்மபுரியில் தமிழ் மண்ணே வணக்கம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com