Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு அபிவிருத்தியில் அரசின் அக்கறை

கிராமங்கள் ஓரங்கட்டப்படுவதே இலங்கை அபி விருத்தியின் நீண்ட கால வரலாறு. மஹிந்த ராஜ பக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரை அபிவிருத்திச் செயற்பாடுகள் மேல் மாகாணத்துக்குள்ளும் வேறு சில குறிப்பிட்ட மாகாணங்களுக்குமுள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. சில மாகாணங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையே நிலவியது. புறக்கணிக்கப் பட்டிருந்த மாகாணங்களையும் அபிவிருத்திச் செயற் திட்டத்துக்குள் கொண்டுவந்து அபிவிருத்தி நடவடிக் கையைப் பரவலாக்கியவர் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டிருந்த மாகாணங்களுள் வட மாகாணமும் ஒன்று. முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் வட மாகாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைவர்களும் இம்மாகாணம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டதற்குச் சம அளவில் பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள் அரசாங்கத்திடம் அபிவிருத்திக் கோரிக்கைகளை முன்வைக்க வில்லை. வடபகுதி அபிவிருத்தியில் அரசாங்கமும் தானாக அக்கறை கொள்ளவில்லை.

இன்றைய அரசாங்கம் எல்லா மாகாணங்களினதும் அபி விருத்தியில் அக்கறை செலுத்துகின்ற அதே நேரம் வட மாகாண அபிவிருத்தியில் கூடுதலான கவனம் செலுத்து கின்றது. அபிவிருத்தியைப் பொறுத்த வரையில் வட மாகாணம் மிகவும் பின்தங்கியிருப்பதே அரசாங்கத்தின் விசேட கவனத்துக்கான காரணம்.

வட மாகாணத்தின் 500 கிராமங்கள் 200 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்காக வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 100 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இக் கிரா மங்களிலுள்ள காணிகள் சுத்திகரிக்கப்படுவதுடன் வீதிகள், குளங்கள், சமூக நிலையங்கள், மருந்தகம், நூலகம் போன் றவை இந்த அபிவிருத்தித் திட்டத்துக்குள் அடங்கு கின்றன. தேவைப்படும் கிராமங்களுக்கு மின்சார வசதியும் செய்து கொடுக்கப்படும்.

வீதிகள், மின்சாரம், நூலகம் போன்ற உட்கட்டமைப்பு வசதி கள் ஒரு கிராமத்துக்கு அத்தியாவசியமானவையே. அதே போல, கிராமிய வளங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் முயற்சியிலும் கவனம் செலுத்துவது கிராமத்தி லுள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும். வட பகுதியின் பெரும்பாலான கிராமங்கள் தொழில் வளர்ச்சிக்குள் பயன்படுத்தக் கூடிய இயற்கை வளங்களைக் கொண்டுள்ளன. இந்த வளங்களைப் பயன்படுத்தும் தொழில் நிலையங்களை அமைப்பதிலும் அரசாங்கம் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் நலனில் அரசாங்கம் அக்கறை செலுத்துவதில்லை என்று காலங்காலமாகப் பிரசாரம் செய்து வருகின்ற தலைவர்கள் இந்த அபிவிருத்தி நடவடிக்கை களின் பக்கம் திரும்பிப் பார்ப்பது நல்லது. தமிழ் மக்களின் நலன் இனப் பிரச்சினையின் தீர்வுடன் மாத் திரம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

பிரதேச அபிவிருத் தியும் பொருளாதாரமும் மக்களின் நலன் சார்ந்த விடயங்களே. இவற்றில் இதுவரை அக்கறை இல்லாதி ருந்த தலைவர்கள் இனிமேலாவது தங்கள் கவனத்தை அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் நோக்கித் திருப்புவார்களென நம்புகின்றோம்.

அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கை களுக்கு வட மாகாண அரசியல் தலைவர்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்குவது அப் பிரதேச மக்களின் நலனுக்குச் செய்யும் பங்களிப்பாக இருக்கும். இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் பிரதேச அபிவிருத்தியும் ஒன்றுக்காக மற்றதைப் பின்தள்ள முடியாதவை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com