|
||||
|
நக்சலைட்டுகளின்
நதி மூலம்
இந்திய அரசாங்கம்
பல முனைகளில்
தீவிரவாதத்துக்கு
முகங்கொடுக்கின்றது. நக்சலைட்டுகள் என அழைக்கப்படும்
மாவோயிஸ்டுகள்
பிரதான அச்சுறுத்தலான
தீவிரவாதிகளாக
வளர்ந்திருக்கின்றனர்.
மற்றைய தீவிரவாத அமைப்புகள்
ஓரிரு மாநிலங்களையே
தங்கள் செயற்பாட்டுத்
தளமாகக் கொண்டிருக்கின்ற
அதேவேளை, நக்சலைட்டுகள்
ஏறக்குறைய
எல்லா மாநிலங்களிலும்
செயற்படுகின்றனர்.
இந்தியாவின் உள்துறை
அமைச்சர்
ப. சிதம்பரம்
இவர்களே இந்தியாவின்
பிரதான எதிரிகள் எனக் கூறியிருக்கின்றார்.
நக்சலைட்டுகள் என்ற பதம்
அரசியல் அகராதியில்
பொதுவான ஒரு பதமாக
மாறிவிட்டது. இலங்கையில் ஜே.ஆர்.
ஜயவர்த்தனவின் அரசாங்கம்
விஜய குமாரதுங்கவை
சிறையில்
அடைப்பதற்காக
நக்சலைட்
என்று அவருக்கு முத்திரை குத்தியது.
இப்பதம் ஒரு கிராமத்தின்
பெயரிலிருந்து
தோன்றி இன்று எல்லோரும்
பயன்படுத்தும்
பொதுப் பதமாக அரசியலில்
நிலைத்துவிட்டது.
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில்
மாக்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்
கட்சியின்
தலைமையிலான
கூட்டணி அரசாங்கம்
1967ம் ஆண்டு
பதவிக்கு
வந்தது. சில மாதங்கள் மாத்திரமே
இந்த அரசாங்கம்
நிலைத்தது.
கூட்டணி அரசாங்கம்
பதவிக்கு
வந்து மூன்று மாதங்களில்
டார்ஜீலிங்
மாவட்டத்திலுள்ள
நக்சல்பாரி
என்ற கிராமத்தில்
ஒரு கிளர்ச்சி
வெடித்தது.
மாக்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்
கட்சியின்
உறுப்பினர்கள்
சிலர் சாரு மஸும்தார்
என்பவரின்
தலைமையில்
விவசாயிகளின்
எழுச்சிப்
போராட்டம்
என்ற பெயரில்
ஒரு போராட்டத்தை
ஆரம்பித்தார்கள்.
விவசாய நிலமும் விளைச்சலும்
அவர்களால்
அபகரிக்கப்பட்டுக்
கூலி விவசாயிகளுக்குப்
பகிர்ந்தளிக்கப்பட்டன. ‘விவசாயிகள்
நீதிமன்றம்’
என்ற நீதிமன்றங்களில்
நிலச்சுவாந்தார்களுக்கு
எதிரான விசாரணைகள்
நடைபெற்றன.
கடுமையான தண்டனைகள்
வழங்கப்பட்டன.
வர்க்க எதிரிகள்
அழிக்கப்பட
வேண்டும்
என்று சாரு மஸும்தார்
பகிரங்கமாக
அறிவித்தார்.
கிளர்ச்சி நடவடிக்கையை
உடனடியாக
நிறுத்தும்படி
மாக்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்
கட்சியின்
மாநிலத் தலைமை சாரு
மஸும்தார்
குழுவுக்கு
அறிவித்த
போதிலும்,
அவர்கள் நிறுத்தாததால்
அவர்களுக்கு
எதிரான பொலிஸ் நடவடிக்கைக்கு
மாநில அரசாங்கம்
உத்தரவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த
சாரு மஸும்தார்
குழுவினர்
கட்சியிலிருந்து
வெளியேறினர்.
எல்லா மாநிலங்களிலும்
கட்சி பிளவுபட்டது.
பிரிந்து சென்றவர்கள்
தீவிரவாதக்
கோஷங்களுடன்,
‘கம்யூனிஸ்ட்
புரட்சியாளர்களின்
அகில இந்திய
ஒருங்கிணைப்புக்
குழு’ என்ற
பெயரில் செயற்படத்
தொடங்கினர்.
இவர்கள் தங்கள்
அமைப்பை
1969ம் ஆண்டு
அரசியல் கட்சியாக அறிமுகம் செய்து இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி (மாக்சிஸ்ட்
- லெனினிஸ்ட்)
என்ற பெயரில்
செயற்படத்
தொடங்கினர்.
சிறிது காலத்தின்
பின் மீண்டும்
பிளவு ஏற்பட்டு நக்சலைட்டுகள்
மூன்று குழுக்களாகப்
பிரிந்தனர். இந்தியக்
கம்யூனிஸ்ட்
கட்சி (மாக்சிஸ்ட்
- லெனினிஸ்ட்)
என்ற பெயரில்
ஒரு குழுவும்,
மக்கள் போராட்டக்
குழு என்ற
பெயரில் மற்றைய குழுவும், மாவோயிஸ கம்யூனிஸ்ட்
கேந்திரம்
என்ற பெயரில்
மூன்றாவது
குழுவும்
இயங்கின. மாவோயிஸ கம்யூனிஸ்ட்
கேந்திரமும்
மக்கள் போராட்டக்
குழுவும்
2004ம் ஆண்டு
ஒன்றிணைந்து
இந்தியக்
கம்யூனிஸ்ட்
கட்சி (மாவோயிஸ்ட்)
என்ற பெயரில்
செயற்படத்
தொடங்கின.
பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி (மாக்சிஸ்ட்
- லெனினிஸ்ட்)
அவற்றுடன்
இணைந்தது.
மூன்று குழுக்களும்
ஒன்றிணைந்து
செயற்படத்
தொடங்கியதும்
நக்சலைட்டுகளின்
நடவடிக்கை
தீவிரமடைந்ததோடு,
வியாபிதமும்
அடைந்தது. பத்து
வருடங்களுக்கு
முன் 56 மாவட்டங்களில்
மாத்திரம்
செயற் பட்டுவந்த
நக்சலைட்டுகள்
இப்போது 236
மாவட்டங்களில்
வலுவான நிலையில் செயற்படுகின்றனர்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான
இராணுவ நடவடிக்கைக்கு
இந்தியா கூடுதல் முக்கியத்துவம்
அளிக்கின்றது.
(சங்கர சேயோன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |