|
||||
|
பயனளிக்க
முடியாத நேரடிப் பேச்சுவார்த்தை
பலஸ்தீன அதிகார
சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸுக்கும்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாஹுவுக்கும்
இடையிலான
நேரடிப் பேச்சுவார்த்தை
செப்ரெம்பர்
மாத முதல்
வாரத்தில்
மீண்டும்
ஆரம்பித்தது.
காஸா மீது இஸ்ரேல் 2008ம்
ஆண்டு மேற்கொண்ட
படையெடுப்பைத்
தொடர்ந்து
இப்பேச்சுவார்த்தை
இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இஸ்லாமிய நாடுகளுள்
எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா
ஆகிய மூன்று
நாடுகள் மாத்திரம்
இப்பேச்சு
வார்த்தைக்கு
ஆதரவு தெரிவித்தன.
காஸா பிரதேசத்தை
முழுமையான
கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும்
ஹமாஸ் அமைப்பு இப்பேச்சுவார்த்தையைச்
சந்தேகத்துடனேயே
நோக்குகின்றது.
பேச்சுவார்த்தையில் என்னென்ன
விடயங்கள்
பேசப்பட வேண்டியவை
என்பது பற்றிய நிகழ்ச்சி
நிரல் இல்லாமலேயே
பேச்சுவார்த்தை
ஆரம்பமாகியது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி
நிரல் இல்லாமல் தொடங்கிய இப்பேச்சுவார்த்தை
பலனளிக்குமா
என்பது கேள்விக்குறியாகவே
உள்ளது.
அமெரிக்காவினது முயற்சியினாலேயே
இப்பேச்சுவார்த்தை
மீண்டும்
ஆரம்பித்துள்ள
போதிலும்
அதற்கான நிகழ்ச்சி
நிரலைத் தயாரிப்பதில்
அமெரிக்கா
சிறிதளவும்
கவனம் செலுத்தவில்லை.
பேச்சுவார்த்தையில்
காத்திரமான
முன்னேற்றம்
ஏற்பட வேண்டும் என்பதிலும்
பார்க்கப்
பேச்சு வார்த்தை இடம்பெற வேண்டும் என்பதிலேயே
அமெரிக்கா
அக்கறையாக
இருந்திருப்பதை
இதிலிருந்து
புரிந்து
கொள்ளலாம்.
பலஸ்தீனப் பிரச்சினையின்
தீர்வுக்கு
மேலாக உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல் தேவைகளைப்
பூர்த்தி
செய்வதிலேயே
அமெரிக்காவின்
நாட்டம் இருப்பது போல் தெரிகின்றது.
மேற்குக் கரையில் இஸ்ரேல் நிர்மாணித்து
வரும் குடி யிருப்புகள்
இருதரப்புப்
பேச்சுவார்த்தைக்குப்
பெரிய முட்டுக்கட்டையாக
இருக்கின்றன. பேச்சுவார்த்தையை
மீண்டும்
ஆரம்பிப்பதற்கு
வசதியாக இக் குடியிருப்புகளின்
நிர்மாணத்தைத்
தற்காலிகமாக
நிறுத்திவைக்க
வேண்டும்
என்று அமெரிக்கா
விடுத்த வேண்டுகோளை
நெதன்யாஹு
எற்றுக்கொண்டிருக்கின்றார்.
ஆனால் இது தற்காலிக ஏற்பாடு மாத்திரமே.
அப்பாஸும் நெதன்யாஹுவும்
பேச்சுவார்த்தை
தொடர்பான
தங்கள் பிரதான நிலைப்பாடுகளை
வெளிப் படுத்தியிருக்கின்றார்கள். இவற்றைப் பார்க்கும்
போது, பேச்சுவார்த்தையில்
எந்த உடன்பாடும்
ஏற்படுவது
சாத்தியமில்லை
என்றே தெரிகின்றது.
இஸ்ரேலை ஒரு யூத
நாடாக ஏற்க வேண்டும்,
மேற்குக்
கரைக் குடியிருப்பு
நிர்மாணத்தைக்
கைவிட முடியாது, பலஸ்தீன அரசின் தலைநகராக ஆக்குவதற்காக
கிழக்கு ஜெருசலேமை
விட்டுக்கொடுக்க
முடியாது
என்பன நெதன்யாஹுவின்
பிரதான நிலைப்பாடுகள்.
இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டுக்கு
முந்திய எல்லைகளை அங்கீகரிக்க
வேண்டும்
என்பது அப்பாஸின்
நிலைப்பாடு.
இஸ்ரேலை யூத நாடாகப்
பலஸ்தீனர்கள்
ஒருபோதும்
அங்கீகரிக்கப்போவதில்லை. இஸ்ரேலின் இன சுத்திகரிப்புக்குப்
பின்னரும்
அந்நாட்டு
சனத்தொகையில்
20 வீதத்தினர்
பலஸ்தீனர்கள்.
அவர்களின் எண்ணிக்கை
அதிகரித்து
வருகின்றது.
இருபத்தைந்து வருடங்களுக்குப்பின்
இஸ்ரேலின்
சனத்தொகையில்
பலஸ்தீனர்கள்
30 வீதமாகிவிடலாம்.
மேற்குக் கரையில்
இஸ்ரேல் மேற் கொள்ளும்
குடியிருப்பு
நிர்மாணத்தை
நிறுத்துவது
பலஸ்தீனர்களின்
உடனடி லட்சியமாக
இருக்கின்றது.
அதேபோல ஜெருசலேம்
பலஸ்தீனர்களின்
மத மற்றும்
இனத்துவ உணர்வுகளுடன்
சம்பந்தப்பட்டது.
அதை அவர்கள்
விட்டுக்கொடுக்
கப்போவதில்லை.
நெதன்யாகுவின் எல்லா நிபந்தனைகளும்
பலஸ்தீனர்களால்
ஏற்க முடியாதவை.
அதேபோல 1967 ஆம் ஆண்டுக்கு
முந்திய எல்லைகளை இஸ்ரேல் ஒருபோதும்
ஏற்கப் போவதில்லை. அந்த எல்லைகளை ஏற்றால் மேற்குக் கரை முழுவதையும்
இழக்க நேரிடும்.
தன்னுடையது என்று இஸ்ரேல் இப்போது உரிமை கோரும்
பல பிரதேசங்களைக்
கையளிக்க
நேரும்.
இந்த நிலையில், நெதன்யாஹுவும்
அப்பாஸும்
நடத்தும்
நேரடிப் பேச்சுவார்த்தையால்
உருப்படியான
பலன் எதுவும்
ஏற்படப்போவதில்லை. விட்டுக்கொடுப்புக்கு இஸ்ரேல்
தயாராக இருக்கும்
நிலையிலேயே
பேச்சுவார்த்தை
சிறிய அளவிலாவது
பலனளிக்கக்
கூடியதாக
இருக்கும்.
விட்டுக்கொடுக்கும் நிலையில்
இஸ்ரேல் இல்லை.
மேலும் நெதன்யாஹு
எப்போதும்
கடுங்கோட்பாட்டு
அணுகுமுறையைப்
பின்பற்றுபவர். முன்னர் பிரதமராக
இருந்த போது இவர்
ஒஸ்லோ உடன்படிக்கையைத்
திசைதிருப்பியவர்
என்பதை இங்கு குறிப்பிட
வேண்டும்.
இஸ்ரேல் வெளிவிவகார
அமைச்சர்
அவிக்தோர்
லீபர்மன்
இஸ்ரேலின்
இராணுவ வானொலிக்குத்
தெரிவித்த
கருத்து கண்துடைப்புக்காகவே
இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளில்
பங்குபற்றுகின்றது
என்பதைத்
தெளிவுபடுத்துகின்றது.
ஒரு வருடத்திலோ
அல்லது அடுத்த சந்ததியிலோ
பலஸ்தீனர்களுடன்
சமாதானம்
ஏற்படப் போவதில்லை
என்று அவர் கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்
மூலம் நெதன்யாஹு
அமெரிக்காவை
ஏமாற்றுகின்றாரா? அல்லது அமெரிக்கா
முழு உலகையும்
ஏமாற்றுகின்றதா?
(சங்கர சேயோன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |