|
||||
|
பெற்றோர் வாழும் இடம் முதியோர்
இல்லமெனில்
பிள்ளைகளையே
சேரும் அதற்கான பாவம்!
உலகளாவிய
ரீதியில்
சனத்தொகை
துரிதமாக
அதிகரித்துக்
கொண்டிருக்கிறது. மருத்துவத்துறை முன்னேற்றம்
காரணமாக மனிதரின் சராசரி ஆயுட் காலம்
கூடிக் கொண்டு போவதே இதற்கு
முக்கிய காரணமாகும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்பு ஐம்பது வருடங்களாகவிருந்த
சராசரி ஆயுட் காலம்
தற்போது அறுபதாக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு
சகாப்த காலத்தில்
ஆயுட் காலம் 70, 80 ஆக அதிகரிக்கும்
என எதிர்வு
கூறப்பட்டுள்ளது.
இதனால் முதியோரின்
எண்ணிக்கையும்
அதிகரித்துக்
கொண்டிருக்கிறது.
நாட்டில் சனத்தொகை
அதிகரிக்கும்
போது வாழ்வாதார,
பொருளாதார,
உணவு, அறிவு,
சுகாதாரம்
உள்ளிட்ட
பல பிரச்சினைகளை
எதிர்கொள்ள
வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பல்வேறு புதிய வகை நோய்களும்,
சமூக மாற்றமும்
ஏற்படுகின்றன.
இந்த மாதம் (ஒக்டோபர்
2011) ஏழு பில்லியனாக
உயர்ந்துள்ள
உலக சனத்
தொகை 2025 ஆம்
ஆண்டு எட்டு பில்லியனாக
உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியாவில்
ஆயுட் காலம் அதிகமுள்ள
நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு சனத்தொகையும்
வேகமாக அதிகரித்துக்
கொண்டிருக்கிறது.
2020 ஆம் ஆண்டளவில்
இலங்கை சனத் தொகையில்
அறுபது சதவீதமானோர்
அறுபது வயதைக் கடந்த வயோதிப
நிலையை அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு வயோதிபத்தை
எட்டும் மக்களைப் பராமரிப்பதற்கான
ஒழுங்குகள்
மேற்கொள்ளாமை
கவலைக்குரிய
விடயமாகும்.
மிகுந்த கஷ்டத்தின்
மத்தியில்
பிள்ளைகளைப்
பெற்று, வளர்த்து, சிறந்த கல்வி புகட்டி,
திருமணம்
செய்து வைத்து பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்
கொடுத்துப்
பல தியாகங்களைச்
செய்த பெற்றோரை நன்றி கெட்ட
சில பிள்ளைகள்
வயோதிபத்தில்
கவனிக்காது
விடுவது பரிதாபகரமானதும்
மிருகத்தனமானதுமான
செயலாகும்.
ஐம்பது
ஆண்டுகளுக்கு
முன்பு இருந்த எமது கலாசாரம்,
பண்பாடு, விழுமியங்கள்
எல்லாம் தற்போது கைவிடப்பட்ட
நிலையில்
உள்ளன. முன்பிருந்த
கூட்டுக்
குடும்ப முறை மாறி
தற்போது பிள்ளைகள்
திருமணம்
ஆன உடனேயே
பெற்றோரைத்
தனிமையில்
தவிக்க விட்டு விட்டுத் தனிக் குடித்தனம்
நடாத்துகின்றனர்.
வேறு சிலர் தம்
வீடுகளுக்குச்
சம்பளம் பெறாத காவல்காரர்
போன்று பெற்றோரை இருத்தி விட்டு மேலை நாடுகளில்
சொகுசு வாழ்க்கை வாழும் போது பெற்றோர்
பிள்ளைகளைப்
பிரிந்த துயரில் வாடுகின்றனர்.
பிள்ளைகளின் பாசத்திற்காக
ஏங்கி தம் அந்திம
காலத்தைத்
துயருடன்
கழிக்கின்றனர்.
மேலும்
சிலர் பெரும் பணம் செலுத்தி
சகல வசதிகளையும்
கொண்ட வயோதிபர் மனைகளில் பெற்றோரைச்
சேர்த்து
விட்டுத்
தம் கடமை
முடிந்துவிட்டது
என நினைக்கின்றனர். அங்கே வயோதிப
பெற்றோருக்குத்
தேவைப்படுவது
சொகுசு வாழ்க்கையல்ல.
தம் பிள்ளைகளின்
பாசம், அன்பு, ஆதரவு
போன்றவையாகும்.
பிள்ளைகளின்
பாசத்திற்காக
ஏங்கும் இவர்கள் பல்வேறு மன நோய்களால்
பீடிக்கப்பட்டு
மிக விரைவில்
அங்கேயே உயிரை விடுகின்றனர். இவர்கள் பிள்ளைகளுடன்
வாழ்ந்திருந்தால்
மேலும் பல ஆண்டுகள்
சந்தோசமாக
உயிர்வாழ்ந்திருப்
பார்கள்.
இவ்வாறு செய்வோர்
தம் வயோதிப
காலத்தில்
இதேநிலை ஏற்படும் என்பதை மறந்துவிடுகின்றனர்.
மேலை
நாடுகளில்
வயோதிபர்கள்
வளமாக வாழ்கின்றனர். அரசாங்கம் மற்றும்
அரச சார்பற்ற
நிறுவனங்களால்
முதியோருக்கு
காப்புறுதி,
ஓய்வூதியம்,
வசிப்பிடம்,
இலவச மருத்துவம்
போன்ற பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு ஒருமுறை அனுஷ்டிக்கப்படும்
தகப்பன் தினம்
(Fathers' Day) தாயார்
தினம் (Mothers'
Day) போன்ற தினமன்று மலர்ச் செண்டு ஏந்தியவாறு
தம் பெற்றோர்
வதியும் முதியோர் இல்லங்களுக்குச்
சென்று சில மணித்தியாலங்களை
அவர்களுடன்
கழிப்பர்.
மீண்டும் அடுத்த
வருடமே அங்கு தலை
காட்டுவர்.
இக் கலாசாரம்
எமது நாட்டிலும்
பரவும் அபாயம் காணப்படுகிறது.
பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்களால்
கைவிடப்பட்ட
சில வயோதிபர்கள்
நடைபாதைகளையும்
பாதை ஓரங்களையும்
வசிப்பிடமாகக்
கொண்டு வயிற்றுப்
பசியைப் போக்க கையேந்திப்
பிச்சை எடுக்கின்றனர்.
கடும் வெயிலிலும்
மழையிலும்
பனியிலும்
அலைந்து திரிவதால்
விரைவில்
நோய்வாய்ப்பட்டு
மடிந்து விடுகின்றனர்.
இவ்வாறு முதுமையில்
ஏற்படும்
இன்னல்கள்
பற்றிய விழிப்புணர்வை
மக்களிடையே
ஏற்படுத்தும்
முகமாகவும்,
அவர்களின்
உரிமைகளைப்
பாதுகாக்கும்
முகமாகவும்
ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் முதலாம்
திகதி உலக முதியோர்
தினமாக அனுஷ்டிக்கப்பட்டு
பல்வேறு செயல் திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
முதியோரின்
உரிமைகளைப்
பாதுகாக்க
இலங்கையில்
2000 ஆம் ஆண்டு
இயற்றப்பட்ட
9 ஆம் இலக்கச்
சட்டத்தில்
முதியோருக்குச்
சாதகமான அனுகூலங்கள்
பல உள்ளடக்கப்பட்டுள்ளன. பிள்ளைகள் வேண்டுமென்றே
தம் வயோதிப
பெற்றோரைப்
பராமரிக்காது
கைவிடல் தண்டனைக்குரிய
குற்றமாகும்.
பெற்றோரை
நன்கு பராமரித்து
அவர்களுக்குத்
தேவையான சகல வசதிகளையும்
ஏற்படுத்திக்
கொடுக்க இச் சட்டத்தில்
வலியுறுத்தப்பட்டுள்ளது. பிள்ளைகளால்
கைவிடப்பட்டோர்,
பராமரிக்க
பிள்ளைகள்
இல்லாதோர்
போன்ற பராமரிக்க
எவருமில்லாத
முதியோரை
அரசாங்கம்
வதிவிட வசதிகள் ஏற்படுத்திக்
கொடுத்துப்
பராமரிக்கவும்
இச் சட்டத்தில்
கூறப்பட்டுள்ளது.
எனினும், சம்பந்தப்பட்டோரால்
இச் சட்டம்
முழுமையாக
அமுல்படுத்தப்படாமை
கவலைக்குரிய
விடயமாகும்.
ன்றைய
இளைஞர் நாளை முதியோராவர். இவர்களின் முதுமையில்
இவ்வாறான
பரிதாபகரமான
நிலை ஏற்படாமல்
தவிர்க்க
வாலிபர்கள்
இப்போதே ஆயத்தங்களை
மேற்கொள்ள
வேண்டியது
மிகவும் அவசியமாகும்.
வயோதிப காலத்தில்
உடல், உள
ஆரோக்கியமும்
கைநிறையப்
பணமுமிருந்தால்
எவரிலும்
தங்கியிருக்க
வேண்டிய நிலை ஏற்படாது.
பிள்ளைகள்
மற்றும் உற்றார், உறவினர்கள்
கூடக் கைவிட மாட்டார்கள். எனவே, வாலிபத்தில்
கை நிறைய
உழைக்கும்
போது எல்லாவற்றையும்
பிள்ளைகளுக்காகவும்,
ஆடம்பரமான
வாழ்க்கைக்காகவும்
செலவிடாமல்
ஒருசில தொகையாவது
சிரமமாகச்
சேமிக்க வேண்டும். வங்கி நிலையான
வைப்புகள்
மற்றும் காப்புறுதி
பத்திரங்களில்
முதலீடு செய்தல் அந்திம காலத்தில்
பேருதவி செய்யும்.
மது, புகைத்தல்,
போதைவஸ்து
பாவனை, நீண்ட நேர
தொலைக்காட்சி
மற்றும் கணினி காரணமாக
உடலுளைப்பு
குன்றல், ஆரோக்கிய மற்ற உணவுப்
பழக்கம், போதிய உறக்கமின்மை,
ஓய்வின்மை
கெட்ட நடவடிக்கைகள்
என்பவற்றில்
ஈடுபடும்
வாலிபர்கள்
முதுமையில்
ஏற்படும்
பல்வேறு நோய்களுக்கு
முதலீடு செய்கிறார்கள்
என்பதை அறிவதில்லை.
சிலர்
வாலிபத்திலேயே
தலைமுடி நரைத்து, முடி உதிர்ந்து,
கண்பார்வை
குன்றி, முகத்தில்
சுருக்கம்
ஏற்பட்டு,
முதுகு கூனி முதுமைத்
தோற்றத்தைப்
பெறுகின்றனர். இதனால் இவர்கள்
மன உளைச்சலுக்கு
ஆளாகிறார்கள்.
சகல உடல், உள நோய்களுக்கும்
மனம் தான்
காரணமாகும்.
மன
உளைச்சல்
காரணமாகத்தான்
பல்வேறு உடல், உள
(Psychosomatic Diseases) தாக்கம்
ஆரம்பிக்கின்றன. பணம் படைத்தோர்
முதுமை யைப் பின்போடப்
பெரும் பணம் செலவழித்து
வீரிய மிக்க வைட்டமின்கள்
மற்றும் விசேடமாகத்
தயாரிக்கப்பட்ட
விளையுயர்ந்த
மருந்துகளை
வாங்கி உட் கொள்கின்றனர்.
எவ்விதப்
பண விரயமுமின்றி
எளிதில் முதுமையைப்
பின்போட எளிய யோகா
உதவும். 5000 ஆண்டுகளுக்கு
முன்பே யோக சித்தர்கள்
முதுமையைப்
பின் போடும்
வழிமுறைகளைக்
கண்டு பிடித்து எமக்குத் தந்துள்ளனர்.
ஆரோக்கியமான உணவுடன்
கூடிய சிரமமான யோகா பயிற்சி
முதுமையைப்
பின் போட்டு
என்றும் இளமையுடனும்
ஆரோக்கியத்துடனும்
நீண்ட நாள் வளமாக
வாழ பேருதவி
செய்யும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |