Contact us at: sooddram@gmail.com

 

நாடுகடந்த அரசாதிபதிகளுக்கு ஓர் திறந்த மடல்

(சேரமான்)

கற்பனையுலகில் சஞ்சரித்து,

கானல் நீரில் கப்பலோட்டி,

கனவுலகில் ஆட்சிபுரியும் அரசாதிபதிகளே!

நீங்கள் மேன்மை தங்கியவர்களோ, மாண்புமிக்கவர்களோ...

யாமறியோம்.

நாடாள்பவர்களோ, நாடாளத்துடிப்பவர்களோ...

அதனையும் நாமறியோம்.

ஆனால் கானல் நீரில் மிதக்கும் உங்கள் காகிதக்கப்பல் கடைசி வரை கரைசேரப் போவதில்லை என்பது மட்டும் இன்று மெய்யுண்மையாகி வருகின்றது.

நாடுகடந்து அரசமைக்கின்றோம்.

சிங்கள தேசத்தைக் கலங்கடிக்கிறோம்.

தமிழீழ ஆட்சியை இதோ... இன்று... இல்லை நாளை மீட்கின்றோம் என்று நீங்கள் எழுப்பிய முழக்கங்கள் எல்லாம் ஓய்ந்து போய்விட்டன.

அமைச்சர்களை நியமிக்கிறோம் என்றீர்கள்.

தென்சூடானில் தூதரகம் திறக்கிறோம் என்றீர்கள்.

தேசிய அடையாள அட்டை வழங்குகிறோம் என்றீர்கள்.

அதற்கெனக் கூவிக் கூவிப் பணமும் திரட்டினீர்கள்.

என்னவாயிற்று?

அமைச்சர்களுக்கு இராசரீக அங்கீகாரம் கிடைத்ததா?

தூதரகம் திறக்கப்பட்டதா?

அடையாள அட்டையால் ஏதும் அடையாளம்தான் கிடைத்ததா?

என்னதான் நடந்தது?

உங்கள் திருவிளையாடல் எங்களுக்குப் புரியவில்லை என்றா நினைத்தீர்கள்?

எம் அன்பு அம்மையீர், பாசமிகு ஐயன்மீர்,

தமிழீழத் தனியரசமைப்பது என்பது நியூயோர்க்கிலும், இலண்டனிலும், ஒற்றாவாவிலும், பாரிசிலும் மாடமாளிகைகளில் மண்டபங்களை வாடகைக்கு அமர்த்தி, அங்கு கொலுவிருந்து சாதிக்கும் காரியம் அன்று.

உயிரை விதையாக்கி, குருதி சிந்தி, குறைந்த பட்சம் வியர்வையாவது சிந்திப் போராடிப் பெறுவதுதான் விடுதலை.

பாரதத்தில் எங்கள் தலைவனின் ஆத்மீக குரு சந்திரபோஸ் செருக்களம் புகுந்தார்.

கூடவோ காந்தியும் அறப்போர் புரிந்தார்.

சீனாவில் மாவே செங்குருதி சொரிந்தார்.

கியூபாவில் சேயும், கஸ்ரோவும் களமாடினார்கள்.

வியட்னாமில் கோசிமின் விடுதலைத் தீமூட்டினார்.

பலஸ்தீனத்தில் அரபாத் குருதி சொரிந்தார்.

தென்னாபிரிக்காவில் மண்டேலா சிறையிருந்தார்.

தமிழீழ மண்ணில் எங்கள் சூரியத்தேவன் வழிகாட்ட உயிரை வேலியாக்கி எங்கள் வீரமறவர்கள் களமாடினார்கள்.

எங்கள் சூரியப்புதல்வர்களுக்கு நிகராய் எங்கள் சூரியப்புதல்விகளும் களம்புகுந்தார்கள்.

ஆனால் நீங்கள் சொரிவது என்ன?

சிந்துவது என்ன?

விதைப்பது என்ன?

சரி, உங்கள் போர்க்களம் தான் என்ன?

ஐந்து நட்சத்திர விடுதி உங்கள் போர்க்களம்.

நீங்கள் தாக்கும் முகாம்கள் எல்லாம் உணவகங்கள்.

நீங்கள் சொரியும் குருதி செந்நிற மதுபானம்.

சிந்துவது உங்கள் நர்த்தனத்தில் வழியும் வியர்வைத் துளிகள்.

வயிற்றில் விதைப்பதோ நாவுக்கு ருசி தரும் அறுசுவை உணவு.

அடிக்கடி விடுதிகளிலும், உணவகங்களிலும் கூடிக் கலைகிறீர்கள்

தமிழீழம் நாளை மலரும் என்று முழங்கி மதுவில் திளைக்கிறீர்கள்.

பின் உங்கள் அரசவை கூடி மந்திராலோசனை புரிந்தது என அறிவிக்கின்றீர்கள்.

ஐயகோ, இதுதானா விடுதலைப் போராட்டம்?

இதற்காகவா நாங்கள் போராடினோம்?

எதிரியின் எறிகணை மழையில் நனைந்து,

விமானக் குண்டுவீச்சில் சிதைந்து,

பொருண்மிய தடையில் நசியுண்டு

ஊரூராய் - ஏதிலியாய் அலைந்த எங்களுக்கு நீங்கள் காட்டும் களம் என்ன?

நீங்கள் ஏவும் காகித ஏவுகணையைக் கண்டு எதிரி கைகொட்டிச் சிரிக்கின்றான்.

வெடியென அதிர நீங்கள் செய்யும் பிரகடனங்கள் கண்டு எதிரி எக்காளமிடுகின்றான்.

யாரோ போட்ட வழக்கிற்கு உரிமை கோருகிறீர்கள்.

நாலுபேர் கூடி எழுப்பும் முழக்கமும் உங்களது என்கிறீர்கள்.

இறுதிப் போர் தொடுக்கிறோம் என்றுகூறி காகிதப்போர் புரிகிறீர்கள்.

ஏனிந்த நாடகம்.

உங்கள் பொழுதைப் போக்குவதற்கு எங்கள் தலையிலா நீங்கள் ஏறி மிளகாய் அரைப்பது.

அன்புக்குரியவர்களே,

எங்கள் சூரியத்தேவன் நினைத்திருந்தால் தனது பதினாறாவது அகவையில் இலண்டனுக்கோ, நியூயோர்க்கிற்கோ சென்றிருக்கலாம்.

உங்களைப் போல் அங்கு ஒரு பல்கலைக் கழகத்தில் பட்டம்பெற்று, தொழில்புரிந்து பணம் குவித்திருக்கலாம்.

பொழுதைப் போக்குவதற்காக நாடுகடந்த அரசை அமைத்திருக்கலாம்.

தன்னை நாடுகடந்த அதிபராகக்கூடப் பிரகடனம் செய்திருக்கலாம்.

தன்னைச் சுற்றி கற்பனைக் கோட்டையமைத்து அமைச்சர்கள் புடைசூழ ஆட்சிபுரிந்திருக்கலாம்.

ஆனால் எம்தலைவன் அவ்வழி செல்லவில்லை.

ஏனென்றால் சொல்லுக்கு முன் செயலுக்கு முன்னுரிமை கொடுக்கும் செயல்வீரன் அவன்.

பாசத்துக்குரியவர்களே,

போதும் உங்கள் திருவிளையாடல்.

இனியும் முடிவுக்கு வரட்டும் உங்கள் திருக்கூத்து.

எங்கள் தலைவன் காட்டிய வழிக்குத் திரும்புங்கள்.

விடுதலைக்கு விலைபேசும் விசுவநாதனின் புத்திரனைப் புறந்தள்ளுங்கள்.

வழிதவறிய ஆடுகளை எமது தேசம் ஒருபோதும் கைவிடுவதில்லை.

எம்மை வழிகாட்டும் எம்தலைவனின் வரலாறு மீது இது உறுதி

இந்தக் கட்டுரை பதிவு என்னும் புலிசார் இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்தது. புலிகளுக்குள் நடக்கும் குத்துவெட்டுக்களைப் பகிரங்கப்படுத்தும் நோக்கமாக இக்கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.  இதுதவிர இந்த சூரியத்தேவன் சந்திரத்தேவன் பேர்வழிகளுடனெல்லாம் எமக்கு உடன்பாடில்லை. .  

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com