Contact us at: sooddram@gmail.com

 

நிதி மூலதனத்தின் கொடுங்கோன்மை

(அசோக் மித்ரா)

இருபது ஆண்டு காலத்தில் உலக நிதி மூலதனத்தின் பங்க : அதன் பேராசையும், தவறான கணிப்புகளுமே, பெருவீழ்ச்சி காலத்திற்குப் பின்னர் அமெரிக்காவை இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியது.

(இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்தின் மூத்த தலைவர் என்.எம். சுந்தரம் எழுதியிருக்கும்தகர் நிலையில் உலக நிதி மூலதனம் - முகத்திரை கிழியும் சுதந்திரச் சந்தை முதலாளித்துவம்என்ற ஆங்கில நூல் குறித்து பொருளாதார நிபுணரும் மேற்குவங்க முன்னாள் நிதி அமைச்சருமான டாக்டர் அசோக் மித்ரா - தி `ஹிந்து நாளிதழ் - 11.10.11)

இந்நூலின் ஆசிரியர் ஒரு பொருளி யல் வல்லுனரோ அல்லது எந்தக் குறிப்பிட்ட துறை குறித்த நிதி ஆய் வாளரோ அல்ல. அவர் தொழிற்சங்க இயக்கத்தில் பழுத்த அனுபவம் கொண் டவர். இந்திய இன்சூரன்ஸ் துறையில், உலக நிதி மூலதனம் ஊடுருவியதை எதிர்த்த இன்சூரன்ஸ் ஊழியர்களின் கடுமையான போராட்டத்தினை தலை மை தாங்கி நடத்தியவர். அந்தப் போராட் டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து அம்சங்களிலும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லையெனினும், சர்வதேச நிதி மூலதனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், அண்மைக் காலங் களில், அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலகின் பல கண்டங்களிலும் அது எத்த கைய மோசமான விளைவுகளை ஏற் படுத்தியிருக்கிறது என்பது குறித் தெல்லாம் நெருக்கமாக அறிந்து கொள்வ தற்கு அவருக்கு இந்த அனுபவம் உதவி யிருக்கிறது.

இன்சூரன்ஸ் ஒர்க்கர்மாத இதழில் தொடராக வெளிவந்த 27 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் விவா திக்கப்பட்டிருக்கின்றன. தவிர, அருமை யான விவாதங்களுக்கு இணையாக, சில ஆழமான புள்ளி விவரங்களும் கூடு தலாக இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சுந்தரத்தைப் பொறுத்தவரை அவரது தளராத நம்பிக்கைதான் அவரது பலம். நிதி மூலதனத்தின் தன்மை குறித்தும், அது ஒவ்வொரு நாட்டிலும், அதே போல் அந்நாடுகளில் ஒவ்வொரு துறையிலும் அது எப்படி கொள்ளைச் சுரண்டலில் ஈடுபட்டது என்பது குறித்த எதார்த்த நிலைமைகளை அவர் விரிவாகக் குறிப் பிட்டிருக்கிறார். கடந்த இருபது ஆண்டுக் கால அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், சர்வதேச நிதி மூலதனம் என்பதற்கே நெருக்கடி என்பதுதான் மற்றொரு பெயராக இருக்க முடியும். அதனால் நெருக்கடியைத் தவிர வேறு ஒன்றையும் தோற்றுவிக்க முடியாது. ஏனெனில், அது அந்த வகையில் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

உடனடி லாபம், மேலும் லாபம், மென் மேலும் லாபம் என்பதே நிதி மூலதனத் தின் தொடரும் வேட்டை. இதற்காக, உலகம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றி வருவதற்கான உலக அமைப்பினை அது தனது நீண்ட நெடிய முயற்சியின் மூலம் உருவாக்கியிருக்கிறது. உற்பத்தியில் ஈடுபடுவதை விட ஊகத்தில் ஈடுபடு வதன் மூலமே, அத்தகைய உடனடி கொள்ளை லாபம் சாத்தியமாகிறது. எனவே, ஊக நடவடிக்கைகள் அதனது இயல்பான விருப்பமாக மாறியிருக்கிறது.

பொருத்தமான சூழ்நிலைகள்!

அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பா விலுள்ள பணக்கார நாடுகளிலும் புதிய உயர் தொழில் நுட்பங்கள் காரணமாக, பிற நாடுகளை விட, முதலீடு - உற்பத்தி விகிதம் சாதகமாக மாறியுள்ளது. இந்த நாடுகளில் வருமான வினியோகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. எனவே, ஒட்டுமொத்த கிராக்கி நிலைமை களிலும் ஸ்திரத்தன்மை உள்ளது. ஊக நடவடிக்கைகளுக்கு இது வெகுவாகப் பொருந்துகின்ற சூழ்நிலை என்பதால், அவை பன்மடங்கு அதிகரித்துள்ளன.

நிதி மூலதனத்திற்கு அறநெறிகள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. தனது லாபத்தினைப் பெருக்க வேண்டுமென் றால், அது எவ்வளவு மோசமானது என் றாலும், கிரிமினல் நடவடிக்கை என்றா லும் கூட அதில் ஈடுபடத் தயங்காது. எந்த அமெரிக்கப் பொருளாதாரம் தனக்கு மிகப் பெரும் பலமாக இருந்ததோ, அந்தப் பொருளாதாரத்தினையே இன்று பலவீனப்படுத்துவதில் நிதி மூலதனம் தயக்கம் காட்டவில்லை.

நிதி மூலதனத்தின் கொடுங்கோன் மை, மேற்கு ஐரோப்பாவில் மத்திய தரைக் கடல் ஓரங்களில் இருக்கும் சிறிய நாடுகளை வறுமைக்குள்ளாக்கும் நிலை மைக்கு சென்றிருக்கிறது. இந்தியப் பொரு ளாதாரத்தினை எப்படி வேண்டுமா னாலும் வடிவமைத்துக் கொள்ளலாம் என்ற அளவில், அது நிதி மூலதனத்தின் கைகளில் சிக்கித் தவிக்கிறது. பங்குச் சந்தையின் மீதான முழுமையான கட்டுப் பாடு அந்நிய நிதி முதலீட்டாளர்களின் கைகளில் உள்ளது. இந்திய நாடு உருவாக்கி வைத்திருக்கும் தொழில் உற்பத்தித் தளங்களை அழிப்பதற்குமான சக்தியும் இன்று அதனிடம் உள்ளது.

அதனுடைய அழிவு சக்தி ஒரு புறம் இருப்பினும் கூட, நாம் வேறு ஒரு அம்சத் தினை விவாதிக்க முடியும். நிதி மூலத னம் தகர்நிலையினை எட்டிவிட்டது என்பது உண்மையா? கடந்த இருபது ஆண்டு காலத்தில் உலக நிதி மூலதனத் தின் பேராசையும், தவறான கணிப்புக ளுமே, பெருவீழ்ச்சி காலத்திற்குப் பின் னர் அமெரிக்காவை இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளி யிருக்கிறது.

1930களில், அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், அரசாங்கத் தின் பொதுப்பணிகளின் மூலம் வரு மானத்தையும், வேலைவாய்ப்புக்களை யும் உருவாக்கினார். பற்றாக்குறை பட் ஜெட் மூலம் நிதி நிலைமையினைச் சமாளித்தார்.

அரசியல் செல்வாக்கு!

இன்றைய அமெரிக்காவில் நிதி மூல தனத்தின் அரசியல் செல்வாக்கு, இதற்கு நேர்மாறாக செயல்பட்டிருக்கிறது. பாரக் ஒபாமாவும் பற்றாக்குறை பட்ஜெட்டிற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் மக்களுக் காக அல்ல. திவாலாகும் நிலையிலிருந்த வங்கிகளையும், பெரிய கம்பெனிகளையும் காப்பாற்றுவதற்கான நிர்ப்பந்தம் அது. அவர்களது சொந்தத் தவறுகளின் காரணமாக ஏற்பட்ட நிலைமைகளி லிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற் காக செலவழிக்கப்பட்ட பணம் அது. உலக நிதியங்களுக்கு தலைமை தாங்கிய, கம்பெனி தலைவர்களின் போனஸ் உட்பட அனைத்தும் பாதுகாக்கப்பட்டது.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் ஒதுக்கிய பணத்தின் ஆகப் பெரும்பகுதி, பெரிய பெரிய கம்பெனிகளின் நலன்களுக் காகவே செலவிடப்பட்டதே தவிர, நடுத் தர வர்க்கம் மற்றும் தொழிலாளி வர்க்கத் தினரின் வாழ்நிலைத் துயரங்களைப் போக்குவதற்கு செலவிடப்படவில்லை.

தேசியப் பொருளாதாரங்கள் பலவற் றை அழித்த பின்னரும் கூட நிதி மூல தனம் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே தொடர்ந்து வருகிறது. அதன் அளவு கடந்த பேராசை அமெரிக்காவில் உற் பத்தி தேக்கத்தினை உருவாக்குமா, அதை விட மோசமான நிலைமைகளை உருவாக்குமா? மேற்கு ஐரோப்பாவில், சமூக நிலைமைகளை புரட்டிப் போடுமா? என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வியத்தகு வகையில் பலவும் நடக்கக் கூடும். அமெரிக்கப் பொருளாதாரம் நம்பகத்தன்மையினை இழக்குமானால், டாலர் உலகின் ரிசர்வ் நாணயம் என்ற அந்தஸ்தினை இழந்து விடும். அதுவே, நிதி மூலதனத்தின் இறுதி யாத்திரைப் பாடலாக அமையலாம்.

மற்றுமொரு காரணியும் இங்கு கவனத் தில் கொள்ளப்படவேண்டும். நிதி மூலத னத்தினை எதிர்கொள்ளும் சக்தியாக ஏதும் இல்லாததும் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் தொடர்வதற்குக் காரணமாய் இருக்கிறது.

உலகின் அடிவானத்தைத் தொட்டுப் பார்த்தால், இன்னும் 20 ஆண்டுகளில், சீனா பெரிய அளவில் பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் நிதிமூல தனத்தினை எதிர்கொள்ளும் சக்தியாக உருவாகும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒரு நிபந்தனை. ஏற்றுமதியினை பெரிதும் நம்பி நிற்கும் பொருளாதாரம் என்ற நிலைமையிலிருந்து அது விடுபட வேண்டும்.

சுந்தரத்தினுடைய புத்தகம் அவை குறித்த சிந்தனைகளை முன்வைக்கிறது. அவை அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவையே.

தமிழில : இ.எம். ஜோசப்

நன்றி : திஹிந்து நாளிதழ் - 11.10.11

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com