Contact us at: sooddram@gmail.com

 

நாகேஷ் சில நினைவுகள்...

(இரா.சரவணன்)

யக்குநர் ஸ்ரீதரைக் கடைசியாகப் பேட்டி கண்ட துயரமான அதிர்ஷ்டசாலி நான். பக்கவாதத்தால் மிகவும் நலிவுற்று மரணப் படுக்கையில் இருந்த ஸ்ரீதர் அன்றைய தினத்தில் இரண்டு பேரைப் பற்றி சிலாகித்துப் பேசினார். ஒருவர் ஜெயலலிதா... இன்னொருவர் நாகேஷ்.  

 '' 'நெஞ்சில் ஓர் ஆலயம்படம் ஆரம்பிச்சப்ப ஏற்கெனவே வாய்ப்பு கேட்டுப் போயிருந்த நாகேஷை வரச் சொன்னேன். குழந்தையைக் காணாமல் கம்பவுண்டர் தேடுற காட்சிக்கு ஒத்திகை பார்த்தோம். அந்த கேரக்டரில் நடிக்க வேண்டிய ராமாராவ் வரவில்லை. அதனால், நாகேஷை நடிக்க வெச்சோம்.   படுக்கைக்குக் கீழே குனிந்து குழந்தையைத் தேடுவதுதான் காட்சி. ஆனால், நாகேஷ் என்ன செய்தார் தெரியுமா? பெட்டில் கிடந்த தலையணையைத் தூக்கிப் பார்த்தார். பெட்டுக்கு அருகே இருந்த டிராயரைத் திறந்து பார்த்தார். குழந்தையைக் குழந்தைத்தனமாகவே அவர் தேடிய காட்சி ஸ்பாட்டில் எல்லாரையும் சிரிக்கவைத்துவிட்டது. கல்யாண்குமார் அழைத்தவுடன் வேகமாக படிக்கட்டில் நாகேஷ் இறங்கி வர வேண்டும். நடிப்பு தத்ரூபமாக வருவதற்காக படிக்கட்டில் விழுந்து புரண்டு ஓடினார். என் சம்மதம் இல்லாமல் கேரக்டர்கள் எதையும் செய்ய அனுமதிக்க மாட்டேன். ஆனால், நாகேஷுக்கு மட்டும் நான் எல்லா சுதந்திரத் தையும் கொடுத்தேன். காரணம், நான் நாகேஷின் ரசிகன்!'' - ஸ்ரீதர் சிலாகித்துச் சொன்ன வார்த்தைகள் அப்படியே இன்றும் மனதுக்குள் ரீங்கரிக்கின்றன.

''எதையும் மிகைப்படுத்திப் பேசப் பிடிக் காது. ஆனா, நாகேஷ் மாதிரி ஒரு கலைஞனை மிஞ்சுற ஆள் இந்தியாவிலேயே இல்லைனு சொல்வேன். அந்த மாபெரும் கலைஞனுக்கு பத்மஸ்ரீ பட்டம்கூடக் கிடைக்கலையேங்கிறது என்னோட மிகப் பெரிய ஆதங்கம்!'' - வருத் தத்தில் துடிக்கிறது இயக்குநர் பாலசந்தரின் குரல். நாடகத் துறையின் மீது நாகேஷ் கொண்டிருந்த அதீத பாசத்தை விவரிக்கிறார் பாலசந்தர்.

''என்னோட 'மேஜர் சந்திரகாந்த்நாடகம் அப்போ ஏக பிரசித்தம். டி.கே.சண்முகம்,  ாகேஷ் எல்லாரும் 'மேஜர் சந்திரகாந்த்’பத்தி எல்லார்கிட்டயும் பெருமையாப் பேசினாங்க. 'இனிமே துண்டு துக்கடா வேஷத்தில் நடிக்க விரும்பலை. உங்களோட இயக்கத்தில் நான் நடிச்சே ஆகணும்’னு சொன்னார் நாகேஷ். தினமும் மாலை அவர் என்னைப் பார்க்க வரும் நேரம்தான் எனக்கு டீ டைம்.

'ஏதோ ஒரு கேரக்டரைக் கொடுக்க முடியாது. உன்னை மனசுல வெச்சு தனியா கதை பண்ணினால்தான் உண்டு. அதனால, நீ கொஞ்ச காலம் காத்திரு’னு சொன்னேன். அப்போ ஸ்ரீதருடைய 'நெஞ்சில் ஓர் ஆலயம்ரிலீஸாகி, ஓவர் நைட்ல நாகேஷ் ஃபேமஸ் ஆகிட்டார். அப்புறம் அவர் என்னைப் பார்க்க வரும்போது எல்லாம் கூட்டம்கூடிரும். சினிமாவில் பிரபலமான பின்னும் என் நாடகத்தில் நடிக்கணும்னு தீவிரமா இருந் தார். அவருக்காகவே நான் உருவாக்கியது தான் 'சர்வர் சுந்தரம்நாடகம். அந்த நேரம் பார்த்து 'காதலிக்க நேரமில்லைரிலீஸ். நாகேஷ் பெரிய காமெடியனா உருவாகிட்டார். எனக்குப் படபடப்பு ஆகிருச்சு. காரணம், ஒரு காமெடியனா நாகேஷ் சினிமாவில் ஜெயிச்சிருக்கும்போது 'சர்வர் சுந்தரம்நாடகம் எப்படி எடுபடும்கிற தயக்கம். நாகேஷ் அழுவுற ஸீன்லகூட மக்கள் சிரிச்சிடுவாங்களேங்கிற பயம். ஆனாலும், நாகேஷ், 'அப்படி எல்லாம்நடக் காது பாலு. நாடகம் நிச்சயம் ஹிட் ஆகும்’னு நம்பிக்கையா சொல்லிட்டு இருந்தார். தயக்கமும் பயமுமா நாடகம் முடிஞ்சப்ப, பெரிய ரெஸ்பான்ஸ். 'நான் உங்களுக்குத் தைரியம் சொன்னேனே தவிர, எனக்கும் பதற்றம்தான். கைத்தட்டலைப் பார்த்த துக்கு அப்புறம்தான் பதற்றம் போச்சு’னு சொன்னப்ப, நாகேஷ் முகத்தில் அப்படிஓர் உருக்கம். நாம் எதிர்பார்க்கிறதைக் காட்டி லும் அதிகமாகச் செய்து அசத்துவதில் நாகேஷை மிஞ்ச ஆளே கிடையாது!'' - பாலசந்தரின் வார்த்தைகளே நாகேஷின் நடிப்புக்கான பதக்கங்கள்.

''சத்யா ஸ்டுடியோ பக்கம் வர்றப்பலாம் எங்க வீட்டுக்கு வந்து என் அம்மா கையால ஃபில்டர் காபி வாங்கிச் சாப்பிடுவார். 1976-ல் அவருக்குத் திடீர்னு உடல்நிலை சரி இல்லா மல் போயிடுச்சு. ஜி.ஹெச்சுக்கு ஓடினேன். 'எல்லாம் முடியப்போகுது’னு டாக்டர் கை விரிச்சுட்டார். கோமாவில் இருந்த நாகேஷ் கிட்ட 'நான் மௌலி வந்திருக்கேன்’னு சொன்னேன். 'எனக்கு காபி தர்றியா’னு முனங்கினார். அதுதான் அவர் என்கிட்ட பேசுறது கடைசினு நினைச்சேன். ஆனா, பல லட்சம் பேரின் பிரார்த்தனைகள் கோமாவின் பிடியில் இருந்த நாகேஷை அன்றைக்குக் காப்பாற்றியது!'' என்கிறார் மௌலி அப்போதைய பரவசம் விலகாத குரலில்.

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகப் பேசுகிறார் கிரேஸி மோகன். '' 'அபூர்வ சகோதரர்கள்படத்தில் சிங்கத்திடம் நாகேஷ் சிக்குவதுபோல் ஒரு காட்சி. நாங்க டூப் போட்டு எடுத்துக்கிட்டு இருந்தோம். அப்போ, அங்கே வந்த நாகேஷ் சார், 'இந்த ஸீனுக்கு ஏன் டூப் போடுறீங்க? நான் இதில் நடிச்சே தீருவேன்’னு மல்லுக்கு நின்னார். 'சிங்கத்தைப் பார்த்துப் பயம் இல்லையா’னு கேட்டால், 'வீரன் போரில்தான் சாகணும். வியாதியில் சாகக் கூடாது. நடிக்கிறப்பவே செத்தால் அது வரம்’னு சொன்னார். நாங்க உடனே நெகிழ்ந்து உருக்கமாகவும், 'அட, உங்களைக் கலாய்க்கச் சொன்னேன்பா... இந்த மாதிரி எத்தனை சிங்கத்தை நான் பார்த்திருப்பேன்’னு டைமிங்கா காமெடி பண்ணார். என்னோட ஒரு நாடகத்தில் முதலில் ஒரு பைத்தியக்கார கேரக்டர் வரும். அடுத்து வர்ற ஒரு நபரும் மனநிலை தவறிய மாதிரியே பேசுவார். அதைப் பார்க்கும் ஹீரோ, 'நீயும் பைத்தியமா’னு கேட்பார். அந்தக் காட்சியைப் பார்த்த நாகேஷ், 'ஏன்பா, ஹ்யூமருக்குப் பொழிப்புரை போடுறீங்க. இரண்டாவது வர்ற ஆளைப் பார்த்து, 'நீயுமா’னு கேட்டாலே போதுமே. 'நீயும் பைத்தியமா’னு ஏன் ரெண்டு வார்த்தைகள் போடுறீங்க. வார்த்தைகளை எப்பவுமே வீணடிக்கக் கூடாது’னு சொன்னார். வார்த்தைகளைக் கௌரவப்படுத்திய கலைஞன் அவர். இறப்பதற்கு ஒரு மாசத்துக்கு முன்பு என்னோட 'சாக்லேட் கிருஷ்ணாநாடகத்தைப் பார்க்க வந்திருந்தார். 'மோகன், எனக்கு உடம்பு சரியில்ல. அதனால, பத்து நிமிஷத்துலயே கிளம்பிடுவேன்’னு சொன்னார். ஆனால், நாடகம் முடியும் வரை உட்கார்ந்து பார்த்தார். மறு நாள் போன் பண்ணி, ஒன்றரை மணி நேரம் பாராட்டினார். நாடகத்தின் மீது அவர் வெச்சிருந்த பாசமும் மரியாதை யும் அப்படிப்பட்டது!''

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com