|
||||
|
கடாபியின்
மரணம்...
பின்னணியில்
சர்கோசி?
தனக்குப் பிடிக்காத
முஸ்லிம்
ஆட்சியாளர்களையெல்லாம்
‘சர்வாதிகாரிகளாகச்
சித்தரித்து,
அவர்களை அவ்வாட்சியாளர்களின்
நாட்டவர்களாலேயே
புரட்சியெனும்
பெயரில் தூக்கியெறியும்
மேற்குலகின்
உத்திக்கு,
லிபியாவின்
முன்னாள்
தலைவர் பலியாகி, கிட்டத்தட்ட
ஒரு வருடமாகின்றது.
சில காலங்களுக்கு
முன்னர்வரை
உலக முஸ்லிம்களில்
அனேகரால்
ஒரு ஹீரோவாகப்
பார்க்கப்பட்ட,
கடாபியை, அவரது நாட்டு
மக்களாலேயே
வில்லனாகச்
சித்தரிக்கச்
செய்து, நடு வீதியில்
அவர் நாயைப்
போலச் சுட்டுக் கொல்லப்படுவதை
நியாயப்படுத்திவிட்டன
மேற்குலக
ஊடகங்கள்.
கடாபி நல்லவரா கெட்டவரா என்ற வாத
பேதங்களுக்கப்பால்,
அவரது மிக நீண்டகால
ஆட்சியில்
(சுமார் 42 வருடங்கள்)
அவர் தன்
மக்களைச்
செல்வந்தர்களாகவே
வைத்திருந்தார். மின்சாரக் கட்டணம்
கூட எந்த
லிபியரிடமிந்தும்
அறவிடப்பட்டிருக்கவில்லை.
அதிக பொருளாதார
சலுகைகளை
வழங்கியிருந்தார்.
ஆனால் எதிர்ப்பரசியல்,
மாற்றுச்
சிந்தனை என்பனவற்றுக்கு
அங்கு இடமிருக்கவில்லை
என்பது உண்மையே. அவரது நீண்டகால
சர்வாதிகார
ஆட்சியால்
வெறுப்புற்றிருந்த
மக்கள், தியு+னிஸியா,
எகிப்து என அண்டை
நாடுகளில்
அதன் சர்வாதிகார
ஆட்சியாளர்களுக்கெதிரான
அந்நாட்டு
மக்களின்
புரட்சியால்
உந்தப்பட்டு,
தாமும் கடாபிக் கெதிராக கிளர்ந்தனர்.
ஈற்றில் கடந்த ஆண்டு ஒக்டோபர்
20 ஆம் திகதி
அவருக்கெதிரான
கிளர்ச்சியாளர்களால்,
சுட்டுக்
கொல்லப்பட்டார்.
இது மேற்குலக
ஊடகங்கள்
நமககுக் கூறிய சேதி.
ஆனால் அண்மையில்
கசிந்திருக்கும்
தகவல் வேறுமாதிரியானதாக
இருக்கின்றது.
பிரான்ஸின் முன்னாள்
ஜனாதிபதி
சார்க்கோஸியின்
உத்தரவின்
பேரில் அந்நாட்டு
இரகசிய சேவைப் பிரிவைச் சேர்ந்த ஒருவராலேயே
லிபிய முன்னாள் தலைவர் கடாபி கொல்லப்பட்டார்
என்ற திடுக்கிடும்
தகவல் வெளியாகியுள்ளது.
கடாபி கடந்த ஆண்டு
ஒக்டோபர்
மாதம் 20ஆம்
திகதி தனது சொந்த
ஊரான கிரிட்டில்
வைத்து கொல்லப்பட்டார்.
லிபிய புரட்சியில்
ஈடுபட்டவர்களுடன்
இணைந்திருந்த
வெளிநாட்டு
முகவர் ஒருவரே கடாபியை கொன்றதாக தெரிவிக்கப்படுகி;ன்றது.
இந்நிலையில் மேற்படி வெளிநாட்டு
முகவர் பிரான்ஸ் நாட்டவராக
இருக்கலாம்
என இத்தாலிய
பத்திரிகையொன்று
செய்தி வெளியிட்டுள்ளது.
லிபிய புரட்சிக்கு
நிகொலஸ் சர்கோஸியின்
அரசாங்கம்
ஆரம்பம் முதல் மிகுந்த
ஆதரவளித்து
வந்தது. 2007ஆம் ஆண்டு தேர்தலில்
சார்க்கோஸி
வேட்பாளராக
போட்டியிட்ட
போது அவருக்கு
மில்லியன்
கணக்கான பண உதவி
வழங்கப்பட்டமை
உள்ளடங்கலாக
அவருடனான
தனது உறவை
அம்பலப்படுத்தப்
போவதாக கடாபி பகிரங்கமாக
அச்சுறுத்தல்
விடுத்திருந்தார்.
இதன் காரணமாக
கடாபியை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மௌனமாக்குவதற்கு
தேவையான முயற்சியில்
சார்க்கோஸி
ஈடுபட்டதாக
திரிபோலி
வட்டாரமொன்றை
மேற்கோள்காட்டி
பத்திரிகையொன்று
செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின்
மத்தியில்
ஊடுருவிய
வெளிநாட்டு
முகவரான 22 வயது இளைஞரே
கடாபியை சுட்டுக்கொன்றதாக
தெரிவிக்கப்படுகிறது.
பெண் ஒம்ரான்
'பான் என்ற
மேற்படி இளைஞர் கடாபியின்
ஆதரவாளர்களால்
கடந்த ஜ_லை மாதம்
தாக்கப்பட்டதையடுத்து
பிரான்ஸின்
பாரிஸ் நகரிலுள்ள
மருத்துவமனை
யில் அனுமதிக்கப்பட்ட
நிலையில்
அண்மையில்
உயிரிழந்தார்.
கடாபி படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.
காட்டுத்தனமான ஆவேச கும்பல் அவரை கொன்றார்கள்
என்ற பிரச்சாரம்
இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
பிரான்சிய உளவு பிரிவின்
நிழல் நடவடிக்கை
இது. ஒரு தனிமனிதனின்
விருப்பத்திற்காக
ஒரு நாட்டின்
தலைவனை கொலை செய்துள்ளது
பிரான்சின்
உளவுத்துறை.
இந்நிலையில் கடாபி
பாடசாலைச்
சிறுமிகளை
கடத்திச்
சென்று அடித்து துன்புறுத்தி
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி
அவர்களை பாலியல் அடிமைகளாக
பயன்படுத்தி
வந்ததாக தகவல் ஒன்று
கூறுகிறது.
பிரான்ஸ் ஊடகவியலாளரான
அன்னிக் கொகனால் எழுதப்பட்டு
அண்மையில்
வெளியான ‘லெஸ் புரொயிஸ்
டான்ஸ் வி ஹரெம்
டி கடாபி’
என்ற நூலிலேயே
இத்தகவல்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளன. கேர்ணல்
கடாபியின்
அந்தப்புரத்தில்
பாலியல் அடிமைகளாக
செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்ட
சிறுமிகளி
டமிருந்து
பெறப்பட்ட
திடுக்கிடவைக்கும்
தகவல்களை
அடிப்படையாகக்
கொண்டு அன்னிக் மேற்படி புத்தகத்தை
எழுதியுள்ளார்.
அவரால் பாதிக்கப்பட்ட
சிறுமிகளில்
சொராயா என்ற 15 வயது
சிறுமியும்
ஒருவராவார்.
தனது பாடசாலைக்கு
வந்த கேர்ணல்
கடாபிக்கு
பாடசாலை நிர்வாகத்தின்
ஏற்பாட்டில்
மலர்கொத்துகளை
கொடுத்து
சொராயா வரவேற்றுள்ளார்.
மலர்கொத்தை கையேற்ற கடாபி, சொராயாவின்
தலையில் தனது கரத்தை
வைத்துள்ளார். சிறுமி தனக்கு
வேண்டும்
என்பதை தனது உதவியாளர்களுக்கு
அறிவிப்பதற்காகவே
கடாபி அவ்வாறு சமிக்ஞை செய்ததாக கூறப்படுகின்றது.
மறுநாள் சிர்ட்
நகரிலுள்ள
சொராயாவின்
வீட்டிற்கு
சீருடை அணிந்த நிலையில் வந்த கடாபியின்
பெண் உதவியாளர்கள்
பிறிதொரு
வரவேற்பு
வைபவத்துக்கு
சொராயா தேவைப்படுவதாக
தெரிவித்து
அவரை அழைத்துச்
சென்றுள்ளனர்.
அதன்பின், காட்டு வழியாக கடாபியின்
அந்தப்புரத்துக்கு
அழைத்துச்
செல்லப்பட்ட
சொராயா ஆபாசமான ஆடை அணிவிக்கப்பட்டு
கடாபியின்
படுக்கை அறைக்குள்
தள்ளப்பட்டுள்ளார். கடாபி
சொராயாவை
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
தான் ஆரம்பத்தில்
கடாபியை எதிர்த்து
போராடியதாகவும்
இறுதியில்
பலிகொடுக்கப்பட்ட
ஆட்டுக் குட்டியாக
கடாபியால்
திரும்பத்
திரும்ப பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்
பட்டதாகவும்
சொராயா கூறினார்.
சில சமயங்களில்
கடாபி தனது பாலியல்
துஷ்பிரயோக
நடவடிக்கைகளுக்கு
ஒரே சமயத்தில்
பல சிறுமிகளை
பயன்படுத்துவதையும்
வழக்கமாக
கொண்டிருந்ததாக
சொராயா தெரிவித்துள்ளார்.
ஆனால் கடாபியின்
மருத்துவத்
தாதியாகப்
பணியாற்றிய
உக்ரேன் பெண் பிறிதொரு
சந்தர்ப்பத்தில்
குறிப்பிடுகையில்,
கடாபி தங்களோடு மிகக் கண்ணியமாக
நடந்ததாகக்
குறிப்பிடுகின்றார்.
கடாபியின் மெய்ப்
பாதுகாவலர்களாகவும்
பெண்களே இருந்துள்ளனர்.
பிரான்ஸின் முன்னாள்
ஜனாதிபதி
கடாபியைக்
கொல்ல உத்தரவிட்டார்
என்ற தகவல்கள்
கசிந்த சில நாட்களிலேயே
பிரான்ஸ்
நாட்டு எழுத்தாளர்
கடாபி மீது பாலியல்
குற்றச் சாட்டுக்களைச்
சுமத்தும்
நூலை வெளியிட்டிருக்கிறார்.
கடாபியின் கொலை
தொடர்பில்
பிரான்ஸின்
மீதான கறையைக் கழுவும் முகமாக இப்பாலி யல் குற்றச்சாட்டுக்கள்
சோடிக்கப்பட்டிருக்ககக்
கூடுமா அல்லது அவை உண்மையானவையா
என்பது குறித்த காலம் தான்
பதில் சொல்ல வேண்டும்.
அபி...- |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |