|
||||
|
கனடா
இளையராஜா
நிகழ்ச்சியும்
கவுண்டமணி
பாணி தமிழ்த்
தேசிய விமர்சனமும் கனடாவில் நடைபெறும்
இளையராஜா
இசை நிகழ்ச்சிக்கு
ஏன் தமிழ்த்
தேசியவாதிகள்
எதிர்ப்பு
தெரிவிக்கின்றனர்? (ஸ்ரீதர்) தமிழ்த்
தேசியவாதிகளாக
தன்னை அடையாளப்படுத்திக்
கொள்கிற சினமாக்காரர்கள்தான்
தீவிரமாக
எதிர்ப்பு
தெரிவிக்கிறார்கள். இளையராஜா போன்ற உலக
பிரபலங்கள்,
உலகத் தமிழர்களின்
அழைப்பை ஏற்று சென்றால்,
அதன்பிறகு
திரைப்படத்தில்
வாய்ப்புகள்
இல்லாத சினிமாக்காரர்களுக்கு
வெளிநாட்டிலிருந்து
அழைப்பு வராது. ‘இப்படிவெளிநாடு
வாழ் தமிழர்கள்
இளையராஜா
போன்ற ஆளுமைகளை அழைத்தால்
அதன் பிறகு
நம்மை அழைக்க மாட்டார்கள்’
என்ற கவலையே
இதில் பிரதான பாத்திரம்
வகிக்கிறது.
தனது ‘ஆதிபகவன்’
ஆடியோ வெளியீட்டை
கனடா தமிழர்களிடையே
நடத்திவிட்டு
வந்த வாயோடு,
‘இளையராஜாவின்
இசை நிகழ்ச்சி
கனடாவில்
நடப்பதால்,
ஈழத்தமிழர்களின்
வாழ்க்கைத்
தரம் உயர்ந்துவிடுமா?
தமிழர்களின் பிரச்சினை
தீர்ந்துவிடுமா’
என்று கொஞ்சமும்
கூச்சமில்லாமல்
கேட்கிறார்
இயக்குநர்
அமீர். (ஆதிபகவன்
தயாரிப்பாளர்,
அதிமுக ஆதரவு தமிழ்த்
தேசியவாதிகள்
கடுமையாக
எதிர்க்கிற
திமுக சட்டமன்ற உறுப்பினர்
இரா. அன்பழகன்.) இயக்குநர்
ஆர்.கே. செல்வமணி இந்த முறை
எப்படியாவது
மாவீரர் நாளுக்கு கனடாவுக்கு
நம்மள கூப்பிடுவாங்க…
எவ்வளவு வேலை(?) இருந்தாலும்,
கனடா போயிட்டு
வந்துடலாம்
என்று இருந்தார்போல… எந்த இந்திய ராணுவம் ஈழத் தமிழர்களை
அமைதிப்படை
என்கிற பெயரில் கொன்று குவித்ததோ, அந்த இந்திய ராணுவத்திற்கும்,
இந்திய தேசியத்திற்கும்
ஆதரவாக அதன் துரோகத்தை
தியாகமாக
பிரச்சாரம்
செய்தும், இந்திய
முஸ்லிம்களை
இந்தியாவிற்கு
துரோகம் செய்பவர்களாகவும்,
பாகிஸ்தானுக்கு
காட்டிக்
கொடுப்பவர்களாகவும்
திரைப்படங்கள்
எடுத்த இந்த ஆர்.கே. செல்வமணி போன்றவர்கள்
பேசுகிற தமிழ்த் தேசியம் எவன ஏமாத்தி
சாப்டன்னு
தெரியலை? எம்.ஜி.ஆர். போன்றவர்கள்,
தங்களை வள்ளல்களாக
சித்தரித்துக்
கொள்வதற்கு,
தானம், தர்மம் என்ற புனைப்பெயர்களில்
‘செலவு செய்து பிரச்சாரம்’
செய்து கொண்டிருந்தபோது, நடிகவேள்
எம்.ஆர். ராதா சொன்னார்: ‘உண்மையிலயே
நீங்க யோக்கியனா
இருந்தா, சம்பதிக்கிற
பணத்திற்கு
ஒழுங்க கணக்கு காட்டி வருமான வரிய கட்டுங்கடா.. அது மக்கள் பணம்.. அத தின்னுட்டு
என்னடா தானம், தரமம்
என்று மக்கள ஏமாத்துறீ்ங்க..’ என்றார். தன்னோட கேவலமான, மட்டமான தமிழர் வீரோத திரைப்படங்கள்
மூலமாக தமிழர்களை
ஏமாற்றி, சூறையாடி படம் எடுத்து
தின்னுபுட்டு,
சினிமாவுக்கு
வெளிய வந்து தமிழ்
உணர்வு பேசுவது என்ன நியாயம்? உங்க படங்களில்
தமிழ்த் தேசிய கருத்துக்களை
பேசிவிட்டு,
வெளியில்
வந்து தமிழர் விரோத கருத்துகளைக்கூட
பேசுங்க…, உங்க பேச்சு
குறைவான எண்ணிக்கையில்தான்
மக்களை சென்று சேரும். சினிமா அதிகம்
பேரை சென்றடையும். ஆனால், இத தலைகீழாக
செய்கிறவர்கள்
தங்களை தமிழ்த் தேசியவாதிகளாக
அடையாளப்படுத்திக்
கொள்வது, இந்திய, இலங்கை அரசுகளால்
படுகொலை செய்யப்பட்ட
தமிழர்களின்
பிணங்களின்
மீது செல்வாக்குத்
தேடுகிற மோசடி. போக்குவரத்து
விபத்துகளில்
சிக்கிக்
கொண்டவர்களை
காப்பாற்றுகிறவனைப்போல்
நடித்து, அவர்களின்
பொருட்களை
அபகரிக்கிறவனின்
செய்கையைவிட
மோசமானது. ஒரு படத்துல கவுண்டமணி, ‘இந்த தொழில்
அதிபர் தொல்ல தாங்கலடா…
குண்டூசி
விக்கிறவன்.. புண்ணாக்கு
விக்கறவன்
எல்லாம் தன்ன தொழில்
அதிபர்ன்னு.. சொல்லிக்கிறான்..’ என்பார். ‘புண்ணாக்கு
விக்கிறவங்க
தொழில் அதிபர் என்று சொல்லிக்
கொள்ளக்கூடாதா?’
என்ற கேள்வியை
எழுப்பவதாக
இந்த வசனம்
இருக்கிறது. இதை இப்படி மாற்றி… ‘இந்த தமிழ்த்
தேசியவாதிகள்
தொல்லை தாங்க முடியலடா.. சினிமாவுல
வாய்பில்லாதவன்,
வெளிநாட்டு
தமிழரை தயாரிப்பாளரா
மடக்கலாமா
என்று முயற்சி பண்றவன், சினிமாவுல இக்கும்போது
தமிழர்களுக்கு
எதிரான குத்தாட்டம்
போட்டு சினிமா எடுத்திட்டு;
இப்ப நடக்க
முடியாம இருக்கிறவன், ஜாதி வெறியோட படம் எடுத்தவன், காங்கிரசிலிருந்து
வெளியவந்தும்
இன்னும் காங்கிரஸ்
காரனாகவே
இருக்கிறவன்.. இவுங்கெல்லாம்கூட தன்னை தமிழ்த்
தேசியவாதின்னு….’ என்று
இப்பொழுது
கவுண்டமணி
பேசினால்
பொருத்தமாக
இருக்கும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |