Contact us at: sooddram@gmail.com

 

சென்னைவில் பத்திரமாக இருந்து கொண்டு திரு விக்னேஸ்வரனை வசை பாடுவது அயோக்கியத்தனம்! – நக்கீரன்

நுணல் என்பது ஒருவகைத் தவளை.  வயல்வெளிகளில், தவளைகள் வழக்கமாக் கால்வாய்களில் ஓடும். சிறிய வாய்களைக் கொண்ட குழிகளில், ஓட்டைகளில், பள்ளங்களில் அந்தத் தவளைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பாம்புகள்  இரை  தேடி அங்கே வரும். தவளைகள் என்றால் பாம்புகளுக்கு நல்ல விருப்பம்.  நுணல் என்ற தவளை வகை ” குவா, குவா” என்று கத்தும். அப்படிக் கத்தும்போது, இரவில் இரை தேடி வரும் பாம்புகளுக்கு அவை இருக்கும் இடம் தெரிந்து விடும். அதனால் அந்த நுணல்கள் மாட்டிக்கொள்ளும். பாம்புகள் அவற்றை விழுங்கி விடும். இதுதான் “நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழி பிறப்பதற்குக் காரணமாக இருந்தது.

கவிஞர் காசி ஆனந்தன் அவர்கட்கு  என்ன நடந்ததோ தெரியாது.  வாகை தொலைக் காட்சியில் (Vaakai TV -September 24, 2013) பேசும்போது   முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் மீது ஆவேசத்தோடு கடுமையாகப் பாய்ந்து பிராண்டியிருக்கிறார்.  அநாகரிகமான முறையில் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்திருக்கிறார்.  மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்று சாபம் போடுகிறார்.

நாகாக்க வேண்டிய கவிஞர்  நாலாந்தர அரசியல்வாதி மாதிரி நாக்கில்  நரம்பில்லாமல் “நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன்  அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார்………….” என அர்ச்சனை செய்திருக்கிறார்.

திரு விக்னேஸ்வரனது அகவை, கல்வி, பட்டறிவு ஆகியவற்றுக்கு ஒரு எள்முனை அளவு கூட மரியாதை கொடுக்காது  கனி இருக்கக் காய் கவந்தற்று என்பது போல  அவரை ஒருமையில் விளித்து வசை பாடியுள்ளார்.

ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பார்கள். கவிஞர் காசி ஆனந்தனைப் பொறுத்தளவில் அது சரியாக இருக்கிறது. அது மட்டுமல்ல உணர்ச்சி  உள்ள இடத்தில்  அறிவு இருக்காது என்பார்கள்.  அவரைப் பற்றி இப்படி எழுதுவது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஆனால் எழுத வேண்டியுள்ளது.

கவிஞர் காசி ஆனந்தனை எனக்கு  நீண்ட காலமாகத் தெரியும். அவர் எனது நண்பர். அவரை முதன் முதலில் 1960 ஆம் ஆண்டு சென்னையில் சந்தித்தேன். அப்போது அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். ஒரு சிறிய வாடகை அறையில் நண்பர்களோடு இருந்தார். பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருந்தார். பின்னால்தான் அவர் உடல்நலக் குறைவால் நலிந்து  இருந்தது பற்றி அறிந்து கொண்டேன்.

கவிஞர் காசி ஆனந்தன் வெலிக்கடை சிறையில் இருந்த  காலத்தில் அவரைப் பார்க்க அவரது இளவல் சிவஜெயம் மட்டக்களப்பில் இருந்து மாதம் இருமுறையாவது கொழும்புக்கு வருவார். கல்குடா நா. உறுப்பினர் கொடுத்த தொடர்வண்டி அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தித்தான் அவர் பயணிப்பார்.   எங்கள் வீட்டில்தான் தங்குவார். வரும்போது சும்மா வரமாட்டார். கவிஞரின் தாயார் தனது அருமை மகனுக்குச் செய்து கொடுத்த பலகாரப் பொட்டலத்தோடுதான்  வருவார்.  அது குசேலர்  கிருஷ்ண பரமாத்மாவைப் பார்க்கப் போகும்போது   அவல் பொட்டலம்  கொண்டு போன  கதையை நினைவு படுத்தும்.

சிவஜெயம் மறுநாள் காலையில் தமையனாரைப் பார்க்கச் சிறைச்சாலைக்குப் புறப்படும்போது நாங்களும் உணவு கொடுத்து விடுவோம். அப்போது கவிஞரோடு குட்டிமணி, தங்கத்துரை, இன்பம், மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன் என மொத்தம் சுமார் 42 இளைஞர்கள் சிறையில் இருந்தார்கள்.

பின்னர் சிவஜெயமும் அரசியல் நடவடிக்கைகள் காரணமாகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையானதும் இயக்கத்தில் சேர்ந்து போராளியானார். 1988 இல் இராணுவம் மேற்கொண்ட ஒருசுற்றி வளைப்பில் சிக்குண்டபோது நஞ்சருந்தி வீரச் சாவைத் தழுவிக்கொண்டார்.

கவிஞர் 1977 இல் விடுதலை ஆனதும் எனது வீட்டுக்கு வந்தார். அவருடன் இன்பம், வண்ணை ஆனந்தன் என நான்கு இளைஞர்கள் வந்தார்கள். கவிஞர் சிறை வாழ்க்கைபற்றிச்  சொன்ன பல விடயங்களில்  ஒன்று நினைவிருக்கிறது. சிறையில் கொடுக்கும் உணவு படுமோசமானது. சோற்றில் கற்கள் அதிகம். அதனால் அதனைச் சாப்பிடுவதற்கு முன்னர் தட்டில் தண்ணீர் ஊற்றுவார்கள். அப்போது மேலே இருக்கும் கற்கள் கீழே போய்விடும். ஆனால் கீழே இருந்த புழுக்கள் தண்ணீரில் மேலே மிதக்கத் தொடங்கிவிடும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலப்பகுதியில் பேச்சுக்களுக்காக விடுதலைப்புலிகள் இந்தியா சென்றபோது காசி ஆனந்தன் இந்தியா சென்றார். விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரக்குழுவின் மத்திய குழு உறுப்பினராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு அக்காலப்பகுதியில் இந்தியாவில் இராஜீவ் அரசுடனான பேச்சுக்குழுவில் விடுதலைப்புலிகள் தரப்பு சார்பாளர்களில் ஒருவராக காசி ஆனந்தன் சென்றார்.

உயிரோடு இருக்கும் போதே மாமனிதர் விருது பெற்ற ஒரு சிலரில் கவிஞர் காசி ஆனந்தனும் ஒருவர்.  ஈழப்போராட்ட காலத்தின் இக்கட்டான காலப்பகுதிகளில் தோளோடு தோள் நின்ற இவருக்கு தமிழீழத்தின் அதிஉயர் விருதான மாமனிதர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்த வண்ணம் உள்ளார்.

கவிஞர் காசி ஆனந்தன் பற்றி நான் பேசும் போது சரி, எழுதும் போது சரி அவரைத் தமிழீழ அரசவைக் கவிஞர் என்று விளிப்பதை  வழக்கமாகக் கொண்டுள்ளேன். கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களையும் அவ்வாறே விளிப்பது வழக்கம்.

இந்திய தேச விடுதலைக்கு எப்படி மகாகவி பாரதியாரின் கவிதைகள் வாளாகவும் வேலாகவும் பயன்பட்டதோ அது போல  இந்த இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தமிழீழ விடுதலைக்குப் பயன்பட்டன.

இந்த வரலாற்றை மீள்வாசிப்புச் செய்வதற்குக் காரணம் கவிஞர் காசி ஆனந்தன் மீது நான்  நேற்றுவரை வைத்திருந்த மதிப்பை எடுத்துக் காட்டவே. அந்த மதிப்பு இப்போது ஆட்டங்கண்டுள்ளது. எனக்குமட்டுமல்ல அவரை நேசிக்கும் பலரும் அதே மனநிலையில்தான் காணப்படுகிறார்கள்.

இப்போது ‘முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பேச்சு படு அயோக்கியத்தனமானது,  தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது,  நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட  விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது.  நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார்’ என  ாகை தொலைக்காட்சியில் (வாய்க்குவந்தபடி,  மனம் போனபடி  கவிஞர் காசி ஆனந்தன்  முன்னாள்  நீதியரசர் விக்னேஸ்வரனை  வசை பாடியுள்ளார்.  இப்போது அவரால்  வீசப்படும் வசைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கேள்வி (1) – தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கியதை,  அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது.

பதில்: ‘தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம்’  எனத் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. அப்படி வேறு யாரும் சொல்லவில்லை. குறிப்பாக முன்னாள் நீதியரசர் சொல்லவில்லை. பின் எதற்காக சாம்பிராணி காட்டாமலே காசி ஆனந்தன் சன்னதம் ஆடுகிறார்?

கேள்வி (2) – நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது.  நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார். வடமாகாண தேர்தல் முடிந்து அங்கே விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இதனைப் பெரிதாக ஊடகர்கள் அலசி ஆய்ந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கிருந்து கொண்டு தமிழர்களின் விடுதலைஉணர்வினை மழுங்கடிக்கும் முயற்சியினை நாலுபக்கத்திலும் நஞ்சர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

பதில்: இந்த முளை, தளை  போன்ற  எதுகை பாடலுக்கு உதவலாம். ஆனால் யதார்த்த அரசியலுக்கு உதவாது.  கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்டவர் விக்னேஸ்வரன் என்பது சரியானால்   மலேசியாவில் பிறந்து கொழும்பில் அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக வாழ்ந்த தந்தை செல்வநாயகம் அவர்களும் கொழும்பில்தான் முளை விட்டவர். காங்கேசன்துறையில்தான் தளைவிட்டார்.  கடைசிவரை அவர் கொழும்பில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்தார் என்பது வேறு கதை.  கொழும்பில் முளைவிட்டு யாழ்ப்பாணத்தில் தளைவிட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளால் மாமனிதர்  விருது கொடுக்கப்பட்ட குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். அவரது மகன் கஜேந்திரகுமார் அவர்களும் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர்தான்.  பின் எதற்காக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு இன்னொரு நீதி பேசுகிறீர்கள்?

விக்னேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே வாழ்கிறார். ஆனால் கவிஞரோ  தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக  வாழ்கிறார்.  அவர் அங்கு போவதற்குத்  தக்க காரணம் இருந்தது.  ஆனால்  நாடு திரும்பாமல்  இருப்பதற்கு என்ன காரணம்? ‘மாங்குயிலும் மரக் கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை நாங்கள் மட்டும் வீடு திரும்ப வழியில்லை’ என்று  கவிஞர் பாடல் புனைந்ததைப் பார்த்துவிட்டுத்  தலைவர் பிரபாகரனே “கவிஞர் நாடு திரும்ப நினைக்கிறார்’ என எண்ணினாராம். ஆனால் கவிஞர் நாடு திரும்பவில்லை.

கேள்வி (3) – இந்தத் தேர்தல் மகிந்த அரசிற்குப் பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது.  மகிந்தாவின் அரசு ஒருநேர்மையான அரசு, ஜனநாயகத்தை மதிக்கிற அரசு ஆகவே அந்த ஜனநாயவாதியான மகிந்த போற்றுதற்குரியவர் என்று அய்.நா மன்ற ஆணைக்குழு அவர்மீது கொடுமையான சர்வதிகாரி என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்ற நேரத்தில் அவரை ஒரு ஜனநாயகவாதியாக காட்டுகின்ற நாடகத்திற்கு இந்த மாகாணாசபை பயன்பட்டிருக்கின்றது.

பதில்:  ‘அய்.நா  மன்ற ஆணைக்குழு அவர்மீது கொடுமையான சர்வதிகாரி என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்ற நேரத்தில்….’ என்று கவிஞருக்கு யார் சொன்னது?  இது யாரும் கேள்விப்படாத  செய்தி? அப்படி எங்கே? எப்போது? குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்று  அவர் சொன்னால் புண்ணியமாக இருக்கும்.

கேள்வி (4) -  இன்னொன்று இந்த மாகாணசபையினைத் தமிழீழ மக்கள்- வடக்கு மக்கள் – ஆதரித்திருக்கின்றார்கள். தமிழர் கூட்டமைப்பினை ஆதரித்திருக்கின்றார்கள். தமிழர் கூட்டமைப்பினை ஏன் ஆதரித்தார்கள் என்றால் அந்த கூட்டமைப்பினை எதிர்த்து நின்ற சிங்கள ஆட்சியாளர்கள் படுதோல்வி அடையவேண்டும் என்ற நோக்கோடுதான் மக்கள் இந்த வாக்கினை அளித்திருக்கின்றார்கள்.

பதில்: இது இமாலயக் கண்டு பிடிப்பு.   நோபல் பரிசே கொடுக்கலாம்.  இது ததேகூ வாக்களித்த 353,595 வாக்காளர்களை அவமதிக்கும் அயோக்கியத்தனம். அவர்களை அறிவிலிகள், ஒன்றும் தெரியாத அப்பாவிகள்  எனக் கவிஞர்  நினைக்கிறார்.  இன்னொரு வாதத்தையும் அவர் முன்வைத்திருக்கலாம்.  தேர்தலில் 67.52 விழுக்காடு  மக்கள் மட்டுமே வாக்களித்தார்கள். ஆகவே 32.48 விழுக்காடு மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்றும்  அவர் வாதிட்டிருக்கலாம்!

கேள்வி (5) -  விக்னேஸ்வரன் போன்றவர்கள் சமஷ்டிதான் எங்கள் கொள்கை என்று சொல்கிறார்கள். அந்த சமஷ்டிக்காக வடமாகாண மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை விக்னேஸ்வரன் புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழத்திற்காகப் போராடிய மக்களை ஒடுக்கி அடக்கிவிட்டதாக நினைத்த மகிந்த அரசினைத்  தோற்கடித்து தமிழீழத்தின் மீது தமிழீழ மக்கள் உறுதியாக நிற்கின்றார்கள் என்பதற்காகவே கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

பதில்:  இது  நல்ல கற்பனை வாதம். தமிழீழம் என்ற சொல்லை யாரும் சொன்னது கிடையாது. ததேகூ இன் அறிக்கையில் அது குறிப்பிடப்படவில்லை.  மீண்டும் மீண்டும் கவிஞர் தமிழ்மக்களின் அரசியல் அறிவாற்றலைக்  கொச்சைப்படுத்துகிறார். ‘சமஷ்டிக்காக வடமாகாண மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை விக்னேஸ்வரன் புரிந்துகொள்ளவேண்டும்’ என்றால் பின் எதற்றாக அவர்கள் வாக்களித்தார்கள்? ததேகூ இன் தேர்தல் அறிக்கை மிகத் தெளிவாக   குறிப்பிடுகிறது:

‘தமிழ் மக்கள் ஒரு தனிச்சிறப்பு மிக்க தேசிய இனமாகும். புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளதும் தமிழ் பேசும் மக்களைப்           பெரும்பான்மையினராகக் கொண்டதுமான வடக்கு, கிழக்கு மாகாணங்களே தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும். தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். தமிழ்ப்பேசும் முஸ்லிம்மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்    கூடிய முறையில் சமஷ்டிக் கட்டமைப்  பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகிலான அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.’   முதலில் கவிஞர் ததேகூ இன் தேர்தல் அறிக்கையை ஊன்றிப் படிக்க வேண்டும்.

கேள்வி (6) – கூட்டமைப்பு ஒருவகையில் சிறுஅளவு பயன்பட்டிருக்கின்றது. அது என்னவென்றால் அந்த மண்ணில் சிங்களஆட்சியாளர்களும் அவர்களின் கைகூலிகளும் அந்த மாகாணசபையில் உட்காராமல் தடுத்திருக்கின்றது அது ஒன்றைத்தான் இந்த மாகாணசபை செய்திருக்கின்றது. மகாணசபை பயனுள்ளதா இல்லையா என்றால் முழுமையாக பயனற்றது.  ஆனால் உலகத்தின் பார்வையில் தமிழீழத்தின் ஒருபகுதியினை ஒருமாகாண சபையாக வருகின்றபோது அது சிங்களவன் கையில் இல்லை என்பதைக் காட்டப் பயன்பட்டிருக்கின்றது.

பதில்: ஆகா, இந்தக் கண்டுபிடிப்புக்கு  நோபல் பரிசு கொடுக்கலாம்!

கேள்வி (7) – வெற்றிக்களிப்பில் விக்னேஸ்வரன் போன்றவர்கள் பேசுகின்ற பேச்சு அயோக்கியதனமான பேச்சு. நாங்கள் தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டோம் என்று அவர் சொல்கின்றார்.அவர் எந்த தமிழீழத்தை கைவிட்டோம் என்று சொல்கின்றார்? 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தைசெல்வா தீர்மானம் இயற்றி நிறைவேற்றிய 27ஆண்டுகளாக சமஷ்டி கேட்டு சிங்களவனோடு இணைந்து சமஷ்டி பெறமுடியாது என்று உறுதியாக நம்பிய தந்தைசெல்வா அதே ஆண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றிய தமிழீழ தீர்மானத்தை எதிர்த்து தமிழீழ தீர்மானத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார்.

அந்த தமிழீழ தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டுப் பொது தேர்தலில் வாக்களித்து அதை வெற்றிபெற செய்தார்களே அந்த வெற்றிபெற செய்த தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கிறார்

புலிகளின் தாகம் தமிழீழத்  தாயகம் என்று காலம்முழுவதும் சொல்லி வந்த எங்கள் அரும்பெரும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் கொண்டிருந்த அந்த ஈடுணையற்ற கொள்கை  தமிழீழம் அதனை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார்.

எந்த தமிழீழத்திற்காக 40 ஆயிரம் வீரவிடுதலைப்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்து மாவீரர்களாகிப் போனார்களே அந்தத் தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார். மூன்று 3 இலட்சம் மக்கள் செத்து மடிந்தார்களே இதுவரை அந்த தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கிறார்.

பதில்: மேலே குறிப்பிட்டது போல தமிழீழத்தைக் கைவிட்டு விட்டோம் என்று யாரும் சொல்லவில்லை. சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி கவிஞர் மல்லுக்கு நிற்கிறார். தமிழீழத்தை தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களே கைவிட்டவர்.  ஒரு இடைக்காலத் தீர்வுக்காகக் கைவிட்டவர்.  நோர்வே நாட்டின் அனுசரணையுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தை ஒஸ்லோவில் நடந்தது. அப்போது சிறிலங்காவும்  வி.புலிகளும்  நொவெம்பர் 25, 2002 அன்று  எழுதப்பட்ட பிரகடனத்தில்  அமெரிக்கா, நோர்வே,  யப்பான் மற்றும் அய்க்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் சார்பாளர்கள் முன்னிலையில்  கையெழுத்திட்டார்கள்.

அதில் “ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின்  அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுய நிர்ணய உரிமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை ஆராய்தல்” பற்றி  இணக்கம் காணப்பட்டது. (The OSLO declaration of 25th Nov 2002 between Sri Lanka   of  Govt and LTTE signed in the presence of representatives of USA, Norway, UK and Japan clearly stated that: “ The parties have agreed to explore a political solution founded on the principle of Internal self-determination in areas of historical habitation of Tamil speaking people based on a federal structure within the united Sri Lanka .“)

மேலும் ஒக்தோபர் 2003 இல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முகமாக இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவை வி.புலிகள் முன் வைத்தார்கள். இந்த முன்மொழிவு வி.புலிகளால் சுதந்திர தமிழீழக் கோரிக்கைக்குப் பதிலாக முன்வைக்கப்பட்டது. (The Interim Self Governing Authority was a proposal issued on October 2003 by the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) of Sri Lanka for power sharing in the north and east of Sri Lanka. The proposals were made in-lieu of the LTTE renouncing its claim for an independent country called Tamil Eelam for the minority Sri Lankan Tamil people.)

இதிலிருந்து வி.புலிகள்  சுதந்திர தமிழீழத்துக்குப் பதிலாக அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுவதற்கு ஒரு விட்டுக் கொடுப்பைச் செய்தார்கள் என்பது துலாம்பரமாகத் தெரிகிறது. 

எனது கேள்வி என்னவென்றால் அப்போது கவிஞர் என்ன  வெள்ளியா பார்த்துக்  கொண்டிருந்தார்?  தமிழீழத்தைக் கைவிட்ட தலைவர் பிரபாகரனை கவிஞர்  காய்ந்தார் என  எந்தச் செய்தியும் இல்லை.  அவரை அயோக்கியன் என்று அர்ச்சித்ததும் கிடையாது. பிறகு எதற்கு விக்னேஸ்வரன் மீது மட்டும் இந்த நாலுகால் பாய்ச்சல்? மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடமா?  இது தொடர்பாக  ‘சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டிருந்தனர்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர் திரு துரைரத்தினம் எழுதிய கட்டுரையை http://www.thinakkathir.com/?p=52750 என்ற இணையதள முகவரியில்  படிக்கவும்.

கேள்வி (8) - அவருடைய சொற்பொழிவு தமிழீழ மக்களின் அடிநெஞ்சில் நெருப்பு வைக்கின்றது.  தமிழீழ மக்களின் உணர்வு பற்றி எரிகிறது. அவர் மறந்து விடக்கூடாது. அவர் தெளிவாகச் சொல்லவேண்டும். ஒன்று பட்ட இலங்கைக்குள் நாங்கள் சிக்கலைத் தீர்ப்போம் என்று சொல்கிறார். சிங்கள சிறீலங்காவின் சட்டதிட்டங்களுக்கு அமைய எங்களின் போராட்டங்கள் அமையும் என்கிறார்.  நான் இவரைப் பார்த்துக் கேட்கிறேன்?  போராட உங்களால் முடியுமா? காந்தியடிகள் பிரிட்டிஷ்காரனின் சட்டதிட்டங்களுக்கு அமையத்தான் இந்தியாவில் அறப் போராட்டங்கள் நடத்தினார்.  இது உங்களால் முடியுமா?

பதில்:  இதென்ன குழந்தைத்தனமான கேள்வி?  அதுவும் தமிழ்நாட்டில் தனது வாழ்க்கையின்  செம்பாதியை கழித்துவிட்ட கவிஞருக்கு இந்தக் கேள்வியைக் கேட்க என்ன அருகதை இருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது?  காந்தியடிகள் பிரிட்டிஷ்காரனின் சட்டதிட்டங்களுக்கு அமைய  இந்தியாவில் அறப் போராட்டங்கள் நடத்தினது போல விக்னேஸ்வரனும் சிறீலங்கா வின்  சட்டதிட்டங்களுக்கு அமையப் போராட்டங்கள் அமையும் என்கிறார்.  இது ஏன் முடியாது?    அறவழிப்  போராட்ட வழிமுறைகள்  தமிழ் அரசியலுக்குப்  புதிதல்ல. ஒரு கேள்வி: இப்படியொரு அகிம்சைப் போராட்டம் நடந்தால் கவிஞர் அதில் கலந்து கொள்ள அணியமா?

கேள்வி (9) -  ஏதாவது ஒரு மேடையில் விக்னேஸ்வரன் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா? விக்னேஸ்வரனோ சம்மந்தனோ துணிச்சலான ஒருமேடையில் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா இன்னிலையில் இவர்கள் சமஸ்டி பேசுகின்றார்கள்.

பதில்: அப்படிச் சொல்ல அவர்கள் என்ன அறிவிலிகளா?  சொன்னால் 6 ஆவது சட்ட திருத்தம் அவர்கள் மீது பாயும்?  அதைத்தான் கவிஞர் விரும்புகிறாரா?   கவிஞர் இலங்கைக்குத் திரும்பி ஒரு மேடையில் துணிச்சலாக என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்ல அணியமா?

கேள்வி(10) – வேதாளம் பளையபடி முருங்கைமரத்தில் ஏறுகின்றார்கள் தமிழ் நாட்டுமக்கள் திரு விக்னேஸ்வரனை விடப் போரடிக் கொண்டிருக்கின்றார்கள்.  தமிழக முதல்வர் ஜெயலிதா. தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள் தமிழீழத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து கூட்டமைப்பை விட அதிகமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பதில்:  மெத்த மகிழ்ச்சி.  தமிழ்நாட்டு மக்கள் போராடுவது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தில்லியின் கதவைத் திறப்பதற்குரிய  திறவுகோல்  தமிழ்நாட்டுத் தமிழ்மக்களிடம் இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைப் பாராட்டுகிறோம். முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது போரில் மக்கள் இறப்பது வழக்கமான காரியம்.  இந்திய அரசு சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது, விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம்  என்றெல்லாம் பேசினார். அவரும் அவரது கட்சியும்  எமது போராட்டத்தை ஆதரித்து வீதியில் இறங்கிப் போராடியதே கிடையாது. ஆனால்  தேர்தலுக்குப் பின்னர் (2011)  அவர் மனம் மாறித் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார். அதனை வரவேற்கிறோம். ஆனால் வி.புலிகள் இயக்கம் பற்றிய நிலைப்பாட்டை அவர் மாற்ற  இந்தப் பொழுதும் அணியமாய்  இல்லை.  அது சரி,  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால்  அதற்குப் பெயர் போராட்டமா? 

(11) – தமிழ்நாட்டில் நெருப்பு விட்டு எரியும் தமிழீழ விடுதலை உணர்வினை அணைக்கவேண்டும் என்று நினைக்கிறார் விக்னேஸ்வரன். அது அணையாது உலகத்தில் நீங்கள் மட்டும்தான் தமிழீழத்திற்காக இருக்கின்றீர்கள் என்று நினைக்காதீர்கள். தமிழீழத்தில் தமிழீழமா சமஷ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா?  அப்பொழுது பாருங்கள் மக்கள் உங்கள் முகத்தில் செருப்பால் அடிப்பார்கள். இவ்வாறான சின்னத்தனமான முயற்சிகளில் இறங்காதீர்கள் என்று விக்னேஸ்வரனை பார்த்து பணிவாக கேட்டுக்கொள்கின்றேன் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

பதில்:  கவிஞர் நாகாக்க வேண்டும்.   இந்தக் கேள்வியை தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கேட்டு என்ன பயன். இலங்கைக்குச் சென்று கேட்க வேண்டும்.  நான் கவிஞரைக் கேட்கிறேன். “தமிழீழத்தில் தமிழீழமா சமஷ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா? நடத்தினால் அதில் கவிஞர்  பங்கேற்க அணியமா?  எதுவாக இருந்தாலும் சென்னையில் பத்திரமாக இருந்து கொண்டு  தாயகத்தில் இருப்பவர்களுக்கு  அறைகூவல் விடுவது பொருத்தமாகப் படவில்லை. சென்னையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு  செருப்பு அது இது என்று   பேசுவதும் அறமாகப் படவில்லை.  இந்தக் கேள்விகளைப் படிப்பவர்கள்  மனிதர் மனநலத்துடன் தான் இருக்கிறாரா என்று  கேட்கக் கூடும்.     “தமிழீழத்தில் தமிழீழமா சமஷ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா” என்று கேட்பது ‘லூசு’த்தனமான கேள்வி.  இப்படியான வெற்று அறைகூவல்களை  விட்டு விட்டு யதார்த்த அரசியல் பற்றிப் பேசுவோம். அதுதான் இன்றைய தேவை.

தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்  தலைவர்கள் வட மாகாண சபைத் தேர்தலில் திரு விக்னேஸ்வரன்  வெற்றிவாகை சூடியதைப் பாராட்டி  இருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதி, வைகோ, தொல் திருமாவளவன், மருத்துவர் இராமதாஸ்,  ஞானதேசிகன்,   மத்திய தொழில் மற்றும் வணிகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் இராஜ்நாத்சிங் போன்றோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள்.  இந்தியா, அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம் தேர்தல் முடிவை வரவேற்றிருக்கின்றன. 

தேர்தலில்  மக்கள் திரு விக்னேஸ்வரனுக்கு 1,32, 000  விருப்பு வாக்குகளை போட்டுள்ளார்கள்.  இந்தளவு விருப்பு வாக்குகளை இதற்கு முன்னர் எந்தவொரு தேர்தலிலும் தமிழர் எவரும் பெற்றதில்லை.  இது தமிழர்கள்  வடக்கு, கிழக்கு, மேற்கு என்று  பிரிந்து நிற்கவில்லை என்ற செய்தியை உரக்கச் சொல்கிறது.  எங்களுக்குத் தேவை எலி பிடிக்கிற  பூனை. அது   கொழும்பா, யாழ்ப்பாணமா, மட்டக்களப்பா என்பது தேவையற்ற கேள்வி.

முடிவாகத் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கவிஞர் காசி ஆனந்தன்  வாய்க்கு வந்தபடி பேசக்  கூடாது.  யாகாவா ராயினும் நாகாக்க வேண்டும்.  காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும். காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

மீண்டும் சொல்கிறேன் திரு விக்னேஸ்வரன் மீது வசை பாடுவது அவருக்கு வாக்களித்த மக்களை  அவமதிப்புச் செய்வது போன்றது. 

திரு விக்னேஸ்வரன்  அரசியலுக்கு வந்ததை  நிலத்திலும் புலத்திலும்  உள்ள தமிழ்மக்கள்  நெஞ்சார  வரவேற்றிருக்கிறார்கள்.  திரு விக்னேஸ்வரன் அரசியலுக்குப் புதிதாக இருக்கலாம் ஆனால் அவர் தேசியத்துக்குப் புதியவரல்ல. 

அவரது அரசியல்  நுழைவு   தமிழ்மக்கள் மனதில்  ஒரு புதிய  நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஒரு புதிய எழுச்சியை உண்டாக்கியுள்ளது.  ஒரு புதிய எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. இதனைக் கவிஞர்  காசி ஆனந்தன் இனிமேலாவது புரிந்து கொள்ளவேண்டும்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com