|
||||
|
சர்வதேச குத்ஸ் தினம்
இலட்சியமற்ற எந்த ஒரு தேசமும்
கால ஏற்ற
இறக்கங்களில்
நிலைத்து
நிற்கவோ வெற்றியை நோக்கி நகர்ந்து செல்லவோ முடியாது. வரலாற்று ரீதியாக
நோக்கும்
போது, நாகரிகத்தின்
தோற்றமும்
வளர்ச்சியும்
அதன் உயர்
இலட்சியத்தின்
வெளிப்பாடாகவே
அமைந்திருந்ததை
நாம் காணலாம்.
உண்மையிலேயே ஒரு நாட்டின்
உன்னத குறிக்கோள்களே
அதன் பிரஜைகளுக்கு
உற்சாகத்தையும்
உந்துசக்தியையும்
வழங்கி கஷ்ட, நஷ்டங்களைத்
தாங்கும்
சக்தியையும்
கொடுத்து
அதன் பெறுபேறுகளை
அனுபவிப்பதில்
வழிகாட்டி
நிற்கின்றது.
பலஸ்தீனையும் பைத்துல் முகத்தஸையும்
மீட்கும்
உயர் லட்சியக்
கோட்பாட்டின்
மீது கொண்ட
பற்றுறுதியும்
அர்ப்பணசிந்தையுமே
ஸியோனிஸவாதிகளால்
தமது தாய்நாடு
ஆக்கிரமிக்கப்பட்ட
நாள்தொட்டு
இன்றுவரை
பலஸ் தீனர்களின்
வலிமைக்கும்
இடைவிடாத
போராட்டங்களுக்கும்
உயிரூட்டி
வளர்த்து
வருகின்றது.
இவ்வுயரிய லட்சியமே,
பல்வேறு பிரிவுகளாக,
பல்வேறு சித்தாந்த
நோக்குகளைக்
கொண்டிருந்த
அனைத்து இயக்கங்களும்
ஒரு சீரான
இயக்கமாக
அமைய இறுதியில்
வழி வகுத்தது.
1979ல் ஈரானில்
நடைபெற்ற
இஸ்லாமியப்
புரட்சியின்
வெற்றி அவர்களுக்கு
இரண்டு பாடங்களைப்
புகட்டியது. ஒன்று, இது பலஸ் தீனர்களின்
தனிப்பட்ட
பிரச்சினையோ
அல்லது அரபு நாடுகளின்
பிராந்தியப்
பிரச்சினையோ
அல்ல.
இது குறிப்பாக,
முஸ்லிம்களின்
முதல் கிப்லாவாகவும்
பெருமானார்
(ஸல்) அவர்கள்
புனித மிஃராஜ் பயணத்தைத்
தொடங்கிய
இடமாகவும்
விளங்குவதால்
இது உலகளாவிய
முஸ்லிம்
உம்மாவின்
பிரச்சினையாகும்.
அடுத்தது, குத்ஸ்
பிரச்சினைக்கு
இஸ்லாமிய
அடிப் படையிலான போராட்டமும்
தீர்வுப்
பொதியுமே
வெற்றியைத்
தேடி த்தரவல்லது
என்பதுமாகும்.
எனவேதான், உலகளாவிய முஸ்லிம்கள்
தமது ஆன்மாக்களை
சகல பாவங்களிலிருந்தும்
தூய்மைப்
படுத்தும்
நோக்குடன்
ஒரு மாதகாலமாக
இறைவனை அடிபணிந்து
நோன்பு நோற்று இறைவணக்கங்களிலும்
வழிபாடுகளிலும்
உச்சநிலையை
அடையும் ஒரு நாளில்,
அதாவது ரமழான் மாதத்தின்
கடைசி வெள் ளிக்கிழமையை
சர்வதேச குத்ஸ் தினமாக இமாம் கொமெய்னி
பிரகடனம்
செய்து அதன் முக்கி
யத்துவத்தை
உலகுக்கு
உணர்த்தினார்கள்.
இத்தினம், பலஸ்தீனர்களின்
எதிரிகளுக்கும்
பலஸ்தீனப்
பிரச் சினைக்கு நியாயமானதொரு
தீர்வைக்
காண்பதற்கு
முட்டுக்கட்டையாக
இருப்போருக்கும்
எதிரான சாத்வீகமான
முறையில்
பொதுக்கூட்டங்கள்
கூடியும்
ஆர்ப்பாட்டங்கள்
நடத்தியும்
முஸ்லிம்களுக்குத்
தம்மீது சுமத் தப்பட்டுள்ள
கடமையை நினைவு படுத்தவும்
பலஸ்தீனப்
பிரச்சினை
தொடர்பாக
அவர்கள் மீது திணிக்
கப்படும்
எந்த ஒரு
மேற்கத்திய
சார் பான
தீர்வையும்
எதிர்த்து
நிற்பதற்குத்
தேவையான உடல், உள
வலுவையும்
தளத்தையும்
அமைத்துக்
கொடுக்கவும்
வழி செய்வதோடு
உலகளாவிய
முஸ்லிம்
உம்மா தமது சகோதரத்
துவத்தையும்
ஒருமைப்பாட்டையும்
இது தொடர்பாக
வெளிப்படுத்தவும்
சந்தர்ப்பத்தை
ஆக்கிக் கொடுக்கின்றது.
பலஸ்தீனத்தை மீட்கும்
பணியில் வெற்றி காண்பதற்கு
முஸ்லிம்கள்
தமது உரிமைகளுடனான
கோரிக்கையில்
உறுதியுடன்
நிற்கவேண்டும். அத்துடன் அவர்கள் கொண்ட கொள்கையில்
தீவிர நம்பிக்கை
கொண்டவர்களாகவும்
இருப்பதோடு
தமது தாயகத்தில்
தன்மானத்துடனும்
சுய கெளரவத்
துடனும் வாழவழி செய்யாத அல்லது மனித உரிமைகளுக்கு
மதிப்பளிக்காத
எந்த ஒரு
திட்டத்தினையும்
எதிர்த்து
நிற்கும்
உறுதியும்
அவர்களிடம்
இருக்க வேண்டும்.
எனவே முஸ்லிம்கள்
தமது பிராந்திய
ரீதியான பிரச்சினைகளை
மறந்து அவர்களது இருப்பையே
அச்சுறுத்தும்
பாரிய பிரச்சினைக்குத்
தீர்வு காணும் முயற்சியில்
ஒன்றுபட்டு
உழைக்க முன்வர வேண்டும் என்பதே ‘குத்ஸ் தினம்’ உலகளாவிய
முஸ்லிம்
உம்மாவுக்கு
விடுக்கும்
முக்கிய செய்தியாகும்.
முஸ்லிம் சமூகம்
இன்றுபோல
அன்றும் துண்டு துண்டாக சிதறிக்கிடந்த
காலத்திலேயே
சிலுவை வீரர்கள்
1099 ல் குத்ஸைக்
கைப்பற்றினார்கள். அதன் பின் முஸ்லிம்களை
ஒன்றுதிரட்டி
அதனை மீட்டெடுக்க
சுமார் 8 தசாப்தங்கள்
சென்றன. குர்திய வீரரான ஸலாஹ¤த்தீன்
அய்யூபி தலைமையில்
அரேபியர்,
துருக்கியர்,
பாரசீகர்,
மற்றும் குர்தியர்கள்
அனைவரும்
எவ்வித பேதமுமின்றி
இஸ்லாமிய
கொடியின்
கீழ் அணிதிரண்டு
போரிட்டதனாலேயே
இது சாத்தியமானது.
இதனைப் பலஸ்தீனர்கள்
தமது சொந்தப்
பிரச்சினையாகக்
கருதி தனித்துநின்று
சமயசார்பற்ற
முறையில்
போராடியிருந்தால்
இம்மாபெரும்
வெற்றியை
ஈட்டியிருக்க
முடியாது
என்பதையே
இவ்வரலாற்று
நிகழ்வு உணர்த்தி நிற்கின்றது.
பல்வேறு கொடுமைகளுக்கு
மத்தியிலும்
பலஸ்தீனர்களின்
மனதில் கொழுந்துவிட்டெரியும்
‘தாயக மீட்பு’
என்ற தாரக
மந்திரம்
ஸியோனிஸவாதிகளுக்கு
தம்மால் நிம்மதியாகவும்
அமைதியாகவும்
வாழ முடியாது
என்பதையே
எடுத்துக்காட்டியது.
தேசியவாதம், சோசலிஸம்
போன்ற கோட்பாடுகளுக்குப்
பதிலாக தற்போது இஸ்லாமியக்
கோட்பாடுகள்
பலஸ்தீன மக்களின் இதயங்களை ஆட்கொண்டு
வருகிறது. பலஸ்தீனத்தைப் போலவே உலகெங்கிலும்
இஸ்லாமிய
இயக்கங்களும்
மறுமலர்ச்சியும்
தோற்றம் பெறத் தொடங்கியுள்ளன.
பலஸ்தீனர்களிடையே இஸ்லாமிய இயக்கத்தின்
தோற்றமும்
அதன் வெளிப்பாடான
‘இந்திபாதா’
வின் எழுச்சியும்
பலஸ்தீனத்தை
மீட்டெடுக்கும்
உயரிய கோட்பாட்டின்
உறுதியான
தளமாகவும்
இறைவனின்
பாதையில்
செய்யும்
புனித யுத்தத்தின்
அடிநாதமாகவும்
இடம்பெறச்
செய்துள்ளது.
இஸ்லாத்தை ஒரு சித்தாந்தமாக
ஏற்று இஸ்லாமிய கோட்பாடுகளுக்குள்
தமது கருத்தை
செலுத்தியமை
ஸியோனிஸவாதிகளுக்கு
எதிரான அமைப்புக்களை
வேறுபல வழிகளிலும்
வலுவூட்டியுள்ளன.
அதாவது , உலகளாவிய
கோடிக்கணக்கான
முஸ்லிம்களோடு
பலஸ்தீன உயர் இலட்சியங்கள்
இரண்டறக்
கலந்துவிட்டன.
இத்தினத்தில் அவர்களது வெற்றிக்காகவும்
மனவுறுதிக்காகவும்
அனைவரும்
பிரார்த்திப்போமாக!
(முஹம்மத் றகுன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |