|
||||
|
பெரும்பாலான தமிழ்ப்படங்கள்
இரசிக்க முடியாதிருப்பது
ஏன்?
அனைத்துலகத் திரைப்படங்களுள்
பலவற்றை இரசிப்பவன்
என்ற முறையிலே
தமிழ் நாட்டுத் தமிழ்ப் படங்களில்
பலவற்றை அதேயளவு இரசிக்க முடியாதிருக்கிறது. இதற்குக் காரணங்கள்
பல. எனது வர்க்கம் (மத்தியதர), இனம் (தமிழன்),
பால் (ஆண்),
இரசனை மட்டம், திரைப்படம்
சம்பந்தமான
அறிவும், அனுபவம் என்பனவற்றைக்
குறிப்பிடலாம்.
எனவே இது எனது தனிப்பட்ட
விவகாரம்.
இருந்த போதிலும்
எனது கணிப்புகள்
அகவயம் சார்ந்ததாக
இருப்பது
தவிர்க்க
முடியாததாய்
அமையும்.
கோடம்பாக்கத் தமிழ்ப் படங்களின்
குறைபாடுகளை
தமிழ் நாட்டுத் திரைப்படத்
திறனாய்வாளர்கள்
உயர்மட்ட
கலை இலக்கிய
ஏடுகளில்
எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். நமது நாட்டிலும்
ஓரிருவர்
அவ்வாறு எழுதி வந்துள்ளனர்.
இருந்த போதிலும் சென்னையிலுள்ள
திரைப்படச்
செய்தியாளர்களும்,
விமர்சகர்களும்
தமது பணியை
வணிக நோக்கோடு
செய்து வருவதனால்
அங்கெல்லாம்
திரைப்பட
விமர்சனம்
ஆய்வற்ற வெறும் ஆரவாரமான புகளுரைக்
குறிப்புகளாக
அமைந்து வருகின்றன.
ஒரு காலத்தில்
நட்சத்திரங்கள்
விளம்பரங்களில்
முக்கியத்துவம்
பெற்ற பின்னர் திரைப்பட நெறியாளர்களுக்கு
முக்கியத்துவம்
கொடுத்து
அவர்களின்
படங்கள் முக்கியப்படுத்தப்பட்டன.
அவ்வாறிருந்தாலும், செய்தியாளர்கள்
நட்சத்திரங்களுக்குக்
கொடுக்கும்
கவர்ச்சி
விளம்பரங்களையும்,
நடிக, நடிகையரின்
நிழற்படங்களையும்
அந்தரங்க
வாழ்க்கைச்
செய்திகளையும்
நாளிதழ்கள்,
சஞ்சிகைகள்
உட்படப் பலவற்றில்
எழுதி வருவதனால்
மயங்குண்டு
இருக்கிறார்கள்
தமிழ்ப்பட
இரசிகர்கள்.
இரசிகர்களின்
விருப்பு
எதுவோ அதையே நாம்
கொடுக்கிறோம்
என்று பெரும் செலவில் தயாரிக்கப்படும்
அநாவசியக்
காட்சிகள்
நிறைந்த படங்களை தயாரிப்பாளர்கள்
நியாயப்படுத்துகிறார்கள்.
இந்த வணிகச் சூழலிலிருந்து
மீட்சி பெறத் தடைக்கற்களாகப்
பல இருக்கின்றன.
திரைப்படத் தயாரிப்பு
ஒரு கைத்தொழில்
என்பதனை நாம் மறக்கலாகாது. அந்த நிலையில் நிலைபேறு கொண்ட தமிழ்
சினமாவும்
கலையம்சங்களைப்
பின்னுக்குத்
தள்ளிவிடுகிறது.
எந்தவொரு நாடுமே அதன் மக்கள்
பண்பாட்டை
மனதிற் கொண்டே படங்களை ஊக்குவிக்கின்றது. களிப்பூட்டலே தமிழ்த்
திரைப்படங்கள்
உட்பட எல்லா நாடுகளின்
படங்களும்
தாரக மந்திரமாய்
கொண்டுள்ளன.
தமிழ்ப் படங்களைப்
பார்க்கும்
தமிழ் நாட்டு இரசிகர்களின்
கல்வியறிவு,
விகிதாசாரம்,
பண்படுத்தப்படாத
இரசனை மட்டம், சமூகத்திலும்,
அரசியல் உலகிலும் சினமா வகிக்கும்
முக்கியத்துவம்
போன்றவை தமிழ் சினமாவின்
இரசனை உயர்வுக்கு
வழிவிடுவதில்லை.
தமிழ்த் திரைப்படங்கள்
தென்னிந்தியாவில்
மட்டுமன்றி,
இலங்கை உட்பட வேறு
நாடுகளிலும்
தயாரிக்கப்படுவதையும்
நாம் மனதிற்
கொள்ள வேண்டும். கொடூரமான வன் செயல்கள் தமிழ்ப் படங்களில்
குரூரமான
முறையில்
சேர்க்கப்படுவது
எனக்கு அசூசையை ஏற்படுத்துகிறது.
யதார்த்தமற்ற திரைக்கதைகளைக்
கொண்ட படங்களில்
அளவுக்கு
மீறிய பின்னோக்குக்
காட்சிகள்,
கனவுக் காட்சிகள்,
பொருத்தமில்லாத
பாட்டுகளும்,
நடனங்களும்
மிகையாக இருப்பதனால்,
படங்களின்
ஓட்டம் குவியத்தினூடாக
வெளியிடப்படாமல்
துருத்திக்
கொண்டு நமக்கு சலிப்பைத்
தருகின்றன.
மடத்தனமான நகைச்சுவை
என்ற பெயரில்
காட்டப்படும்
காட்சிகளும்,
வசனங்களும்,
கத்திப் பேசுவதாலும்,
சண்டைகளும்,
சச்சரவுகளும்
நமக்குச்
சலிப்பை ஏற்படுத்துகின்றன.
கீழ் மட்டத்திலுள்ள
பெரும்பாலான
மக்களின்
அன்றாடப்
பேச்சு வழக்குகளை
நடிகர்கள்
விரைவாகப்
பேசி என்போன்ற
பார்வையாளர்கள்
படத்தில்
அவர்கள் என்ன கூறுகிறார்கள்
என்பதை அறியத் திணற வேண்டியிருக்கிறது.
ஆங்கிலம் தெரிந்த
நடிகர்கள்
கூட ஆங்கில
வார்த்தைகளைத்
தவறாக உச்சரித்துக்
குழப்பியடிப்பதும்
சினத்தை உண்டுபண்ணுகிறது.
கதைப் பொருள், கருப்பொருள்,
பாத்திர வார்ப்பு போன்ற இன்னோரன்ன
அம்சங்கள்
மேற்போக்காக
அமைந்து விடுகின்றன. கமராவை உரிய முறையில் பயன்படுத்தாமல்
அங்குமிங்கும்
செலுத்துதல்
போன்ற அம்சங்களும்
பெரும்பாலான
திரைப்படங்களில்
இடம்பெறுகின்றன.
இத்தகைய குறைபாடுகள்
இருந்தும்
தரமான பொழுதுபோக்குப்
படங்கள் என்று சொல்லத்தக்க
படங்களும்
தமிழ் நாட்டிலிருந்து
இப்பொழுதும்
வந்து கொண்டிருக்
கின்றன. அவை முன்னர் இடம்பெறாத
மனித, சமூக,
பொருளாதார,
பண்பாடு ரீதியான கதைப் பொருள்களைக்
கொண்டிருக்
கின்றன.
எனது இரசனைக் கணிப்புதான்
சரியானது
என்று சொல்வதற்கில்லை. எனது அகவய ரீதியான
கணிப்பை உங்களில் பலர் ஏற்றுக்
கொள்ளக்கூடும்.
அத்தகைய படங்களில்
சிலவற்றை
சந்தர்ப்பம்
வரும்போது
பகுப்பாய்வு
செய்து பார்ப்போம்.
(கே. எஸ்.
சிவகுமாரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |