Contact us at: sooddram@gmail.com

 

உனக்கு ஜீவன் போனால், எனக்கு....?

(ஜீவிதன்)

ஒருவர் உயிருக்குப் போராடும் அளவுக்கு நோய் வாய்ப்பட்டுக் கிடந்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா? என்று உங்களை யாராவது கேட்டால், நிச்சயம் இல்லை என்றுதான் பதில் சொல்வீர்கள். அதுவும் உங்களுக்குத் தெரிந்த ஒருவர் அவர் உங்கள் எதிரியாக இருந்தாலும், நிச்சயம் நீங்கள் ஆம் அவன் செத்துத் தொலையட்டும் என்று நிச்சயமாக கூறவேமாட்டீர்கள். ஏனெனில் அது மனிதப் பண்பு அல்ல என்பீர்கள்.

உங்களுக்கு நம்புவதற்குச் சற்றுக் கடினமாகக்கூட இருக்கும். ஆனால் ஓர் உண்மையைச் சொல்லியாகவேண்டும். ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தால், கடவுள் நம்பிக்கையுடையவர்கள் ஆண்டவனே இவரைக் காப்பாற்று என்று இறைஞ்சுவார்கள். இதுவே மனித இயல்பு. ஆனால், இந்த மனித இயல்புக்கு மாறுபட்டவர்களாக சில ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.

ஹொரண - இங்கிரியா பகுதியில் உள்ள ஓர்இறைஅருள் மிகுந்த ஒரு பாடசாலையின் அதிபர் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறபோது, மற்றொரு ஆசிரியர் தினமும் காலையில் எழுந்து ஆற்றில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் கோயில் சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்.

அந்த அதிபர் குணமாகி திரும்பி வரவேகூடாது என்பதுதான் அவரது வேண்டுதலாம். தாம் செய்த சூனியமும் வேண்டுதலும் வேலை செய்ததால்தான், எல்லோருக்கும் பிடித்தமான அந்த மனோகரமிக்க அதிபர் நோயில் விழுந்தார் என்பதுபி(ஸ்)தாபஆசிரியரின் நம்பிக்கை.

மாணவர்களுக்கு மனிதத்தைப் படிப்பித்து முன்மாதிரியாகத் திகழ வேண்டிய ஓர் ஆசிரியர் இப்படி தினமும் கோயில் செல்வதைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறார்கள் பிரதேசத்தின் பெற்றோர்கள். ஒருவர் சாக வேண்டும் என்று எவராவது ஆலய தரிசனத்திற்குச் செல்வார்களா என்ற ஆதங்கத்தில்தான் இப்போது இந்தப்பிரஸ்தாப’ரைப் பார்க்கிறார்கள்.

உண்மையில் இதனை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், பெற்றோர்களின் வேண்டுகோள்தான். வேறு எதுவும் அல்ல. தம் பிள்ளைகளுக்குக் கருணையை வளர்ப்பார்கள். பிற்காலத்தில் அந்தப் பிள்ளைகள் நம்மை வைத்துக் காப்பாற்றும் அளவுக்குப் படிப்பிப்பார்கள் என்று அந்த ஆசிரியர்கள் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கை வீணாகிவிடக்கூடாது என்கிறார்கள் வினயமாக.

இந்த விடயம் அம்பலமாகுவதை அறிந்த பிறகாவது அந்தப் பிரதாபர் தன்னை மாற்றிக்கொள்வார் என்றும் நம்புகிறார்கள். நாமும் அந்த நம்பிக்கையில் இங்கு பல விடயங்களைச் சுட்டிக்காட்டி வருகிறோம்.

பரீட்சைக்குச் சென்ற மாணவியைத் திருமண பந்தத்தில் இணை த்த ஆசிரியர் பற்றிக் கடந்த வாரம் சிறிதாகக் குறிப்பிட்டிருந்தோம். அது பெரிதாகப் பற்றி எரிகிறதென்கிறார்கள் நீர்த்தேக்கப் பாலத்தின் சக ஆசியர்கள். இதெல்லாம் சகஜமப்பா! என்றும் சிலர் சொல்கிறார்கள். ஏனென்றால், உயர் தர மாணவிக்குத் திருமணம் செய்து வைத்த அண்ணியும் சாதாரண தரத்தில் தாரமாகியவர் என்கிறார்கள்.

இப்படி உயர் கல்வியைக் கற்கவிடாமல் மாணவர்களின் கல் வியைச் சீரழிக்கும் ஆசிரியர்களைப் பற்றிக் குமுறிக்கொண்டிருக்கின்றன பாட்டாளி நெஞ்சங்கள். மாணவியை மனைவியாக்கிக் குட்டி இங்கிலாந்திற்குக் கூட்டிச் சென்றிருக்கும் சூரியக்குஞ்சைத் தேடிப் பொலிஸார் வலை விரித்திருக்கிறார்கள். என்றாலும் அது முடிந்த கதை என்று சிவா சிவா என்றிருக்கிறார்கள் பெற்றோர்கள். அவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும் எல்லாம் அவன் செயலாக இருக்கும்போது.

பதுளையில் நாமகள் குடிகொண்டுள்ள பாடசாலையிலும் சில விடயங்கள் கசிந்திருக்கின்றன. அதனை நேரில் ஆய்ந்தறிந்து ஆற அமர வெளிக்கொண்டு வரலாம். இந்த மாவட்டத்தில் கல்வி நிலவரம் மிகவும் பின்னடைந்து காணப்படுவதாக ஆய்வுத் தகவல்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. அதற்கான உண்மைக் காரணங்கள் நாமகள் பெயரில் ஒளிந்து கிடக்கின்றவோ என்னவோ, சோதித்துப் பார்த்துவிடுவோம்.

(ஜீவிதன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com