Contact us at: sooddram@gmail.com

 

சிறுநீரக நோய்கள் நீங்க சித்த மருந்துகள்

இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச் சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும் அமைப்பே சிறுநீரகமாகும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.

இருதயத்திலிருந்து பம்ப் செய்யப்பட்ட சுத்த இரத்தமானது உடல் முழுவதும் சென்று அவைகளுக்கு வேண்டிய சக்தியை அளித்து அங்குள்ள வேண்டாத கழிவுகள், தேய்ந்த அழிந்த பொருட்களை எடுத்து வரும் ரத்தம் இந்த வடிகாலான சிறுநீரகத்தை அடைகிறது. அங்கு மிக விரைவாக வேண்டாத பொருட்களையும், நீரையும் பிரித்துவிட்டு இரத்தத்தை இருதயத்திற்கு அனுப்புகிறது. கழிவுப் பொருட்களை ஒரு வாய்க்காலின் மூலமாகச் சிறுநீர் பைக்கு அனுப்புகிறது. சிறு நீர்ப்பை அடி வயிற்றின் கீழ்ப்பாகத்தில் இருக்கிறது. அங்கு கழிவு நீர் சொட்டுச் சொட்டாய் வந்து சேரும்.

சிறுநீர்ப்பை பாதி நிறைந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படும். இந்தச் சிறுநீரில் 95 சதவீதம் நீரும், 5 பங்கு பிற கழிவுப் பொருட்களும் இருக்கும். அதில் பாதி அளவு தசைகளும் எலும்புகளும் அழிவதால் ஏற்படும் கழிவுப் பொருட்களாகிய யூரியாவும் மீதியில் நாம் உண்ணும் உணவில் உள்ள உப்பு சல்பேட் போன்றவை இருக்கும்.

பிட்யூட்டரி, தைராய்டு, கல்லீரல், பாங்கிரியான் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நோயோ, பாதிப்போ ஏற்பட்டால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.

சிறுநீரகக் கல்

சிறுநீர் போக வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்டதும் சிறுநீர் கழிக்க வேண்டும். அவ்வாறு போகாமல் அடக்கி வைப்பது, கடின நீர், உப்புச் சத்தான நீர் குடிப்பது போன்றவற்றால் சிறு மணல் போன்ற உப்புகள் சிறுநீரகத்தில் தோன்றும். அதிகம் சுத்தமான நீர் குடித்தல், யோகாசனம் செய்தல் போன்றவற்றால் இதனை நீக்கலாம். அவ்வாறு செய்யாது இருந்தால் அந்த மணல் ஒன்று சேர்ந்து உறைந்து கற்களாக மாறும். சிறு நீர் போகும் வழியை அடைக்கும் பொறுக்க முடியாத வலி ஏற்படும்.

சிறு நீரக நோய்கள் நீங்க சித்தர்கள் பல்வேறுபட்ட மருந்துகளை சொல்லியுள்ளார்கள்.

1. ரோஜாப் பூவை ஊற வைத்த தண்ணீரில் முள்ளங்கியின் சாறு விட்டு தினம் நான்கு வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நோய் ஒழியும்.

2. நன்னாரி வேர், கொத்துமல்லி, சிறுநெருஞ்சி தலா 50 கி. எடுத்து நசுக்கி 2 லீட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடித்து தினம் மூன்று வேளை நூறு மில்லி வீதம் சாப்பிட்டு வர நீர் எரிச்சல் தணியும்.

3. கொத்தமல்லியும், புளியங்கொட்டைத் தோறும் வறுத்துப் பொடித்து காபி போன்று கசாயமிட்டுக் குடித்தால் நீர்க்கடுப்பு தீரும்.

4. ஆடுதீண்டாப்பாளை, கருஞ்சீரகம் இவற்றை அளவாக எடுத்து நீர் விட்டரைத்து தொப்பிளின் கீழ் பூச நீரடைப்பு விலகும்.

5. வாழைக்கிழங்கில் ஊறும் நீருடன் நெல்லிக்காய் அளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட மூத்திர அடைப்பு அகலும்.

6. வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி தயிரில் கலக்கி தாளிக்க தயிர் பச்சடியாக உண்ண நீர் இறங்கும்.

7. வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி 100 கிராம் வீதம் உட்கொள்ள மூத்திரத் தாரையில் உண்டாகும் கல் கரையும். கருஞ் சீரகத்தைத் தேனுடன் கலந்து சாப்பிட்டு வர கல் கரையும்.

8. பொட்டிலுப்பு 100 கிராம், வெங்காரம் 100 கிராம், சிலாசத்து 100 கிராம் இவை மூன்றையும் நெல்லிக்காய்ச் சாறு, கற்றாழைச்சாறு, முள்ளங்கிச் சாறு, வாழைத்தண்டுச் சாறு இவை மூன்றையும் முறையே ஒவ்வொரு நாளாக விட்டு அரைத்து வில்லைத் தட்டி புடமிட வேண்டும். புடம் ஊறிய பிறகு எடுத்துக் கல்வத்தில் இட்டு அரைத்துப் புட்டியில் எடுத்து ¨வைத்துக்கொண்டு 20 மில்லி கிராம் மோரில் கலந்து சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும்.

9. வெங்காரம் சிலாசத்து, நண்டுக்கால் இவற்றை 20 கிராம் எடுத்து கற்றாழைச் சாறு விட்டு அரைத்து புடமிட்டு எடுத்துக் கல்வத்திலிட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சிறிய அளவு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட வேண்டும் சிறுநீர் மோர் கலந்தது போல் வெளியாவது நிற்கும்.

10. முடக்கொத்தான் ஒரு பிடி வெள்ளப்பூண்டு, இரண்டையும் அரைத்து மூன்று நாட்கள் உட்கொள்ள சிறுநீர்க்கட்டு இறங்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com