Contact us at: sooddram@gmail.com

 

அவல வாழ்வுக்கு விடிவு நெருங்குகிறது

மலையகப் பெருந்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொன்றுதொட்டு அனுபவித்து வரும் இருப்பிடப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினைக் காண்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மலையகப் பெருந்தோட்ட வரலாற்றைப் பொறுத்தவரை உத்தேச வீடமைப்புத் திட்டமானது சரித்திரத்தில் இடம்பெறப் போகிறதென்பதை மறுக்க முடியாது. பரம்பரை பரம்பரையாகலயன்என்றழைக்கப்படுகின்ற சிறு குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் அம்மக்கள் எதிர்காலத்தில் தங்களுக்கென்ற தனித்தனி வீடுகளில் வசிக்கும் வாய்ப்பைப் பெறப் போகிறார்கள். தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை இதனை விட மகிழ்ச்சியான செய்தி அவர்களுக்கு இருக்கவே முடியாது. ஏனெனில்லயன்குடியிருப்புகளில் வாழ்கின்ற அவலமானது அவர்களுக்கு மட்டுமே புரியும்.

சிதைந்து போன, நூற்றுக்கணக்கான வருடங்கள் பழைமை வாய்ந்த, அடிப்படை வசதிகளே இல்லாத, சிறு குடிசை போன்ற இருப்பிடங்களில் வாழ்கின்ற குடும்பங்கள் எதிர்கொள்கின்ற வேதனைகள் வார்த்தைகளால் விபரித்து ஏனையோருக்குப் புரிய வைக்க முடியாதவை. அந்நியர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலுக்காக தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து சேர்ந்த தொழிலாளர் சமூகம் இன்று பல தலைமுறைகளைக் கடந்து வந்த நிலையில் உள்ளது. ஆனாலும் லயன் வாழ்க்கையென்பது அவர்களுக்கு எழுதப்பட்ட விதியாகவே இதுகாலவரை தொடர்ந்து வந்துள்ளது.

லயன் வாழ்க்கை முறை ஒழித்துக் கட்டப்பட வேண்டுமென்ற விழிப்புணர்வை மலைகத் தோட்டங்களில் உருவாக்கிய பெருமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தையே சாரும். இந்த ஆட்சிக் காலத்திலேயே அங்கு ஓரளவாவது அடிப்படை வசதிகளுடனான சிறுசிறு வீடுகள் நிர்மாணிக்கப்படத் தொடங்கின. ஆனாலும் லயன் குடியிருப்புகளிலேயே பெருமளவான தொழிலாளர்கள் இன்னும் வசிக்கின்றனர். கதவு, யன்னல், கழிப்பறை, நீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளில்லாத குடியிருப்பொன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற பரிதாபமும் அங்குதான் நிலவுகிறது.

இத்தகைய துன்பங்களுக்கு முடிவு கட்டுவதற்கான காலம் தற்போது நெருங்கியிருக்கிறது. மலையகத் தோட்டங்களில் காணப்படும்லயன்குடியிருப்புகள் அனைத்தையும் இல்லாதொழித்து அங்கு தனித்தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடனேயே இத்திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக இந்தியா ஆறாயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளது.

மலையகப் பெருந்தோட்டங்களுக்கு மத்தியிலேயே தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புகள் தற்போது உள்ளன. புதிய திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் வீடுகள் வேறிடத்திலும் தொழில் புரியும் இடங்கள் மற்றொரு இடத்திலும் அமையவுள்ளன.

லயன்என்ற பதம் இல்லாதொழிக்கப்படுவது ஒருபுறமிருக்க, அவர்களது வாழ்க்கைத் தரமும் உயர்வதற்கு இத்திட்டத்தின் வாயிலாக வழியேற்படப் போகிறது. அம்மக்கள் தோட்டங்களிலேயே பிறந்து தோட்டங்களுக்காகவே தங்களை அர்ப்பணித்து வாழ்ந்து இறுதியில் எந்தப் பலனுமேயின்றி மறைந்து போகிறார்களென்ற வேதனைமிகு நிலைமை இனிமேல் இருக்காது.

அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான இல்லம் கிடைக்குமிடத்து இன்றைய துன்பத்தில் பாதி மறைந்து போய் விடும். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியா அளித்துவரும் பல்வேறு உதவிகளின் ஓர் அம்சமாக தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கப் போகின்ற வீடமைப்பு உதவியைக் குறிப்பிடலாம். உரிய இருப்பிடமின்றி அவலத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவிருக்கும் இந்த வாய்ப்பு உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியதாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com