Contact us at: sooddram@gmail.com

 

தேன் கூட நஞ்சாகுமா?

அற்புதமான மருந்துப்பொருட்களில் ஒன்று தேன். தித்திக்கும் தேன் கூட நஞ்சாகுமா? பெரும் நிறுவனங்களின் லாப வேட்டைக்காக தேனும் நஞ்சாகிக்கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான ஆய்வினை வெளியிட் டுள்ளது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்.

ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய் யப்படும் தேனிலும், உள்நாட்டில் தேன் உற் பத்தியில் ஈடுபட்டுள்ளடாபர் ஹனிபோன்ற பெரிய நிறுவனங்களின் தேனிலும் 2 முதல் 5 வகையிலான - கடுமையான எதிர் உயிரி (ஆன்டி பயாடிக்) மருந்துகள் கலந்திருப்பதை இந்த ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கண்ட இரண்டு நாடுகளிலும் தடை செய் யப்பட்டுள்ள, கெட்டுப்போன தேன் இந்தியச் சந்தைகளில் மிகவும் சர்வசாதாரணமாக அனு மதிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது.இத்தகைய கெட்டுப்போன தேனை தொடர்ந்து உட்கொண்டால், உயிர்காக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை பிற்காலத்தில் எடுத்துக்கொள்ள நேரிடும் போது, அந்த மருந்துகள் செயலிழந்து போகும் அபாயமும் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

தேன் மட்டுமின்றி பலவகையான மருந்துப் பொருட்களும் கலப்படம் நிறைந்ததாக, காலா வதியானவையாக, கெட்டுப்போனவையாக நாடெங்கும் விற்பனையில் புளங்கிக்கொண்டி ருப்பதை அரசு அறியும்; சம்பந்தப்பட்ட துறை யின் அதிகாரிகளும் அறிவார்கள். ஆனால் மக்க ளின் உடல் நலனை பலியிட்டு, தங்களது லாபத் தை மேலும் மேலும் அதிகரித்துக்கொள்வதற் காக இந்தியப் பெரும் நிறுவனங்களும், பன் னாட்டு பெரும் நிறுவனங்களும் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு இந்த ஆய்வு மேலும் ஒரு சான்று.

இந்தியாவில் ஓராண்டில் 52 ஆயிரத்து 230 டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இமய மலைச் சாரலில் துவங்கி குமரிமுனை வரையிலும் பல்வேறு முறைகளில் தேன் உற்பத்தி நடக்கி றது. எனினும் இயற்கையான தேன் உற்பத்தியை விட, பெரும் நிறுவனங்களின் அதிக உற்பத்திக் காக தேனீக்களுக்கே எதிர் உயிர் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதனால் தேனீக்கள் சேகரிக்கும் தேனிலும் இந்த மருந்துகள் படிகின் றன. இத்தகைய தேன் மனிதர்களின் ரத்தம், சிறுநீரகம், கல்லீரல், எலும்புகள், பற்கள் ஆகிய வற்றை படிப்படியாக சேதப்படுத்துகிறது என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன.

இது சாதாரண விஷயம் அல்ல. விதிமுறை களை மீறி, தேனில் நஞ்சு கலக்கும் கொடியவர் கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேன் உட்பட மிக முக்கிய மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் மக் களின் நலனை பாதுகாக்கும் விதத்தில் கடுமை யான விதிமுறைகளையும் பாதுகாப்பு ஏற்பாடு களையும் அரசு உறுதியாக அமல்படுத்த வேண் டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வற்புறுத்தியுள்ளது.

நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வருவதன் விளைவாக இந்தியா வுக்குள் நுழையும் நிறுவனங்களும் சரி, இங்கே இருக்கும் பெரும் நிறுவனங்களும் சரி லாபம்; மேலும் லாபம்; மேலும் மேலும் லாபம் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே பொருட்களை உற் பத்தி செய்கின்றன; சந்தையில் விற்கின்றன. இந்த
லாப வெறிக்கு நாட்டு மக்களின் உடல் நலனை பலியாக்குவதை அனுமதிக்க முடியாது.

(தீக்கதிர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com