|
||||
|
சங்கத் தமிழ் பெருமை மட்டும்
பேசாமல்
(அருள்சத்தியநாதன்)
காலவகையாலும்
இடவகையாலும் கொண்டு
வரப்படும்
எழுத்துப் பிரிவுகள்
உலக
மொழிகளில் எழுத்தின்
வடிவம் காலந்தோறும்
திரிபடைகின்றன. ஒரே
நாட்டில் பல்வேறு
இடங்களில் வெவ்வேறு
கையெழுத்துப்
பாங்குகள் அமைவது
இயல்பு. சீன
மொழிப் பட எழுத்துகளில்
காலந்தோறும் ஒரே
ஒலிப்புக்குரிய
வெவ்வேறு வடிவங்கள்
மாறி மாறி வந்திருப்பதை
அறிஞர்கள் சுட்டிக்
காட்டியுள் ளனர்.
சுமேரிய அரபு எழுத்துகளிலும்
எகிப்திய மொழியின்
பட எழுத்துகளிலும்
கால வகையாலும்
இட வகையாலும் திரிபுற்ற
வரிவடிவங்களைப்
பட்டியலிட்டுக்
காட்டியிருக்கிறார்கள்.
சிந்துவெளி
எழுத்தின் காலம்
கி.மு.
3000 முதல் கி.மு.
1800 எனக் கூறினாலும்
குறிப்பாக எழுத்துக்குரிய
வரிவடிவம் காலந்தோறும்
அல்லது இடந்தோறும்
எப்படியெல்லாம்
திரிபடைந்துள்ளது
என்பதைச் சிந்துவெளி
எழுத்து ஆராய்ச்சியாளர்கள்
எவரும் வகைப்படுத்திக்
காட்டவில்லை. நான் அம்முயற்சியில்
ஈடுபட்டுச் சிந்துவெளி
எழுத்து காலந்தோறும்
பெற்ற வரிவடிவத்தினைப்
பட்டியலிட்டுக்
காட்டியுள்ளேன்.
மருங்கூர்
முதுமக்கள் தாழியில்
“அம்மூவன்”
விழுப்புரம்
மாவட்டத்து மருங்கூரில்
கிடைத்த முதுமக்கள்
தாழியில் முதலிரு
எழுத்துகள் “அம்”
(தென்பிராமி) தமிழியிலும்
அடுத்த மூன்று
எழுத்துகள் “மூவன்”
சிந்துவெளி எழுத்திலும்
அமைந்துள்ளன. இதனை அம்மூவன்
எனப் படித்தல்
வேண்டும்.
கீறல்
(Graffiti) குறியீடுகள்
கீறல்
எழுத்துகள் சிந்துவெளி
எழுத்துகளே. சிந்துவெளி
அகழ்வாராய்ச்சிகளிலும்
தமிழ்நாடு, ஈழம்
உள்ளிட்ட தென்னிந்தியப்
பகுதிகளிலும்
ஏராளமான கிராபிட்டி
எனப்படும் கீறல்
குறியீடுகள் கிடைக்கின்றன.
இவற்றை வெறும்
அடையாளக் குறியீடுகள்
என ஒதுக்கி விட்டனர்.
தமிழ்நாட்டில்
கொடுமணல் உள்ளிட்ட
அகழ்விடங்களில்
காணப்பட்ட கீறல்
வெளியீடுகள் சொல்
வடிவிலே இருப்பதைப்
பேராசிரியர் குருமூர்த்தியும்
சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இவற்றில்
சிந்துவெளி எழுத்துகளே
உள்ளன என பி.பி. லால்
குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில்
கிடைத்த 300 கீறல்
குறியீடுகளையும்
சிந்துவெளி முத்திரைகளிலுள்ள
கீறல் குறியீடுகளையும்
சிந்துவெளி எழுத்தாகவே
நான் படித்துக்
காட்டியிருக்கிறேன்.
கீறல் குறியீடு
என்பது தனி மாந்தரின்
கையெழுத்து வேறுபாடாகவே
(Varied individual handwriting form) உள்ளது
என இவற்றை நான்
காட்டியிருக்கிறேன்.
எனவே, கீறல்
குறியீடுகளைச்
சிந்துவெளி எழுத்து
என்றே குறிப்பிட
வேண்டும்.
கலப்பு
எழுத்துகள்
சிந்துவெளி
எழுத்திலிருந்து
தென்பிராமி என்னும்
தமிழ் எழுத்து
உருவாக்கப்பட்ட
பிறகு பழைய எழுத்து
முறையை உடனே மாற்றிக்கொள்ள
முடியாதவர்கள்
இருவகை எழுத்துக்களையும்
கலந்து எழுதிய
கலப்பு எழுத்து
முறை ((Mixed type) எழுத்துச்
சான்றுகள் தமிழ்
நாட்டில் கிடைத்துள்ளன.
சில எடுத்துக்காட்டுகள்
கீழே தரப்பட்டுள்ளன.
சிந்துவெளி
எழுத்திலிருந்தே
தமிழி (பிராமி)
தோன்றியது
என்பதற்கான காரணங்கள்
சிந்துவெளி
எழுத்தில் இன்றைய
தமிழைப் போலவே
12 உயிர்களும் 18 மெய்களுமாகிய
30 எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. ஏனையவை
கோடுகளாகவும்
காலந்தோறும் மருவிய
திரிபு எழுத்துகளாகவும்
உள்ளன என்பதை என்
நூல்களில் புலப்படுத்திக்
காட்டியுள்ளேன்.
சிந்துவெளி
அசையெழுத்து முறையை
மாற்றித் தனி எழுத்து
முறையாகத் தமிழ்ப்
புலவர்கள் கி.மு.
1850
வாக்கில் அமைத்திருக்கிறார்கள். அதைப்
பின்பற்றி ஐந்திரனார்
எழுதிய ஐந்திரம்
எனும் தமிழ் இலக்கணம்
சிந்துவெளி எழுத்திலிருந்து
பிறந்த தமிழி
(பிராமி) எழுத்து
அமைப்புகளுக்கு
இலக்கணம் சொல்கிறது.
இதனை வட இந்தியப்
பாலி, பிராகிருதம்,
திபெத்து, தமிழ்
ஆகிய நான்கு மொழிகளும்
பின்பற்றியுள்ளன.
பிராகிருத மொழியின்
காதந்திர இலக்கணமும்
பாலிமொழியின்
கச்சாயண இலக்கணமும்
திபெத்திய மொழியின்
சன் - சு - பா இலக்கணமும்
தமிழில் தொல்காப்பியமும்
ஐந்திரம் எனும்
தமிழ் இலக்கணத்தைப்
பின்பற்றியதாகக்
குறிப்பிட்டுள்ளனர்.
வடஇந்திய மொழிகளில்
சிந்துவெளி மொழியினுடைய
இலக்கணக் கட்டமைப்பும்
ஐந்திர இலக்கணத்தின்
வாயிலாக இன்றளவும்
கட்டிக் காக்கப்பட்டு
வருகிறது. சிந்துவெளி
மொழியிலுள்ள தமிழ்
இலக்கணக் கட்டமைப்பும்
கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
வரை இந்தியாவின்
எழுத்து முறையாக
இருந்த தமிழி இலக்கணக்
கட்டமைப்பு எழுத்தமைப்புகளும்
ஒன்றாக உள்ளன என்பதற்கான
எடுத்துக் காட்டுகள்
என் நூல்களில்
தரப்பட்டுள்ளன.
இதிலிருந்து
தமிழி எனப்படும்
தமிழ் பிராமி எழுத்தே
வட இந்திய அசோகனின்
பிராமி போன்ற வற்றுக்கு
மூலமாக அமைந்தது
என்பது உறுதிப்படுகின்றது.
தமிழ்
எழுத்துகளின்
தொன்மை வரலாறு
சுவசுதிக்
எனப்படும் ஓங்காரக்
குறியீடு சிந்துவெளிக்
காலத்திலிருந்து
இன்றுவரை தொடர்ந்து
நீடிக்கிறது. இதனைத்
தமிழ் எழுத்துகளாகப்
பிரித்து ஓம் என்று
படித்துக் காட்டியிருக்கிறேன்.
இந்தக் குறியீடு
கி.மு. 6000 சார்ந்த
மெகர்கார் அகழ்வாராய்ச்சியில்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து
சுவசுதிக் எனப்படும்
ஓங்கார எழுத்து
கி.மு. 6000 முதல்
தமிழ் மொழி எழுத்தாக
வழங்கியது என்று
காட்டுவதற்குச்
சான்றாக உள்ளது.
உலகில் கி.மு.
6000 முதல் தொடர்ந்த
எழுத்து வரலாறு
கொண்ட மொழி தமிழ்
அன்றி வேறெதுவுமில்லை.
எனவே, தமிழ்
எழுத்தின் தொடர்ச்சி
இன்றுவரை 8000 ஆண்டு
காலமாகத் தொடந்து
வந்திருக்கிறது.
இதனை மேலும்
உறுதிப்படுத்த
தமிழ் எழுத்துக்களின்
வரலாறு தனி நூலாக
எழுதப்பட வேண்டும்.
சிந்துவெளி
எழுத்து தமிழ்
எழுத்தே என்பதையும்,
சிந்துவெளி எழுத்திலிருந்தே
தமிழி (தென் பிராமி)
எழுத்து ஐந்திரனார்
காலத்தில் உருவாக்கப்பட்டது
என்பதையும் தென்
பிராமி எனும் தமிழி
எழுத்திலிருந்தே
பாலி மொழிக்காக
அசோகனின் பிராமி
தோன்றியது என்பதையும்
நான் எழுதியுள்ள
ஆய்வு நூல்களில்
தெளிவுபடுத்தியுள்ளேன்.
இவ்வாறு தன்
ஆய்வுக் கட்டுரையில்
தெரிவித்துள்ளார்
பேராசிரியர் இரா.
மதிவாணன்
செம்மொழி
மாநாடு நிறைவுற்ற
பின்னர் ஜூன்
29ம் திகதி கலைஞர்
கருணாநிதி ஊடகவியலாளர்க
ளுக்கு பேட்டியளித்தார். அம்மாநாட்டில்
நிகழ்ந்தவற்றை
பட்டியலிட்டுச்
சொன்னார். வாசகர்களின்
கவனத்துக்கு அவற்றைக்
கொண்டு வருவது
பிரயோசனமாக இருக்கும்.
இவை அதிகாரபூர்வமான
தகவல்கள்.
மாநாடு
நடைபெற்ற ஐந்து
தினங்களில் மொத்தமாக
நான்கு லட்சம்
பேருக்கு ரூ. 30 விலையில்
உணவுப் பொட்டலங்கள்
வழங்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டு
விருந்தினர்கள்
92 ஹோட்டல்களில்
தங்க வைக்கப்பட்டனர்.
மொத்தம் 1,642 அறைகளில்
அவர்கள் தங்கியிருந்தனர்.
இந்த விருந்தினர்களின்
எண்ணிக்கை 2,065. மாநாட்டுக்கு
68 கோடியே 52 லட்சம்
செலவு செய்யப்பட்டது.
மாநாட்டின்
பொருட்டு நகர்
அடிப்படை கட்டமைப்பு
பணிகளுக்கு 243 கோடி
செலவு செய்யப்பட்டது.
23ம்
திகதி மாநாடு துவக்க
விழாவில் 2 லட்சம்
பேர் பங்கேற்றனர். மாலை
யில் இனியவை 40 ஊர்வலத்தை
5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
23,24ம் திகதிகளில்
கருத்தரங்கம்,
கவியரங்கத்தில்
சராசரியாக 1.5 லட்சம்
பேர் பங்கேற்றனர்.
பொது
கண்காட்சி, இணைய
மாநாட்டை தினமும்
13 மணி நேரம் காத்திருந்து
சராசரியாக 40 ஆயிரம்
பேர் என கண்காட்சிக்கு
ஒரு இலட்சத்து
70 ஆயிரம் பேர் வருகை
தந்துள்ளனர். மாநாட்டு
சிறப்பு மலரில்
129 கட்டுரைகள், 34 கவிதைகள்
இடம்பெற்றுள்ளன.
மாநாட்டில்
கலந்துகொண்ட கட்டுரையாளர்
களுக்கு 3200 மலர்கள்
வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 2300 விற்பனை
செய்யப்பட்டுள்ளது.
தமிழ்
இணையத்தள மாநாட்டில்
மொத்தம் 110 ஆய்வுக்
கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கலந்துகொண்ட
ஆய்வறிஞர்கள்
300 பேர். தமிழ்
ஆய்வரங்கில் கலந்துகொண்ட
அறிஞர்கள் 200 பேர்
தினம் ஒரு முகப்பரங்கு
வீதம் நாள் முகப்பரங்கில்
400 க்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர்.
இணைய மாநாட்டையொட்டி
வெளியிடப்பட்ட
சிறப்புமலரில்
130 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
24
முதல் 27ம் திகதி
வரை நடந்த ஆய்வரங்கின்
மொத்த அமர்வுகள்
239. மொத்த கட்டுரைகள்
913, மொத்த பொருண்மைகள்
55, வருகை தந்த வெளிநாட்டினர்
840 பேர், கலந்துகொண்ட
நாடுகள் 50, கட்டுரை
தாக்கல் செய்தவர்கள்
150 பேர்.
இலங்கை
38, மலேசியா 23, சிங்கப்பூர்
22, அமெரிக்கா 14, கனடா
11, இங்கிலாந்து
9, அவுஸ்திரேலியா
4, பிரான்ஸ், மொரிசியஸ்,
தென் ஆப்பிரிக்கா
நாடுகளில் தலா
3, ஜப்பான், நெதர்லாந்து
நாடுகளில் தலா
2, ஜெர்மனி, கிரீஸ்,
ஹொங்கொங், இத்தாலி,
நியூசிலாந்து,
ஓமான், ரஷ்யா, தென்கொரியா,
சீனா, செக்கோஸ்லோவேகியா
ஆகிய நாடுகளில்
இருந்து தலா ஒருவர்
என ஆய்வறிஞர்கள்
பங்கேற்றனர்.
இவ்வாறு
கலைஞர் புள்ளிவிவரங்களைத்
தந்திருந்தார். ஜூன்
27ம் திகதி நிறைவு
நிகழ்வின்போதும்
கலைஞர் பொருள்
பொதிந்த உரையொன்றை
ஆற்றினார்.
உலகின்
பல நாடுகளிலும்
பரவியுள்ள ஒரே
இந்திய மொழி என்னும்
சிறப்புக்குரியது
தமிழ் மொழி. இன்று
உலக மொழியாகத்
திகழும், ஆங்கில
மொழியின் முதல்
எழுத்து வடிவம்,
கி.பி. 7வது நூற்றாண்டைச்
சார்ந்தது.
பிரெஞ்சு
மொழியின் முதல்
எழுத்து வடிவம்,
9வது நூறாண்டிலும்,
ரஷ்ய மொழியின்
பழமையான எழுத்து
வடிவம், பத்தாவது
நூற்றாண்டிலும்
கண்டறியப்பட்டன. லத்தீன்
மொழியில் இருந்து
உருவான இத்தாலிய
மொழி, பத்தாவது
நூற்றாண்டில்
தான் எழுத்து வடிவம்
பெற்றது. ஆனால்,
கிறிஸ்து பிறப்பதற்கு
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே, முதல்
எழுத்து ஆவணமாக
தொல்காப்பியம்
நூலைப் பெற்று,
இலக்கண வரம்புகொண்டு
வாழ்ந்த தமிழ்
மொழி இன்று வரை
வாழும் மொழியாகவும்,
வளரும் மொழியாகவும்,
வரலாற்று மொழியாகவும்
திகழ்கிறது.
காதல்,
வீரம் இரண்டும்
தமிழர்களுக்கு
எத்தகைய உணர்வுபூர்வமான
பெருமை அளித்தது
என்பதற்கு சங்கப்பாடலில்
பல காட்சிகள் உள்ளன.
ஒரு
குழந்தை இறந்தால்
கூட, விழுப்புண்
படாமல் இறந்துவிட்டதே
என வருந்தி வீரச்சின்னம்
விளங்க, அதை வாளால்
பிளந்து புதைத்து
வீரத்தைப் போற்றும்
நாடு தமிழ்நாடு
என்று புறநானூற்று
பாடல் கூறுகிறது.
வள்ளுவர் கூறியபடி
‘பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்’
என்ற சமதர்ம சமுதாய
நெறியைப் போற்றி
பின்பற்றிய நாடு,
தமிழ்நாடாகும்.
கி.பி. இரண்டு
மற்றும் மூன்றாம்
நூற்றாண்டுகளில்
ரோமர்கள், தமிழர்களோடு
நெருங்கிய வணிகத்
தொடர்பு கொண்டிருந்தனர்.
பழைய ரோம் நாணயங்கள்,
தமிழகக் கடற்கரைகளில்
ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின்
மற்ற இடங்களில்
கிடைத்தவற்றை
விட ரோமானிய நாணயங்கள்
இந்த கொங்கு நாட்டில்தான்
மிகுதியாகக் கிடைத்துள்ளன. இதிலிருந்து
கி.மு. முதல்
நூற்றாண்டிலிருந்து
மூன்று, நான்கு
நூற்றாண்டுகள்
ரோமர்கள், கொங்கு
பகுதியுடன் வணிகம்
செய்து வந்தனர்
என்பதை அறியலாம்.
கிழக்கே
சீனா முதலிய பல
நாடுகளுடனும்
ஜாவா, சுமத்ரா,
மலேசியா முதலிய
தீவுகளுடனும்,
தமிழகம் வணிகம்
காரணமாகத் தொடர்பு
கொண்டிருந்தது. இரண்டாம்
நூற்றாண்டளவில்
கரிகால் சோழனால்
கட்டப்பட்ட கல்லணை,
தமிழரின் பொறியியல்
கலைத்திறனுக்கு
சான்று. ஆறாம்
நூற்றாண்டு கால
மாமல்லபுரச் சிற்பங்கள்,
தமிழரின் அரிய
சிற்பக் கலைச்
சின்னங்களாக திகழ்கின்றன.
அழகோவியமாகத்
திகழும் தஞ்சைப்
பெரிய கோவில்,
பத்தாம் நூற்றாண்டில்,
கட்டடக் கலையில்
தமிழகம் பெற்றிருந்த
ஆற்றலுக்குச்
சான்றாக விளங்குகிறது. தமிழ்ச்
சமுதாயத்தை உலகுக்கு
அறிமுகப்படுத்தும்
முத்திரைக் குறியீடாக
விளங்குவது தமிழ்மொழி.
நம்
மொழி, செம்மொழியாகத்
தகுதி பெறுவதற்கு
இலக்கியச் செல்வங்களைப்
படைத்த சங்ககால
புலவர்கள், சான்றோர்கள்
அனைவரையும் ஆதரித்துத்
தமிழ் வளர்த்த
வேந்தர்களை போற்றி
வணங்குகிறேன்.
இவ்வாறு
தனது உரையில் தெரிவித்திருந்த
கலைஞர் கருணாநிதி,
தன் உரையின் இறுதியில்
எதிர்காலத்தில்
நம் தமிழ் அறிவியல்
தமிழாகவும் விளங்க
வேண்டும் என்பதைத்
தொட்டுக் காட்டினார்.
உண்மையைச்
சொன்னால் இந்தத்
தமிழ் ஆய்வு மாநாடு
ஆற்றவேண்டிய முதல்
காரியமும் அதுவாகத்தான்
இருக்க வேண்டும்.
இதைக் கலைஞர்,
“அன்னைத்
தமிழ் மொழியை,
எதிர்வரும் காலத்தில்,
நாளை மலரும் அறிவியல்
புதுமைகளுக்கேற்ப
வளர்த்துக் கட்டிக்
காப்போம். வருங்காலத்
தலைமுறைக்கு வற்றாத
செல்வமாய், வழங்கிக்
களிப்போம் என இந்த
மாநாட்டில் சபதமேற்போம்”
என்று அறிவித்தார்.
அடுத்த
வாரம் செம்மொழி
மாநாட்டு ஆய்வரங்குக்குச்
செல்வோம். அதற்கு
முன்னர் இலக்கிய
மாதம் கொண்டாடப்பட்டு
வரும் இவ்வேளையில்
இம்மாநாட்டையொட்டி
நடத்தப்பட்ட புத்தகக்
கண்காட்சி பற்றி
கொஞ்சம் பார்ப்போம்.
செம்மொழி
மாநாட்டு பிரதான
அரங்குக்கு எதிரே
சி.ஐ.டி. பொறியியல்
கல்லூரி வளாகத்தில்
பிரமாண்டமான நூல்
கண்காட்சி இடம்பெற்றிருந்தது.
இக்கண்காட்சியில்
140 காட்சியகங்கள்
இடம்பெற்றிருந்தன.
120 பதிப்பகங்கள்
இங்கே காட்சியகங்களை
அமைத்திருந்தன.
இவற்றில் ஒருகோடி
புத்தகங்கள் விற்பனைக்கு
விடப்பட்டிருந்ததாக
தெரிவிக்கப்பட்டிருந்தது.
தென்னிந்திய பதிப்பாளர்
மற்றும் புத்தக
விற்பனையாளர்கள்
சங்கப் பொருளாளர்
ஷாஜஹான் இதுபற்றிக்
கூறியபோது, ஒரு
ரூபாயில் இருந்து
இரண்டாயிரம் ரூபா
வரை விலையுள்ள
நூல்கள் இங்கு
விறபனைக்கு இருப்பதாகவும்
தினசரி ஒரு லட்சம்
பேர் கண்காட்சிக்கு
வந்து பார்வையிட்டு
நூல்களை வாங்கிச்
செல்வதாகவும்
கூறியதோடு தமது
இலக்கு மூன்று
கோடி ரூபா வருமானம்
என்றும் குறிப்பிட்டார்.
(தொடரும்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |