|
||||
|
ஆயுதப் போராட்டத்துக்கு
அள்ளிக் கொடுத்ததன்
மூலம் தமிழ் மக்களின்
அவலங்களுக்கு
டயஸ்போறாவும்
பொறுப்பாளி
“புலம் பெயர்
தமிழர்கள்
இலங்கை அரசாங் கத்தைச் சாதகமான கோணத்திலிருந்து
பார்க்க வேண்டிய காலம் உருவாகியிருக்கின்றது. இவ
ர்கள் தங்களுடைய
பழைய நிலை
ப்பாட்டில்
தொங்கிக்கொண்டிராமல்,
பிரச்சினையின்
தீர்வுக்காகப்
பாராளுமன்ற
நடைமுறைக்கூடாக
ஜனநாயகப்
பாதையில்
செல்வதற்குத்
தயாராக வேண்டும்.”
இப்படிக் கூறியவர் நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம்.
ஐக்கிய நாடுகள்
பொதுச் சபைக் கூட்டத்தில்
பங்கு பற்றுவதற்காகச்
சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரைச்
சந்தித்து
உரையாடிய
வேளையிலேயே
எரிக் சோல்ஹெய்ம்
மேற்படி கருத்தைத்
தெரிவித்தார்.
இலங்கை விவகாரத்தில்
கூடுதலான
ஈடுபாடு கொண்டிருந்தவர்
என்ற வகையில்
சோல்ஹெய்ம்
வெளியிட்ட
கருத்தை நோர்வே அரசாங்கத்தின்
கருத்தாகக்
கொள்ளலாம்.
புலிகள் தொடர்பாக இலங்கை முகங் கொடுத்த
நெருக்கடிகளுக்கு
நோர் வேயும்
ஒரு காரணம்
என்ற அபி
ப்பிராயம்
இலங்கை மக்கள் மத்தி யில்
வலுவாக நிலவுகின்றது. இது பிழையான அபிப்பிராயமல்ல.
நோர்வேயிடம் இப்போது ஏற்பட்டுள்ள
சிந்தனை மாற்றம் புலம் பெயர்
தமி ழர்களிடமும்
ஏற்பட்டாக
வேண்டும்.
இலங்கைத் தமிழ் மக்கள்
மிகவும் நெருக்கடியான
ஒரு காலகட்டத்தைக்
கடந்து வந்திருக்கின்றார்கள். இக் காலப் பகுதியில்
எண்ணற்ற உயி ர்கள்
அநியாயமாகப்
பலியாகின.
ஏராளம் சொத்துகள்
முற்றாகச்
சேதமாகின.
ஆயிரக் கணக்கானோர்
சீவனோபாயத்தை
இழந்தனர்.
சொந்த இடங்களை
விட்டு வெளி யேறியவர்களின்
துயரம் இன்னும் தீரவில்லை.
மக்களின் வாழ்வில் இன்னும் வசந்தம் மலரவில்லையெனினும்
அவலக் கோட்டுக்கு
வெளியே வந்துவிட்
டார்கள் என்பதில் ஒரு திருப்தி. தமிழ்
மக்களின்
வாழ்வில்
தாங்க முடியாத துன்பங்கள்
நேர்ந்த இக் காலப்
பகுதியை இலகுவில் மறந்து விட முடியாது.
அதேபோல, இத் துன்பங்களுக்குக்
காரணமானவர்
களையும் மக்களால் மறக்க முடியாது.
இனப் பிரச்சினை
இன்று நேற்றுத் தொடங்கியதல்ல.
அறுபது வருடங்க ளுக்கு மேலாக இருந்து
வருகின்ற
பிரச்சினை. இப் பிரச்சினையின்
தீர்வுக்கான
போராட்டங்களும்
வெவ்வேறு
வடிவங்களில்
அன்று முதல் தொடர்கின்றன.
போராட்டங்கள் தொடர்ச்சியாக
இடம்பெற்ற
போதிலும்
ஆரம்ப காலங்களில்
தமிழ் மக்கள் நாளாந்த வாழ்க்கையில்
பாரிய நெருக்கடிகளைச்
சந்திக்கவில்லை.
இனக் கலவரங்கள்
இடம்பெற்ற
போதி லும்
அவை தொடர்ச்சியான
துன்ப நிகழ்வுகளல்ல.
தனிநாட்டுக்
கோரிக்கை
முன்வைக்கப்பட்ட
பின்னரே தமிழ் மக்களின்
வாழ்க்கையில்
தொடர் ச்சியான அவல நிகழ்வுகள்
இடம்பெறத்
தொடங்கின.
தனிநாட்டுக் கோரிக்கையை
மையமாகக்
கொண்ட ஆயுதப் போராட்டம்
வலுப்பெறத்
தொடங்கியதும்
தமிழ் மக்களின் அவலங்களும்
அதிகரிக்கத்
தொடங்கின.
இந்த ஆயுதப்
போராட்டம்
வலிமையடைவதில்
புலம்பெயர்
தமிழர்களின்
பங்களிப்பு
பெருமளவாக
இருந்துள்ளது.
புலிகள் இயக்கத்தின்
ஆயுதக் கொள்வனவுக்கும்
ஏனைய செலவுகளுக்கும்
தேவைப்பட்ட
நிதியின்
மிகப் பெரும் பகுதி ‘டயஸ்போறா’
எனப்படும்
புலம் பெயர் தமிழர்களினாலேயே
சேகரித்துக்
கொடுக்கப்பட்டது.
நடைமுறைச் சாத்தியமற்ற
தனிநாட்டுக்
கோரிக்கையை
முன்வைத்து
வெல்ல முடியாத ஆயுதப் போராட்டத்தைப்
புலிகள் இயக்கம் நடத்தியதன்
விளைவாகவே
தமிழ் மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு
உள்ளாகினர்
எனக் கூறும்
போது, அந்தப்
போராட்டத்துக்குக்
கூடுதான நிதிப் பங்களிப்புச்
செய்த தமிழ் ‘டயஸ்
போறா’வும்
பாதிப்புகளுக்கான
பொறுப்பை
ஏற்க வேண்டும்.
தங்க ளுக்கு
நேர்ந்த அவலங்களுக்குப்
புலம் பெயர் தமிழர்களும்
பொறு ப்பாளிகள்
என்ற அபிப்பிராயம்
மக்களுக்கு
ஏற்பட்டிருக்கின்றது.
இந்த அபிப்பிராயம்
நீங்க வேண் டுமானால்
புலம் பெயர் தமிழர்கள்
இலங்கையில்
வாழும் தமிழ் மக்களுக்கு
நன்மை பயக்கும் செயலில் ஈடுபட வேண்டும்.
நன்மை பயக்கும்
செயல்
மக்களுக்கு அவலங்கள் ஏற்படாத வகையில் இனப்பிரச்சினைக்குத்
தீர்வு காண்பதும்
வடக்கின்
சிதை வுகளைக்
கட்டியெழுப்புவதுமே
மக்களுக்கு
நன்மை பயக்கும் செயல்கள்.
ஆயுதப் போராட்டத்துக்குத்
தாராளமாக
அள்ளிக்கொடுத்து
உதவியவர்கள்
அந்த உதவியின்
விளைவாக ஏற்பட்ட சிதைவுகளை
நிமிர்த்துவ
தற்கும் அள்ளிக்கொடுக்கத்
தயாராக வேண்டும். இவர்கள் அமைப்பொ
ன்றை உருவாக்கி
அந்த அமைப்பின்
மூலம் சில அபிவிருத்திச்
செயற் பாடுகளை மேற்கொள்ளலாம்.
யுத்தம் காரணமாக
வீடுகளை இழந்த ஆயிரக்
கணக்கானோர்
உள்ளனர்.
அவர்களுக்கு வீடுகளைக்
கட்டிக் கொடுப்பது
அவர்களின்
மனங்களை வெல்லும் காரியம் மாத்திரமன்றி
வட பிரதேச
அபிவி ருத்திக்குக்
கைகொடுப்பதுமாகும்.
அபிவிருத்தியுடன் நிற்காமல்
அரசியல் விடயத்திலும்
புலம் பெயர் தமிழர்கள்
பங்களிப்புச்
செய்ய முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்
தமிழ் ‘டயஸ்போறா’வுக்குமிடையே
எவ்வகையான
உறவு இருந்ததென்பது
தமிழ் மக்களுக்கு
நன்கு தெரியும். புலிகளின் நிகழ்ச்சி
நிரலை ஏற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
செயற்பட்ட
காலத்தில்
புலம்பெயர்
தமிழர் அமைப்புகள்
இவர்களுக்கு
வழிகாட்டிகளாகச்
செயற்பட்டன.
புலம் பெயர் தமிழர் அமைப்புகளின்
செல்வாக்கு
இன்றும் கூட்டமைப்பில்
இருக்கின்றது.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பைச்
சரியான பாதைக்குக்
கொண்டு வருவதற்குப்
பங்களிப்புச்
செய்யும்
வல்லமை இன்றும் தமிழ் ‘டயஸ்போறா’க்களுக்கு
உண்டு.
வடக்கு, கிழக்கு
மாகாணங்களில்
இன்று செயற்படுகின்ற
தமிழ்க் கட்சிகளுள்
தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு
மாத்திரம்
யதார்த்தத்துக்கு
முரணான அணுகு முறையைப்
பற்றி நிற்கின்றது.
முழுமையான அரசியல்
தீர்வே தேவை என்பதும்
அரைகுறைத்
தீர்வை நிராகரிக்க
வேண்டும்
என்பதும்
யதார்த்தத்துக்கு
முரணான நிலைப்பாடுகள்.
எது சாத்தியமோ
அதை ஏற்றுக்கொண்டு
முழுமையான
அரசியல் தீர்வுக்காகத்
தொடர்ந்து
முயற்சிக்கும்
அணுகுமுறை
தான் இன்றைய
யதார்த்தம்.
இந்த யதார்த்தத்துக்கூடாகவே
அரசியல் தீர்வை அடைய முடியும்
என்பதைப்
புலம்பெயர்
தமிழர் அமைப்புகள்
கூட்டமைப்புக்குத்
தெளிவுபடுத்த
வேண்டும்.
சிங்கள மக்களின்
ஆதரவு
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை அடைவதில் சிங்கள மக்களின் ஆதரவு முக்கிய
இடம் வகிக்கின்றது
என்ற விடயத்தைத்
தமிழ்த் தேசிய வாதிகள்
கவனத்தில்
கொள்வதாகத்
தெரியவில்லை. வெளிநாட்டுத் தலைவர்களுடனும்
அரசாங்கத்துடனும்
பேசுவதால்
மாத்திரம்
தீர்வைப்
பெற்றுவிட
முடியும்
என்று இவர்கள் கருதுவது போல் தெரிகின்றது.
இந்தப் பேச்சுவார்த்தைகளால்
பலன் இல்லை
என்று கூற வர
வில்லை. அரசியல் தீர்வு
முயற்சியில்
இறுதித் தடையைத் தாண்டுவதற்குச்
சிங்கள மக்களின் ஆதரவு அவசியம்
என்பதை நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத்
திருத்தம்
இப்போது நடைமுறையில்
இருக்கின்றது. இத் திருத்தம்
பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்ட
வேளையில்
திருத்தத்தை
ஆட் சேபித்து
நீதிமன்றத்தில்
வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கு
விசாரணையின்
போது முன்
வைக்கப்பட்ட
வாதங்களுள்
ஒன்று, திருத்தம்
ஒற்றையாட்சியை
மீறுவதாக
இருப்பதால்
சர்வசன வாக்கெடுப்பில்
மக்களின்
அங்கீகாரத்தைப்
பெற வேண்டும்
என்பதாகும்.
ஒற்றையாட்சி
வரம்பைத்
திருத்தம்
மீறவில்லை
என்றும் சர்வசன வாக்கெடுப்பு
அவசியமில்லை
என்றும் உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்ததால்
சர்வசன வாக்கெடுப்பு
இல்லாமலே
மாகாண சபைகள் நடைமுறைக்கு
வந்தன.
பதின்மூன்றாவது திருத்தம்
முழுமையான
தீர்வல்ல
என்பதில்
எல்லாத் தமிழ்க் கட்சிகள் மத்தியிலும்
உடன்பாடு
உண்டு. எனவே,
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய முழுமையான
தீர்வு பதின்மூன்றாவது
திருத்தத்திலும்
பார்க்கக்
கூடுதலான
அதிகாரங்களைக்
கொண்டதாக
இருப்பதைத்
தவிர்க்க
முடியாது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப்
பூர்த்தி
செய்யக்கூடிய
வகையில் கூடுதலான அதிகாரங்கள்
அமைவது ஒற்றையாட்சி
வரம்பை மீறுவதாகவே
இருக்கும். எனவே, அத்தகைய ஒரு தீர்வை
அடைவதற்கு
இன்றைய அரசியலமைப்பினது
ஏற்பாடுகளின்
அடிப்படையில்
சர்வசன வாக்கடுப்பு
அவசியமாகின்றது.
சிங்கள மக்களின்
ஆதரவு இல்லாமல் சர்வசன வாக்கெடுப்பில்
சாதகமான முடிவைப் பெறுவது சாத்தியமில்லை.
நியாயமான அரசியல்
தீர்வின்
அவசியம் பற்றிச் சிங்கள மக்களுக்குத்
தெளிவுபடுத்துவதற்கும்
அவர்களை வென்றெடுப்பதற்குமான
வேலைத்திட்டம்
எதுவும் தமிழ்த் தேசியவாதிகளிடம்
இருப்பதாகத்
தெரியவில்லை.
சிங்கள மக்கள்
மத்தியில்
செயற்படுவனவும்
நியாயமான
அரசியல் தீர்வுக்குச்
சார்பானவையுமான
அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கூடாக
இதைச் செய்ய முடியும்.
நியாயமான அரசியல் தீர்வு இன்றைய நிலையில் உடனடியாகச்
சாத்தியமில்லை. அது ஒரு நீண்ட
காலத் திட்டம். சிங்கள மக்களின்
ஆதரவை வென்றெடுப்பதற்கான
வேலைத் திட்டத்தை
இப்போதிருந்தே
செயற்படுத்தத்
தொடங்கினால்
உரிய நேரத்தில்
பலன் கிடைக்கும்.
தமிழ் மக்களின்
அரசியல் தீர்வுக் கோரிக்கையைப்
பிரிவினையின்
முதலாவது
படி என்று
சந்தேகிக்கும்
மனோபாவத்தைத்
தமிழ்த் தேசியவாதத்
தலைவர்களின்
செயற்பாடுகள்
சிங்கள மக்களிடம்
தோற்று வித்திருக்கின்றன.
இச் சந்தேகத்தைப்
போக்கும்
வகையில் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலை வர்களுக்கு
உண்டு.
(ஜீவகன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |