|
||||
|
விண்வெளி ஒரு திறந்தவெளி
ஆய்வுகூடம் இன்றைய வானவியல் கிறிஸ்துவின்
பிறப்பிற்கு
ஆறு நூற்றாண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்த பைதகரஸ்
(Pythagoras) என்ற கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானியிலிருந்து
தொடங்கியது
எனலாம். இவரே முதன் முதலாகப் பூமி உருண்டையானது
என்று தெரிவித்தவராவார்.
அதற்குப்
பிறகு 200 ஆண்டுகளுக்குப்
பின் வந்த
அரிஸ்டோட்டில்
சந்திர கிரகணத்தின்
போது நிலவின்
பரப்பில்
ஒரு வட்டவில்
போல விழும்
பூமியின்
நிழலைக் கண்டு பூமியின்
உருண்டை வடிவத்தை உறுதிப்படுத்தினார்.
எனினும் அரிஸ்டோட்டில்
பூமியே இப் பேரண்டத்தின்
மையம் எனவும், சந்திரனும்
சூரியனும்
பிற கோள்களும்
பூமியைச்
சுற்றி வருகின்றன
என்றும் இதற்கும் அப்பால் விண்மீன்கள்
சுற்றி வருகின்றன
என்றும் தெரிவித்திருந்தார்.
அவர் காலத்தில்
அவர் மிகச்
சிறந்த தத்துவஞானியாக
எல்லோராலும்
மதிக்கப்பட்டு
வந்தார் என்பதால் அவருடைய கருத்தை மக்கள் மறுப்பின்றி
ஏற்றுக் கொண்டனர்.
அவருக்குப் பின் வந்த
தொலமியும்
(Ptolemy) இக் கருத்தில்
மாற்றம் ஏதும் செய்யவில்லை.
அரிஸ்டோட்டிலின் இத் தவறான கொள்கைகள்
ஏறத்தாழ
1600 ஆண்டு காலங்கள் வரை அப்படியே
உலகில் நிலவி வந்தன.
16ம் நு¡ந்றாண்டில்
கொப்பனிக்கஸ் (Copernicus) சூரியக்
குடும்பத்திற்கு
புதிய வடிவம் கொடுத்தார்.
அதுவரை பூமியை
மையமாகக்
கொண்டு சூரியனும்
பிற கோள்களும்
சுற்றி வருகின்றன
என்ற பழைமையான
கருத்துக்கு
எதிராகச்
சூரிய மையக் கருத்தைத்
தெரிவித்தவர்
இவரேயாவார். பைதகரசுக்கு 200 ஆண்டுகளுக்கு
முன்னரே இந்தியாவில்
ஈர்ப்பு பற்றித் தெரிந்திருந்தார்கள்.
இதற்கு அவர்கள்
நிறை மிக்க
சூரியனே சூரியக் குடும்பத்தின்
மையமாக இருக்க முடியும் என்று கூறி
இருப்பதே
சான்றாக உள்ளது.
கெப்லருக்கு 1000 ஆண்டுகளுக்கு
முன்னரே கோள்களின்
சுற்றுப்
பாதை நீள்
வட்டமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்களும்
இந்தியர்களே. கிறிஸ்துவின் பிறப்பிற்கு
முன் சுமார்
2000 ஆண்டுகளுக்கு
முன்னர் எழுதப்பட்ட
இருக்கு வேதத்தில்
இந்திய வானவியலாளரின்
வல்லமை தெரிய வருகிறது.
வேத கால ஆரியர்கள்
சூரியன், விண்மீன், வால்மீன் போன்ற விண்ணுறுப்புகளைத்
தெளிவாக வரையறுத்துள்ளனர். ஆனால் இந்தியாவில்
வானவியல்,
கிரக சோதிடமாக
விரிவடைந்தது.
அதனால் கிரகங்களைத்
தெய்வங்களாக
மதிக்கத்
தொடங்கினர். சூரியனும் சந்திரனும்
பிற கோள்களும்
பூமியில்
பிறக்கும்
மனிதர்களின்
எதிர்காலத்தைத்
தீர்மானிப்பதாக
நம்பினார்கள்.
இந்த நம்பிக்கை
இந்திய மக்களிடையே
இன்றைக்கும்
தொடர்வதைக்
காணமுடிகிறது.
இது வானவில்
துறையில்
ஆக்கபூர்வமான
வளர்ச்சியைப்
பெரிதும்
மட்டுப்படுத்திவிட்டது
என்றே சொல்லவேண்டும்.
வேதத்தில் சூரியன், ஒளி மற்றும்
வெப்பத்தின்
ஆற்றல் மூலமாகவும்
பூமியில்
உயிர் வாழ்க்கைக்கு
ஆதாரமாகவும்
பரிணாம வளர்ச்சிப்படிகளின்
மையமாகவும்,
கோளத்தின்
மையமாகவும்
கற்பிக்கப்பட்டுள்ளது.
இது கிரேக்கர்களின்
சூரிய மையக் கருத்துக்கு
முன்னோடியாக
உள்ளது. சமஸ்கிருதத்தில் ஒரு வரி. “சர்வ தீட்ஷனம் சூரியகம் சூரியஹா சூரியா”
இதன் அர்த்தம்
என்னவென்றால்
எல்லாத் திசைகளிலும்
சூரியன்கள்
இருக்கின்றன. இரவு நேர வானில் இவை எங்கும்
நிறைந்திருக்கின்றன.
இது விண்மீன்கள்
எல்லாம் சூரியனைப்
போன்ற விண்ணியல்
உறுப்புகள்
என்பதை இந்தியர்கள்
தெரிந்திருந்தார்கள்
என்பதைப்
பறை சாற்றுகிறது.
வேதம் விண்மீன்களை
நட்சத்திரங்கள்
எனக் குறிப்பிடுகின்றது.
11ம் நுற்றாண்டில்
மெசபத்தேமியர்கள்
வானவியல்
பற்றி எழுதி வைத்த
பல கருத்துகள்
இருக்கு வேதத்தின்
சில வரிகளில்
அப்படியே
காணப்படுகின்றன. சூரியோதயம்
விண் மீன்களின்
வட்டாரக்
கூட்டம்
(constellation) பற்றியும் அதன் அடிப்படையில்
அமைந்த ஆண்டுக் கால அட்டவணை
(ஆண்டுக்கு
12 மாதங்கள்,
ஒரு மாதத்திற்கு
30 நாட்கள் என 360 நாட்கள்)
பற்றியும்
தெரிவிக்கப்பட்டுள்ள
ஒத்த கருத்துக்களில்
இது வெளிப்படையாகத்
தெரிகிறது.
சூரிய உதய நேரத்தில்
காணப்படும்
சுற்று முறையிலான
ஏற்றத் தாழ்வு மாற்றங்கள்
பற்றி இருக்கு வேதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரியப்பட்டர் என்ற பழங்கால
இந்திய வானவியல் வல்லுநர் ஆரியப்பட்டியா
என்ற தம்
நூலில் கோள வானியல்
பற்றி (spherical
astronomy) விளக்கியுள்ளார்.
இதில் இந்துக்களின்
கால ஆண்டு,
சந்திர சூரிய கிரகணங்கள்
ஏற்படும்
காலம், விண்ணுறுப்புகளின்
சுற்று முறையிலான
இயக்கங்கள்
பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் விண் மீன்கள் சுற்றி வருவதற்குக்
காரணம் பூமியின் தற்சுழற்சி
இயக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. கோள்களின் சுற்றுப்
பாதை அதன்
சுற்றுக்
காலத்தைப்
பொறுத்தது
என்றும் கோள்களின்
இருப்பிடம்
பற்றி அறிய புதிய
வழிமுறைகளும்
இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
கூலின் சுற்றுப்
பாதை நீள்
வட்டமானது
என்று முதலில் தெரிவித்திருப்பதும்
இவரே ஆவார்.
நிலவின் ஒளி சூரிய ஒளியின்
பிரதிபலிப்பால்
வருகிறது
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகு என்ற பாம்பு
விழுங்குவதால்
சந்திர கிரகணம் ஏற்படவில்லை
என்றும் அது பூமியின்
நிழல் சந்திரனில்
விழுவதால்
உண்டாகிறது
என்றும் ஓர் ஆண்டு
என்பது 365 நாட்கள் 6 மணி 12 நிமிடம்
30 வினாடி என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆரியப்பட்டியா
நூல் 13ம் நூற்றாண்டில்
இலத்தீன்
மொழியில்
எழுத்துப்
பெயர்ப்பு
செய்யப்பட்டது.
ஆரியப்பட்டாவிற்குப் பிறகு பாஸ்கரா, வராக மித்ரா
பிரும்ம குப்தா போன்ற வானவியல்
அறிஞர்கள்
தோன்றினார்கள்.
வராகமித்ரர் ஈர்ப்பு
விசை பற்றிய
பெளதிகவியல்
உண்மைகளை
முதல் முதலாகத் தெரிவித்துள்ளார். பழங்காலத்தைய இந்திய
வானியல் கணிதவியல்
அடிப்படையில்
மட்டுமே இருந்தது.
தொலைநோக்கி போன்ற கருவிகள் பற்றி ஏதும்
தெரியாதிருந்தனர்.
வானவியல் மிகப் பெரிய
அளவில் வளர்ச்சி அடையாமல் போனதற்குக்
காரணம் தாங்கள் கண்ட உண்மைகளை
முறையாகப்
பதிவு செய்யாமல்
விட்டுவிட்டது
மட்டுமின்றி
பதிவு செய்தனவற்றையும்
முதன் முதலாக உலகிற்கு எடுத்துக்
கூறாது போனதும்தான்.
மேலும் வானவியலை
விஞ்ஞானத்துக்கு
அப்பாற்பட்ட
வான சோதிடமாக
வளர்ச்சியுற
அனுமதித்துவிட்டதால்
உண்மையான
திசை தடுமாறிப்
போனது.
மின் விளக்கு,
நிலவு இவற்றின் ஒளி ஏதுமில்லாத
இரவில் ஆகாயத்தை உற்று நோக்கினால்
மூடுபனி போன்று ஒரு சீரற்ற
வெண்ணிறப்
படுக்கை வானத்தில்
ஓர் ஆறு
போலக் காட்சியளிக்கும். இதையே பால்வழி
மண்டபம் என்பர். பால் வழி மண்டலம் என்பது ஓர் அண்டம்,
ஓர் அண்டம்
என்பது பத்தாயிரம்
கோடிக் கோடி விண்மீன்கள்
அடங்கிய ஒரு மாபெரும்
விண்ணுறுப்பு.
பொதுவாக வெறும்
கண்ணால் மட்டும் பார்க்கக்
கூடிய எல்லா விண்ணுறுப்புகளும்
பால்வழி மண்டலத்தைச்
சேர்ந்தன. நமது சூரியன்
பால்வழி மண்டலத்தில்
இருக்கும்
ஒரு விண்மீன்
என்பதால்
இது நமது
அண்டம் என்ற பெருமை
கொண்டது.
பால் என்று பொருள் தரும் கிரேக்க
மொழிச் சொல்லான ‘gala’ என்ற வார்த்தையிலிருந்து
அண்டத்திற்கான
கலைச் சொல் உருவானது. ஹீரா (Hera)
என்ற ரியி
தேவதை ஹீராக்லஸ்
(Heracles) என்ற தன் குழந்தைக்குப்
பாலூட்டும்
போது சிந்திய
பாலே பால்வழி
மண்டலமானது
என்று கிரேக்கப்
புராணங்கள்
கூறுகின்றன.
உரோமர்கள், உரோமாபுரியைத்
தங்கள் உயிரினும்
மேலாக மதித்தார்கள். உரோமாபுரியை
நோக்கிப்
புனிதப் பயணத்தை இரவுப் பொழுதில் விண்ணில் தெரியும் பால்வழி மண்டலத்தின்
பகுதியை ஒரு வழிகாட்டியாகக்
கொண்டு மேற்கொண்டனர்
என்பதால்
பால்வழி மண்டலத்தை
இவர்கள் உரோமாபுரிச்
சாலை என்றழைத்தனர்.
ஆசியாவின் மையப் பகுதியில்
உள்ள நாடுகளிலும்
ஆபிரிக்க
நாடு களிலும்
பால்வழி மண்டலம் வைக் கோல்
பிரி என்ற
சொல்லோடு
தொட ர்புபடுத்தப்பட்டு
வர்ணிக்கப்பட்டது.
துருக்கி மற்றும்
பால்டிக்
கடலோர நாடுகள், யூரல் மலைச்
சாரலில் உள்ள நாடுகளில்
இது பறவைகளின்
பாதை என்று
வர்ணிக்கப்பட்டது. பருவ மாற்றங்களுக்கு
ஏற்ப புலம்
பெயர்ந்து
நெடுந்தொலைவு
பறந்து செல்லும் பறவைகள் பால்வழி மண்டலத்தை
இயற்கை வழிகாட்டியாகக்
கொண்டு வழி தவறாது
கடந்து செல்கின்றன
என்பது இவர்களின்
கருத்துக்கு
அடிப்படையாகும்.
வடமொழியில் இது ஆகாய கங்கை
என அழைக்கப்படுகிறது. கங்கை என்றாலே
சொர்க்கம்.
பூமியில் ஓடும் கங்கை ஆறும்,
வானத்தில்
தெரியும்
பால்வழி மண்டலமும்
ஒத்த மண்
மற்றும் விண் உறுப்புகளாக
ஒப்பிடப்பட்டுள்ளன.
காகம் மற்றும் புறா வகையைச்
சேர்ந்த மாக்பி (magpie) போன்ற
பறவைகள் பருவ காலப்
பாலத்தை பால்வழி மண்டலத்திற்குக்
குறுக்காக
உண்டாக்கிக்
காட்டுகின்றன
என்ற ஒரு
நம்பிக்கை
ஆசியாவில்
உண்டு. சீனர்கள் பால்வழி மண்டலத்தை
வெள்ளி ஆறு (Silver river)
என்பர். ஜப்பானியர்கள் இதை சொர்க்கத்தின்
ஆறு என்று
குறிப்பிடுவர்.
விண் படுக்கையிலுள்ள
விண் மீன்களின்
ஒப்பு நிலைகளைக்
கொண்டு எப்பொழுது
குளிர்காலம்
தொடங்கும்
என்று முன்கூட்டியே
திட்டமிட்டதால்,
ஸ்வீடன் நாட்டினர்
இதை குளிர்கால
மரம்பயில்
சாலை (wintலீr
avலீnuலீ) என்று
விவரித்தனர்.
இன்றைக்கு வானத் தொலை நோக்கிகள்
வந்த பிறகு
விண்வெளிக்
காட்சிகள்
பெரிதும்
மாறிப் போயிருக்கின்றன. பால்வெளி மண்டலமே
பல அதிசயங்களையும்
விநோதங்களையும்
வெளிக் காட்டியுள்ளது.
பேரண்டத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இந்த விண்வெளி
ஒரு திறந்தவெளி
ஆய்வுக் கூடம். விஞ்ஞானிகளுக்கு இது பெளதிகவியல்
விளக்கம்
கூறும். ஆன்மீக வாதிகளுக்கு
மன அமைதியைக்
கற்பிக்கும்.
கவி ஞர்களுக்கு
கற்பனா சக்தியை வளப்படுத்தும்.
குழந்தைகளை மகிழ்வூட்டும்
தன்மையது.
நன்றி:
ஆம்பல் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |