|
||||
|
வெளுக்கும் சாய
முகங்கள் (பகுதி 1)
"பொங்கு
தமிழர்க்
கின்னல் விளைந்தால்
சங்காரம்
நிசம் என்று சங்கே
முழங்கு' என்ற ரீதியில்,
தமிழகத்தில்,
சில வருடங்களாக,
"நான் தமிழன்; தமிழினத்திற்கு
எதிரான துரோகம் இது; என்
இனம் அழிகிறது;
இதை எதிர்ப்பவன்
தமிழனேயல்ல...'
என, "தமிழன்'
என்ற வார்த்தை,
பரவலாக முன் நிறுத்தப்படுகிறது.
இந்த வார்த்தைகள்
எல்லாம்,
"தமிழ் இனத் தலைவர்'களாக,
தங்களை அடையாளப்படுத்திக்
கொள்ளும்
சிலரது வாயிலிருந்து
உதிரும் முத்துகள்.
நரம்புகள்
புடைக்க, உணர்ச்சிப்
பீறிட, இவர்கள் வாயிலிருந்து
வார்த்தைகள்
கொந்தளிப்பதைப்
பார்த்தால்,
இவர்களைத்
தவிர, மற்றவர்கள்
யாருமே தமிழர்கள்
இல்லையா என்று சந்தேகம்
வருவதில்
வியப்பில்லை;
கையைக் கிள்ளிப் பார்த்து, சந்தேகம் தீர்ந்து, தமிழன் தான் என்பதை
உறுதி செய்த பின்,
எப்படித்
தான் இருக்கின்றனர்
நம் தொப்புள்கொடி
உறவுகள் என்று கண்டறிய,
நாம் சென்ற
இடம், கும்மிடிப்பூண்டி
இலங்கைத்
தமிழர்கள்
முகாம்...
அங்கு சென்ற பின்தான் தெரிந்தது,
எம் இனமானத்
தலைவர்கள்
அனைவருமே,
"வெறுங்கையில்
முழம்' போட்டுக் கொண்டிருப்பது! தங்கள் "இனத்தைக்' காக்கவே அவதரித்த அவதார புருஷர்கள்
போலவும், தியாகிகள்
போலவும், மாயையை ஏற்படுத்தியுள்ள
இவர்கள், நம்மிடம் அடைக்கலம்
புகுந்துள்ள,
நம்மை நம்பி வந்துள்ள
புலம்பெயர்ந்த
தமிழர்களுக்காக,
ஒரு செங்கல்லைக்
கூட நகற்றி
வைக்காமல்,
வாய்ஜாலத்திலேயே
தங்கள் அரசியல் வாழ்க்கையை
ஓட்டிக் கொண்டிருக்கும்
குட்டு வெளிப்பட்டது.
திறந்தவெளி முகாமிற்குள்
நுழைந்ததுமே,
ஏதோ, சேரி
ஒன்றுக்குள்
சென்றது போன்ற உணர்வு. இப்ப விழுமோ...
எப்ப விழுமோ...
என்ற ரீதியில்,
இது வீடல்ல;
வீடு மாதிரி
என எண்ணும்
வகையில், தோற்றமளிக்கும்
வீடுகளும்,
வீட்டிற்கு
வெளியே, ஆறு போல்
ஆங்காங்கே
ஓடிக் கொண்டிருக்கும்
கழிவுநீரும்,
தார் சாலையையோ,
சிமென்ட்
சாலையையோ,
இதுவரை நாங்கள் கண்டதேயில்லை
என, சத்தியம்
செய்யும்
மண் தரையும்,
பொதுக் கழிப்பிடம்
போன்று காட்சியளிக்கும்
கழிவறைகளும்...
சொந்த மண்ணில், விவசாயமும்,
மீன்பிடிப்பும்,
வர்த்தகமும்
செய்து, வளமாக வாழ்ந்தவர்கள்
தான், இங்கே,
இப்படிப்பட்ட
சூழலில்! அந்தோ பரிதாபம்!
அங்கே நின்று கொண்டிருந்த
சிலருக்கு
மத்தியில்
சென்று, கேள்விக் கணைகள் தொடுத்ததை
வைத்தே, பத்திரிகை
சம்பந்தப்பட்டவர்
என்பதை புரிந்த கொண்ட சிலர்
" பிரச்னைகள்
பல இருக்கு;
சொல்றோம்...
தயவு செய்து,
பேரை மட்டும்
எழுதிராதீங்க...
அப்புறம்
எங்க கதி
அதோ கதிதான்...
பிரச்னையை
சொல்லக் கூட உரிமையில்லை...
' என, யாராவது தங்களை கவனிக்கின்றனரா
என்ற பயத்துடனேயே,
தங்கள் ஆதங்கங்களை
கொட்டித்
தீர்த்தனர்.
புலம் பெயர்ந்து,
பல ஆண்டுகள்
ஆகியிருந்தாலும்,
தாயக மண்ணை
பிரிந்து
நிற்பதால்
ஏற்பட்டுள்ள
வலியை, ஒவ்வொருவரின்
முகத்திலும்,
பேச்சிலும்
காண முடிந்தது.
"சல்லடை
போல வீடுகள்...
அரசாங்கம்
ஏதும் உதவி செய்யவில்லையா?'
எனக் கேட்டதற்கு,
""இலங்கை
முள்வேலி
முகாம்களுக்குள்,
எம் மக்கள்
சந்தித்த
துயரங்களைச்
சொல்ல வார்த்தைகளில்லை;
அதை ஒப்பிட்டுப்
பார்க்கையில்,
இது பரவாயில்லை;
குறை சொல்ல
ஒன்றுமில்லை,''
என்று, அந்த 60 வயது
நபர் கண்கலங்க,
தழுதழுத்தார்.
அவர் மனைவியோ,
"மளமள' வென கொட்டித்
தீர்த்தார்."" 20 வருஷத்துக்கு,
200 ரூபாய் வீட்டு பராமரிப்புக்காக
கொடுத்திருக்காங்க...
அத வச்சு
நாங்க என்ன செய்றது?
எங்களால கட்ட முடிஞ்ச
அளவுக்கு
கட்டலாம்னு
பார்த்தா...
இருக்கிறத
இடிச்சிட்டு
புதுசா கட்டப்போறதா
சொல்லிக்கிட்டேயிருக்காங்க...
அங்க இங்க
காசு புரட்டி,
இத சீர்
செய்த பிறகு, அப்புறம்
இடிச்சுட்டாங்கன்னா,
வீடும் இல்லாம, காசும் வீணாகி வெறுங்கையாகிடுவோமேங்கிற
பயத்திலதான்
சும்மா இருக்கோம்...''
என்று, அவரது மனைவி
சொன்னார். அருகில் நின்றிருந்த
மற்றொரு பெண்,""அதுமட்டுமில்லங்க...
1992ம் ஆண்டு,
எங்களை கட்டாயப்படுத்தி,
இலங்கைக்கு
அனுப்பி வைச்சாங்க.
அதப் போல,
எப்ப வேணும்னாலும்
திரும்ப நடக்கலாம்ங்கிற
பயம் உள்ளூர
இருந்துகிட்டே
இருக்கு... இங்க நாங்க
இருக்கிறது
நிலையில்ல...
நாடோடி மாதிரித்தான்
வாழ்ந்துட்டு
இருக்கிறோம்.
இப்படி இருக்கிறதே
நிலையில்லாமைங்கிற
சூழல்ல, வீடு என்ன
வீடு? ஏதோ இருக்கிறதை,
"அட்ஜஸ்ட்'
செய்துட்டு
வாழ வேண்டியதுதான்.
அதான், கட்டாம,
பயத்தோடயே
வாழ்ந்துட்டிருக்கோம்,''
என்றார். (தொடரும்....) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |