Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்நாட்டின் கிரானைட் ஊழல்

(கே.விஜயன்)

கிரானைட் கற்கள் வெட்டியெடுத்து வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஒரு தனிநபரே கொள்ளை யடித்துள்ளது என்பது சாதாரண ஒன்றல்ல. அதுவும் இயற்கையை நாசப்படுத்தி இக்கொள் ளையை நிகழ்த்தியுள்ளார் என்பது தேச விரோத நடவடிக்கையாகும். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவைச் சுற்றியுள்ள இடங்களில் கிரானைட் என்ற இயற்கை வளத்தை கொள்ளையடிப்பதில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கிரானைட்டில் பல வண்ணங்கள் இயற் கையில் கிடைத்தாலும் கறுப்பு கிரானைட் கற் களுக்கு விலை அதிகம். ஒரு கனமீட்டர் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கும். தரமான இக்கற் களின் முதல் தரம் விழுப்புரம் மாவட்டம் குன் னம், திருவக்கரை பகுதிகளிலும் மேட்டூர் அணை பகுதிகளிலும் கிடைக்கின்றது. இயற் கையில் கிடைக்கும் கனிம வளமான கிரா னைட் கற்களை தனியார் வெட்டியெடுத்து லாபத்தை சம்பாதிக்கும். ஏற்பாட்டால் அர சுக்கு பல்வேறு நஷ்டங்கள் ஏற்பட்டது.

கிரானைட் கற்களை வெட்டியெடுத்துச் செல்வதற்கு 1959 ஆம் ஆண்டில் நிறைவேற் றப்பட்ட சிறிய அளவில் கிடைக்கும் கனி மத்தை எடுக்கும் சட்டமே பயன்படுத்தப்பட் டது. கிரானைட் கற்களை வெட்டியெடுப் பதற்கு இச்சட்டத்தில் திருத்தம் அளிக்கப் பட்டது.

தனியார் பட்டா நிலத்தில் கிரானைட் வெட்டியெடுக்க வேண்டுமென்றால் கூட அரசு அனுமதி இல்லாமல் முடியாது என்ற அளவிற்கு விதிமுறைகள் பலப்படுத்தப்பட்டன.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் அரசு நேரடியாக கிரானைட் போன்ற கனிமங்களை வெட்டியெடுப்பதோடு இதர கனிமங்களான கிராபைட், பெல்ஸ், பர்,குவார்ட்ஸ், மைக்கா, சிலிகா போன்ற கனிமங்களையும் வெட்டியெடுப்பதற்கும் அதை விற்பனை செய்வதற்குமான தமிழ்நாடு கனிம நிறுவனம் என்ற கம்பெனி ஆரம்பிக் கப்பட்டது.

அரசு புறம்போக்கு நிலங்கள், வனத்துறை களின் பொறுப்பில் உள்ள நிலங்களில் தமிழ் நாடு கனிம நிறுவனம் கனிமத்தை வெட்டி யெடுப்பதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் புவியியல் துறை ஒப்புதலுடன் அரசின் தொழிற்துறை தான் குவாரியைச் செய்திட அனுமதி வழங்கும்.

சுரங்கச் சட்டம் -1952 பாதுகாப்பு விதிகள் படியும், வெடி மருந்து கையாளுதல் சட்டத் தின்படியும் தொழிலாளர்களை வைத்து வேலை செய்திட வேண்டும். வெட்டியெடுத்து விற்பனைக்கு எடுத்துச் செல்லும் பொழுது மாவட்டஆட்சித்தலைவரின் அனுமதி யுடன்தான் அரசிற்கு சேரவேண்டிய கட்ட ணத்தை செலுத்தி, அனுமதிச்சீட்டு பெற்று அதன் பின்னரே கொண்டு செல்ல வேண் டும். அரசின் அனுமதி இல்லாமல் கொண்டு போக முடியாது.

சாதாரண சாலைக்கு மற்றும் கட்டி டத்திற்கு தேவையான ஜல்லியை உதவி இயக்குநர் அனுமதிச் சீட்டு இல்லாமல் கொண்டு சென்றால் அந்த லாரியை வரு வாய்த்துறையினர் கைப்பற்றி 35 ஆயிரம் ரூபாய் தண்டத்தொகையை வசூலிக்கலாம் என்று சட்டம் உள்ளது. ஏமாந்தவர்களிடம் வசூலிக்கப் பட்டுள்ளது.

கிரானைட் கற்கள் விலை மதிப்பு கூடுத லானது. அதிக கவனம் தேவை என்று சட்டம் கூறுகிறது. அதுமட்டுமல்ல, குவாரியை ஆழப் படுத்தி கற்களை எடுத்துவிட்ட பின்னால் அக் குவாரியை மூடி விட வேண்டும். இவை அனைத்தும் பஞ்சாயத்து மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உட்பட மாதந்தோறும் மாவட்ட ஆட் சித்தலைவருக்கு அறிக்கை அனுப்பிட வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் நடந்ததென்ன? அனைத்து மலைகளும் மொட்டையடிக்கப் பட்டுவிட்டன. 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு அதிகமாக நிலம் இதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது. மதுரை மேலூர் பகுதியில் மட்டும் கனிம வளக்கொள்ளை நடந்து விடவில்லை. மதுரை மேலூர் பகுதியில் கிடைக்கும் கிரா னைட் கற்கள் வெள்ளை மற்றும் வண்ணம் கலந்த கற்களாகும். கண்மாய், சாலை, வீடுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் பகுதியில் இருந்து 1000 அடி தள்ளித்தான் குவாரி நடத்த அனுமதி தரவேண்டும் என்ற விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, சகட்டு மேனிக்கு கொள்ளை நடந்துள்ளது.

மதுரை பொக்கிஷமலையில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஒரு மலையை வயர்சா (வைரம் பதிக்கப்பட்ட வாள்) மூலம் 200 அடி அகலம் 150 அடி உயரம் அளவில் ஒரே நேரத்தில் வெட்டி எடுக்க வசதி உள்ளது. இது கண்ணிமைக்கும் நேரத் தில் நடந்து விடும் நிகழ்ச்சிகளல்ல. இவை அனைத்தும் அரசு அதிகாரிகளான புவியியல் துறை, மாவட்ட ஆட்சித்தலைவர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை தெரிந்த ஒன்றுதான்.

சேலம் மாவட்டம் எடப்பாடி, சங்ககிரி எல் லைப்பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் உள்ள மலைகளை வெட்டியெடுத்து 200 அடியில் இருந்து 500 அடி பள்ளங்களாக மாற்றி விட் டார்கள்.

கரூர் குளித்தலை தாலுகாவில் உள்ள தோகைமலையில் மதுரை மேலூரில் நடந்தது போன்று இயற்கை கனிம வளங்கள் திரு டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 400 கிரானைட் தொழிற்சாலைகள் உள்ளன. செந்தாரப்பள்ளி, சூளகிரி பகுதிகளில் மலைகளை காணவில்லை. அந்த அளவிற்கு வெட்டி எடுத்து விட்டனர். வேலூர் காட்பாடி தாலுகாவில் உள்ள மகிமண்டலம், கரிக்கால், ரெண்டடி பகுதிகளில் இதே நிலைமைதான். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை, சிறு வாலை, திருவண்ணாமலை வீராணம்,ஈரோடு மாவட்டம் பர்கூர், திருப்பூர் மாவட்டம் சிவன் மலை ஆகிய பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவ தும் 850 இடங்களில் கிரானைட் குவாரிக ளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கனமீட்டர் கிரானைட் கற்கள் வெட்டியெடுக் கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு எவ்வளவு வருமானம் வந்தது என்று அரசு வெளிப்ப டையாக தெரிவிக்க வேண்டும்.

என்னதான் தனியார் பட்டா நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டியெடுத்தாலும் பூமிக்கடியில் உள்ள கனிமங்கள் அரசுக்குத் தான் சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.

இப்படியிருக்க, கனிமங்களை வெட்டி யெடுத்து வியாபாரம் செய்திட ஆரம்பிக்கப்பட்ட டாமின் நிறுவனம் கனிம வளங்களை கொள் ளையடிக்க தனியாருக்கு உதவி செய்ததுதான் முக்கியமானது.

1994 -95 ஆம் ஆண்டுகளில் டாமின் நிறு வனம் பணிசெய்து, அதன் பின்னர் தனி யாருக்கு குத்தகைக்கு விட்ட முறை, இந்த முறை மூலம் குத்தகைதாரர் கற்களை வெட்டி யெடுத்து டாமினிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு கனமீட்டர் கல் கொடுத்தமைக்கான தொகையை டாமின் நிறுவனம் அளித்து விடும். டாமின் நிறுவனமே இக்கற்களை விற்கும். இந்த முறை மூலம் தனியார் கற்களை வெட்டியெடுத்து டாமின் நிறுவனத்திற்கு தெரி யாமல் கடத்தி விற்று விடுவார்கள். இப்பொழு தும் குத்தகை நீட்டிப்பு செய்யாத நிலையிலும் நீதிமன்றத்தில் தடைபெற்று குத்தகையை செய்துவருகின்றனர். பிஆர்பி குவாரிகளும் நீதிமன்ற தலையீட்டினால் நீடிக்கிறது.

இதற்காக டாமின் குவாரிக்கு அருகாமை யில் குத்தகைதாரர் ஒரு குவாரியை வைத் திருப்பார். இதன் மூலம் தமிழகத்தில் பல னடைந்தவர்கள் பலர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதிகளாக உள்ளார்கள். டாமின் மற்றும் அரசுக்கு நஷ்டம். இதைவிட 2003 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கனிம சட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட திருத் தம் தான் பிஆர்பி போன்ற பலரை உருவாக் கியது. அரசின் புறம்போக்கு நிலங்களில் கிடைக்கும் கனிமங்களை டாமின் நிறு வனம்தான் வெட்டியெடுக்க வேண்டும். தனி யாருக்கு குத்தகை விடக்கூடாது. இத்திருத் தத்தின்படி அரசு புறம்போக்கு நிலங்களில் கிடைக்கும் கனிமங்களை டாமின் வெட்டி யெடுக்க முடியவில்லை என்று சான்றளித்து விட்டால், அதை தனியாரிடம் அரசு குத்த கைக்கு விடலாம்.

ஆட்சியாளர்களின் தலையீட்டை வைத்து டாமின் நிறுவனத்திடம் அரசு புறம் போக்கு நிலங்களை தனியாருக்கு குத்த கைக்கு விட்டனர். அதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள கனிமங்கள் தாறுமாறாக வெட்டி யெடுத்து கிரானைட் கற்கள் வெளிநாடு களுக்கும் உள்ளூரிலும் விற்கப்பட்டு இயற் கை வளத்தை கொள்ளையடித்தனர்.

இதற்காக டாமின் நிறுவனத்தை வளர விடாமல் ஆட்சியாளர்கள் பார்த்துக்கொண் டனர். டாமின் நிறுவனம் துவக்கப்பட்ட காலத் தில் இருந்து 2006 ஆம் ஆண்டு வரையில் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவ னமாகத்தான் இருந்தது.

வெளிநாடுகளுக்கு கற்களை ஏற்றுமதி செய்து அந்நியச்செலாவணியை ஈட்டித்தந்த நிறுவனமாயிற்றே. இந்த அரசு நிறுவனம் அர சின் கொள்கையால் சீரழிக்கப்பட்டு தள் ளாடிக்கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிழக சட்டமன்றத்தில் 2012 மே மாதம் 2 ஆம் தேதியன்று டாமின் நிலைமை குறித்தும் கற்கள் திருடுபோவது குறித்தும் தொழிற்துறை மானியத்தில் நடந்த விவாதத்தில் பேசினார். தொழிற்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக் கும் பொழுது, திமுக ஆட்சிக்காலத்தில் கற் கள் திருடப்பட்டுள்ளது தடுக்கப்படும் என் றார். என்ன பயன்? அரசுக்கு சொந்தமான இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படு வதற்கு அரசின் கொள்கைகளே காரணமாகும்.

அக்கொள்கையை அமல்படுத்திய அர சின் அதிகாரிகள், ஆட்சியில் இருந்தவர்கள், கொள்ளையடிப்பதற்கு அனுசரணையாக நடந்து கொண்டு, அவர்களும் வளர்ந்துள் ளார்கள். இதில் அனைத்து அரசுத்துறைகளும் புவியியல் துறை, டாமின் நிறுவனம், மாவட்ட ஆட்சியாளர்கள், அவர்களின் அதிகாரிகள் என கொள்ளையடிப்பதற்கு உதவி செய்த வர்களின் பட்டியல் நீண்டுகொண்டு போகின் றது.

தமிழகம் முழுவதும் உள்ள மலைகளை நாசமாக்கி விவசாயத்தை, இயற்கையை கெடுத்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவ டிக்கை எடுக்கவேண்டும்.

அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்.

அரசின் நிறுவனமான டாமின் நிறுவனத்தை பலப்படுத்திடவேண்டும்.

(கட்டுரையாளர்
, பொதுச்செயலாளர், தமிழக கனிம நிறுவன ஊழியர் சங்கம்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com