Contact us at: sooddram@gmail.com

 

பொதுநலவாய நாட்டுப் பிரதிநிதிகளை கவர்ந்த யாழின் புதுமை

பார்ப்போம்...... நம்புவோம்..........

Seeing is believing.....

இந்தக் கூற்றின் உண்மையை அண்மையில் யாழ்ப்பாணம் சென்றபொழுது நான் தெளிவாக உணர்ந்தேன்.

இம்மாதம் 13ம் திகதி 80 வெளிநாடு களைச் சேர்ந்த பிரதிநிதிகளோடு நானும் ஒருவனாகச் சேர்ந்து யாழ்ப்பாணச் சுற்றுலாவில் கலந்துகொண்டேன். இம்மாதம் 07ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையில் 08 நாட்களாக பொதுநலவாய நாடுகளின் 58 ஆவது மகாநாடு கொழும்பில் ஜாம் ஜாம் என்று நடைபெற்றது.

தாமரைத் தடாகம் தலைநகரில் கலை அரங்கு

தடாகம் என்றால் நீர் இருக்கும்; நீலோற்பல மலர் இருக்கும். ஆனால் தலைநகர் கொழும்பில் விகாரமகா தேவிப் பூங்காவிற்கு எதிரில் உள்ள ஒரு தடாகத்தைப் பற்றித்தான் நான் இங்கு சொல்கிறேன். “மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாகம்” (Theatre) என்று இதற்குப் பெயர் சூட்டப் பட்டுள்ளது. நீர் நிரம்பிய தடாகமாக இல்லாவிட்டாலும் கட்டுமானத்தைச் சுற்றிலும் மின் ஒளியில் பாய்ந்தன நீர்ப்பூக்கள்! நுழைவாயிலிலும் மண்டபத்திலும் மலர்ச் செண்டுகள், மலர் மாலைகள்! ஏராளம்! ஏராளம்! சூழல் வண்ணக் கோலம் பூண்ட சூழல்.

நாம் பல உலகக் கலை அரங்குகளைப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் இந்த நாட்டுத் தலைவரின் பெயர் பூண்ட இக்கலையரங்கு மிக எடுப்பாகத் தோற்றமளிக்கிறது. இது சீன அரசின் ஒரு நல்லெண்ணக் கோட்டையாக கொழும்பு நகரில் எழுப்பப்பட்டு, கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உலகில் எப்பாகத்திலும் காணக்கூடிய கலை மணி மண்டபங்களுடன் இதனையும் ஒப்பிட்டுச் சொல்லலாம். தடாகத்தில் பூத்த தாமரைப் பூவை ஒத்த வடிவத்தில் இது கட்டப்பட்டிருப்பது பார்ப்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தவல்லது.

செப்டெம்பர் 07ஆம் திகதி எம் நாட்டுத் தலைவர் இந்தத் தாமரைத் தடாக உள்ளரங்கில் 800 வெளிநாட்டுப் பிரதிநிதிகளை விளித்துப் பேசினார். 58 ஆவது பொதுநலவாய மகாநாடு அதன்போது மலர்ந்தது!

இங்கு அமர்ந்திருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த 800 பிரதிநிதிகளில் சுமார் 80 பிரதிநிதிகளோடு மகாநாடு இறுதியில் யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா போனோம்.

பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமாரும் எம்முடன் கொழும்பிலிருந்து சேர்ந்துகொண்டார்.

13ஆம் திகதி அதிகாலை கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து (இது தற்போது City Airport என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) புறப்பட்டோம். காலை விசேட விமானப் படை விமானம் மூலம் யாழ். பலாலி விமான நிலையம் நோக்கிப் பறந்தோம்.

பாரம்பரிய, சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சரும் தற்போது யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமாகிய மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா, யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். நகர மேயர் திருமதி யோ.பற்குணராஜா உட்பட பல வடபுல முன்னணி அரசியல் தலைவர்களினாலும் உயர் அரச அதிகாரி களினாலும் இந்த 80 பேருக்கும் மாலை அணிவிக்கப்பட்டு மகோன்னதமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அனைவருக்கும் ரிகோ -TIKO- ஹோட்டலில் காலை உணவு. வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும் வெளிநாட்டுக் கறுப்பர்களும் ஒன்றாக அமர்ந்திருந்து சைவ உணவை ருசி பார்த்தனர். தோசை, வடை, போண்டா, யாழ்ப்பாண அரிசிமா இடியப்பம் ஆகியவற்றை ருசித்து உண்டு மகிழ்ந் தனர். யாழ்ப்பாண மாம்பழங்களையும் தடித்த பெரிய இதரை வாழைப்பழங்களையும் பார்த்த அவர்களின் வாயில் உமிழ்நீர் சுரப்பதை நான் அவதானித்தேன். இந்த உணவு வகைகளை தாம் இங்குதான் முதல் முதலில் ருசி பார்த்ததாக சில வெள்ளைக்காரர்கள் கூறினர்.

யாழ்ப்பாணத்தில் இவ்வளவு முன்னேற்றமா?

காலை உணவு அருந்திய பின்னர் வடமாகாண செயலாளர் திரு. இளங்கோ, (சுகவீனம் காரணமாக வடமாகாண ஆளுநர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பிரசன்னமாகியிருக்கவில்லை) யாழ்ப் பாணத்தின் துரித அபிவிருத்திகள் பற்றி பல கோணங்களிலிருந்தும் தயாரிக்கப் பட்ட திரைப்படத்துடன் கூடிய விளக் கத்தை அளித்தார். ஷ¤ஹ்! யாழ்ப்பா ணத்தில் இத்தகைய பாரிய அபிவிருத்தி பணிகள் நிறைவேறியுள்ளனவா?

சரி சென்று தான் பார்ப்போமே, பார்த்துப் பரவசம் அடைவோமே. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் யாழ் நகரில் நிறுவப்பட்டு வருகின்ற போதனா வைத் தியசாலையைச் சுற்றிப் பார்வையிட்டனர்.

தமிழ் அறிவுப் பெட்டகம்

அடுத்து, யாழ். நூல் நிலையத்துக்குச் சென்றோம். இது ஆசியாவிலேயே ஒரு முதல்தரமான நூலகமாகப் போற்றப்பட்டுவந்தது. உலகில் எங்கும் காணக்கிடைக்காத அரிய தமிழ், ஆங்கில நூல்கள் அங்குள்ள புத்தக அலுமாரிகளில் வைக்கப்பட்டிருந்தன. 1981 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் காலகட்டத்தில் தீக்கிரையான அறிவுக்கூடம் இது. தமிழரின் அறிவுப் பெட்டகம் இது! அந்தோ! இனக்கலவரம் நடந்த 1983 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தைக் கறுப்பு ஜூலை என இலங்கை வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகர மேயர் அவர்களின் தலைமையில் கும்மியாட்டம், மேளதாளங்களுடன் யாழ். பாடசாலை மாணவிகள் பூக்களை தூவிய வண்ணம் பிரதிநிதிகள் இங்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்திய அரசின் உதவியோடு மிக நவீன முறையில் எழுப்பத் திட்டமிட்டுள்ள புதிய நூலகத்தின் மாதிரி உருவங்களும் இவர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன.

அதன்பிறகு, மஹேந்திரபுரத்திலுள்ள அரியாலை மீள்குடியேற்றத் திட்டத்தை இவர்கள் சென்று பார்த்தனர். 30 ஆண்டுகால கொடூர யுத்தத்தின் பிறகு புதிய வாழ்வு பெறும் யாழ். மக்களின் நிலைமைகளை அவர்கள் மிக உன்னிப்பாக அவதானித்தனர்.

நல்லூர் கந்தசுவாமி  ஆலயத்தில் சிதறு தேங்காய்

நல்லூர் கந்தசுவாமி ஆயத்திற்கு சென்று கந்தனை தரிசித்த பிரதிநிதிகள் அங்கு ஹிந்து மத கலாசார விழுமியங் களின் மாண்பினை கண்டு பூரித்தனர். அனைவரும் சிதறு தேங்காய் உடைத்தனர்.

அடுப்பங்கரையில் ஆபிரிக்கப் பெண்கள்

கைதடியில் பனம்பொருள் அபிவிருத் திக்கென ஒரு புதிய ஆய்வு நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் களுடைய முயற்சியின் பலனாக அண்மை யில் பொருளாதார அபிவிருத்தி அமைச் சர் பசில் ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கபபட்டது. பனை மரத்திலிருந்து பெறப்படும் பல உற்பத்திப் பொருட்க ளான ஒடியல், பனாட்டு, பனங்கருப்பட்டி போன்றவைகளும் பனைக் கைப்பணிப் பொருட்களும் அனைத்து பிரதிநிதிகளுக் கும் அன்பளிப்புச் செய்யப்பட்டன. வாங்கிக் கொண்ட சிலர் வாய்விட்டுச் சொன்னார்கள். “நாங்கள் இங்கே இதனைச் சாப்பிடமாட்டோம். எமது நாட்டுக்கு எடுத்துச் சென்று, எமது மனைவி மக்களோடு ஒன்றாக இருந்து இவைகளுடைய சுவையை ருசி பார்ப்போம்....”

மறவன்புலவு மீள்குடியேற்ற வீட்டுத்திட்டம் இப்போது மிகவும் பிரபல்யம் பெற்றது. வெளிநாட்டவர் இவ்வீட்டுத் திட்டத்தினுள் நுழைந்தனர். பார்க்கவேண்டுமே, அவர்களுடைய குதூகலத்தையும் கும்மாளத்தையும்.

குறிப்பாக, ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்திருந்த பெண் பிரதிநிதிகள் இங்கு புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளில் நுழைந்து, அடுப்பங்கரை வரை சென்றனர். பெண்கள் அடுப்பில் சோறு, கறிகள் சமைக்கப்படுவதைக் கண்டு அவர்களும் கையில் அகப்பைகளைக் கேட்டெடுத்து, பானையில் இட்டு சோற்றைப் பதம் பார்த்தனர். சட்டிகளில் அகப்பையை இட்டு துழாவிப் பார்த்தனர். சில பெண்கள் கறிகளின் ருசிகளையும் பார்த்தனர். “ஜகஜோர்” இந்த கட்டுமஸ் தான கறுப்பின பெண்கள் வாயிலிருந்து அவர்கள் மொழியிலேயே பாராட்டுக்கள் பொழியப்பட்டன.

வெளியே ஒரு கிணறு. கயிற்றில் தொங்கிய வாளியை கிணற்றில்விட்டு நீர் இறைக்கவும் செய்தனர். வெளிநாட்டிலி ருந்து விஜயம் செய்திருந்த தொலைக் காட்சி மற்றும் ஏனைய ஊடகப் புகைப் படப் பிடிப்பாளர்களுக்கு பரிசு பெறக் கூடிய பல அருமையான படங்களை இக்காட்சி உருவாக்கிக் கொடுத்தது.

இங்கிருந்து தெற்கே சுமார் 150 கிலோ மீற்றர் வரையில் நீண்ட மூன்று சொகுசு பஸ்களில் பவனி ஆரம்பித்தது. இது உலக மக்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஏ-9 என்கின்ற நீண்ட பாதையாகும்.

சடுதியாக ஒருநினைவலை.....யாழில் நேரடி வர்ணனை

பஸ்ஸிலிருந்த ஒலிபெருக்கியைக் கையில் எடுத்து கிரிக்கட் பாணியில் எனது நேர்முக வர்ணனையை வழங்கலானேன்.

“மூன்று தசாப்தகாலங்களாக இப்பாதையில் போக்குவரத்து ஸ்தம்பித்து இருந்தது. அதுவும் இடைக்கிடையே யுத்தத்தின் காரணமாகப் புலிகளின் குண்டுத் தாக்குதல்களால் குண்டும் குழியுமாகச் சீரழிந்து கிடந்த பாதை இது. பார்த்தீர்களா, இப்பாதைகளின் அழகு தோற்றத்தை இப்போது? “காப்பட்” (Carpet) போடப்பட்டு அழகுறக் காட்சி தருகின்றது. இந்த பஸ் வண்டியில் அமைதியாக அமர்ந்து பிரயாணம் செய்கின்ற நீங்கள் உங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போன்ற நவீன ரகப் பாதைக்கு எவ்விதத்திலும் இந்த ரஸ்தா இரண்டாம் தரமாக முடியாது அல்லவா?”

“ஆம். விந்தையிலும் விந்தை! எமது நாட்டில் நாங்கள் பிரயாணம் செய்வது போல் ஒரு தெம்பு பிறக்கின்றது” என்று பல பிரதிநிதிகள் வாய்விட்டுச் சொல்லி மகிழ்ந்தனர்.

ஏ-9 பாதை இன்று ஏ-1 பாதை

“குன்றும் குழியுமாக அன்று சீரழிந்து கிடந்த அன்றைய அந்த ஏ-9 பாதை, இன்று ஏ-1 பாதையெனத் குறிப்பிடும்படி யாகப் புதுக்கோலம் பூண்டு காட்சி தருவதைப் பார்த்தீர்களா?”

பஸ்வண்டிகள் சீராக அணிவகுத்துச் சென்று பூநகர் இந்திய வீட்டுத்திட்ட வளவில் நின்றன இந்த எழில் கொண்ட பூநகர், இவர்களைப் பொங்கிப் பூரிக்கச் செய்தது.

“என்ன அழகு! என்ன பிரமை!” இந்திய நாட்டுப் பிரதிநிதி - தனது ஆச்சயரியத்தை உணர்வுபூர்வமாக வெளிக்காட்டினார். கிளிநொச்சியிலுள்ள 56 ஆவது இராணுவ படைத் தலைமை யகத்தின் பொறுப்பாளர் ஜெனரல் உடவத்த தனது பரிவாரங்களோடு வெளிநாட்டு பிரநிதிநிகளுக்கு அமோக வரவேற்பளித்தார். அங்கே பகலுணவும் பரிமாறப்பட்டது.

தூர்ந்துபோன வயலை உழுது விவசா யம் செய்வதற்குத் தயார்படுத்துவது போன்று குடிபெயர்ந்துபோன மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு இலட்சக் கணக் கான கண்ணிவெடிகளை வெளிநாட்டு அரசாங்கங்களின் துணையோடு அகற்றி இந்த அகன்று விரிந்த பூமியை மக்கள் வாழ்வாதாரத்துக்காக மீண்டும் பண்படுத்தப்பட்டுள்ள கதையை ஏதோ ஒரு துப்பறியும் நாடக விவரணத் தைப்போல் பிரநிதிநிகளின் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் விப ரித்தார் ஜெனரல் உடவத்த அவர்கள். காலாகாலமாக ஜெனரேட்டர் மூலமாக மின் ஒளியைப் பெற்றுக் கொண்ட வடமாகாண மக்கள் எதிர்காலத்தில் தேசிய வலையமைப்பிலிருந்து மின்சார விநியோகத்தை பெற்றுக் கொள்ள இலங்கை அரசு அனைத்து நடவடிக்கை களையும் எடுத்துள்ளதை விபரித்தேன்.

“ஆ! இருள் சூழ்ந்த மக்களுக்கு மின் ஒளியை வழங்குகின்ற உங்கள் அரசின் திட்டத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்” என்று நியூசிலாந்து பிரதிநிதி கூறினார்.

அங்கு ஆனந்தபுரத்தில் உருவாகி வரும் பாரிய தேசிய மின்சார தேசிய வலையமைப்பு நிலையம் இதுதான் என அங்கு பயணிகள் இறங்கும் முன்பு அவர்களிடம் தெரிவித்தேன்.

“ஆனந்தபுரம் ஆனந்தமயம்” எனமலேசியாவில் இருந்து விஜயம் செய்த தமிழ் பேசும் பிரநிதிநிதி மிக ஆயாசமாகவே சொல்லிவிட்டார்.

தொடர்ந்து விஸ்வமடு தேராவில், உடையார்கட்டு ஆகிய இடங்களின் ஊடாக வளைந்து வளைந்து சென்ற பஸ் வண்டிகளில் இருந்தவாறே பிரநிதிகள் ஆங்காங்கு துளிர் விட்டுத் தழைத்து, பச்சைப் பசேல் என்’று காட்சி தரும் வயல் பூமியைக் கண்டு பூரித்தே போய்விட்டனர்.

“கிராமத்தின் இதயமே இந்தப் பேரின்ப நிலையம்” என ஜிக்கி பாடியுள்ள ஓர் அருமையான பாட்டின் சில அடிகளைப் பாடி அதன் விளக்கத்தையும் ஆங்கிலத் தில் வழங்கினேன். அனைவரும் கைகொட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

சாவகச்சேரி, கொடிகாமம், பளை, ஆனையிறவு, பரந்தன், ஒட்டுசுட்டான், கிளிநொச்சி, மாங்குளம் போன்ற இடங்களை ஊடறுத்து பஸ் வண்டிகள் மெல்லமெல்ல நகர்ந்தபொழுது அப்பிர தேசங்களில் எல்லாம் தமிழர்களுடைய இருப்பிடங்கள் தென்பட்டன. இனிய தமிழை வளர்த்து தமிழ் கலாசாலத்தை யும் உருவாக்கி வரலாற்றில் பேரும் புகழும் பெற்ற தமிழர்கள் வாழ்ந்த பூமி இது!”

ஆனையிறவு, முகமாலை கடந்த வரும்போது இறுதிக் கட்டத்தில் வருடக் கணக்கில் இலங்கை இராணுவம் புலிப்படையோடு மோதிய இடங்கள் இவை என்று விளக்கிக் கூறினேன்.

“ஆ அப்படியா!” என்று ஆச்சரியத் தைத் தெரிவித்த பிரதிநிதிகள் “எங்கே யுத்தத்தின் வடுக்களைக் காணவில்லையே?” என ஒரு கேள்வியைப் போட்டனர்.

“யுத்தத்தின் வடுக்களை நீக்கிய பின்பு தான் இந்தப் பாதைகள் பாலங்கள், பாட சாலைகள், மருத்துவமனைகள் தொழிற் சாலைகள் என்பன புனரமைக்கப்பட்டன. கடந்த மூன்று வருடங்களுக்குள் எமது அரசு புதுப்புது பட்டணங்களைக் கொண்ட ஒரு பூம்புகாரையே உருவாக்கியுள்ளது” என்று சொல்லி பூம்புகாரின் பழம்பெரும் கதையை விதந்து கூறினேன்.

யாழ்ப்பாணத்துக்கு விடுமுறைக்காக வருவோர்

இது என்ன ஆச்சரியம்! இத்தனை நாட்களாக நான் கொழும்பு வருவதுண்டு யாழ்ப்பாணம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை, அடுத்த முறை மனைவி மக்களோடு ஓய்வினைக் கழிக்க இங்கு விஜயம் செய்வேன்” என்று தனது உள்ளக் கிடக்கையைத் தெரிவித்தார், எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்த மாலைதீவு தேசிய சபையின் சபாநாயகர் அஹமத் ஷிஹாப்.

ஏன் நாமும் வருவோம் என்றார், இடதுபுற ஆசனத்தில் அமர்ந்திருந்த மாலைதீவு பாராளு மன்ற உறுப்பினர் ஹம்தூக் அப்துல்லா ஹமீத் பசுபிக் கடலில் இருக்கின்றது ணீook ஐலண்ட் அந்தப் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் வில்ஸ்கி ரஸமுசன் -Wilskie Rasa mussen.

இதுவல்லவோ Treasure lsland ?

“இதுவல்லவா நாம் பாடசாலையில் படித்த tresure (தனக் களஞ்சியம்) தீவு” என்று தனது ஆச்சரியத்தைத் தெரிவித்தார். இலங்கையர்களாகிய நாம் கேட்டும்பார்த்தும் பழக்கம் இல்லாதது கனடாவின் கல்காரி calcary பிராந்திய மாகும். இந்தப் பிராந்தியத்தின் பாராளு மன்ற உறுப்பினர் devinder Shorn, “இங்கு நாம் வருவதற்கு முன்பு இது யுத்தம் நடைபெற்ற காட்டுமிராண்டி நாடாகும். ஒவ்வொரு மரத்தின் கீழும் இராணுவம் நிறுத்தப்பட்டிருக்கும்; எங்கு போனாலும் இலங்கைக்குப் போகாதீர்கள்; இலங்கைக்குப் போனாலும் யாழ்ப்பாணப் பக்கமே தலையைக் காட்டக் கூடாது” என்று எம்மைப் பயமுறுத்தியிருந்தனர். “ஆனால், நாம் வந்தோம்; பார்த்தோம். உண்மையை விளங்கினோம். மன நிறை வோடு போகிறோம்; திரும்பவும் வருவோம்” என்றார் நியூசிலாந்து பிரதிநிதி.

இந்தப் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சி யைக் கண்டு நெகிழ்ந்து போய் நின்ற நான். ஒலிவாங்கியைத் தந்தவரிடம் மீண்டும் கையளிக்கையில், “மீண்டும் யாழ்ப்பாணம் வருக” என்று தமிழில் பொறிக்கப்பட்டிருந்த ஒரு பாரிய பதாகை என் கண்ணில் பட்டது.

“மீண்டும் யாழ்ப்பாணம் வருக..!”

(அஜி, தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com