Contact us at: sooddram@gmail.com

 

Innocence of Muslim

பின்னணி என்ன?

(எம்.எஸ். சாஜஹான்)

அது செப்டம்பர் 8 சனிக்கிழமை. எகிப்தின் ஷேக் காலித் அப்துல்லாஹ்வின் தொலைக்காட்சியான அல்-நாஸ்-அரபிய மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த 13.51 நிமிடங்கள் மட்டும் ஓடும் வீடியோவை முதன்முதலாக வெளியிட்டது. ஒரு சில மணித்தியாலயங்களில் அது கணனி மூலம் அரபுலகில் வலம் வந்தது. பல்லாயிரணக்கானோர் அல்லது சில லட்சம் பேர் ஓரிரு நாட்களில் அதனைப் பார்த்தனர். ஆத்திரம் அடைந்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் YOU TUBE அது வந்ததைப் பார்த்தனர். அவ்வளவுதான்! அரபுலகம் வெடித்தது.

சேம் பெசில் (Sam Bacile) என்ற அந்த நபர் ஜுலை மாதம் 1ஆம் திகதியன்று Innocence of Muslim என்ற திரைப்படத்தின் முன்னோட்டத்தை (Trailer) YOU TUBE இல் பதிவு செய்தார். தன்னை கலிபோர்னியாவின் Real Estate வர்த்தகர் என்று அறிமுகப் படுத்திய அவர், அப்படத்தின் இயக்குநரும், கதை அமைத்தவரும் தானே என்று ஊடகங்களுக்குக் கூறினார். இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தைத் தயாரிக்க 100 யூதர்களிடம் மொத்தமாக 50 இலட்சம் டொலர் சேர்த்ததாகவும் கூறிய அவர், இஸ்லாம் ஒரு கேன்சர் - புற்றுநோய் என்று திரும்பத் திரும்ப ஊடகங்களோடு பேசும்போது கூறினார்.

தன்னை ஒரு இஸ்ரேலி -அமெரிக்கன் என்று அவர் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால், இவரது பெயரில் எந்த இஸ்ரேல் - அமெரிக்க பிரஜையும் இருப்பதாக தங்களிடம் குறிப்பு இல்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்தது. ஆகவே, சேம் பெசில் என்பது புனைப்பெயராக இருக்கலாம் என்று ஊடகங்கள் ஊகித்தன - ஆராய்ந்தன.

இப்படத்தின் ஆலோசகராக இருந்த ஸ்டீவ் க்ளெய்ன் (Steve Klein)  ூறும்போது, சேம் பெசலி யூதனோ - இஸ்ரேலைச் சேர்ந்தவனோ அல்ல என்றார்.

Nakoula Baasseley Nakoula  என்பதுதான் அவரது இயற்பெயர் என்று காவல்துறை உறுதி செய்தது. இவருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. நிகோலா பெசிலி (Nicola Bacily) எர்வின் சலமெஹ் (Erwin Salameh) என்ற பெயர்களிலும் இவர் உலாவினார். இவரது கடந்த காலம் சிறப்பானது அல்ல.

பொய்யான வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, Social Security Numbers  எனப்படும் சேமலாப நிதி போன்ற அமைப்பில் உள்ள பிறர் பணத்தைக் களவாடி, தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி, பின்பு அப்பணத்தை வேறு வங்கிக்கு மீண்டும் மாற்றி, கணக்கை மூடிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, 2010இல் அவருக்கு 790,000 டொலர் தண்டப் பணமும், 21 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

சேம் பெசலி உண்மையில் யூதர் அல்ல. எகிப்தின் Coptic Christians என்று கூறப்படும் கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்தவர். சமீப காலத்தில் இவர்கள் பெரிய அளவில் எகிப்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இம்மக்களுக்கு எதிரான எதிர்ப்பு அலை எகிப்தில் பலமாக இருக்கிறது. அவர்கள் பலவாறாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய பத்திரிகைகளில் வந்தன. இக்கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆதிகாலத்திலேயே பிணக்குகள் உண்டு என்று கூறுவர்.

அன்றொரு நாள் கெய்ரோவின் ஆளுநராக இருந்தவரிடம் ஒரு முறைப்பாடு செய்யப்பட்டது. அதாவது, நகரின் ஒரு பகுதியில் இருந்த கிறிஸ்தவர்களின் வழிபாட்டுச் சிலையொன்றின் மூக்கு உடைக்கப்பட்டுள்ளது என்று கிறிஸ்தவர்கள் கூறினர். ஆளுநர், ஒருவாரம் அவகாசம் தாருங்கள், குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன் என்றார். ஒரு வாரத்தில் ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் ஒரு வாரம் அவகாசம் கேட்டார். அப்போதும் குற்றவாளி பிடிபடவில்லை.

அடுத்த வாரம் ஆளுநர் கூறினார். இன்னும் ஒரு வாரம் தாருங்கள்! அதற்குள் குற்றவாளி பிடிபடாவிட்டால் நீங்கள் பதிலுக்கு எனது மூக்கை உடைக்கலாம் என்றார். மீண்டும் தோல்வி. ஆளுநர் -மூக்குடைக்கப்பட்ட சிலையின் முன்னால் வந்து நின்றார். அவரது மூக்கை உடைக்க ஒருவர் முன்வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர், நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!! என்று கத்தினார். சிலையின் மூக்கை உடைத்தது தானே என்றும், இதன்மூலம் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சண்டை உண்டாகும் என்று தான் நம்பியதாகவும் அவர் கூறினார்.

Innocence of Muslim  படத்தின் முதல் காட்சி இன்றைய எகிப்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. காவல்துறை மெளனித்து நிற்க, வெள்ளை ஆடையணிந்த முஸ்லிம்களால் மருத்துவர் ஒருவரின் சிகிச்சையகம் உடைத்து நொறுக்கப்பட்டு, எரியூட்டப்படுகிறது. உயிர் தப்ப வெளியே ஓடிய மருத்துவர், அடுத்த கட்டடத்தின் மாடியில் இருந்த தனது மகளை அழைத்து, தனது சிகிச்சையகம் தாக்கப்படுவதாகக் கூறுகிறார். வீடு சென்ற அவர், தனது மகள்களிடம், இங்குள்ள எல்லா கிறிஸ்துவர்களையும் கொல்ல முஸ்லிம்கள் விரும்புகிறார்கள் - கொல்லுகிறார்கள்... ஆனால் அரசு அதனை மூடி மறைக்கிறது என் கிறார். இந்தக் காட்சி முஸ்லிம்களுக்கெதிராக கிறிஸ்துவர்களின் உணர்வுகளைத் தூண்டக்கூடியதாக உள்ளது.

அடுத்து வரும் காட்சிகளில் முஹம்மது நபியின் வாழ்க்கை, அவர்களது குடும்பம், அவர்களது கூட்டத்தார் காட்டப்படுகின்றனர். எழுத்தில் வடிக்கவே முடியாத இன்னும் அருவருப்பான பாலியல் காட்சிகளும் அதில் உள்ளடக்கம். (நஊது பில்லாஹ்....!)

குர்ஆனை உருவாக்குவதின் பின்னணியில் கதீஜா இருந்ததாகவும், குர்ஆன் ஆனது கிறிஸ்துவ - யூத வேத நூல்களான Tora and new Testamentfisg  ின்பற்றியதே என்றும் குறிப்பிடுகிறார். மொத்தத்தில், இஸ்லாம் என்பது வன்முறை, பிறர் வெறுப்பு ஆகியவற்றை அடையாளமாகக் கொண்டது எனவும், முஹம்மது என்பவர் அறிவு குறைந்தவர் என்றும், அதிகார மோகம் கொண்டவர் என்றும் பலவாறாக Innocence of Muslim  அள்ளித் தெளிக்கிறது.

ஆரம்பத்தில் இப்படத்திற்கு Desert Storm  - பாலைவனப் புயல் என்று பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்ததாம். பின்பு அது Innocence of Bin Laden  என்றும் மாற்றப்பட்டதாம். படத்தில் நடித்தவர்களோ, தங்களுக்கு இப்படத்தின் முழுக்கதையும் சொல்லப்படவில்லை என்றும், ஒரு மாதத்திற்கும் குறைவாக நடந்த படப்பிடிப்பில் அன்றைய தினத்திற்குரிய வசனங்கள் மட்டுமே தரப்படும் என்றும், இது இஸ்லாத்திற்கு எதிரான படம் என்று தங்களுக்கு எதுவுமே தெரியாது என்றும், படப்பிடிப்பிற்குப் பிறகு பல வசனங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். முஹம்மதுவாக படத்தில் தோன்றுபவர் தனது பெயர் படத்தில் மாஸ்டர் ஜோர்ஜ் என்பதாகவும், இப்படம் இவ்வாறான கதையைக் கொண்டுள்ளது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக இப்படத்தில் நடித்தவர்களுக்கு அசல் கதை தெரியாது. வித்தியாசமான வசனங்களையே பேசியுள்ளனர். ஆனால், சேம் பெசலி மற்றும் இவனோடு இணைந்த சில முஸ்லிம் எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமே உண்மை தெரியும் என்கின்றனர்.

அமெரிக்க அரசு YOU TUBE நிறுவனத்திடமும், அதன் உரிமையாளரான GOOGLE இடமும், இந்த 13.51 நிமிட குறும்படம் உங்களது சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் என்று கூறி, தடை செய்யக் கோரியபோது, GOOGLE அதை முழு அளவில் தடை செய்ய மறுத்துவிட்டதோடு, பிரச்சினைக்குரிய நாடுகளான - மத்திய கிழக்கிற்கும், இந்தியா, இந்தோனேஷியா போன்ற வேறு சில நாடுகளுக்கும் தடை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இன்றும் அதனைப் பார்க்க முடியும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹொலிவுட்டிலுள்ள Vine Theatre என்ற சிறிய திரையரங்கில் இப்படம் ஒரேயொரு காட்சியாக மட்டும் திரையிடப்பட்டது. அப்போது அப்படத்தைப் பார்த்தவர்கள் வெறும் பத்தே பேர்தான். இப்படம் திரையிடப்பட்டபோது, அதன் தயாரிப்பாளரான சேம் பெசலி - அருகிலுள்ள உணவு விடுதியில் அமர்ந்தவாறு, தன் படத்திற்கான வரவேற்பு எப்படியுள்ளது என்று பார்த்துக்கொண்டிருந்தார். தற்சமயம் அத்திரையரங்கம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தை வெறும் பத்து பேர் மட்டுமே பார்த்திருக்க, அதன் 13.51 நிமிட நேரத்தைக் கொண்ட - படத்தின் ஒரு பகுதியை மட்டும் YOU TUBE இல் பார்த்து இவ்வளவு ஆர்ப்பாட்டங்களை முஸ்லிம்கள் செய்வது ஏன் என்று விஷமத்தனமாக கேள்வி எழுப்புகிறார் அப்படத்தின் ஆலோசகர் ஸ்டீவ் க்ளெய்ன்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற மத நிந்தனைகளை மேற்குலகம் தடை செய்ய வேண்டும். இல்லாவிடில், ஏற்கனவே கனலாக இருக்கும் மேற்கு - கிழக்கு உறவு மேலும் எரியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com