|
||||
|
காணி, பொலிஸ் அதிகாரம் வடக்கிற்கு மட்டும் வேண்டுமாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தெரிவித்திருக்கும் கருத்துக்கள், தெரிந்தே செய்யப்படுகிறதும்,திறனாய்வுக்குட்படாததும் மற்றும் ஏமாற்றுகிற வேலையுமாகும் ( கலாநிதி. தயான் ஜயதிலகா) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக்கொண்டால்,13 வது திருத்தம் மூலம் 1987 - 88 ல் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை, 2013லும் பாதுகாத்து அதன்படி வடக்கு தேர்தலை தற்போதுள்ள திருத்தத்தின்படியே நடத்துவதற்காக தான் ஆற்றவேண்டிய தீவிர முயற்சியில் முற்றிலும் சிரத்தையற்றிருப்பதைப் போல் தெரிகிறது. சுருங்கச் சொன்னால், தற்போது சிரமத்தின் மத்தியில் திறக்கப்பட்டிருக்கும் நொருங்கத்தக்கதான நிலையிலுள்ள அரசியல் இடைவெளியினை பாதுகாக்கவும் மற்றும் எல்லா நேரத்திலும் கணிசமான பகுதி தெற்கின் நல்லெண்ணத்தை பெறவேண்டியதன் அவசியத்தை அல்லது சபைக்கு எதிரான தென்பகுதியினரின் எதிர்ப்புகளை நடுநிலைப்படுத்த வேண்டும் என்பதைப்பற்றியும் அது அக்கறைப் படாதது போலத் தோன்றுகிறது. 1977ல் தற்பெருமை மிக்க, உணர்வைத் தூண்டும் தேர்தல் சொல்லாட்சிகள், ரி.யு.எல்.எப் இனை கொழும்புடன் ஒரு மோதல்போக்கினை ஏற்படுத்துவதற்கு ஏற்ற ஒரு பங்கினை வகித்திருந்தன. அது திரும்பவும் நடக்கப்போகிறது மற்றும் இந்தமுறை மோதல் நிச்சயம் மற்றும் ஒருவேளை அது மிகவும் பலமான விளைவுகளையும் உருவாக்கும்.ஒரு தவறான கணிப்பீடு ஒரு நீடித்த முட்டுக்கட்டையை ஏற்படுத்துவதுடன், இன்னும் மோசமாக ஒரு அரசியல் வியூகமாக - இராணுவக் கட்டுப்பாடும் ஏற்படுத்தப்படலாம். ரி.என்.ஏ யின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிப்படுத்துவது தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிலவேளைகளில் அவர்களது வடபகுதி தேர்தல் தொகுதிகள் என்பன அவர்களது தென்பகுதி எதிரிகளைப்பற்றி மிகவும் குறைவாகவே கற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையே. இங்கு நான் பெடரலிசத்துக்கான அழைப்பையோ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பையோ குறிப்பிடவில்லை, அவை பலருக்கு மறுப்பளிப்பதாக இருக்கலாம் மற்றும் அதைத் மீண்டும் தொடக்குவது புத்திசாலித்தனமல்ல ஆனால் அவை சட்டவிரோதமானவை என வெகு அரிதாகத்தான் விபரிக்க முடியும். அது வாதத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும் கூட, இவை பெறுமதியான அரசியல் நிலைப்பாடு மற்றும் முன்மொழிவுரைகளாகும். ரி.என்.ஏ யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள ஏனைய முக்கிய அம்சங்களுக்குப் பதிலாக நான் வேறு சிலவற்றைக் குறிப்பிடுகின்றேன். ஒன்று தெரிந்தே செய்யப்படுகிறதும், திறனாய்வுக்குட்படாததும் மற்றும் ஏமாற்றுகிற வேலையுமான எல்.ரீ.ரீ.ஈ பற்றிய குறிப்புகள். எனினும் ரி.என்.ஏ யின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆரம்பத்திலிருந்தே ஆராய்வோம். அது கூறுவது, “1948ல் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் சாதாரண பெரும்பான்மை ஆட்சியுடன்கூடிய ஒற்றையாட்சி வகையான அரசியலமைப்பு முறையே இலங்கைமீது திணிக்கப்பட்டது” என்று. அதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் தனது தீhப்பை விபரிக்கும்போது ரி.என்.ஏ சோல்பரி அரசியலமைப்பைகூட நிராகரிக்கின்றது என்பதையே. அந்த அரசியலமைப்பு அரசாங்கத்தின் ஒற்றையாட்சி இயல்பின் தன்மை பற்றி மௌனம் சாதிக்கிறது, மற்றும் ஒரு மதச்சார்பற்ற அரசியலமைப்புக்கு மிகவும் நெருக்கமாக நாங்கள் கொண்டிருந்த ஒரு அரசியலமைப்பு அதுவாகும். ஒற்றையாட்சி பற்றி வெளிப்படையான அர்ப்பணிப்பு மற்றும் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களுக்கும் மற்றும் பௌத்த மதத்துக்கும் சலுகையான இடமுள்ள ஒப்பந்தத்தின் ஈடுபாடு காணப்படுவது 1972ல் உருவாக்கப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பு அம்சங்களிலேயே. 1972ம் ஆண்டின் அரசியலமைப்பினை தமிழ் தேசியவாதம் எதிர்த்தது முற்றிலும் நியாயமானதே. சோல்பரி அரசியலமைப்பு பற்றி ரி.என்.ஏ யின் கருத்துகள்தான் அதிர்ச்சியளிக்கின்றன. இது ரி.என்.ஏ எந்தவகையான ஒற்றையாட்சி அரசாங்கத்தையும் ,பிரித்தானிய தொழிற்கட்சி நிருவாகத்தினரால், ஒற்றையாட்சி தன்மை புத்திசாலித்தனமாக மௌனமாக்கப்பட்டு மற்றும் 1972ல் அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் குறிபிடப்பட்டுள்ள பெரும்பான்மை மேலாதிக்கத்தை பின்பற்றாமல் வடிவமைக்கப்பட்ட யுத்தத்துக்குப் பின்னான முற்போக்கான அரசாங்கத்தைப் போன்ற ஒன்றைக்கூட, எதிர்க்கும் என்பது வெளிப்படை. இதன்படி ரி.என்.ஏ வெறுமனே பெரும்பான்மை ஆட்சியமைப்பையே எதிர்க்கிறது, அது ஜனநாயகம் என்றுகூறி தப்பிக்கமுடியாது. ரி.என்.ஏ யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எல்.ரீ.ரீ.ஈ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை நெறிமுறைப்படி நேர்மாறானவை. எல்.ரீ.ரீ.ஈ யினைப்பற்றி எந்தவித விமர்சனமும் வெளியிடாமல் தேர்தல் விஞ்ஞாபனம் வெறுமனே கூறுவது,” எரியும் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியல் முன்னணியினரால் எந்தவித முன்னேற்ற முயற்சிகளும் மேற்கொள்ளப் படாததினால், தமிழீழ விடுதலைப் புலிகள்( எல்.ரீ.ரீ.ஈ) தங்கள் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்தனர்” என்று. இதை சாதாரணமாக சொல்வதானால் அது ஒரு பொய்க்கு சற்றும் குறைந்ததல்ல. இந்திய - ஸ்ரீலங்கா ஒப்பந்தம் மற்றும் வடக்கு - கிழக்கு மாகாணசபை என்பனவற்றைப் பற்றி ரி.என்.ஏ என்ன சொல்லப்போகிறது? 1987 செப்டம்பரில் எல்.ரீ.ரீ.ஈ க்கு வழங்கப்பட்ட இடைக்கால நிருவாகம், உள்ள 11 ஆசனங்களில் தலைமைப் பதவி உட்பட வழங்கப்பட்ட 7 ஆசனங்களை பற்றி என்ன சொல்வது? இத்தகைய மாற்றீடுகள் எல்லாம் இருக்கும்போதே அதைவிடுத்து புலிகள் தங்கள் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்ததுடன் ராஜீவ் காந்தியை படுகொலை செய்யுமளவிற்கு தங்கள் முயற்சியை தொடர்ந்தார்கள். ஜனாதிபதி பிரேமதாஸவுக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் என்னவாயின? பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே புலிகள் தன்னிச்சையாக போரைத் தொடர்ந்தார்கள். 1993ல் மங்கள முனசிங்க கொண்டுவந்த திட்டங்கள் என்னவாயின? இந்த அரசியல் முயற்சிகளை புறம்தள்ளி பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டார். 1995,1997 மற்றும் 2000 ஆண்டுகளில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் முன்னேற்றகரமான அரசியல் மறுசீரமைப்பு தொகுப்புக்களைப் பற்றி என்ன சொல்வது? புலிகள் தங்கள் போரை நிறுத்தினார்களா அல்லது சீர்திருத்த அரசியல் தெரிவுகள் எல்லாவற்றையும் மீறி போரைத் தொடர்ந்தார்களா? ரி.என்.ஏ யின் தேர்தல் விஞ்ஞாபனம் பிறகு குறிப்பிடுவது “ ஆரம்பத்தில் பல இராணுவ அமைப்புகள் இருந்தபோதும்,1987ல் இருந்து போராட்டத்தை தொடர்வதில் தனி இராணுவ சக்தியாக எல்.ரீ.ரீ.ஈ வெளிப்பட்டது” என்று. தனி இராணுவ சக்தியாக எல்.ரீ.ரீ.ஈ வெளிப்பட்டது என்கிற கருத்துடன் எப்படி இசைவது? அந்த எழுச்சிக்கு, ரெலோவின் சிறீ சபாரத்தினத்தின் படுகொலையுடன் மற்றும் 1986 ஏப்ரல் 30ல் யாழ்ப்பாண வீதிகளில் கடைக்காரர்கள் குளிர்பானங்களை வழங்கிக் கொண்டிருக்க, எல்.ரீ.ரீ.ஈ ரெலோ அங்கத்தவர்களை உயிரோடு தீயிட்டு கொளுத்தியதுடன் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? அந்த அதிசயமான வெளிப்பாட்டுடன் 1986ன் பிற்பகுதிகளில், ஈ.பி.ஆர்.எல்.எப் அங்கத்தினர்களை கைதிகளாக்கி எல்.ரீ.ரீ.ஈயினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்ததுடன் ஏதாவது தொடர்பு உள்ளதா? புளொட் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் தலைவர் வாசுதேவன் கடற்கரை மணலில் எல்.ரீ.ரீ.ஈ யினால் உயிரோடு எரிக்கப்பட்டதுடன் அதற்கு ஏதாவது சம்பந்தம் உள்ளதா? ரி.என்.ஏ யின் தேர்தல் விஞ்ஞாபனம் புலம்பும் மற்றொரு காரணம் “ யுத்தநிறுத்த ஒப்பந்தம்… அதிக காலம் நிலைக்கவில்லை மற்றும் அரசாங்கப் படைகளுக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் மோதல்கள் வெடித்ததுடன், இராணுவ மோதல்கள் 19 மே 2009 ல் முடிவுக்கு வந்தன” என்பதாகும். யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது புலிகள் டசன் கணக்கான இராணுவ மற்றும் காவல்துறை ஆட்களை கொலை செய்ததுடன், ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சராக இருந்த கௌரவ லக்ஸ்மன் கதிர்காமரை சுட்டுக் கொன்று யுத்தநிறுத்த ஒப்பந்தத்துக்கு பலத்த அடியேற்படுத்தும் செயலைப் புரிந்தது போன்ற எல்.ரீ.ரீ.ஈ யின் செயற்பாடுகளை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளதனால் இது ஒரு மழுப்பல் அறிக்கை. ரி.என்.ஏ யின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றில் எல்.ரீ.ரீ.ஈயை பற்றிய எந்த ஒரு மேற்கோளையும் குறிப்பிடாமல் தவிர்த்திருக்க வேண்டும், அல்லது குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் உள்ளக மரணதண்டனை, நிராயுதபாணியான பொதுமக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள ்,ராஜினி திரணகம போன்ற தமிழ் கல்வியாளர்களின் கொலைகள், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழுவின்மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித் தனமான படுகொலைகள், ராஜீவ் காந்தியின் படுகொலை (அவரால்தான் ரி.என்.ஏ யிற்கு போட்டியிடுவதற்கும் அதற்குள் நுழைந்து அதைப்பற்றி குற்றம் சொல்லவும் ஒரு மாகாணசபை கிடைத்துள்ளது. அதற்காக அவருக்கு நன்றி), மற்றும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் நீலன் திருச்செல்வம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்களை ஒழித்துக்கட்டியது போன்றவற்றிற்காக எல்.ரீ.ரீ.ஈக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். இவைகளில் ஒன்றைக்கூடச் செய்யாமல் மற்றும் முற்றிலும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் எல்.ரீ.ரீ.ஈ பற்றிக் குறிப்பிட்டிருப்பது, ஒன்றில் ரி.என்.ஏ தமிழ் புலம்பெயர்வாளர்கள் மற்றும் தமிழ் நாட்டிலுள்ள புலிகள் சார்பு உணர்வுள்ள பிரிவினர்கள் அல்லது அத்தகைய உணர்வுள்ள அதன் அணியிலுள்ளவர்கள் அல்லது அவர்களின் ஆதரவு தளத்திலுள்ளவர்கள் போன்றவர்களால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்க வேண்டும். அது மேலும் தெரியப்படுத்துவது எல்.ரீ.ரீ.ஈ தமிழர் போராட்டக் கதையில் ஒரு விலகல் அல்லது பிறழ்ச்சியாக இருந்தது என்பதைக் காட்டிலும், எல்.ரீ.ரீ.ஈ அந்தக்கதையின் ஒரு அங்கமாக இருந்தது என்று காண்பிக்க ரி.என்.ஏ தீவிர ஆர்வம் காட்டுகிறது என்று. புலிகளின் போராட்டத்தில் தன்னை ஒரு அரசியல் தொடர்பாளராக காட்டிக் கொள்வதற்கும் ரி.என்.ஏ தயாராக உள்ளது போலவும் தோன்றுகிறது. இறுதியாக நாட்டின் குடிமக்களின் பெரும்பகுதியினரின் உணர்ச்சிகளின் உணர்திறன் பற்றிய அறிவு முற்றிலும் குறைவாக உள்ளதைப்போல தெரிகிறது, இங்கு ஆயுதப் படையிரைப்பற்றி குறிப்பிட்டிருக்கத் தேவையில்லை. ரி.என்.ஏ யின் தேர்தல் விஞ்ஞாபனம் தெரிவிப்பது “யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் புலிகள் ஆகிய இருபகுதியினரும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் என்பனவற்றை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்”. என்று. சின் பெயின் அல்லது ஐ.ஆர்.ஏ பிரதான அரசியல் தேர்தல் நீரோட்டத்தில் கலந்துகொண்டபோது, இரத்த ஞாயிறு பற்றியோ, பொபி சான்ஸ் மற்றும் பலரின் மரணத்துக்கு வழிதேடிய வெகுஜனப் போராட்டம் என்பன பற்றி ஒரு சர்வதேச விசாரணையை கோரவில்லை என்பதை ரி.என்.ஏ விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ரி.என்.ஏ எழுப்பியுள்ள இந்தக் கோரிக்கை தெற்கில் எந்தவித அதிர்வலைகளையும் ஏற்படுத்தப் போவதில்லை. தனது அரசியல் தீர்வு இந்த நாட்டு மக்களிடையே இறைமையை பகிர்ந்து கொள்வதுதான் என்பதை ரி.என்.ஏ அடையாளம் காட்டுகிறது. ஸ்ரீலங்கா ஒரு ஜனநாயக குடியரசு, மத்திய அரசு அதிகாரத்தை தனது சுற்றளவுக்குள் அது பகிர்ந்து கொள்ளும் ஆனால் இறையாண்மை என்பது அரசியலமைப்பு மக்களுக்கு பகிரப்படும் ஒன்றல்ல என்பதை ரி.என்.ஏ தெரிந்து கொள்ள வேண்டும். இறையாண்மை முழுப் பிரஜைகளுக்கும் அளிக்கப்பட்ட ஒன்று. தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் தெரிவிப்பது “ இறையாண்மை மக்களிடமே தங்கியுள்ளது, அரசாங்கத்திடம் அல்ல என்று ரி.என்.ஏ உறுதியாக நம்புகிறது. கொழும்பிலுள்ள அரசாங்கம்தான் தமிழ் மக்களை ஆள்வதற்கு உரிமை கொண்டுள்ளது என்றில்லை, ஆனால் மக்கள்தான் தங்களை ஆளும் உரிமையை கொண்டுள்ளார்கள்” என்று. இது வெகு சாதுர்யமாக திரித்துக் கூறப்பட்டுள்ளது. முதலாவது வசனத்தில் மக்கள் என்று இருப்பது, இரண்டாவதில் தமிழ் மக்கள் என்று மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இறையாண்மை மக்களில்தான் தங்கியுள்ளது ஆனால் அது ஒரு இனத்தை சார்ந்த மக்களில்தான் தங்கியுள்ளது எனக்கூறுவது தவறு, அதன் கருத்து மக்கள் ஒரு மொத்த தொகையாக கணிக்கப் படுகிறார்கள் என்பதாகும், அதாவது மக்கள் முழுவதும் என்பதாகும். தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் கூறுவது “ இது தொடர்பாக ஸ்ரீலங்கா அரசியலமைப்பின் 13 வது திருத்தம் குறைபாடுள்ளதாக உள்ளது, அதில் அதிகாரம் மத்திய அரசுக்கும் அதன் முகவரான ஆளுநருக்கும் செறிவாக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசியல் சித்தாந்தம் சர்வாதிகார அரசுக்கு எதிராக சவால்விடும் அடிப்படை ஜனநாயகத்துடன் வேரூன்றியுள்ளது. தற்போதைய ஆட்சியையோ அல்லது யுத்தத்துக்கு பி;ன்னான கொள்கைகளையோ ரி.என்.ஏ இங்கு விமர்சிக்கவில்லை ஆனால் 1987ல் பிரகடனப் படுத்தப்பட்ட 13வது திருத்தத்தை அது விமர்சிக்கிறது என்பதை இது குறிப்பிடுகிறது. நவி பிள்ளை அம்மையார் ஸ்ரீலங்கா அரசு ஒரு சர்வாதிகார பாதையில் செல்கிறது எனக் கருதினாலும்கூட ரி.என்.ஏ, 1987ம் ஆண்டிலிருந்த அரசைக்கூட சர்வாதிகார அரசு என்று சாட்சியம் பகருகிறது, மற்றும் அரசுக்கு எதிராக ஒரு அடிப்படைச் சவாலுக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றை தான் விடுப்பதாகவும் அது கருதுகிறது, என்றாலும்கூட அதை ஜனநாயக முறையாகவும் அது கருதுகிறது. இதன்படி பிரச்சினையானது கொள்கையிலோ அல்லது ஆட்சியின் கொள்கைமுறையிலோ இல்லை, ஆனால் அரசாங்கத்தினதும் மற்றும் அதன் கட்டமைப்பு சீர்திருத்தத்திலும் அதாவது 13வது திருத்தத்திலுமே உள்ளது என்றாகிறது. ரி.என்.ஏ அது புலம்பும் குறைபாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு வழியே உள்ளது என்பதை கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். அதன் கருத்து ஒரு சர்வசன வாக்கெடுப்பு அவசியம் என்பதாகும் அது நிச்சயம் நாடளாவிய ஒன்றாகவும் இருக்கவேண்டும் இதன் திருப்பம் ஒன்றில் ரி.என்.ஏ பெரும்பான்மை வாக்காளர்களை தற்போதுள்ள அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு எதிராக இணங்கச் செய்யவேண்டும் அல்லது ரி.என்.ஏ யின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் மற்றொரு அரசாங்கத்தை அமைப்பதற்காக ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். அந்த அதிர்ஸ்டம் கிட்டவேண்டும் என்று என்னால் வாழ்த்த மட்டுமே முடியும். ரி.என்.ஏ யின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இறுதி செய்யும் வசனம் “ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும் மற்றும் நிரந்தர சமாதானத்தின் மூலம் நீதியான சமரசத்தினை அடைவதை சர்வதேசத்தின் மேற்பார்வையின்கீழ் மட்டுமே சாதிக்க முடியும் என்கிற கண்ணோட்டத்தில் ரி.என்.ஏ உறுதியாக உள்ளது” எனக்கூறுகிறது. இது தெளிவாகத் தெரிவிக்கும் சமிக்ஞை என்னவென்றால், நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள ஜனநாயக எண்ணம் கொண்ட ஜனநாயக சீர்திருத்த சக்திகளை ரி.என்.ஏ தனது முதன்மைப் பங்காளியாக கருதவில்லை என்பதையே. மேலும் இதன் கருத்து என்னவென்றால் ரி.என்.ஏ உடன் கூட்டுச் சேரும் எந்தக்கட்சியும் நீதி,சமரசம்,மற்றும் நிரந்தர சமாதானம் என்பனவற்றை சர்வதேசததின் மேற்பார்;வையின் கீழ் மட்டுமே அடையமுடியும் என்னும் கருத்தில் உறுதியாக உள்ளது என்பதாகும், இதன்படி அதனுடன் கூட்டுச்சேரும் எந்தவொரு பிரதான நீரோட்டத்திலுள்ள தென்பகுதி ஜனநாயக வேட்பாளரோ அல்லது அமைப்போ அதன் தேர்தல் அழிவினையே சந்திக்கமுடியும். ரி.என்.ஏ ஒரு தெரிவினை மேற்கொண்டுள்ளது. எனவே அது அப்படியே இருக்கும். இதன் கருத்து எந்த வழியிலும் ரி.என்.ஏ யினை வலுக்கட்டாயமாக பணியவைக்கவேண்டும் என்பதோ அல்லது சட்டப்படி தொந்தரவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதோ இல்லை. இதுவரை சிறிய அளவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது, அதாவது மாகாணசபை தேர்தல்கள் இன்னமும் நடத்தப்படவில்லை. அதன் கருத்து என்ன,அரசியல் ரீதியாக இப்போதுள்ள அரசாங்கம் மட்டுமன்றி ஸ்ரீலங்கா தேசம் மற்றும் ஜனநாயக அரசியல்வாதிகள் ஆகியோர், ரி.என்.ஏ யினை நம்ப முடியாது மற்றும் நம்பக்கூடாது என்பதா. ரி.என்.ஏ பற்றிய கொள்கைகளை பழைய நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது என்பதா அல்லது, சிங்கள வல்லூறுகள் வலியுறுத்துவதைப் போல அதிகாரப் பகிர்வுகளை வெட்டிக் குறைக்க வேண்டும் என்பதா, ஆனால் நிச்சயமாக 13வது திருத்தத்தின் கடுமையான சட்ட வரையறைகளுக்குள் அரசியல் தடைகள் மற்றும் தமிழ் அரசியல் கருத்துக்கள் மேலும் மிதமான மற்றும் யதார்த்தமான திசையை நோக்கி திரும்பும் வரை விழிப்புடன் கட்டுப்படுத்தக் கூடிய ஒன்றாக அது இருக்கவேண்டும், எனினும் அதற்கு நீண்ட காலம் எடுக்கும். (தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்) (தேனீ ) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |