|
||||
|
போரின் வலிகளை உணர்த்தும்
எழுத்துக்கள்
- கிருஷ்ணமூர்த்தியின்
மறுவளம்
(ரஸஞானி) விவேகானந்தர்
துறவி என்றாலும்,
அவர் மனிதன்
தனது அடையாளத்தை
விட்டுச்செல்வதற்கு
மூன்று ஆலோசனைகளை
சொல்லியிருக்கிறார். மனிதன் பிறக்கிறான்,
மறைகிறான்.
இடையில் அவனிடமிருப்பது
நீண்ட அல்லது குறுகியகால
வாழ்க்கை.
அந்த இடைவெளியில்
அவன் உருப்படியாக
மூன்றுவிடயங்களில்
ஏதாவது ஒன்றையாவதுசெய்துவிடவேண்டும்.
இல்லையேல் அவனுக்குப்
பிறகு அவனதுபெயர்
சொல்வதற்கு
அடையாளமாக
ஒன்றும் இருக்காது.
இல்லறத்தில் ஈடுபட்டு
ஒருபிள்ளைக்காவது
பெற்றோராகிவிடவேண்டும்.
அல்லது தனதுபெயர்
சொல்ல ஒருவீட்டையாவது
விட்டுச்செல்லவேண்டும்.
அல்லது ஒருபுத்தகம்
எழுதிவிடவேண்டும்.
நண்பர் கிருஷ்ணமூர்த்தியின்
மறுவளம் நூலைகையிலெடுத்தபொழுது
விவேகானந்தர்
சொன்னதுதான்
எனது நினைவுக்கு
வந்தது. கிருஷ்ணமூர்த்தி
ஒன்றல்ல மூன்றுகடமையையும்
செய்துவிட்டார். குழந்தைகளின்
தந்தையாக
குடும்பத்தலைவன்,புகலிடத்தில்
உழைத்துவீடு.
தற்பொழுது ஒருநூலையும்
வாசகர்களுக்கு
சமர்ப்பித்து
விட்டார். நீண்டகாலமாக அவர் எழுதிவந்தாலும்
தற்பொழுதுதான்
ஒருநூலைவெளியிடவேண்டும்
என்ற விருப்பத்திற்கு
வந்துள்ளார்
என்பதனால்
விவேகானந்தரின்
கூற்றையும்
இங்கு குறிப்பிட்டேன். இலங்கையில்
தமிழில் பத்தி எழுத்துக்களை
பரவலான அறிமுகத்துக்குவிட்டவர்
திறனாய்வாளர்
கே.எஸ். சிவகுமாரன். அவர் தாம் படித்ததமிழ்
ஆங்கில நூல்கள் மற்றும் பிறமொழிப்படைப்பு
மொழிபெயர்ப்புகள்,
தரமான திரைப்படங்கள்,
நாடகங்கள்
பற்றியெல்லாம்
நயப்புரையாக
திறனாய்வுசெய்பவர். அவுஸ்திரேலியாவில் மெல்பனில்
வதியும் கிருஷ்ணமூர்த்தியும்,
தனது வாசிப்பு
அனுபவங்களையும்
ரசித்த திரைப்படங்களையும்
தன்னால் மறக்கமுடியாத
சம்பவங்களையும்
இந்தநூலில்
பதிவுசெய்துள்ளார். இந்நூலைப்படிக்கும்பொழுது,
அவரதுபார்வையும்
ரசனையும்
துலக்கமாகிறது. தனது கருத்துக்களை
அழுத்தாமல்
வாசகனின்
சிந்தனையில்
ஊடுறுவும்
பாணியை அவர் தமது
பத்தி எழுத்துக்களில்
கையாளுகிறார். தொலைந்துபோனநாட்கள், சிந்தனைக்குச்
சில, எனதுநூலகம்,
மறைந்தும்
மறையாதோர்,
சினிமா, சிறுகதை,நேர்காணல்
முதலான தலைப்புகளில்
தமதுகலை, இலக்கிய, சமூகம் சார்ந்த சிந்தனைகளை
கதம்பமாலையாக
கோர்த்துள்ளார். இலங்கையிலிருந்த
காலத்தில்
அவ்வப்போது
இதழ்களில்
புனைபெயர்களில்
எழுதிவந்திருக்கும்
கிருஷ்ணமூர்த்தி,
அக, புறகாரணங்களே
அதற்குக்காரணம்
என்றும் சொல்கிறார். புனைபெயர்களில் படைப்பாளிகள்
எழுதுவது
வழக்கம்.
புதுமைப்பித்தன், சுஜாதா,
வாலி, ஆகியோருக்கு
இயற்பெயர்
வேறு. ஆனால் அவர்கள்
புனைபெயர்களில்தான்
பிரபலமானார்கள். இலங்கையில் கிருஷ்ணமூர்த்தி
தொடர்ந்து
வாழ்ந்திருப்பாரேயானால்
சிலவேளை அவர் முன்னர்
தமக்குத்தாமே
சூட்டிக்கொண்ட
புனைபெயர்களில்
ஏதாவது ஒன்றில் பிரபலமாகியிருக்கவும்
கூடும். அது அவர் எழுதியவற்றை
பொருத்தும்
அமையும். ஆனால் விதிவசத்தால்
ஐரோப்பியநாடுகளெல்லாம்
சுற்றியலைந்துவிட்டு
இந்த கடல்
சூழ்ந்தகண்டத்துக்குள்
வந்தபின்னர்,
அவரது வாசிப்புத்தாகம்
குன்றாமல்
குடத்துள்
இட்டதீபமாகவே
சுடர்விட்டிருக்கிறது. சிலவருடங்களுக்கு
முன்னர் தங்குதடையின்றி
தொடர்ச்சியாக
சுமார் 14 ஆண்டுகள் மெல்பனில்
வெளியான உதயம் இருமொழிமாத
இதழ் அவரது
ஆற்றலை இனம் கண்டு
ஊக்குவித்திருக்கிறது. உதயம்
இதழில் அவருக்கு எழுதுவதற்கு
வாய்ப்பளித்த
ஆசிரியபீடத்துக்கு
இந்தநூலில்
அவர் நன்றியும்
தெரிவிக்கின்றார். இங்கு அவர் அக- புறகாரணிகள்
எதுவும் இன்றி கிருஷ்ணமூர்த்தி
என்றபெயரிலேயே
எழுதிவந்தவர்.
அவருக்குகேலிச்சித்திரம் வரையும்
ஆற்றலும்
உண்டு. ஆனால் அவர் அந்தத்துறையில்
தன்னை வளர்த்துக்கொள்ள
விரும்பவில்லைப்போல்
தெரிகிறது. உலகில்
எவரும் எங்குவாழத்தலைப்பட்டாலும்
பெற்றவர்களையும்
பிறந்தபொன்னாட்டையும்
மறக்கமாட்டார்கள். இவர் இலங்கையில்
தமது பூர்வீக
வடபிரதேச
ஊரான இடைக்காடு
கிராமத்தை
மறக்காமல்,
அவ்வூர் சனசமூகநிலையங்களுக்கு
தமது மறுவளம்
நூலை சமர்ப்பணம்
செய்துள்ளார். உதயம், திண்ணை, பதிவுகள், யுகமாயினி,
மல்லிகை, குமுதம் காம், யாழ்மணம்,
வீரகேசரி,
ஜீவநதி, எதுவரை,அக்கினிக்குஞ்சு,
அவுஸ்திரேலியா
தமிழ் முரசு,தேனி,
இடைக்காடு
இணையம் முதலானவற்றில்
வெளியானபத்தி
எழுத்துக்களுடனும்
சிட்னியிலிருந்துஒலிபரப்பாகும்
அவுஸ்திரேலிய
தமிழ் ஒலிபரப்பு
கூட்டுத்தாபன
வானொலியில்
ஒலிபரப்பான
ஆக்கங்களுடனும்
மறுவளம்நூலை
தொகுத்திருக்கிறார். ஊரிலே
புழக்கத்தில்
உள்ள ஒருசொல்
மறுவளம். மறுவளமாகப் பாருங்கள்
மறுவளமாகயோசியுங்கள்
என்றெல்லாம்
யாழ்ப்பாணத்து
தமிழ் மக்கள் பேசுவதைக்கேட்டிருக்கின்றேன். நூலின்
முதலாவது
இரண்டாவது
ஆக்கங்கள்
மனதைஉருக்குகின்றன. போரின் கொடூரத்தை,சித்திரவதைக
்கொடுமைகளை
எதிர்பாராத
இழப்புகளை
மரணிக்கும்
வரையில் தொடரும் துன்பியல்
நினைவுகளை
கிருஷ்ணமூர்த்தி
சித்திரித்துள்ளார். படிக்கும்பொழுதுமனம்
பதைபதைக்கிறது. அவர்
தெய்வாதீனமாக
உயிர் தப்பியசம்பவம்
ஒருசிறுகதை
போன்ற மரணம் எனக்கு
மிகஅருகில்
என்ற தலைப்பில்
பதிவாகியிருக்கிறது. தொடர்ந்துவந்த வாழ்க்கைப்போராட்டத்திலிருந்து
தப்பிச் செல்ல அந்நியம்
புறப்படுவதற்காக
கொழும்புக்குவந்து
ஏஜன்ஸியின்
பதிலுக்குகாத்திருந்து
ஒருவிடுதியில்
தங்கியிருந்தவேளையில்
ஊர் நண்பர்
ஈழநாடுபத்திரிகையுடன்
வந்துசொல்லும்
செய்தி:- இவருடைய ஊர்ச்சந்தியில்
விமானம் போட்டகுண்டில்
இவரது நண்பர்கள்
சிலர் கொல்லப்பட்டு
விட்டார்கள். அவர்களின்
மரணச்சடங்கிற்காக
ஊர் திரும்புபவர்,
வடமராட்சிலிபரேஷன்
ஒப்பரேஷன்
தாக்குதல்களினால்
அங்குசெல்லமுடியாமல்
அகதிகளுடன்
அகதியாக அல்வாய் அம்மன் ஆலயத்தில்
தங்குகிறார். மறுநாள் அங்கிருந்து
இடம்பெயர்ந்துசென்ற
பின்னர், அந்தஅம்மன்
ஆலயமும் குண்டுவீச்சில்
தாக்கப்பட்டு
பலஉயிர்கள்
மடிகின்றன
என்ற தகவலை
அறிகிறார்.
ஒருவீட்டில் தஞ்சமடைந்தபொழுது
இராணுவம்
பிடித்துச்செல்கிறது.
கண்முன்னே ஒருமாணவன்
சுட்டுக்கொல்லப்படுகிறான்.
கைதானவர்களை காலிமுகாமுக்கு
அனுப்பகப்பலில்
ஏற்றுகிறார்கள். ஒருமனிதனைபோர் எப்படி ஓடஓடவிரட்டுகிறது
என்பதை சித்திரிக்கும்
இந்தஆக்கத்தின்
இறுதிவரிகள்:- ‘வெய்யிலில்
நின்றால்தான்
நிழலின் அருமைதெரியும். யுத்தக்கொடுமையை அனுபவித்தால்தான்
சமாதானத்திற்கான
பெறுமதிதெரியும்.’ ஆளுக்கொரு
தேதி என்ற
இரண்டாவது
ஆக்கம் கடல் மார்க்கமாகத்
தப்பிச்செல்ல
முயன்றதை
சித்திரிக்கின்றது. ஏற்கனவே 1983 இல் தந்தையையும்
அண்ணனையும்
இனவாதசக்திகளிடம்
பலி (பறி)
கொடுத்துவிட்டு
ஒருவிடுதலை
இயக்கத்தில்
இணையும் நண்பன் செண்பன்,“ ஆளுக்கொருதேதி
வைத்து ஆண்டவன் அழைத்தான்
”என்றுபாடிக்கொண்டே
கடலில் மூழ்கிவிடுகின்றான்.
அவனது நெஞ்சுறுதி
எம்மை வியக்கவைக்கிறது.
இப்படி எத்தனை
கொழுந்துகளை
இழந்துவிட்டோம். நீந்தி தப்பிச்சென்ற
இயக்கத்தின்
முக்கியஸ்தரிடம்,
மூழ்கி இறந்தவர்கள்
பற்றிய தகவலைச் சொல்லி கவலைப்பட்டபொழுது,“ ஏன் கவலைப்படுகிறீர்கள்?
அவர்கள் இறந்ததற்காகவா?
அல்லது நான் உயிர் தப்பிவிட்டேன்
என்பதற்காகவா?
என்று அவர் கேட்கிறார். இதுஎப்படி
இருக்கிறது? இவ்வாறு
கடந்துபோன
போர்க்காலத்தை,
இனியும் போரேவேண்டாம். போருக்குத்
தள்ளவேண்டாம்
போரைத்திணிக்கவேண்டாம்
அதற்கான சூழலைஉருவாக்கவேண்டாம்
என்று அதிகாரத்தை
தூண்டுபவர்களை
– அதிகாரத்திலிருப்பவர்களை
நோக்கி அறைந்து சொல்கிறது
இந்தப்பத்தி
எழுத்துக்கதைகள். இவ்வாறு
மறுவளம் நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும்
பக்கம் பக்கமாக விவரித்து
எழுதிக்கொண்டே
போகலாம். சினிமாபிரியர்களுக்காகவும் கிருஷ்ணமூர்த்தி
எழுதுகிறார் காமராஜ், பெரியார் ,காந்தியின்
தந்தை, ஸ்லம்டோக்
மில்லியனர்
,நான் கடவுள்,
தாரோ ஜமீன்
பார், பூ
,சுப்பிரமணியபுரம்,
தசாவதாரம்
முதலான தமிழ் ஆங்கில
ஹிந்திப்படங்கள்
பற்றிய தனதுபார்வைகளையும்
குறும்படங்கள்
குறித்ததமது
ரஸனை அனுபவங்களையும்
இந்தநூலில்
பதிவுசெய்துள்ளார். அரசியல் ,சமூகம் ,சினிமா, இலக்கியம்
உட்படமரணிக்காத
நினைவுகளினதும்
தொகுப்புத்தான்
மறுவளம்.வாசகர்கள்
மறுவளம் நூலைபடித்து
ஏனையவற்றை
தெரிந்துகொள்ளட்டும்
என்று இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன். கிருஷ்ணமூர்த்தி, அவுஸ்திரேலியாவில்
தொடர்ச்சியாக
வருடந்தோரும்
தமிழ்எழுத்தாளர்
விழாவைநடத்திவரும்
அவுஸ்திரேலியா
தமிழ் இலக்கியகலைச்சங்கத்தின்
ஸ்தாபகஉறுப்பினர்
மட்டுமல்ல
இச்சங்கத்தின்
பணிகளில்
செயல் ஊக்கமுள்ளஉறுப்பினருமாவார். இந்த
ஆண்டில் சிட்னியில்
நடந்த 13 ஆவது எழுத்தாளர்
விழாவில்
வெளியிடப்பட்ட
மறுவளம் அண்மையில்
இலங்கையில்
கிளிநொச்சியிலும்
அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் மெல்பனிலும்
அறிமுகப்படுத்தவிருக்கிறார். தீவிரதமிழ்
வாசகர்கள்
அவசியம் படிக்கவேண்டியநூல்
மறுவளம். தமிழ்நாட்டில்
தரமான நூல்களைவெளியிடும்
கறுப்புபிரதிகள்
பதிப்பகம்
இதனைநூலாக்கம்
செய்திருக்கிறது. கிருஷ்ணமூர்த்தியை
இந்நூல் வெளியீட்டின்
ஊடாக தமிழகத்துக்கும்
அறிமுகப்படுத்தியிருக்கும்
நண்பர் கவிஞர்,ஊடகவியலாளர்
கருணாகரன்
பாராட்டுக்குரியவர்.
ஆரோக்கியமான இலக்கியதொடர்பாடலுக்கும்
இந்நூல் சான்றுபகருகின்றது. பிரதிகள்
தேவைப்படுவோர்
கிருஷ்ணமூர்த்தியுடன்
தொடர்புகொள்ளலாம். (நன்றி: தேனி
இணையம்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |