|
||||
|
ஆசியப் பெண்களின்
நம்பிக்கைச்
சுடர்!
சுனிலா அபேசேகரா...
சுனிலா சுந்தரி ஜானெட் அபேசேகரா...!
ஆசியப் பெண்களுக்கு
எதிரான அடக்கு முறைகளுக்கு
எதிராகவும்
உரிமைகளுக்காகவும்
போராடிய சிங்களப் பெண். இலங்கையில் தமிழர்கள்
வாழும் வடபகுதியில்
தொடங்கி, உகாண்டா வரை, பாதிக்கப்படும்
பெண்களுக்காக
கடந்த 30 ஆண்டுகளாக
ஒலித்த குரல் சுனிலா
அபேசேகராவினுடையது.
61 வயதான சுனிலாவை கடந்த சில
வருடங்களாகவே
தொந்தரவு
செய்துகொண்டிருந்த
புற்று நோய், கடந்த
செப்டம்பர்
9-ம் தேதி அவரை மரணிக்க
வைத்துவிட்டது!
1952-ல்
இலங்கையின்
கொழும்பு
நகருக்கு
அருகில் பிலியண்டாலா
என்ற ஊரில்
பிறந்தவர்
சுனிலா. அடிப்படையிலேயே மார்க்ஸிய
கொள்கைகளைப்
பின்பற்றும்
குடும்பம்.
பள்ளி, கல்லூரிகளில்
படிக்கும்போது
சுனிலாவின்
வாழ்நாள்
ஆசையே சினிமா இயக்க வேண்டும்,
பாட வேண்டும்
என்பதுதான்.
நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில்
நடித்திருக்கிறார்.
1971-ல் தன்
19-வது வயதில்
கல்லூரிப்
படிப்பு முடித்து வேலைக்கு சென்றுகொண்டிருந்த
நேரம் அது. அப்போது, கொழும்புவில்
மார்க்சிஸ்ட்
ஆதரவாளர்களின்
கை சற்று
ஓங்கி ஒலிக்க, அரசுக்கு எதிராக தங்கள் உரிமைகளுக்காகக்
குரல் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
'ஏன் இவர்கள் போராடுகிறார்கள்’?
என்று சுனிலாவுக்குத்
தோன்றிய ஒற்றைக் கேள்வியும்
அதற்கு கிடைத்த பதிலும், அடுத்த சில மாதங்களிலேயே
அந்த இளம்பெண்ணை
அரசியலுக்குள்
இழுத்துவந்து
போராளியாக்கியது. ஆரம்பத்தில்
போராட்ட பாடல்கள் எழுதியும்
அதைப் பாடியும் வந்தவருக்கு,
'இது நமக்கான
வேலை அல்ல’
என தோன்ற...
வெளியே வந்து பெண்கள்
அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி
தனியாக பெண் உரிமைகளுக்காகப்
போராட ஆரம்பித்தார்.
பெண்களுக்கு சமஉரிமை
வேண்டும்
என்ற கொள்கைக்காகப்
போராட ஆரம்பித்த
சுனிலா, பெண்கள் மீதான பாலியல்
வன்முறை, குடும்பங்களில்
சமூகத்தில்
அவர்களுக்கு
மறுக்கப்படும்
உரி மைகள்.
திருநங்கைகளுக்கான உரிமைகள்,
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின்
பாதுகாப்பு,
மறுவாழ்வு,
ஹெச்.ஐ.வி.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள்...
எனப் பரந்து
விரிந்து,
குஜராத் கலவரத்தில்
பாதிக்கப்பட்ட
இஸ்லாமியப்
பெண்களுக்கு
ஆதரவாகக்
குரல் கொடுப்பது
வரை வளர்ந்தது.
குஜராத் மட்டுமல்லாமல்
வட இந்தியா
முழுக்க ராணுவச் சட்டத்தால்,
சமூக அடக்குமுறையால்
பாதிக்கப்பட்ட
பல மாநிலப்
பெண்களுக்காக
ஐ.நா. வரை சென்று குரல் கொடுத்தவர்
சுனிலா.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை
எதிர்க்கும்
போராளிகளுக்கு
இலங்கையில்
ஏகப் பட்ட
கொலை மிரட்டல்கள். அரசு ஆவணமே ஏறக்குறைய
30,000 பெண்கள்
பல்வேறு வன்முறைகளால்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
என அறிக்கையளிக்க,
கொந்தளித்த
பெண்கள் அமைப்பினர்
வீதிக்கு
வந்து போராடினர்.
பெண் உரிமைக்காகப்
போராடிய பெண்களில்
சிலர் கடத்தப்பட,
பலர் மிரட்டப்பட
அந்த இக்கட்டான
சூழலிலும்
நிறைமாத கர்ப்பிணியாக
கடைசி வரை வீதியில்
நின்று குரல் கொடுத்தவர்
சுனிலா. இலங்கையில் தமிழர்
பகுதியில்
விடுதலைப்
புலிகளுக்கும்
சிங்கள ராணுவத்துக்கும்
போர் நடக்கும்போது
இருபக்க நியாயத்துக்காக
பல ஆண்டுகள்
போராடினார்.
முகாம்களில் அடைக்கப்பட்ட
பெண்கள், குழந்தைகள்
என சிங்கள
அரசுடன் மல்லுக்கட்டி
நின்ற சமூக ஆர்வலர்களில்
சுனிலா முதன்மைப்
போராளி.
இலங்கையில் சுனிலாவின்
சேவையைப்
பார்த்த ஐ.நா. சர்வதேச அமைதிக்கான
அமைப்பு, சுனிலாவை ஆசிய நாடுகளுக்கான
அமைதித் தூதுவராக நியமித்து,
உள்ளூர்ப்
போராளியை
உலகப் போராளியாக்கியது.
சுனிலாவின் சேவையைப்
பாராட்டிய
ஐ.நா. கடந்த
1999-ல் ஆசிய நாடுகளில்
சிறப்பாக
பணியாற்றியதற்காக
'மனித உரிமைகளுக்கான
சர்வதேச விருது’ அளித்து கௌரவித்தது.
இப்போதும் இலங்கை கல்லூரி மாணவர்களுக்கு சுனிலா ஒரு ரோல்மாடல். கொழும் புவில்
பிறந்து வளர்ந்திருந்தாலும்
சிங்கள அரசை கடுமையாக
விமர்சிக்கும்
சுனிலா, ''அடிப்படை உரிமைகள் மக்களிடம்
இருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன.
ஆயுதக் கலாசாரம், பாதுகாப்பு
என்ற பெயரில்
தீவிரவாதம்
எங்கும் பரவி அதன்
நிழல் எல்லா இலங்கை
மக்களின்
மேலும் படர்ந்திருக்கிறது''
என்று எல்லா மேடைகளிலும்
தைரியமாக
முழங்குவார்.
ஆறு குழந்தைகளுக்கு
தாய், ஐம்பதை
கடந்த வயது என்றபோதும்...
2009-ல் இலங்கையில்
நடந்த இறுதி யுத்தத்தின்போது
இலங்கையின்
தவறுகளை தைரியமாக தட்டிக்கேட்ட
பெண் போராளி
சுனிலா.
சுனிலா பிறக்கும்போது
ஒரு சிங்களப்
பெண். இறக்கும்போது ஆசியா முழுவதும்
ஒடுக்கப்படும்
பெண்களுக்கான
ஒரு நம்பிக்கைச்
சுடர். (ஆ. அலெக்ஸ்
பாண்டியன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |