Contact us at: sooddram@gmail.com

 

25 வருடங்களுக்கு முன்பு சென்ற ரயில் இன்னும் காங்கேசந்துறையில்...

வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைத்த யாழ். தேவி கொழும்பில் இருந்து முள்ளிக்குளம் வரையான பயணத்தை இற்றைக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நிறுத்தியது. புலிகளின் கெடுபிடிகளினாலேயே ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் யாழ். தேவி புறப்பட ஆயத்தமாகியுள்ளது. அன்றைய காலப்பகுதியில் யாழ். தேவியின் ரயில் சாரதியாக எஸ். இராஜகோபாலன் பணியாற்றினார். பணியில் இருந்து தற்போது இளைப்பாறியுள்ள அவர், 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பமாகியுள்ள யாழ். தேவி ரயில் சேவையை பார்வையிட வருகை தந்துள்ளார். அந்த பழைய நாள் ஞாபகம் இன்றுபோல் அவர் மனதில் காட்சியளிக்கின்றது.

“கொழும்பு கோட்டை மூன்றாவது ரயில் மேடையில் இருந்து யாழ். தேவி கடுகதி ரயில் மாலை 5.45 மணிக்கு காங்கேசந்துறைக்கு புறப்பட உள்ளது. அந்த ரயில் ராகம, வெயாங்கொட, பொல்கஹவெல, குருநாகலை, மஹவ சந்தி, கல்கமுவ... ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.”

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கேட்ட அறிவிப்பு ஓசை இது. வடக்கு, தெற்குக்கான யாழ். தேவி ரயில் சேவை 1989ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வவுனியா வரை ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது யாழ். தேவி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. எனினும் பலரது மனதில் இருந்து நீங்க முடியாத அந்தப் பசுமையான பயணம் ஞாபகத்தில் இருக்கின்றது. அத்துடன் அந்தப் பயணத்தின் போது இடம்பெற்ற வேதனையான கசப்பான சம்பவங்களும் மறக்கக் கூடியவை அல்ல.

அதில் மறக்க முடியாத நிகழ்வாக யாழ். தேவி ரயிலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை குறிப்பிடலாம். இந்த குண்டு வெடிப்பினால் பலர் மரணமடைந்தனர். புலிகளினால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. அடுத்ததாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தபால் ரயில் சேவை மீண்டும் கொழும்புக்கு வர முடியாமல் காங்கேசந்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டதை குறிப்பிடலாம்.

பலருக்கு இந்த விடயம் மறக்கப்பட்டிருந்தாலும் வரலாற்றில் ரயில் சேவைக்கு ஏற்பட்ட பல்வேறு தடைகளை இட்டு நாம் இங்கே குறிப்பிடுவது எமது எதிர்கால சந்ததியினர் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்வதற்கு பல விடயங்கள் இருக்கின்றன என்பதற்கேயாகும்.

கொழும்பில் இருந்து காங்கேசந்துறைக்கு சென்ற இரவு நேர தபால் ரயிலுக்கு என்ன நடந்தது. அதனை இறுதியாக ஓட்டிச் சென்ற ரயில் சாரதி எஸ்.இராஜகோபால் யாழ்ப்பாணத்திற்கு, தான் இறுதியாக ஓட்டிச் சென்ற ரயிலை பார்ப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பு காங்கேசந்துறைக்கு சென்றார். தான் ஓட்டிச் சென்ற ரயிலை 25 வருடங்கள் கழிந்த நிலையில் காங்கேசந்துறையில் அவருக்குக் காணக்கூடியதாக இருந்தது.

25 வருடத்திற்கு பிறகு அந்த ரயிலை ராஜகோபால் கண்டு புளகாங்கிதமடைந்தார். மனம் பூரித்தார் எனினும் அதனை மீண்டும் பாவிக்க முடியாத அளவுக்கு ரயில் சேதமடைந்து காணப்பட்டது. ரயிலின் ஒன்றின் பகுதியை இராணுவத்தினர் பகுதி பகுதியாக பிரித்து கொழும்புக்கு கொண்டு வருகின்றனர்.

என்றாலும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையில் அந்த பழைய ரயில் என்ஜின் பயன்படுத்தக் கூடியதாக நல்ல நிலையில் உள்ளது.

25 வருடங்களுக்கு முன்னர் ரயில் சேவையில் கடமையாற்றிய இராஜகோபாலை நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தித்தோம். அதே துடிப்பான இளமைத் தோற்றத்துடன் காணப்பட்ட இராஜகோபால் தமது எண்ணங்களை வெளிப்படுத்தினார்.

எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. நான் அன்று பகல் உணவை முடித்து நன்றாக தூங்கிவிட்டேன். அன்று நான் மிகவும் சோர்வுடனேயே ரயில் சாரதியாக கடமை புரிந்தேன். எனது உள் மனதில் ஏதோ ஒன்று நடைபெறுவது போன்ற உணர்வுடன் ரயில் என்ஜினை முடுக்கினேன்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசந்துறை இரவு நேர தபால் சேவையின்போது அநுராதபுரத்தில் இருந்து காங்கேசந்துறைக்கு செல்வதற்கான பணிக்கே என்னை சாரதியாக நியமித்திருந்தனர்.

கொழும்பு கோட்டையில் 7.15 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்த யாழ். தேவி அநுராதபுரத்திற்கு நள்ளிரவு 12.00 மணிக்கு வந்து சேர்ந்தது. கொழும்பில் இருந்து ரயிலை ஓட்டி வந்த ரயில் சாரதி சிரித்த முகத்துடன் என்னிடம் ரயிலினை ஒப்படைத்தார்.

இரவு 12 மணிக்கு அநுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு ரயில் புறப்பட ஆயத்தமானது. வழமையை விட நான் மிகவும் கவனமாக ரயிலை செலுத்தினேன். எனினும் நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்கு வரும் போது சூரியன் அஸ்தமனமாகிவிட்டது. யாழ். ரயில் நிலையத்தில் வழமையாக 5 முதல் 6 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்படும். அன்றும் அப்படித்தான் அந்த வேளையில் தேனீர் அருந்துவதை நான் வழக்கமாக கொண்டிருந்தேன்.

நான் ரயிலில் இருந்து இறங்கி தேனீர் அருந்தும் கடைக்கு சென்ற போது அந்த கடை மூடிக் கிடந்தது. என்ன ஆச்சரியம் வழமையாக மக்களால் நிரம்பி வழியும் அந்தக் கடை பூட்டப்பட்டிருப்பதை கணடு எனக்குள் ஓர் அதிர்ச்சி என்றாலும் என் மனதை ஒரு நிலைப்படுத்தியவனாக ரயில் ஏறி பயணத்தை தொடர்ந்தேன்.

ரயில் செல்வதற்கான சமிக்ஞை கிடைக்கப்பெற்றதும் ரயில் புறப்பட்டது. ஏனைய நாட்களில் யாழ். ரயில் நிலையத்திற்கு பிறகு கொக்குவில், கோண்டாவில், சுன்னாகம் ஆகிய ரயில் நிலையங்களில் அதிகளவான பயணிகள் காங்கேசந்துறை ரயில் வரும் வரை காத்திருப்பார்கள். என்றாலும் சனக்கூட்டம் இன்றி ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ரயில் நிலையங்களுக்கு அப்பால் தீ மூட்டப்பட்டு எரிந்தது. பாரிய சத்தம் எனது காதுக்கு கேட்டது. பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அதனைக் கட்டுப்படுத்த முயற்சித்த போதும் பலனளிக்கவில்லை.

நான் ஓட்டிச் சென்ற ரயில் காங்கேசந்துறையில் நிறுத்தப்பட்டது. மீண்டும் கொழும்புக்கு வர முடியாமல் போனது. இவ்வாறு வேதனையான அந்த நாள் ஞாபகத்தை - சம்பவத்தை மிகவும் கவலையுடன் வெளியிட்டார் இராஜகோபால்.

வழமையாக யாழ். தேவி ரயில் சேவை மாலை 5.45 மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கும். இரவு 9.35 மணிக்கு அநுராதபுரம் சென்றடையும். அதன் பின்னர் இன்னொரு குழுவினர் ரயிலை செலுத்துவர். அநுராதபுரத்தில் இருந்து காங்கேசந்துறைக்கு இடையில் 15 இடங்களில் மாத்திரமே ரயில் நிறுத்தப்படும்.

குறிப்பாக மதவாச்சி, வவுனியா, புளியங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பளை, கொடிகாமம், சாவகச்சேரி, நாவற்குழி, யாழ்ப்பாணம், கொக்குவில், கோண்டாவில், சுன்னாகம், காங்கேசந்துறை ஆகிய இடங்களிலேயே ரயில் நிறுத்தப்படும்.

அத்துடன் யாழ். தேவி குறிப்பிட்ட நேரத்திற்குள் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும். ஒரு சில விநாடிகளே தாமதமடையும். இந்த ரயிலில் அப்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிறைவேற்று பதவிகளை வகிக்கும் கல்விமான்கள், சிரேஷ்ட பொலிஸார், கூட்டுத்தாபன தலைவர்கள், கல்விப் பணிப்பாளர்கள், நிர்வாகப் பிரிவுகளில் கடமையாற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் யாழ். தேவியில் பயணம் செய்வார்கள். யாழ்ப்பாணத்திற்கு இடையிலும் ரயில் சேவை இருந்தது. பொருட்களைக் கொண்டு செல்லும் ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. நான் 1963ம் ஆண்டில் ரயில் சேவையில் இணைந்து கொண்டேன். 2011ஆம் ஆண்டு வரை ரயில் சேவையில் கடமையாற்றினேன். 48 வருட காலமாக ரயில் சாரதியாக கடமையாற்றினேன்.

நான் சில வருடங்களாக இங்கிலாந்தில் எனது புதல்வர்க ளுடன் இருந்தேன். யாழ். தேவி ரயில் சேவை ஆரம்பிக் கப்படுவதை அறிந்து நான் இங்கு வந்தேன்.

எனது எதிர்பார்ப்பு மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதாகும். எனக்கு அழைப்பு விடுத்தால் யாழ்ப்பாணத்திற்கான முதலாவது ரயிலை கொண்டு செல்வதற்கான தைரியம் உண்டு.

1989ம் ஆண்டு கொழும்பு மாளிகாவத்தை ரயில் நிலைய எஞ்சின் மத்திய நிலையத்தின் போர்மேன் ஆக எச்.எல்.ஆர்.பொன்சேகா என்பவர் கடமையாற்றினார். எம்-02 வகுப்பின் 570 இலக்கத்தைக் கொண்ட கனேடிய ரயில் அவரது மேற்பார்வையில் 1989ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் திகதி காங்கேசந்துறைக்கு இரவு நேர தபால் சேவையாக சென்றது. எனினும் மீண்டும் அந்த ரயில் இங்கு வரமுடியாது போனது. 2001ம் ஆண்டு போக்குவரத்து அமைச்சராக இருந்த ஏ.எச்.எம்.பெளஸியின் முயற்சியில் அந்த ரயிலின் என்ஜினை மட்டும் கடல் மார்க்கமாக கொழும்புக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இவ்விதம் யாழ். தேவி ரயில் சேவை பல்வேறு தடைகளை அனுபவித்த பிறகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவது வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்துகின்றது. ஜனாதிபதியின் இந்த அரிய முயற்சியை வடபகுதி மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.

தாரக விக்ரமசேகர
தமிழில் - நிஷா

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com