Contact us at: sooddram@gmail.com

 

ஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா?

நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. மிழ்நாடு சட்டசபையில் “ ஆமாம் நான் பாப்பாத்தி”யென்று பகிரங்கமாக பெருமையுடன் அறிவித்தவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென்று பெங்களூருவில் உள்ள பாரப்பன அக்கிரஹாரா என்று அழைக்கப்படும் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பின் போது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிலையில் தனது பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைத்து ஜெயா தரப்பில் சுட்டிக்காட்டியதன் பேரில் தான் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள கருநாடக சிறை வளாகத்திற்குள் சிறப்பு நீதிமன்றம் இடம் மாற்றப்பட்டது. தமிழினவாதிகளால் “ஈழத்தாய்” என்று போற்றப்பட்ட ஜெயலலிதா தனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் பாப்பாத்தியின் பெருமையையும், பாதுகாப்பையும் பார்ப்பன அக்ரஹாரம் ‘பாதுகாக்க’வே செய்திருக்கிறது.

மூன்று நீதிமன்றங்களையும், 14 நீதிபதிகளையும், எண்ணற்ற அரசு வழக்கறிஞர்களையும், கணக்கற்ற வாய்தாக்களையும் தாண்டி வானத்து நட்சத்திரங்களையும் விஞ்சும் கோப்புகளையும், ஏழு கடல்களை நிறைக்கும் மசியையும் விழுங்கி சட்டத்தின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்ட பின் – உலகம் உருண்டை என்கிற உண்மையை ‘புதிதாக’ உரைத்துள்ளது நீதிமன்றம்.

ஜெயா சசி கும்பல் முழு தமிழகத்தை மொட்டை அடித்து பழனி படிக்கட்டு ஆண்டிகளோடு உட்காரவைத்தது.

ஆனால், இந்த உண்மையை 7-9-1995 அன்றே ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் முன்னிலையில் முன்னறிவித்தார் ஜெயலலிதா. அந்த தேதியில் தான் அவரது வளர்ப்புக் கோயில் மாடான சுதாகரனின் திருமணம் நடந்தேறியது. ஜெயாவின் அந்த முதலாம் ஆட்சியே தமிழக அரசியலில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் பொற்காலத்தை துவங்கி வைத்தது. ஜெயா சசி கும்பல் முழு தமிழகத்தை மொட்டை அடித்து பழனி படிக்கட்டு ஆண்டிகளோடு உட்காரவைத்ததும், அதற்கு துணையாக பெரும் ரவுடிகளைக் கொண்ட தளபதிகளின் கூட்டம் நின்றதும் வரலாறு.

”நான் அடித்தது இத்தனை தான், உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்” என்று இந்தியாவின் பெருமை மிகு போலி ஜனநாயகத்தின் மூஞ்சியில் ஜெயா கும்பல் பீச்சாங்கையை வைத்து ஏறக்குறைய 19 ஆண்டுகள் கடந்து விட்டது.

ஜெயா ஆட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு சுப்ரமணி சாமியால் தொடரப்பட்ட வழக்கை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்திரவிட்ட பின் அவ்வழக்கின் மீதான விசாரணை தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு பதினெட்டு ஆண்டுகள் கழித்து இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்து விட்ட ஜெயா கும்பலின் சொத்துக்கள் மிடாஸ் முதலாக தமிழகமெங்கும் பரவியிருக்கும் சாம்ராஜ்யத்தில் பல ஆயிரம் கோடிகளாக வளர்ந்திருக்கின்றன. இப்போது, முதல் ஆட்சியில் ரூ 66 கோடி சொத்து சேர்த்தார்கள் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது நீதித்துறை. இதுதான் சட்டம் ஆற்றிய கடமையின் லட்சணம்.

இன்றைக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி 1991-96 காலகட்டத்தில் ஜெயா அடித்த கொள்ளைகளுக்கான குற்றவாளி என்றால், இந்தக் குற்றவாளி இடைப்பட்ட காலத்தில் சுமார் எட்டாண்டுகள் அதிகாரத்தில் அமர வாய்ப்பளிக்கும் விதமாக வழக்கை நத்தையின் வேகத்தில் நகர அனுமதித்த நீதிமன்றத்தை யார் தண்டிக்கப் போகிறார்கள்?

ஜெயாவுக்கு ரூ 100 கோடியும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு ரூ 10 கோடியும் அபராதம் விதித்திருக்கிற நீதித்துறை இந்த கும்பலின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை தொடர்ந்து வைத்திருக்க ஆசி அளித்திருக்கிறது.

தற்போது வெளியாகியிருக்கும் மொக்கைத் தீர்ப்பும் அத்தனை சுலபத்தில் கிடைத்து விடவில்லை. 2001-ல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜெயா வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஏற்கனவே கொசுவலை போல் கணக்கில்லாத பொத்தல்களோடு கிழிந்து கந்தலாகித் தொங்கிக் கொண்டிருந்த சட்டத்தில் புதிய ஓட்டைகளைக் கண்டுபிடித்து இந்தியாவின் அரசியல் சட்டத்தை அன்றாடம் கேலி செய்து வாய்தா ராணியென்ற சாதனை படைத்தார்.

வாய்தா ராணியின் அஸ்திரங்களை வெல்லும் அரசியல் உறுதியோ இல்லை தார்மீக நெறியோ திமுகவிடம் இல்லை. அரசியல் ரீதியில் காலாவதியாகிப் போய் நின்ற தி.மு.கவிடம் ஜெயாவை எதிர்ப்பதற்கு இறுதியாக எஞ்சிய ஒரே ஆயுதம் இந்த வழக்கு ஒன்று தான் என்பதைத் தாண்டி திமுக பலவீனமான நிலையிலேயே இந்த வழக்கை எதிர்கொண்டது.

ஜெயா கும்பல் இத்தனை பகிரங்கமாக ஊழல் செய்து பேயாட்சி செய்தாலும் அவரை ஒரு குற்றவாளியென்றோ, தண்டிக்கப்பட வேண்டுமென்றோ ஊடகங்களும், பார்ப்பனிய அறிவு ஜீவிகளும் கோரியதே இல்லை.

கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி, ஆளும் தரகு முதலாளிகளின் கிளப்பில் சேர்ந்து விட்டாலும் முதலாளித்துவ ஊடகங்களுக்கு அது பெரிய விசயமில்லை. ஏனெனில் திமுக உருவாகி வந்த திராவிட பாரம்பரியத்தின் மீதான பார்ப்பனிய வன்மத்தை அவர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. நேரெதிராக ஜெயா கும்பல் இத்தனை பகிரங்கமாக ஊழல் செய்து பேயாட்சி செய்தாலும் அவரை ஒரு குற்றவாளியென்றோ, தண்டிக்கப்பட வேண்டுமென்றோ ஊடகங்களும், பார்ப்பனிய அறிவு ஜீவிகளும் கோரியதே இல்லை. கூடவே மறுகாலனியாக்கம் கோரும் பாசிச மற்றும் பாப்புலிச ஆட்சிக்கு பொருத்தமான நபராக ஜெயாவை ஆளும் வர்க்கங்கள் கருதின. மோடியும் கூட இப்படித்தான் அரியணை ஏற்றப்பட்டார்.

அதனால்தான் இந்த நெடிய 18 ஆண்டுகளில் மத்தியில் காங்கிரசு அல்லது பாரதிய ஜனதா யார் ஆண்டாலும் ஜெயா கும்பலின் செல்வாக்கு குறைந்து விடவில்லை. இந்த பின்புலத்தில்தான் அரசியல் சட்ட புத்தகத்தை ஒவ்வொரு காகிதமாக கிழித்து கழிவறையில் தொங்க விட்டு அழகு பார்த்தார் ‘அம்மா’.

தனது ரத கஜ துரக பதாதிகள் துணையோடு ஜெயா கடந்த பதினெட்டாண்டுகளாக உலகம் ஒரு சதுரம் என்பதை நிரூபிக்க முயன்று வந்தார். என்றாலும், மறுக்கவே முடியாத உண்மையான ’உலகம் உருண்டை’ தான் என்பதை நீதிமன்றம் வேறு வழியின்றி இந்த தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதே நேரம் இந்த தீர்ப்பு உலகம் சதுரமாகவும் இருப்பதற்குரிய நியாயத்தை முற்றிலும் மறுத்து விடவில்லை. ஜெயா, சசி கும்பலின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய முடியாது என்பதோடு, ஓபி வகைப்பட்ட பொம்மைகளை முதல்வர் பதவியில் அமர்த்தி போயஸ் தோட்டத்து ரிமோட்டே கட்டுப்படுத்தும் என்ற யதார்த்தத்தை இந்த தீர்ப்பு தடுக்கப் போவதில்லை.

ஜெயா கும்பல் இறுதி நேரத்தில் மோடி ஆட்சியின் சகல ஆசிகளுடன் இந்த வழக்கிலிருந்து வெளியே வர முயற்சி செய்தது.

எனினும் ஜெயா கும்பல் இறுதி நேரத்தில் மோடி ஆட்சியின் சகல ஆசிகளுடன் இந்த வழக்கிலிருந்து வெளியே வர முயற்சி செய்தது. அந்த நம்பிக்கையில்தான் அதிமுக கும்பல் சிவகாசி வெடிகளோடு பெங்களூருவுக்கு படையெடுத்தது. ஆனால் சட்டப்படியே என்ன போங்காட்டம் ஆடினாலும் ஜெயா கும்பலை முற்றிலும் விடுவித்து விட முடியாது என்ற நிலையும் உருவாகி இருந்தது. மேலும் ஊழல் வழக்குகளில் இத்தகைய ஓரிரண்டு நம்பிக்கையை காட்டினால்தான் ஆளும் வர்க்கம் ஊழலுக்கு எதிரான மக்களின் நம்பிக்கையை தக்க வைக்கவும் முடியும்.

என்றாலும் ஜெயாவுக்கு ஆதரவாக ஒரு மாபெரும் சென்டிமெண்ட் அலையை ஏற்படுத்த அதே ஆளும் வர்க்கமும், ஊடகங்களும் முயலாமல் இல்லை. அம்மாவை கடைசி வரை காப்பாற்ற முயன்ற பாஜக கும்பல் இந்த வழக்கின் பெருமை திமுகவிற்கு செல்வதை கடுப்புடன் பார்க்கிறது.

ஜெயாவின் மேல் சொத்துக் குவிப்பு வழக்கை முதலில் தொடுத்த சுப்பிரமணியன் சுவாமி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கருத்து சொல்லும் போது தீர்ப்பு இப்படித்தான் இருக்குமென்று முன்பே தெரியுமென தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார். மாமா சாமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் போது அம்மா கட்சி மகளிர் அணி அளித்த வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பை தமிழகம் மட்டுமல்ல சாமியும் மறந்திருக்க மாட்டார். ஆனாலும் ஒரு தெருவோர விபச்சார தரகனுக்கு ரோசம், மானம், வெட்கம், சுயமரியாதை என்று ஏதாவது இருக்குமா என்ன?

பார்ப்பனிய பங்காளிகளான சாமி மற்றும் மாமிக்கு ஏற்பட்டிருந்த முரண்பாடு தற்காலிகமானதே. அதனால்தான் சாமியும் இந்த 18 ஆண்டுகளில் தான் போட்ட வழக்கின் மீது அம்மா கும்பல் வாய்தாக்களின் பேரில் சிறுநீர் கழித்த போதும் அதை பன்னீர் என்று உச்சிமோந்து அதிமுகவின் கூட்டணியிலேயே ஓட்டுக் கேட்டார். இந்த தரங்கெட்ட தரகன் இன்று எச்சிலொழுக நான்தான் கிழிச்சேன் என்று ஊளையிட்டாலும் அப்படி ஒரு பெருமையை பாஜகவோ இல்லை மோடியோ விரும்பவில்லை.

பொன்னாரை அம்மா பீச்சாங்காலால் எத்தி விட்ட பின் வேறு வழியின்றித் தான் காவி கோஷ்டியினர் பூணூலை உருவிக் கொண்டு கேப்டனிடம் ராப்பிச்சை கேட்டார்கள்.

கடைசி வரை போயஸ் தோட்டத்தின் வாசலில் ராப்பிச்சைக்காரனைப் போல் நின்ற பொன்னாரை அம்மா பீச்சாங்காலால் எத்தி விட்ட பின் வேறு வழியின்றித் தான் காவி கோஷ்டியினர் பூணூலை உருவிக் கொண்டு பெருமாள் கோயில் உண்ட கட்டியாவது கிடைக்காதா என்று கேப்டனிடம் ராப்பிச்சை கேட்டார்கள். ‘உத்தமர்’ வாஜ்பாயின் தலைமையில் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் அனைவரும் சென்னை வரும்போதெல்லாம் போயஸ் தோட்டத்து அம்மனிடம் ஆசி வாங்கிச் சென்றதையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

அம்மாவை பகைத்துக் கொண்டால் திருநெல்வேலி ஊரே காணாமல் போய்விடும் என்பது சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காவிகள் கற்றுக் கொண்ட பாடம்.

காவி கும்பலே வெட்கப்படுமளவுக்கு ‘பாட்டாளிகளின்’ கட்சியான தாபா கட்சியும், காரத் கட்சியும் போயஸ் தோட்டத்திற்கு 5 வருடத்திற்கு ஒரு முறை விரதம் இருந்து பாதயாத்திரை போய் கால், அரை சீட்டு பஞ்சாமிருதம் வாங்கியதும் கூட வரலாற்றின் பக்கங்களில் சிரிப்பதற்காக விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த பிச்சை பஞ்சாமிர்தமும் கடைசி தேர்தலில் கிடைக்கவில்லை எனும் போது ஆதித்யா சேனலில் வடிவேலுவின் டிஆர்பி ரேட்டிங்கை தாபாவின் டிஆர்பி ரேட்டிங் தகர்த்தெறிந்தது.

தாபா கட்சியின் தேசிய செயலரான டி.ராஜா, பெங்களூரு தீர்ப்பை ஒட்டி தந்தி டி.வி நிருபரிடம் திருவாய் மலர்ந்ததை பார்த்தால் புத்தரே கொடு வாளினை எடுத்துக் கொண்டு தாபா கட்சி ஆபிசுக்கு சென்று விடுவார்.

அதாவது பதினெட்டாண்டு காலம் வழக்கு நடந்தது, வேறு வேறு மாநிலங்களுக்குப் போனது, வேறு வேறு நீதி மன்றங்களுக்கு மாறியது, மேல் முறையீடுகள் நடந்தது என்றெல்லாம் பீடிகை போட்ட டி.ராஜா, தற்போது சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்று யாருக்கும் தெரியாத உண்மையை போட்டு உடைத்தார். டி.ராஜாவிடம் தொடர்ந்து பேசிய தந்தி நிருபர், தீர்ப்பின் விளைவாக ஏற்படவுள்ள அரசியல் அணிசேர்க்கையின் மாற்றங்கள், எதிர்கால கூட்டணிக் கணக்கு வழக்குகள் குறித்த கேள்விக்கு சட்டென உள்ளே புகுந்த டி.ராஜா “ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது தனது கருத்தல்ல என்றும், அது சட்டத்தின் கருத்து” என்றாரே பார்க்கலாம்.

திருச்சி அதிமுக ரவுடிகளின் வன்முறை வெறியாட்டம் (படம் : மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி)

“அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண்டா” என்ற கோலிவுட்டின் கோமாளி ஸ்டார் ரஜினிகாந்தின் தத்துவத்தின் படி டி ராஜாவின் வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அம்மாவை தண்டிக்க வேண்டுமென்று தாபா கட்சி கோரவில்லை, கோரியதில்லை, கோரப்போவதில்லை. அடுத்த தேர்தலில் பஞ்சாமிர்தம் கிடைக்காது என்றாலும் அதன் மணம் வீசும் காலி டப்பாவாவது கிடைக்க வேண்டுமென்ற ஆதங்கமே டி ராஜாவின் வாயில் அத்தனை எச்சரிக்கையுடன் வெளிப்படுகிறது.

தொலைக்காட்சி விவாதங்களில் – தங்கள் சொந்த குடும்ப தொலைக்காட்சிகளில் நடக்கும் பாதுகாப்பான விவாதங்களில் கூட – கருத்து சொல்லும் தி.மு.கவினரோ தங்களது அரசியல் ஆதாயத்துக்காகக் கூட இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் துப்பற்றவர்களாக நிற்கிறார்கள். அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதை அவர்கள் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் 2ஜி வழக்கே தட்டி வைப்பது ஒரு புறமிருக்கட்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை குப்பறத் தள்ளி வெற்றிபெற்றிருக்கும் ஜெயாவை எதிர்த்து நிற்கும் தார்மீக நெறியோ, அரசியல் கடப்பாடோ, மக்கள் நலனோ கருணாநிதி கட்சிக்கு இல்லை. அதனால்தான் தாக்குதல் நிலையில் இந்த தீர்ப்பை கொண்டாட முடியாததோடு, தற்காப்பு நிலையில் கூட அவர்களால் பேசவோ, நடமாடவோ முடியவில்லை.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா கும்பலின் சார்பில் அதிமுக ரவுடிகள் தமிழகம் முழுவதும் திமுக அலுவலகங்களை தாக்கி, கருணாநிதி கொடும்பாவிகளை எரிக்கிறார்கள். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி வழக்கு போட்டவனை நீதிமன்றத்திலேயே போட்டு கதற கதற அடிப்பதை எங்கேயாவது பார்க்க முடியுமா?

தி.மு.க சார்பு ஊடகங்களான சன் மற்றும் கலைஞர் தொலைகாட்சியினர் நெருப்புக் கோழி பூமிக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதைப் போல சொத்துக் குவிப்பு வழக்கின் அலுப்பூட்டும் வரலாற்று விவரங்களில் தங்களது மூளைகளைப் புதைத்துக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பான புதைப்புதான்.

திமுகவின் செய்தி ஊடகங்களுக்கு எதிர்வரிசையில் நடுநிலை வரிசையாக ஃபிலிம் காட்டும் ஊடகங்களின் யோக்கியதை என்ன?

திருச்சி – அதிமுக ரவுடிகள் வன்முறை வெறியாட்டம் (படம் : மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி)

அம்மாவின் பிய்ந்த செருப்புகளாக அணிவகுக்கும் புதிய தலைமுறை தந்தி தொலைக்காட்சியினரோ தமிழின் ‘ங’ எழுத்தே நாணிக் கோணும் அளவுக்கு வளைந்து நெளிகிறார்கள். பாரிவேந்தர் மற்றும் சிவந்தி வகையறா மறத்தமிழன்களின் மானங்கெட்டத்தனத்தை  விரிவாக எழுத விரல் கூசுவதால் ஒரு சில தெறிப்புகளை மட்டும் பார்க்கலாம்.

ஜெயலலிதா மீதான் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக ஆங்கில சேனல்களில் செய்தி வெளியாகிக்கொண்டிருக்கும் போது தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவோ, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தான் அவ்வாறு தெரிவிக்கின்றன என்று ஆரம்பித்து பின்னர் ”குற்றம் நிரூபிக்கப்பட்டடதாக நீதிமன்ற வளாகத்தில் பேசிக்கொள்கிறார்கள்” என நகர்ந்து இனி சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்த பின் “குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது” என்று நெளிந்தார்.

இந்த பதிவு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது அதிமுக காலிகள் தமிழகம் முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளன. கடைகளை அடைக்கச்சொல்லி வன்முறைசெய்கிறார்கள் அதிமுக குண்டர்கள். தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவோ தமிழகமெங்கும் ”அதிமுகவினர் போராட்டம்”,” “மக்கள் தங்களாகவே நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டனர்”, என்று கூறி வன்முறை கும்பலை நியாயப்படுத்துகிறார். புதிய தலைமுறையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் அய்யநாதன் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் அதிமுகவினரின் போர்வையில் காலித்தனம் செய்யும் சமூகவிரோதிகளாகவும் இருக்ககூடும் என்று ஈழத்தாயின் தவப்புதல்வர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்.

18 நெடிய ஆண்டுகளில் நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. அதனால்தான் ஜெயா கும்பல் தமிழகம் முழுவதும் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டங்களை இதே சட்டமும், சட்ட ஒழுங்கும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.

சட்டப்படி பாசிச ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது என்றும், இந்த கும்பலின் சொத்துக்களை மக்கள் பறிமுதல் செய்து தண்டிக்க வேண்டுமென்றும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 96-ம் ஆண்டில் போராட்டம் நடத்தின. தமிழகமெங்கும் அதிமுக ரவுடிகளோடு எமது தோழர்கள் மோதினார்கள். பெருநகரங்களெங்கும் அதிமுகவின் பொறுக்கி தளபதிகளின் பெயரை பொதுச் சுவர்களில் எழுதி மக்களை தட்டி எழுப்ப முயன்றோம். இதன் முத்தாய்ப்பாக ஜெயா-சசி கும்பலுக்கு சொந்தமான தஞ்சை வினோதகன் மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டம் நடைபெற்று பல தோழர்கள் தடியடி பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

இந்த வகைப்பட்ட போராட்டங்களின் தேவை இன்றைக்கும் இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

(வினவு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com