|
||||
|
மே 18, 2009 புலிகளின்
தோல்வி நாள்! மக்களின்
வெற்றி நாள்
வீழ்ச்சியும் எழுச்சியும்
பெற்று எல்லாவற்றையும்
மாற்றிப்
போட்ட மே மாதம்
(பகுதி 1)
(சாகரன்)
புலி வெல்லும் என்பதைவிட
அது கொல்லும்
என்பதை பலரும் உணர்ந்திருந்தனர். இதனாலேவே
நிலத்திலும்
புலத்திலும்
பலர் அவர்களை
ஆதரிப்பது
போல் பாசாங்கு
காட்டி வந்தனர், சிலர் துணிந்து
புலிகளின்
மக்கள் விரோத பாசிச
செயற்பாட்டிற்கு
எதிராக விடாப்பிடியாக
30 வருடங்களுக்கு
மேலாக போராடி வந்தனர், பல தியாகங்களையும்
செய்தனர்.
புலிகளை எதிர்ப்பவர்களுக்கும்
ஆதரவழிப்பவர்களுக்கு
ஒன்று பொதுவானது
அதுதான் புலிகளால்
ஏற்படுத்தப்பட்ட
மரணப்பயம்.
புலிகளின் குறி எதிலும் தவறலாம். ஆனால் தான்
கொல்ல வேண்டும் என நினைப்பவர்
இமயத்தில்
இருந்தால்
என்ன, இங்கிலாந்தில்
இருந்தால்
என்ன, இலுப்பைக்
குளத்தில்
இருந்தாலென்ன,
குழாய் கிணற்றிற்குள்
ஒளித்திருந்தாலும்,
பிரமிட்டிற்குள்
மறைந்து இருந்தாலும்
ஏன் வேறு
ஒரு கிரகத்தில்
மறைந்து குடியிருந்தாலும்
குறி தப்பாது
வெறியுடன்
கொல்வர்;. இதற்கு அவர்கள் கற்பிணி வேடம் என்ன,
கருமாதி வீட்டில் பிணமாகவென்ன,
விருந்தோம்பல்
வேடமென்ன,
சிறுவர், சிறுமி என வேடமிட்டு
யாரையும்
பலயெடுக்கவும்
பலிகொடுக்கவும்
தயாராக இருந்தனர்.
இவை எல்லாவற்றையும்
மாற்றிப்
போட்ட நிகழ்வு மே 18 இல்
நிகழ்ந்தது
என்றால் மிகையாகாது.
பிரபாகரனைவிட இராணுவ
அறிவில் பலம் பொருந்திய
கருணா கூட அரச
படைகளின்
பாதுகாப்பில்
முழுவதுமாக
இருந்தாலும்
மே 18 இற்கு
பிறகுதான்
புலிகளின்
எல்லைக்குள்
பிரவேசித்தார்.
அரசியல் சாணக்கியரும்,
போரட்டத்தில்
பல வருட
அனுபவமுள்ள
வரதராஜப்பெருமாள்
தனது மக்களை
நேரடியாகச்
சந்திக்கலாம்
என்று தீர்மானித்த
நாள் மே
18 அன்றுதான்.
புலிகளின் பல பொறிகளில்
தப்பி உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கும்
அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தாவும்
மக்களை பொது இடங்களில்
சந்திக்கலாம்
என தீர்மானித்த
நாள் மே
18. சம்மந்தர் முதல் மாவை வரை
புலிகளின்
பாதை பிழையானது
என நழுவின
மீன் போல்
கதைக்கலாம்
என்று முடிவெடுத்த
நாள் மே
18. இலங்கை அமைச்சர்களும்
அவர் தம்
மனைவியரும்
வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு
தொண்டு செய்வதற்காக,
நாடா வெட்டப்
புறப்படலாம்
என தீர்மானித்த
நாள் மே
18. 'துவக்குடன்
எந்த அறுவானும்
போராட்டம்
என்று இனி வந்தால்
முறத்தல்
அடித்து விரட்டுவோம்'
என்று வீரத்தாயாக
தமிழ்த் தாய் வன்னியில்
மாறிய நாள் மே
18. யாழ் நாக விகாரையும்,
நயினா தீவு நாகதீப
விகாரையையும்
இனித் தரிசிக்கலாம்
என்று அடிமட்ட பௌத்தன் முடிவெடுத்த
நாள். யாழ் பொம்மை
வெளியில்
உள்ள தமது
பள்ளி வாசலை சென்று
பார்வையிடலாம்
என்று முஸ்லீம் சகோதரர்கள் முடிவெடுத்த
நாள். ஏன் கொழும்பில்
மட்டும் முதலீடு செய்த தமது
சொத்துக்களை
சென்று பார்வையிடலாம்
என்று புலிகளின்
ஆதரவாளர்கள்
முடிவு எடுத்த நாளும் இதே மே
18 தான்.
ஏன் கூவ மறந்த
குயில்களும்,
ஆடலை நிறுத்திய
மணில்களும்
பாடவும் ஆடவும் ஆரம்பித்த
நாள். பூக்க,
காய்க மறுக்கப்பட்ட
செடிகளும்,
மரங்களும்
பூக்கவும்
காய்கவும்
அனுமதிக்கப்பட்ட
நாள். வடக்கிலிருந்து தெற்கிற்கு,
கிழக்கிலிருந்து
வடக்கிற்கும்,
மேற்கிற்கும்
சுதந்திரமாக
செல்லலாம்
என தமிழ்
மக்கள் தீர்மானித்த
நாள்.
தமிழர் தலைவர் கலைஞர் புலிகளை முழுமையாக
விமர்சித்து
அறிக்கைகள்
விடலாம் என முடிவு
செய்த நாள்.
புலம் பெயர் நாடுகளில்
புலிச் சண்டியர்களின்
மிரட்டல்களுக்கு
பயப்படாமல்
வியாபார ஸ்தலங்களை
பூட்ட மறுக்கலாம்
என தீர்மானித்த
நாள். புலிகளின் வலிந்த
ஊர்க் கோலங்களுக்கு
செல்வதில்லை
என மக்கள்
தீர்மானித்த
நாள். புலம் பெயர்
நாடுகளில்
புலிகளின்
முதலீட்டாளர்கள்
புலிகளின்
பணத்தை எவ்வளவும்,
எவ்வாறும்
சுருட்டலாம்
இனி வன்னிக்கு
அழைத்து விரட்ட யாரும் இல்லை என
'தைரியமாக'
முடிவெடுத்து
திடீர் மில்லியனராக
மாறிய நாள். புலம்
பெயர் நாடுகளில்
வங்கி கணக்கு மூலம் மாதப்படி
வழங்கி வந்த பலர்
'ளவழி pயலஅநவெ'
அடித்த நாள்.
எங்களுக்கு அப்பவே தெரியும் இவ்வாறு நடக்கும் என புலிகளின்
புகழ்பாடிய
அரசியல் ஆய்வாளர்கள்
குத்துக்கறணம்
அடித்த நாள். ஒலிபரப்பில் புலி புராணம் பாடத் தேவையில்வையென
முடிவெடுத்து
டக்ளஸை பேட்டியெடுக்கலாம்
என முடிவு
செய்த நாள்.
புலிகளுக்கு சரத் பொன்சேகா
உட்பட கேபி, உருத்திரகுமார்,
நெடியவன்
என பலர்
தலைவர்கள்
தேசியத் தலைவர்களாக
பிரகடனப்படுத்திய
நாள். சுரேஸ், சேரன் வகையறாக்களின்;
புலித் தலைமை ஆசைகள்
நிராசையான
தினம். ஆனால் தொடர்ந்தும்
வேறு எவ்
வழியில் பிழைப்பை தொடர்ந்து
நடத்தலாம்
என சிந்திக்
தூண்டிய நாள்.
இவையெல்லாம் எவ்வாறு
நடந்தன என்ற சற்று
பார்ப்போம்.....
1970
களில் தனி நபர்களாகவும்,
தொடர்ந்த
தமிழ் மாணவர் பேரவை என்ற
அமைப்பு வடிவங்கள்
ஊடாகவும்
ஈழவிடுதலைக்கான
ஆயுதப் போராட்டம்
முனைப்பு
பெற்றது. தமிழ்
இளைஞர் பேரவை தமிழர்
விடுதலைக்
கூட்டணிக்கு
ஆள்திரட்டும்,
வாக்குகள்
திரட்டும்
ஒரு அமைப்பாக
தமக்குள்
முழுமையாக
கட்டுப்பட்டு
செயற்படவேண்டும்
என்ற எதிர்பார்ப்பை
மீறி அதிலிருந்து
பிரிந்து
சென்ற பலர் பல்வேறு
ஈழவிடுதலை
அமைப்புக்களை
உருவாக்கி
செயற்படத்
தொடங்கினர். இவ் அமைப்புக்கள்
1970 களின் பிற்பகுதிகளில்
ஆயுதப் போராட்ட அமைப்புகளாக
வளர்ச்சி
பெற்றன. இதனைத் தொடர்ந்து
1980 களின் ஆரம்ப பகுதியில்
பலம் மிக்க
ஆயுத அமைப்புக்களாக
ஊதிப் பெருத்தன, பெருக்க வைக்கப்பட்டன.
இன விடுதலைக்கான
ஆயுதப் போராட்டம்,
வர்க்க விடுதலைக்கான
முதற் கட்டமாக சுயநிர்ணய
உரிமைக்கான
சகதேசிய விடுதலைப்
போராட்டம்
என்ற இரு
பிரிவான வித்தியாசமான
பரிணாமத்தில்
விடுதலை அமைப்புக்கள்
உருவாகி இருந்தன. தேசிய விடுதலைப்
போராட்ட அமைப்புகளுடையே
ஐக்கிய முன்னணிக்கான
தேவையை விடுதலை அமைப்புக்களும்,
பொதுமக்களும்
வேண்டி நின்றனர். 1984 களில் இதன் அடிப்படையில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று விடுதலை அமைப்புக்கள் இணைந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி (நுNடுகு) தோற்றம் பெற்றது. இதனை உருவாக்குவதில் தோழர் பத்மநாபாவின் பங்களிப்பு மகத்தானதாக அமைந்து. இந்த பரிணாம வளர்ச்சியை அவதானித்த அன்றய ஐதேக இலங்கை அரசும், ஏகாதிபத்தியமும் ஈழவிடுதலை அமைப்புகளின் ஐக்கியம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் வெற்றியை நிச்சயப்படுத்தும் காரணியாக அமையப் போகின்றது என்பதை நன்கே புரிந்திருந்தனர். இடதுசாரி நிலப்பாட்டுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு செயற்பாட்டுடன் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற ஐக்கிய முன்னணி தனது செயற்பாடுகளை முனைப்புடன் செயற்படுத்தத் தொடங்கியது. இதனால் ஏகாதிபத்தியத்தின் ஆலோசனையுடன் இவ் ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்தல் என்ற பிரதான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டனர் ஐதேக அரசாங்கத்தினர். இதனை அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி பாராளுமன்றத்திலும், ஜேஆர் ஜெயவர்த்தன பல கூட்டங்களிலும் பேசியிருந்தனர். 'இயங்கங்களுடையே முரண்பாட்டை ஏற்படுத்துவேன்'. 'பகைமையை வளர்ப்பேன்'. 'அவர்களை மோதவிடுவேன்' 'இதன் மூலம் அவர்களை தனிமைப்படுத்துவேன்.' பலவீனப்படுத்துவேன்.' 'பின்பு இல்லாமல் செய்வேன்' என்று பேசித் திரிந்தனர்.
(தொடரும்....) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |