Contact us at: sooddram@gmail.com

 

மே 18, 2009 புலிகளின் தோல்வி நாள் மக்களின் வெற்றி நாள்

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 5)

(சாகரன்)

புலிகள் ஒரு மிகவும் கட்டுப்பாடான இயக்கம் என்பது வெளித் தோற்றத்திற்கு காட்டப்பட்ட ஒரு மாயை. சயனைற் தற்கொலையில் எமக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் புலித்தலைவர் உட்பட சகல உறுப்பினர்களும் மாலைபோல் கழுத்தில் அணிந்திருந்வொன்று சயனைற் குப்பிகள். இது சீலனில் ஆரம்பித்து அருணா வரைக்கும், இலங்கை - இந்திய ஒப்பந்தக் காலத்தில் குமரப்பா புலேந்திரன் போன்ற முக்கிய புலி உறுப்பினர்கள் வரைக்கும  மக்களுக்க 'படம்' காட்டும் பொருளாக மட்டும் பாவிக்கப்பட்டது.  இதனாலேயே இவர்கள் இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டார்கள். யாரும் சயனைற்றை பயன்படுத்தவில்லை. பலாலி இலங்கை இராணுவ முகாமில் காவலில் வைத்திருந்த குமரப்பா, புலேந்திரன் கோஷ்டிக்கு பின்பு தலைவர் பாலசிங்கம் ஊடாக சயனைற்றை கொடுத்தனுப்பி கொன்றார் என்பதே உண்மைநிலை. இதனைக் காரணம் காட்டியே புலிகள் இந்திய இராணுவத்தின் மீதம் வலிந்த தமது தாக்குதலை ஆரம்பித்தனர் என்பது இதனுடன் கூடிய நிகழ்வு.

ஏன் 2009 ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் நடேசன், புலித் தேவன் போன்றவர்கள் சயனைற் அருந்தி தற்கொலை செய்யவில்லை மாறாக வெள்ளைக் கொடியுடன் எதிரியின் கையில் சரணடையவே புறப்பட்டனர் என்று புலிகளே கூறுகின்றனர். எதிரியின் கையில் உயிருடன் பிடிபடுவதில்லை என்பது என்னவாயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக புலித் தலைவன் பிரபாகரன் சயனைற் அருந்தவில்லை. மாறாக இலங்கை அரசிடம் சரணடைந்தான் எப்பதே அவர்களின் இறுக்கமான சயனைற் தற்கொலைக் கட்டுப்பாடு. சயனைற் தற்கொலைக் கட்டுப்பாட்டில் புலிகள் உறுதியாக இருந்திருந்தால் இன்று இராணுவத்தின் விசேட முகாங்களில் 10,000 மேற்பட்ட புலிகள் அடைந்திருக்கமாட்டார்கள். மாறாக மயானங்கள்தான் நிறைந்திருக்கும்.

மீண்டும் சொல்கின்றோம் எமக்கு சயனைற் தற்கொலையில் உடன்பாடு இல்லை. நாம் வாழ்வதற்காக போராடும் வாழ்வை நேசிக்கும் மக்கள் போராளிகள். இதில் நாம் சில வேளைகளில் மரணத்தை தழுவலாம். ஆனால் சாவை வலிந்து ஏற்கும் மனநோயாளிகள் அல்ல. இன்று உலகின் பலபாகங்களிலும் மட்டக்களப்பு சிறை உடைப்பில் இருந்து மீண்ட பல புலி உறுப்பினர்கள் அன்றொருநாள் சயனைற்றை உட்கொண்டிருந்தால் இன்று மனித உரிமை மீறல் போர்க் குற்றங்கள் என்று தொடர்ந்தும் தமது பிழைப்புக்களை நடாத்திக் கொண்டு இருக்க முடியாது.

மே 18 2009 புலிகளின் தோல்வி நாள். மாறாக பொது மக்களின் வெற்றி நாள். ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளின் வெற்றி நாள். காலாவதியாகிக் கொண்டு போன புலிகளின் இருப்பு மே 18 முடியாமல் இன்னும் இழுத்துக் கொண்டே போயிருந்தால் தமிழ் பேசும் மக்களின் இழப்புக்களின் எண்ணிக்கை இன்னும் கூடிக் கொண்டே போயிருக்கும். இன்னும் சற்றே முன்பே முடிந்திருந்தால் வீதிக்கொரு விதவையையும், அங்கவீனரையும், அனாதைக் குழந்தைகளையும் எமது தேசம் தவிர்திருக்கும். ஏன் மாகாணங்கள் தோறும் இருக்கும் இலட்சம் இராணுவ வீரர்களும், முகாங்களும் சற்றே குறைவாக இருந்திருக்கும். புலம் பெயர் தேசங்களில் தமிழ் மக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்திருக்கும். எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த அந்த அன்னை பூமியில் நாங்களும் மகிழ்ந்து விளையாடி வாழ்ந்திருக்கலாம்.

புலிகளின் தோல்வியை எவ்வாறு தவிர்த்திருக்கலாம். இது சற்றுக்கடினமான விடயம்தான் தமிழர் தரப்பில் பன்முகப்படுதப்பட்ட தலைமை என்ற சிந்தனை என்று இல்லாமல் போனதோ அன்றே புலிகளின் தோல்விக்கு அத்திவாரம் போட்டாகிவிட்டது. அப்படிப் பார்த்தால் இலங்கைத் தமிழ் காங்கிரஸின் ஆரம்பத்திலேயே இதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது. ஆயுதம் தாங்கிய போராட்ட வடிவ முறைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே இதற்கான அத்திவாரம் போடப்பட்டு விட்டது. இதன் தொடர்சியாக புலிகள் ஆயுதங்களுடன் அவற்றை நிறைவேற்றி வந்தனர். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒரு பன்முகப்படுதப்பட்ட தலைமை ஏற்றுக் கொள்ளல் என்பதால் புலிகளின் தோல்வியை தவிர்திருக்கலாம். ஆனால் பன்முகப்படுதப்பட்ட தலைமை என்பதே புலிகளின் செயற்பாட்டையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கும் விடயம்தானே. எனவே புலிகளின் தோல்வி என்பது அது புலிகள் புலிகளாக இருக்கும் வரைக்கும் தவிர்க்கப்பட்டிருக்க முடியாது. அது புலிகளாக இல்லாதவிடத்து தவிர்க்கப்பட்டிருக்கும். அது மக்களின் பெரு வெற்றியாகவும் அமைந்திருக்கும்.

புலிகளை ஆதரிப்பதல் மாத்திரம் அல்ல புலிகளை எதிர்பதிலும் ஒரு வகை ஏகபோகமே நிலவி வந்தது. அதுதான் புலிகளின் விழ்ச்சிக்கு பின் இன்று வரை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் பலம் பெறமுடியவில்லை. இந்நிலை நீடித்தால் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஏகபோக சிந்தனையும் செயற்பாடும் மீண்டும் வலுப் பெறும்....... இதன் போக்கில் மீண்டும் ஒரு முள்ளிவாய்கால் நிகழ்வு இனிமேலும் நடைபெற மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

(தொடரும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com