|
||||
|
நிலைத்த வடு
நீங்க வழியேற்படுமா...?
ஆறாத வடுவை
ஏற்படுத்திய
அந்த நாட்கள்
வரலாற்றில்
பதியப்படுமா...?
(பாகம்
2)
(சிவா ஈஸ்வரமூர்த்தி)
தமிழீழ விடுதலைப்
புலிகள் மேற்கொண்ட இந்த வடுவிற்கு
வாய்மூடி
ஒரு வகையில்
அங்கீகாரம்
வழங்கியவர்கள்
இன்று தமிழ் தேசியம்
கூறி ஏக
பிரதிநிதிகளாக
கிழக்கிலும்,
வடக்கிலும்
தன்னாட்சி
நிறுவுவதாக
சூழுரைக்கின்றனர்.
மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை
காண முயல்கின்றனர்.
குழல் பிட்டுவில்
தேங்காயும்
மாவுமாக பின்னி பிணைந்து கலந்து சுவை தந்த
உறவுகளை பள்ளிவாசல்
கொலைகள் இல்லாமல் செய்து விட்டது என்பதில் சில பல
சோகங்கள்
இல்லாமல்
இல்லை. ஈழ விடுதலைப்
போராட்டத்தின்
ஆரம்ப காலகட்டங்களில்
சிறப்பாக
1970 களின் பிற்பகுதி
தொடங்கி
1980 களின் நடுப் பகுதிவரை
சகல ஈழவிடுதலை
அமைப்புக்களிலும்
வடக்கு கிழக்கு வாழ் முஸ்லீம்
இளைஞர்களும்
பங்களிப்பை
செய்தே வந்தனர். முஸ்லீம் மக்களும் போராளிகளின்
பாதுகாப்பிற்காக
தமது படுக்கையறையைக்
கூட ஒழிவிடமாக
பாவித்து
போராளிகளை
மறைத்து காத்த மாண்புகளை
எங்கள் முஸ்லீம் சகோதரிகள்,
தாய்மார்கள்
செய்த வரலாறுகளைக்
கொண்டதே ஈழவிடுதலை
வரலாறு. இவ் அனுபவங்கள்
எங்கள் பலருக்கும்
உண்டு.
குறிப்பாக கிழக்கு
மாகாணம் எங்கும் இலங்கை அரச படைகள்,
தனி நாட்டிற்காக
போராட்ட புறப்பட்டவர்களினால்
மாற்று இயக்கங்கள்
துப்பாக்கி
முனையில்
நசுக்க முற்பட்ட போது எல்லாம்
நாம் பாதுகாப்பு
தேடிய போது எங்களைப்
பாதுகாத்த
வரலாறு இந்த சகோதரிகளை
நிறையவே சாரும். யாரோ சிலர்
'ஜிகாத்' என்று பறப்பட்டு
தவறான ஆயுத செயற்பாட்டை
காரணம் காட்டி முழு முஸ்லீம்
சமூகத்தையும்
இல்லாமல்
ஒழிக்க எடுத்த செயற்பாடு
கிழக்கில்
மக்களின்
இணைந்த செயற்பாட்டின்
மூலம் செயற்படுத்த
முடியாமல்
போனதே எம் மக்களின்
வீர வரலாறு.
முரண்பாடுகளை
வளர்க்க ஊர்க்காவல்
படையென ஆயுதங்களை
சிறுபான்மை
முஸ்லீம்
மக்களுக்கு
மட்டும் அல்ல பெரும்பான்மை
அப்பாவிச்
சிங்கள மக்களுக்கும்
வழங்கி குண்டுகளைப்
பரிமாற்றிக்
கொலையைக்
கண்டு எக்காளம் இட்டதே ஐதே கட்சியின்
வரலாறு. இதற்கான ஆலோசனையை முஸ்லீம் மக்களின் எதிரி இஸ்ரேலிடம்
இருந்து இறக்குமதி
செய்த ஏகாதிபத்திய
சார்பு வரலாற்றை ஜே.ஆர் காலத்தில்
ஆரம்பித்து
பிரேமதாஸ
காலம் வரைக்கும்
தொடர்ந்த
வரலாற்றை
கொண்டதே இலங்கையில்
30 வருடகால யுத்த சாட்சியங்கள்.
இலங்கை பேரினவாத அரசின் இச் செயற்பாட்டை
பாராளுமன்ற
நாற்காலியில்
கண் வைத்துள்ள
மிதவாத முஸ்லீம் பாராளுமன்ற
தலைமைகளும்
தமக்கு சாதகமாக பாவித்துக்
கொண்டனர். இவர்கள் யாருக்கும்
பொதுமக்கள்
மீது எந்த
அக்கறையும்
இருக்கவில்லை.
கிடைத்த பதவிகள்
மூலம் கொழும்பு தெகிவளையில்
சொத்துக்களை
வாங்கிக்
குவித்த தடயங்களை நாம் அறிந்து
கொள்ள முடியும்.
சாதாரண சாமான்ய
மக்களிடையே
சகோதரத்துவத்தை
வலுவாக்கி
வளர்க்க இடைவெளிகள்
இல்லாமல்
செயற்படுவதில்
இவர்கள் தற்காலிக வெற்றிகளை
கண்டனர் என்பது சோகமான நிகழ்வுகளே.
இதனாலேயே இன்று வரை துடைக்கப்பட
முடியாத வரலாற்றை இது எழுதி
நிற்கின்றது.
யாழ் மாநகர சபையில் ஒரு முஸ்லீம்
முதல்வரை
அமரவைத்து
சகோதரத்துவத்தை
வளர்த்த மக்கள் தலைவர் கார்த்திகேசன்கள்
இன்று எங்கள் மத்தியில்
இல்லை. இருந்திருந்தால்
இன்றும் யாழ் மாநகர
சபையில் பதில் முதல்வராக
ஒரு முஸ்லீம்
சமூகத்தை
சேர்ந்தவரை
அமர்த்தி
சகோதரத்துவத்தை
நிறுவ முற்பட்டு
யாரோ இட்ட
வடுக்களுக்கு
ஒத்தடமாவது
கொடுத்திருக்கலாம்
முடியவில்லையே
என்ற ஆதங்கம்
எங்கள் பலருக்கும்
இன்றும் உண்டு.
இச் சந்தர்பத்திற்கு
முன்பும்
ஈழ விடுதலைப்
போராட்டத்திற்காக
போராடிய விடுதலை அமைப்புகள்
பலவும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களில்
ஈடுபட்டார்கள்
என்ற குற்றச்
சாட்டுக்கள்
உள்ளன. இதில் உண்மைகள்
இல்லாமல்
இல்லை. தமிழீழ விடுதலைப்
புலிகளைத்
தவிர்த்து
ஏனைய ஆயுதம்
ஏந்திய விடுதலை அமைப்புக்குகள்
கொள்கை ரீதியாக முஸ்லீம் மக்களை வடக்கு கிழக்கில்
இருந்து இன சுத்திகரிப்பு
செய்வது என்பதைக் கொண்டிருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப்
புலிகள் மாத்திரமே
வடக்கு கிழக்கில்
உள்ள முஸ்லீம்
மக்களை அங்கிருந்து
முற்று முழுதாக இன சுத்திகரிப்பு
செய்தல் என்ற செயற்பாட்டை
தமது இயக்கத்தின்
கொள்கையாக
கொண்டிருந்தவர்கள்.
வடக்கு கிழக்கு
தமிழர்களின்
(மட்டும்) பாரம்பரிய
பிரதேசம்.
இங்கு வேற்று
இனங்களுக்கு
இடம் இல்லை
என்ற கொள்கையின்
அடிப்படையில்
தலைவரால்
வழி நடத்தபட்டவர்கள். இதற்கான
(அ)நியாயங்களையும்
அவ்வப்போது
முன்வைத்து
வந்தவர்கள்.
முள்ளிவாய்கால் இறுதி
யுத்தத்தின்
போது வவுனியா
முகாங்களுக்கு
கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள்
கிட்டத்தட்ட
மூன்று வருடங்ககளில்
பல்வேறு விமர்சனங்கள்
குறை நிறைகளுக்கு
மத்தியிலும்
தமது பாரம்பரிய
வாழ்நிலங்களில்
ஓரளவுக்கேனும்
மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக
புலம் பெயர் தேசத்தின்
தமிழ் தேசிய உணர்வாளர்களும்,
ஐநா மனித
உரிமை அமைப்புக்களும்,
சனல் 4 போன்ற
ஊடகங்களும்,
தமிழ் நாட்டுச் சீமான்களும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்
கொடுத்த உரக்கக் குரலில், ஒரு கீச்சுக்
குரலாவது
22 வருடங்களாக
தமது பாரம்பரிய
பிரதேசங்களில்
இருந்து எம்மவர்களாலேயே
விரட்டப்பட்ட
இன்னும் ஒரு சிறுபான்மை
இனக் குழுமத்தை
மீள்குடியேற்றம்
செய்யவேண்டும்
என்று கோர முடிவில்லை
என்றால் நாம் எல்லோரும்
எங்கே நிற்கின்றோம்
என்ற சிந்தித்த
பார்க்க குற்றவாளிக்
கூண்டிலேயே
நிற்கின்றோம்.
கீச்சுக்
குரலிலாவது
அன்றே இம்மக்களின்
அவலங்களுக்கு
குரல் கொடுத்திருந்தால்,
செயற்பட்டிருந்தால்
தொடரும் 22 வருட கால
அவலம் இந்த உள்
நாட்டில்
அகதிகளாக்கப்பட்ட
மக்களின்
அவலம் தீர்ந்திருக்கும்.
இம் மக்கள்
மனதில் யாரோ இட்ட
வடுகள் இன்று மெது
மெதுவாக கரைந்து காணாமல் போயிருக்கும்.
இதனை குறிப்பாக
தமிழ் சமூகம் செய்ய வேண்டும்.
இடம் பெயர்ந்த
அகதிகள் விடயத்தில்
இரு சமூகமும்
இணைந்து போராடும் பொறி முறைகள்
ஏற்படுத்தப்பட
வேண்டும்.
முடிந்தளவில் இணைந்து,
இயந்து போராட வேண்டும்.
சகோதரத்துவத்தை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.
தமக்கிடையே
மீண்டும்
சுவையான குழல் பிட்டு
பாரம்பரியத்தை
ஏற்படுத்த
வேண்டும்.
முயன்றால் ஏதும் முடியாது என்பது இல்லை என்பதே
வரலாறு.
ஒடுக்கப்படும் சமூகக் குழுக்கள்
தனித்த நின்று போராடாமல்
இணைந்து நின்ற போராடினால்
வெற்றி மக்களுக்கு
நிச்சயம். போராட்டத்தில் பகைவர்களை
குறைத்து
நண்பர்கள்
இணைத்தால்
வெற்றி நிச்சயம்.
நாம் போரை விரும்பும்
நோயாளிகள்
அல்ல. சமாதானத்தை
விரும்பும்
மனிதர் கூட்டம் என்பது சர்வதேச மனித குலத்திற்கு
உறுதிபடுத்தப்பட
வேண்டும்.
நாம் வாழ்வதற்காகவே
போராடுகின்றோம்
மாறாக சாவதற்காகவோ
அல்ல. ஆனால்
இந்த போராட்ட
வாழ்வில்
நாம் சில
வேளைகளில்
மரணிக்கலாம்
இது தியாகம்
என்பதைவிட
இது வரலாற்றுக்
கடமை என்பதே
சரியானதாகும்.
இதனை உணர்ந்து
போராட வெளிகிடுவதே
சாலச்சிறந்தது.
ஒடுக்கப்படும் எந்த உயிரினமும்
தான் உயிர்
வாழ்வதற்காக
போராடிக்
கொண்டே இருக்கும்.
நான்கு கால்களையும்
இழந்து சுடுமணலில்
தப்புவதற்கு
வாய்புகள்
குறைந்த நிலையிலும்
எறும்பு கூட இறுதிவரை
தான் வாழ்வதற்காக
போரர்டும்
போது ஆறு
அறிவு மிக்க மனிதர்கள்
எம்மாத்திரம்.
இவற்றை பகுத்தாய்வு
செய்து போராடப் புறப்பட்டிருக்க
வேண்டும்.
தலைமையை வழங்க முற்பட வேண்டும்.
இவ் விடையத்தில்
எற்பட்ட தவறுகளே நாம் இன்று
பலம் இழந்து
நிற்பதன்
தரித்திரம்;
ஆகும்.
தமிழீழ விடுதலை
புலிகள் தவிர்ந்த மாற்று இயக்கங்கள்
முஸ்லீம்
சமூகத்தையோ
அல்லது வடக்கு கிழக்கில்
வாழந்த சிறு தொகை
சிங்கள மக்களையோ இல்லாது ஒழிப்பதன்
மூலம் தமது போராட்டத்தை
வெல்லலாம்
என்ற கொள்கையின்
அடிப்படையில்
செயற்படவில்லை.
ஆனால் இவ் அமைப்புக்களின்
உறுப்பினர்கள்
சிலர் இவ் மக்;களுக்கு எதிராக செயற்பட்டது
எல்லா விடுதலை அமைப்புக்களும்
ஓரே மாதிரியாகவே
இவ் மக்களை
அணுகினர்
என்ற வரலாற்று
திரிபுவாதக்
கருத்திற்கு
வருவது பிழையானது
ஆகும். இதன் அர்த்தம்
இத்தவறுகள்
நியாமானவை
என்பது அல்ல. இதற்கான
பிராயச்சித்தங்களை,
விமர்சனங்களை
சம்மந்தப்பட்டவர்கள்
செய்ய வேண்டும் என்பது ஆகும். இவர்களின் இத் தவறுகளின்
பாவங்கள்
கழுவப்படவேண்டும்.
இதன் மூலமே முஸ்லீம் மக்கள் மத்தியில்
ஏற்பட்ட இந்த ஆறாத
ரணத்தை ஆற்ற முடியும்.
இதற்காக சம்மந்தப்பட்டவர்கள்
கடுமையாக
உழைக்க வேண்டும்.
கூடவே ஏ 9 பாதை திறந்தவுடன்
விரட்டியடிக்கப்பட்ட
அந்த மக்களை
மேளதாளங்களுடன்
அழைத்து வந்து சம்பிரதாயங்களுக்கு
எற்ப அவர்கள்
பாரம்பரியமாக
வாழ்ந்த யாழ் மண்ணில்
குடியேற்றத்தை
ஆரம்பித்திருந்தால்
நம்பிக்கைகளை
எற்படுத்தி
வடுக்களை
நீக்க வாய்ப்புக்கள்
நிறைய ஏற்பட்டிருக்கும்.
இதனை பல நலன்
விரும்பிகள்
2009 மே மாத
யுத்த முடிவின் பின்பு உடனடியாக முன்வைத்தனர்.
மத்தியிலும், மாநிலத்திலும்
ஆண்டவர்களுக்கு
இதனைச் சீர்தூக்கிப்
பார்க்க அன்று நேரங்கள்
இருக்கவில்லை
போலும். வடுவை நீக்கும்
நல் மருந்துகளில்
ஒன்றை பரீட்சித்து
பார்க்க முடியவில்லை.
மேலும் தமிழ்
தேசியக் கூட்டமைப்பு
போன்றவர்கள்
தொடர்ந்தும்
முஸ்லீம்
மக்கள் எம்முடன் இணைய வேண்டும்
என்ற மேலாதிக்க
கருத்தை, நாமும், முஸ்லீம் மக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற ஐக்கிய
முன்னணி வேலைத்திட்டத்தை
தவிர்த்து
முன்வைத்தனர்.
தமக்கு கீழ் இணைய மறுத்தவர்களை
இறுதியில்
துரோகிகள்
என்றும் கூறினர். இதன் மூலம் சிறுபான்மையினருக்குள்
இன்னொரு பெரும்பான்மையினர்
என்ற மேலாதிக்க
செயற்பாட்டை
மேற்கொண்டும்
வருகின்றனர்.
மறு புறத்தில்
முஸ்லீம்
பாராளுமன்றத்
தலைமைகளும்
அரசுடன் இணைந்து அனுசரித்து
சலுகைகள்
பெறுதல் என்பதில் இருக்கும்
நம்பிக்கை
உரிமை மறுக்கப்பட்டவர்களுடன்
இணைந்து போராடுதல்
என்பதில்
இருப்பதாக
தெரியவில்லை.
பிரிந்து
நின்று உரிமைகளைப்
பெறுதல் என்பதில் நாம் இறுதியில்
மேலும் பலவீனப்பட்டு
இல்லாமல்
போய்விடுவதற்கான
வாய்புகளே
அதிகம் என்பதை வடக்கு கிழக்கு வாழ் அரசியல்
தலைமைகள்
புரிந்து
செயற்பெறவேண்டும்.
மக்கள் தயாராக
இருக்கின்றனர்
இணைந்து போராடுவதற்கு
அரசியல் தலைவர்கள்
தயாரா? என்பதே இன்றைய கேள்வி....?
(இக் கட்டுரை
கனடாவிலிருந்து
வெளிவரும்
பூபாளம் வார செய்திப்
பத்திரிகையில்
கார்த்திகை
02, 2012 வெளிவந்தது) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |