|
||||
|
மார்கழி 13, 1986
ஈபிஆர்எல்எவ் மீது
தனது திட்டமிட்ட
தாக்குதலை
பிரபாகரன்
தலைமையிலான
புலிகள் இயக்கம் மேற்கொண்ட
நாள்
1986
ஏப்ரல் 29 ரெலோ இயக்கத்தின்
மீது தாக்குதல்
தொடுத்து
நரவேட்டையாடிய
புலிகள் மே 6ம் திகதி
ரெலோ இயக்கத்தின்
தலைவர் சிறி சபாரத்தினத்தையும்
சுட்டுக்கொன்றனர்.
1986 அக்டோபர்
புளட் இயக்க அங்கத்தவர்களை
அச்சுறுத்தி
அரசியல் நடவடிக்கைகளை
நிறுத்துமாறு
கட்டளையிட்டனர்.
அரசியல் நடவடிக்கைகளை
நிறுத்துவதாக
பத்திரிகை
அறிக்கை ஒன்றை வெளியிடச்
செய்து புளொட் இயக்கத்தின்
செயற்பாடுகளையும்
முடக்கியிருந்தனர்.
1986 மார்கழி
13 அன்று ஈபிஆர்எல்எவ்
மீது தாக்குதல்
தொடுத்து
ஈபிஆர்எல்எவ்
இன் அரசியல்
நடவடிக்கைகளுக்கு
புலிகள் தடை ஏற்படுத்திய
பின்னர் தமிழ் மக்களின்
விடுதலைக்காக
ஆயுதம் ஏந்தி போராடிய,
தமிழ் மக்கள் மத்தியில்
பரவலாக ஆதரவை பெற்றிருந்த,
5 இயக்கங்களில்
ஈரோஸ் மட்டுமே எஞ்சியிருந்தது.
ஈரோஸ் எஞ்சியிருந்த
போதும் அது புலிகளிடமிருந்து
தப்பிப்பதற்காக
கையாண்ட ஒரே தந்திரம்
புலிகளை புலிகளை விமர்சிப்பதை
தவிர்த்துக்கொண்டதுதான். இதனால், புலிகளின்
நடவடிக்கைகளை
நியாயப்படுத்தப்
போய் அதன்
ஒரு பகுதி
புலிகளுடனேயே
சங்கமமாகவேண்டி
ஏற்பட்டது.
ஈரோஸ் இயக்கம் புலிகளால்
தடைசெய்யப்படாதிருந்த
போதும் 1986 மார்கழி 13 இல் ஈபிஆர்எல்எவ்
மீது புலிகள்
தாக்குதல்
தொடுத்ததன்
பின்னர் புலிகளின்
அராஜகங்களுக்கு
எதிராக குரல் கொடுக்கின்ற,
புலிகளின்
தவறான போக்குகளை
சுட்டிக்காட்டுகின்ற
செயற்பாடு
முடிவுக்கு
வந்துவிட்டது.
ரெலொ இயக்கம் மீது தாக்குதல்
தொடுக்கப்பட்ட
போது ஈபிஆர்எல்எவ்
அதனை கண்டித்து
பிரச்சாரங்களை
மேற்கொண்டது.
விஜிதரன் கடத்தப்பட்ட
போது அதற்கெதிராக
நடாத்தப்பட்ட
மக்கள் போராட்டங்களுக்கும்
ஈபிஆர்எல்எவ்
பக்கபலமாக
இருந்தது.
புலிகள் ஈபிஆர்எல்எவ்
இன் அரசியல்
இராணுவ நடவடிக்கைகளுக்கு
முட்டுக்கட்டை
போட்ட பின்னர்; இதர அரசியல்
கட்சிகளின்
இருப்பு கேள்விக்குறியாகியதுடன்
வெகுஜனப்
போராட்டங்கள்
முடிவுக்கு
வந்தது. வெகுஜன அமைப்புக்கள்
புலிகளின்
முன்னணி அமைப்புக்கள்
ஆக்கப்பட்டன.
அதற்கு உடன்படாத
வெகுஜன அமைப்புக்கள்
செயலிழந்து
போவதை தவிர தப்பிப்பிழைக்க
வழிகளிருக்கவில்லை.
2009 மே 18 முள்ளிவாய்க்காலில்
புலிகள் முடக்கப்படும்
வரை இந்த
நிலை நீடித்தது.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்
நாங்கள் மட்டுமே என்று தம்மை
தாமே நிறுவ
முனைந்த புலிகள் தலைமை இந்தப்
பேராசை காரணமாகவே
இதர ஆயுதந்தாங்கிய
இயக்கங்களை
அழிக்க எண்ணியது. ஆனாலும் அன்று தமிழ் மக்களின்
ஏகபிரதிநிதிகள்
தாமே என்று
மக்களிடம்
சொல்லும்
துணிவு புலிகளுக்கு
இருக்கவில்லை.
எனவே, புலிகளின்
தலைமை தனது கபடத்தனத்தை
மறைக்க ரெலொ சமூக
விரோத நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாகவும்
ஈபிஆர்எல்எவ்,
புலிகள் மீது தாக்குதல்
நடத்த திட்டமிட்டிருந்ததாகவும்
அதனால் தாங்கள் முந்திக்கொண்டோம்
என்றும் கூறி மக்களையும்,
தமது அங்கத்தவர்களையும்
ஏமாற்றிக்கொண்டிருந்தனர்.
1986
ஆம் ஆண்டுக்கு
பின்னர் பராயமடைந்த
இளைஞர் யுவதிகள் மத்தியில்
ஈபிஆர்எல்எவ்
விடுதலைப்போராட்டத்திற்கு
துரோகமிழைத்துவிட்டதாகவே
புலிகள் நஞ்சை ஊட்டியிருக்கிறார்கள்.
இயக்க மோதல் இடம்பெற்றதாகவே
இன்று வரை தமிழ்
ஊடகங்கள்
தமிழ் சமூகத்தின்
பிரமுகர்கள்
பலரும் கூறி வருகின்றார்கள்.
புலிகளின்
தலைவர் பிரபாகரன்
ஏக தலைவனாகிவிட
வேண்டும்
என்ற நப்பாசையினால்
உந்தப்பட்டு
ஏனைய இயக்கங்களை
அழித்தொழிக்க
நடாத்திய
திட்டமிட்ட
திடீர் தாக்குதல்
என்ற உண்மை
மறைக்கப்பட்டு
வருகின்றது.
ஈபிஆர்எல்எவ்
முகாம்களிலிருந்த
பலர் நிராயுதபாணிகளாகவே
இருந்தனர்
என்பதும்
என்ன நடக்கிறது
என்பது தெரியாமலே
பலரும் புலிகளால்
சிறைப்பிடிக்கப்பட்டனர்
என்பதும்
சம்பந்தப்பட்டவர்களுக்கே
தெரியும்.
புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு
புலிகளின்
முகாமில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த
ஈபிஆர்எல்எவ்
உறுப்பினர்களுடன்
அந்த முகாமை
நிர்வகித்து
வந்த புலி
பொறுப்பாளர்
ஒருவர் சகஜமாகப் பழகியதை தொடர்ந்து
நடந்த உரையாடலின்
போது 'ஈபிஆர்எல்எவ்
எங்களை தாக்குவதற்காக
திட்டமிட்டிருந்தது
அதனை முன்
கூட்டியே
தெரிந்து
கொண்டதால்
தான் உங்கள்
மீது தாக்குதல்
நடாத்த வேண்டிவந்தது'
எனத் தெரிவித்தார்
இதனை கேட்டுக்கொண்டிருந்த
ஈபிஆர்எல்எவ்
உறுப்பினர்
ஒருவர் 'நீங்கள் புலிகளின்
இராணுவப்
பிரிவை சேர்ந்தவர்
எங்கள் மீது தாக்குதல்
நடாத்தி ஆயுதங்கள்
அனைத்தையும்
கைப்பற்றிவிட்டீர்கள்
இத்தனை சொற்ப ஆயுதங்களையும்,
தொடர்பு சாதனங்களையும்
வைத்துக்கொண்டு
தாக்குதல்
நடாத்த திட்டமிட்டிருப்போம்
என்று இப்போதும்
நம்புகிறீர்களா'
என கேட்டார்.
அந்த புலி பொறுப்பாளரிடமிருந்து
எந்தப்பதிலும்
இல்லை. அவர் அதற்கு
மேல் நியாயப்படுத்த
விரும்பவில்லை
எனத் தெரிந்தது.
தமது சுய இலாபத்திற்காக
புலிகளை சூழ்ந்து கொண்டவர்களே
புலிகளின்
நடவடிக்கைகளை
நியாயப்படுத்தி
தம்மை வளப்படுத்திக்
கொண்டனர்.
'ரெலோ இயக்கம்
மக்களிடம்
கொள்ளையடித்தவை
என யாழ்
நகரில் பொருட்கள்
காட்சிக்கு
வைக்கப்பட்டன. ரெலோ களவெடுத்த
படியால் தான் புலிகள்
அவர்களை அழித்தார்கள்
என அண்மையில்
நான் யாழ்ப்பாணம்
சென்றபோது
கூட எனது
நண்பர் ஒருவர் கூறினார்.
காட்சிக்கு
வைக்கப்பட்ட
பொருட்களில்
முக்கால்வாசிக்கு
மேற்பட்ட
பொருட்கள்
எமது இயக்கத்தால்
கொள்ளையடிக்கப்பட்டவை
என்று மக்களுக்கு
இன்னும் தெரியாது' என முன்னாள்
புலிகள் இயக்க உறுப்பினர்
வாசுதேவன்
ரெலோ தலைவர்
சிறி சபாரத்தினத்தின்
25 வது நினைவு
தினத்தில
உரையாற்றும்
போது தெரிவித்திருந்தார்.
தேசத்துரோகிகள் என்றும்
சமூக விரோதிகள்
என்றும் புலிகளால்
வர்ணிக்கப்பட்ட
ரெலோ இயக்கம்
இனமானம் காப்பவர்கள்,
தன்மானம்
மிக்கவர்கள்
என கொண்டாடப்படுவதும்
ரெலோ இயக்கம்
மீதான புலிகளின்
தாக்குதலை
கண்டித்தவர்கள்,
இந்த போக்குக்கு
எதிராக குரல்கொடுத்தவர்கள்
இப்போது ரெலோ இயக்கத்தினராலேயே
துரோகிகளாக
வர்ணிக்கப்படுவதுந்தான்
தமிழர் போராட்ட வரலாற்றின்
விநோதம். புலிகள், துரேகிகள்
என்ற போது
ஆமாம் என்றவர்கள்
அவர்களையே
புலிகள் விடுதலைப்
போராட்டத்தின்
பங்காளிகள்
என்ற போதும்
கேள்விக்கிடமின்றி
தமிழ் சமூகம் ஆமோதித்திருக்கிறது.
ஈபிஆர்எல்எவ் மீது
புலிகள் மேற்கொண்ட
மார்கழி 13 தாக்குதலைத்
தொடர்ந்து
புலிகளால்
சிறைப்பிடிக்கப்பட்ட
தோழர் கபூர்- பருத்தித்துறை,
தோழர் பெஞ்சமின்-
பொகவந்தலாவை,
தோழர் ஈஸ்வரன்- யாழ்ப்பாணம்,
தோழர் கதிர்- கிளிநொச்சி,
புளொட் இயக்கத்தை
சேர்ந்த சின்ன மென்டிஸ்-உடுவில்
போன்ற பலர் புலிகளால்
கைது செய்யப்பட்டு
தடுத்து வைக்கப்பட்டிருந்ததைக்
கண்ணால் கண்ட பலர்
இருந்தும்
இவர்கள் விடுவிக்கப்படவேயில்லை.
புலிகளின்
முகாம்களில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த
தோழர்களின்
நிலையை அறிய புலிகளின்
முகாமுக்கு
சென்று வந்த வாணி
அம்மா என தோழர்களால்
வாஞ்சையோடு
அழைக்கப்பட்ட
விஜயஅன்னலட்சுமி
(மாவிட்டபுரம்)
புலிகளால்
முதல் முதலில் காணாமற் போகச் செய்யப்பட்ட
பெண்ணாவார்.
இவ்வாறு காணாமற்போகச்
செய்யப்பட்டவர்களை
கண்டுகொள்ள
மறுத்த தமிழ் சமூகம்
இதனைத் தொடர்ந்து
காலத்துக்குக்
காலம் காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின்
எண்ணிக்கை
பலமடங்கு
அதிகரித்துச்
செல்வதை காண நேர்ந்தது. அன்று
புலிகள் நட்ட இந்த
விதை ஆல்போல்
தழைத்து அறுகுபோல்
வேரோடி விச விருட்சமாய்
தமிழ் சமூகத்தில்
பல்லாயிரக்கணக்கானவர்கள்
கண்ணீரோடும்,
கவலையோடும்
அலையும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
புலிகள் தங்களுக்குத் தாங்களே குழிபறித்துக்கொண்டு தமிழர்களையும் அந்த படுகுழியில் தள்ளிவிட்டுள்ளார்கள். எல்லா செயல்களுக்கும் விளைவு உண்டு. புலிகளின் தவறான போக்கை தட்டிக்கேட்க, தடுத்து நிறுத்தத் தவறிய சமூகம் அதன் விளைவுகளுக்கான விலையை செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. புலிகள் அழிக்க நினைத்த எந்த இயக்கத்தையும் புலிகளால் அழிக்க முடியவில்லை. புலிகளின் நினைப்புக்கு மாறாக ஈபிஆர்எல்எவ் 27 ஆண்டுகளை கடந்து மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்துக்கொண்டே அமரர் தோழர் பத்மநாபா காட்டிய வழியில் தனது பயணத்தை தொடர்கிறது.
இனியும் தொடரும்........ |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |