|
||||
|
என் மனவலையிலிருந்து..... தெற்கில் மைதிரி தோல்வி! வடகிழக்கில் மகிந்த தோல்வி!! ஆனால் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைதிரி வெற்றி!!! (சாகரன்) நடந்து முடிந்த தேர்தலில் தென் இலங்கையில் சிறப்பாக பெரும்பான்மை சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவை தேர்தெடுத்து வெற்றி பெற வைத்துள்ளனர். மாறாக அத்தனகலை ஈறாக இப்பகுதிகளில் மைதிரி சிறிசேனாவை தோற்கடித்துள்ளனர். மாறாக மைதிரியை வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் சிறப்பாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெற்றியடைய வைத்துள்ளனர்.(பார்க்க அருகில் உள்ள வரைபடத்தை)(பார்க்க பெட்டிச் செய்தி) இதன் மூலம் முழு இலங்கையிலும் மைதிரி வெற்றி பெற்று புதிய 7வது ஜனாதிபதியாக வெற்றியடைந்திருக்கின்றார். இதே போன்ற செயற்பாட்டையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தா, சரத் பொன்சேகா போன்றவர்கள் பெற்றிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு முந்தைய ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தாவிடம் காசை வாங்கிக்கொண்டு வடக்கு, கிழக்கு மக்களை தேர்தலில் பங்குபற்றாமல் தடை செய்திருந்தனர் புலிகள். இறுதியில் இலங்கை முழுவதற்குமான தேர்தல் முடிவுகள் மகிந்தாவை இரு முறையும் வெற்றி பெற வைத்துள்ளது. இதே மாதிரியான அனுபவங்கள் சந்திரிகாவின் வெற்றிகளிலும் உண்டு. ஆக மகிந்தாவின் கடந்த கால வெற்றிகளும், தற்போதைய தோல்விகளும் சிங்கள மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டது. இம்முறை மைதிரியின் வெற்றிக்கு பலம் சேர்த்தது ஏன் தீர்மானகரமான சக்திகளாக இருந்தது என்னமோ சிறுபான்மையினரின் வாக்குகளே. தனது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த இந்த சிறுபான்மை மக்கள் இலங்கைத் தீவில் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதிப்படுத்துவதிலேயே மைதிரியின் வருங்கால வெற்றிகள் அமையப்போகின்றது. உங்களின் வெற்றிக்கு நன்றிக் கடனாக நீங்கள் இதனைச் செய்யவேண்டும் என்ற எதிர்பார்புடன் இங்கு நாம் இதனை குறிப்பிடவில்லை. மாறாக சிறுபான்மை மக்கள் உங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்பதை நீங்கள் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே இங்கு இதனை பதிவு செய்கின்றோம். அன்றேல் இன்னும் ஒரு ஐந்து? வருட முடிவில் மகிந்தருக்கு இன்று ஏற்பட்ட நிலமைகளே மைதிரிக்கும் ஏற்படும். இவற்றை கருத்தில் கொண்டு புதிய ஜனாதிபதி செயற்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவற்றுடன் கூடவே சிறுபான்மை தலமைகள் தங்கள் சமூகம் சார்ந்த இந்த வாக்கு வங்கிப் பலத்தை சரியான இராஜதந்திரத்தை பாவித்து இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்களா? அல்லது வெத்து வேட்டாக மாறி விடுவார்களா? என்பது எப்பவும் போல் இலவுகாத்த கிளிக் கதையாக முடியுமோ என்ற ஏக்கம் தமிழ் பேசும் மக்களுக்கும் எனைய இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கும் நிறையவே உண்டு. இவை
எல்லாவற்றிற்கும் மேலாக ஜனாதிபதி முறமையை ஒழித்து பாராளுமன்றத்திடம்
அதிகாரத்தை வழங்குவேன் என்று புயலெனப் புறப்பட்ட மகிந்தரும் மூன்றில்
இரண்டின் பின்பு இரண்டு தவணையை ஆயுள்காலத்திற்கும் இருக்கலாம் என்று
தள்ளிப்போட எத்தனித்த பதவி, அதிகார ஆசைகள் அவரைப் படுகுழியில் தள்ளியது போல்
மைதிரியும் பதவி, அதிகார ஆசைகளுக்கு உட்பட்டு பொலநறுவாவிற்குள் முடங்கிப்
போகக் கூடாது என்பதே இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு. இவ் எதிர்பார்பை நாம்
ரணிலிடம் எதிர்பார்க்க முடியாது. இவர் ஜே.ஆர் இன் வாரிசாகவே செயற்படுவர்.
மைதிரியும் பிழைவிட்டால்? சிறுபான்மை, பெருபான்மை என்பதற்கு அப்பால் நாம்
கிராமங்களை நோக்கி வகுப்பெடுக்கப் போவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்பதை
வரலாறு நிறுவியே நிற்கும். {2015 ஜனாதிபதி தேர்தலில்:
வட கிழக்குக்கு
வெளியே(OUT OF NORTH-EAST).......... |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |