Contact us at: sooddram@gmail.com

 

தியாகிகள் தினம்

மாற்று அணிக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம் என்று உறுதி பூண்போம்

(தோழர் ஜேம்ஸ்)

மிதவாதத் தலமைகளின் வேகம் போதவில்லை. இவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டும் இளைஞர்களை உசுப்பிவிட்டு தேர்தலில் வெற்றிகளை பெறுவர். இதனைத் தொடர்ந்து தமது சகவாழ்விற்காக தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை உதறிவிட்டு இலங்கையின் பேரினவாத அரசுகளுடன் நிபந்தனையற்ற சமரசங்களை ஏற்படுத்துவர். இதுவே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் வரலாறாக 1970 வரை தொடர்ந்தது. இந்த பாராளுமன்ற ஏமாற்று அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் பேசும் மக்களை விடுவித்து சிறுபான்மை இனங்களின் விடுதலையின் ஊடாக ஒட்டு மொத்த இலங்கை மக்களின் புரட்சிகர அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று புறப்பட்வர்கள் ஈழவிடுதலை இயக்கங்களில் மிகச்சிலரே. இதில் முதன்மையான இடத்தில் இருப்பவர் தோழர் நாபா என்றால் அது மிகையான கூற்றல்ல. இதனை வெறும் கோஷம் என்ற விடயத்திற்கு அப்பால் செயலிலும் செய்து காட்டியவர் தோழர் பத்மநாபா அவரகள். மலையக மக்களே இலங்கையின் போராட்ட சக்திகளின் தலைமைச் சக்தியாக விளங்கமுடியும். இழப்பதற்கு ஏதும் அற்ற இந்த உழைக்கும் மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும் என்று தனது ஆயுதப் போரட்டத்தின் ஆரம்ப கட்டத்திருந்து செயற்பட்டு வந்தவர்.

ஈழப் புரடட்சி அமைப்பு என்ற ஈழவிடுதலை அமைப்புடன் கொள்கை ரீதியான முரண்பாடுகளால் இரு அணிகளாக பிரிந்து சென்ற போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை ஸ்தாபித்து இதற்கான தலைமையை வழங்கியவர் தோழர் நாபாதான். ஆனாலும் ஈழப் புரட்சி அமைப்புடன் சக விடுதலை அமைப்பு என்ற ரீதியில் தொடர்ந்தும் ஐக்கிய முன்ணி அமைத்து செயற்பட்டவர். சகல ஈழவிடுதலை இயகங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத முனையில் செயற்பட விடாமல் தடுத்த போது பாலகுமார் தலமையில் ஈழப் புரட்சி அமைப்பு புலிகளுடன் இணைத்துக் கொண்டதிலிருந்து ஈழப் புரட்சி அமைப்புடனான முனை;பாடடிற்கான வரலாற்று நியாயத்தை தோழர் நாபாவின் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி நிறுவிநின்றது தற்காலத்தில் வரலாற்றில் நிரூபிக்கபப்ட்டது. இதனை ஈழப் புரட்சி அமைப்பிலிருந்து பிரிந்து செல்வதை தவிர வேறுமார்க்கம் தமக்கு இருக்கவில்லை என்று தோழர் நாபா தீர்க்கதரிசனத்துடன் எடுத்திருந்தார் என்பதை தற்போது வரலாறு நிறுவி நிற்கின்றது.

ஈழவிதுலை அமைப்புகளிமையேயான முரண்பாடுகளின் மத்தியிலும் திம்பு பேச்சுவார்த்தை போன்ற பொதுவான செயற்பாடுகளில் எல்லாம்; மிதவாத தலமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியையும், ஒவ்வொரு திசையில் முகம் திருப்பி நின்ற பிரதான 5 ஈழவிடுதலை அமைப்புக்களையும் தற்காலிகமாகவேனும் ஐக்கியப்படுத்தி இலங்கை அரசுடன் ஒரு அணியாக ஒரே கோரிக்கைகளுக்காக இவ் அமைப்புக்களை நிறுத்தி நிற்க வைப்பதில் தனது மனிநேய செயற்பாட்டின் மூலம், விட்டுக்கொடுப்புகளின் மூலம, ஐக்கிய முன்னணித் தந்திரோபாயத்தின் மூலம் நிறுவிநின்ற மகத்தான தலைவன் தோழர் நாபா என்றால் மிகையாகாது.

இதனால்தான் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட 4 அம்சக் கோரிகையை முகம் கொடுக்க முடியாமல் ஜேஆர் ஜெயவர்தனவின் சகோதரர் பேச்சுவார்த்தை மேடையைவிட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில்; நடுநிலையாளராக செயற்பட்ட இந்தியாவின் நிபந்தனையான தனிநாட்டைத் தவிர வேறு எந்த கோரிக்கைகளையும் முன்வையுங்கள் என்று கோரப்பட்டது, நாலு அம்சக் கோரிக்கைகள் மூலம் தனிநாட்டிற்கு எந்தவகையிலும் குறைவில்லா விடயத்தை இந்த நாலு அம்சக் கோரிக்கைகளும் தன்னத்தே கொண்டிருக்குமாறு இதற்கான வரையுகளை தோழர் வரதர், கேதீஸ் ஆகியோர் செய்தனர். புpன்பு அவ் நாலு அம்சக் கோரிக்கைகளும் ஒரு போதுமைப்படுத்திய கோரிக்கைகளாக ஈழவிடுதலை அமைப்புக்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளும் படியான நிலமையை எற்படுத்தியதிலிருந்து தோழர் நாபா தன்னை ஒரு ஐக்கிய முன்னணியின் பிதாமகனாக செயற்பாட்டின் மூலம் உயர்த்திக் கொண்டார் என்பதுதான் வரலாறு.

புலிகள் 1986 இல் எல்லா ஈழவிடுதலை அமைப்புக்களையும் தடைசெய்த பின்பு 1987 இல் இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தபபட்ட இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தில் கூட தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி எம்முடன் சகோதர உறவை அறுத்துக்கொண்டு கொலைத் தாண்டவம் ஆடிய புலிகளுடன் ஒரு அணியாக நின்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று மக்களை முன்னிறுத்திய செயற்பாடு தோழர் நாபாவிடமே மற்றய ஈழவிடுதலைத் தலைவர்களைவிட மேலோங்கி இருந்தது. இத்தனைக்கும் இந்த ஒப்பந்தத்தின்போது எல்லா வகையிலும் இந்தியா புலிகளை மட:டும் முன்னிலைப்படுத்தியது. இதற்கான நிபந்தனைகளை இந்திய அரசிடம் புலிகள் முன்வைத்தே செயற்பட்டனர. இவ்வாறான நலமையிலிலும் மக்களின் விடிவே முதன்மையானது என்பதை கருத்தில் கொண்டு எல்லாவகை விட்டுக் கொடுப்புகளுக்கும் தன்னையும், தான் சார்ந்த அமைப்பையும், தோழர்களையும் நெறிப்படுத்தி வழி நடத்திய முன்னணி மக்கள் தலைவன் பத்மநாபா தான்.

புலிகளின் அதிகார வெறியும், தான் என்ற அகங்காரமும் மற்றவர்கள் என்று மாற்றுக் கருத்தாளர்கள் என்று யாரும் இருக்கக் கூடாது என்று மீண்டும் சமாதான காலத்தில் ஏனைய விடுதலை அமைப்புக்கள் மீது போர் தொடது;தும், இதனைத் தொடர்ந்து இந்தியா மீத போர் தொடுத்தனர். தொடர்சியாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பிரேமதாஸவுடன் இணைந்து இணைந்த வடக்கு கிழக்கு மகாண சபையையும் இல்லாமல் செய்ய முற்பட்டனர். 13 வது திருதச்சட்ட மூலம் கிடைத்த மகாண சபை தமிழ் மக்களின் அரசியல் திரு;விற்கான  ஆரம்ப புள்ளியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மிகச்சரியாக முடிவெடுத்துச் செயற்பட்ட தீர்க்க தரிசனம் மிக்க தீரக்கமான தலைவர் தோழர் நாபா. இதனாலேயே இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை கையேற்று ஆட்சியமைக்க புறப்பட்டது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

தொடர்ந்த வடக்கு கிழக்கு மகாண சபையில் அடக்கு கிழக்கு மாகாணங்களின் வாழும் மூவின மக்களிடையேயான ஐக்கியம் சமத்துவமமே வடக்கு கிழக்கை ஒரு பலமான மகாண நிர்வாக அலகாக மாற்றும் என்பதை தெளிந்தறிந்த தோழர் நபா தமிழர், சிங்களவர் முஸ்லீம் என் மூவின மக்களின் பிரநிதித்துவத்தை கருத்தில் கொண்டு மூவின பிரதிநிதிகளையும் கொண்ட அமைச்சர் அவையை அமைத்தார். இதற்கான தலமைப் பொறுப்பை சிறந்த இராஜதந்திரி, சிறந்த நிர்வாகி, மக்கள் நலன்களில் எந்த விட்டுக்கொடுப்பையும் விட்டுக்கொடுக்காத இலங்கையின் தலைமை சக்தியின் பிரதிநிதியான வரதராஜப்பெருமாளை இம் மகாணத்தின் முதல் அமைச்சராக நியமித்த சாணக்கியன் என்றால் அது தோழர் நாபாதான்

இன்று 40 வருடங்களுக்கு மேலான மிதவாத அரசியல் போராட்டம், 30 வருடங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டம் என்று கடந்து இன்று இறுதியில் மகாணசபைக்கு அதிகாரம் காணாது, இருக்கின்ற அதிகாரங்களை செயற்படுத்தவிடுகின்றார்கள் இல்லை என்ற நிலைக்குத்தான் இத்தனை அழிவுகளுக்கு பின்பும் தமிழ் பேசும் சமூகம் வந்திருக்கின்றது. இதுதான் சாத்தியம் இதனை இன்னும் பலமான பரந்துபட்ட நிலையில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பே சொல்லி நின்று செயற்படுத்த முயன்றவர் தோழர் நாபா. இந்த வரலாற்றை மறைக்க முடியாது எனவே தோழனே உன்னையும் உன்வழியில் இன்றுவரை தடம் பதித்து நடப்பவர்களையும் வரலாறு விடுதலை செயற்தே விட்டது இன்று என்பது நிதர்சனமான உண்மைகள் ஆகிவிட்டன.

பேரினவாத்திற்திடம் சரணாகதியடையாமலும் அதே வேளை குறும் தேசியவாதத்திற்குள் வீழந்தும் விடாமல் பயணித்த தலைவர் என்றால் அது நீங்களே. இன்று உங்களைப்போன்ற ஆளுமை மிக்க தலைவர்களை தமிழ் பேசும் சமூகம் இழந்து நிற்கின்றது என்பதை வரலாறு விதைத்தே நிற்கின்றது. தோழரே நீங்கள் பயணித்த பாதையில் தடம்பதித்து வீறுநடைபோட ஒரு பலமிக்க சமூக அமைப்பை கட்டி இதனை ஒரு முன்னணிச் சக்தியாக்க முயல்கின்றோம். இதுவே தமிழ் பேசும் மக்களின் சமாதான சமவாழவிற்கு நிச்சயம் அத்திவாரமாக அமைய முடியும் இதற்கு பயணிக்கவேண்டுய தூரம் வெகு தூரம் என்றாலும் முயல்வோம்! வெல்வோம்!! உளம்சோரும்!!! என்ற கோஷத்துடன் நம்பிக்கையுடன் பயணிக்கின்றறோம். இதுவே எங்கள் தியாகங்களுக்கு நாம் தரும் வெகுமதியாக இருக்க முடியும்

(தோழர் ஜேம்ஸ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com