Contact us at: sooddram@gmail.com

 

சிரிய யுத்தம் அந்த நாட்டு மக்களை காப்பாற்றுமா.....?

(ஈஸ்வர்)

(கனடாவில் வெளிவரும் பூபாளம் என்ற பத்திரிகையின் செப்ரம்பர் 15, 2013 ம் திகதி பதிப்பில் வெளியான கட்டுரை இது)

மீண்டும், மீண்டும் போர் மேகங்கள். அமெரிக்காவின் வலிந்த யுத்தம் ஒன்றிற்கான அறைகூவல். வழமை போல இரசாயன ஆயுதங்களை உபயோகித்தார்கள் என்ற பிரச்சாரத்தை தனது ஊதுகுழல்களாலான சி.என்.என் பி.பி.சி. ஊடாக ஆரம்பித்து தனது நாட்டு மக்களை மூளைச் சலவை செய்யும் செயற்பாடுகள். நலிந்து வரும் பொருளாதாரத்தின் தாக்கத்தினால் அமெரிக்க, மேற்குலக மக்களால் அந்நாட்டு மக்களிடம் அரசுக்கு எதிராக எற்பட்டு வரும் எதிர்பலைகள், போராட்டங்களை திசை திருப்ப இன்னொரு முயற்சி. நிரூபிக்கப்படாத ஆதாரங்களை வைத்துக்கொண்டு தன்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன என்ற கோஷங்களுடன் புறப்பாடு. இவ்வாறு தொடரும் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும்.

இதில் இரண்டு வாதங்கள் தான் உண்டு. ஒன்று தற்போது ஆட்சியியில் இருக்கும் அரசு மக்கள் விரோத அரசு எனவே இது ஆட்சியில் இருந்து அகற்றப்படவேண்டும், எனவே யுத்தம் ஒன்றே வழி மற்றையது இருக்கும் இந்த ஆட்சியை தொடர விடுவது சிரிய அரசுடன் தொடர்ந்து பேசி உள்நாட்டில் ஒரு சுமூக நிலையை ஏற்படுத்துதல். அண்மை வருடங்களில் அமெரிக்க அனுசரணையுடன் ஆட்சி மாற்றங்கள் எற்பட்ட நாடுகளில் எல்லாம் மக்கள் முன்பை விட மோசமான வாழ்நிலையை கொண்டிருக்கின்றனர் என்பது கண்கூடு. அதுவும் பல இலட்சம் மக்களின் மரணம், இடப்பெயர்வு, சொத்து இழப்புகளின் பின்பு இவை நடைபெற்றன. மேலும் தொடர்ந்தும் ஆட்சி மாற்றத்திற்கு முன்பு நடைபெற்ற ஆட்சிகளை விட தற்போது இன்னும் அதிகமான குண்டு வெடிப்புக்களும், மனித அவலங்களும் சொத்து சேதங்களும் நடைபெற்றவண்ணம் இருக்கின்றன. இன்னொரு வகையில் பார்த்ததால் மீளமுடியாத உள்நாட்டு யுத்தம் ஒன்று அந்நாடுகளில் திணிக்கப்பட்டுள்ளன. மக்களின் போராட்டங்கள் மக்களை ஐக்கிப்படுத்துவதற்கு பதிலாக மக்களை பல்வேறு குழுக்களாக பிரித்திருக்கின்றது. இது வேண்டுமா..?

மறு புறத்தில் ஈராக், தொடக்கம் சிரியா வரையும் ஆட்சியாளர் மீது மக்களுக்கு அதிருப்த்திகள் இருந்திருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இதனால் சர்வதேச நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு இந்நாடுகள் உள்ளாகி இருக்கின்றன என்பதுவும் உண்மையே. அமெரிக்காவும், அதன் நேசநாடுகளும் இந்த நாடுகளின் வழங்களை சுரண்டுதல், மேலும் தமக்கு சார்பான ஆட்சிகளை இவ்நாடுகளில் நிறுவுதல் என்பதன் அடிப்படையில் உள்நாட்டில் நிலவும் குழப்பகரமான நிலமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தினர், பயன்படுத்திவருகின்றனர் என்பதும் ஆதராங்களுடன் நிறுவிவரும் உண்மைகள்தான்.

ஆனால் அமெரிக்கா, அதன் கூட்டாளிகளின் இந்த கபடத்தனமான விடயங்களில் இருந்து தம்மை பாதுகாக்க இந்த நாடுகள் பலவிடயங்களை செய்யத்தவறிவிட்டன. அமெரிக்க, அதன் கூட்டாளிகள் தவிர்ந்த ஏனைய பல நாடுகள் உலகில் உள்ளன. இவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு. அந்நாட்டு பிரநிதிகளை தமது நாடுகளுக்கு அழைத்து தமது நாட்டில் நிலவும் உண்மை நிலையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்பும் வேலைகளை செய்திருக்கவேண்டும், செய்ய வேண்டும். இதன் மூலம் அமெரிக்க, அமெரிக்க கூட்டாளி நாடுகளின் கபட நாடகங்களை அம்பலப்படுத்திருக்க முடியும். இந்த அணுகுமுறையையே லத்தின், தென் அமெரிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் செய்து வருகின்றன. மாறாக மக்களின் தூய்மையான மத நம்பிக்கைகளையும் ஏனைய விடயங்களையும் முன்னிறுத்தி 'வீரம்' காட்டி கடைசியில் சதாம் குசைன் போலவும், லிபிய கடாபி போலவும் அமெரிக்காவினால் பரிதாபமாக கொல்லப்படுவதும், தொடர்ந்து அந்நாடுகள் உள்நாட்டு யுத்தம் என்ற வடிவில் சீரழித்து போவதும் இராஜதந்திர செயற்பாடுகளின் வெளிப்பாடுகள்; அல்ல. சிரியா உடனடியாக இவ்வாறு நடைபெறாவண்ணம் இராஜதந்திரத்துடன் செயற்படுவது நலம்.

கூடவே கியூபா தலைவரின் அமெரிக்க தலைவர் ஒபமாவிற்கான உருக்கமான வேண்டுகோளுக்கு அப்பால் லத்தின், தென் அமெரிக்க நாடுகளும், தென் கிழக்கு ஆசிய வளர்முக நாடுகளும், இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் இவ்விடயத்தில் 'வீற்றோ' என்பதுடன் நிற்காமல் அப்பால் சென்று பேச்சுவார்;தைகள் மூலம் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முயல வேண்டும். ஒரு முகாம் மட்டும் உள்;ள உலக ஒழுங்கில் தான் நினைத்ததை செய்யலாம் என்ற செயற்பாடு இறுதியில் சர்வமும் நாசம் என்பதிலேயே வந்து நிற்கின்றது.

செப்ரம்பர் 11, 2001 நடைபெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலைக் காரணம் காட்டி ஒசமா பின் லாடன் தேடி 2001 இல் ஆப்பானிஸ்தானில் தனது யுத்தத்தை தொடங்கினார் ஜோர்ஜ் புஷ். பின்பு அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானில்தான் ஒசமா பின் லாடனை கண்டுபிடித்தது அமெரிக்கா. 2003ல், ஜோர்ஜ் புஷ் ஈராக்கின் மீது படையெடுத்தார். அப்போது, தனது முன்னாள் சகா சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்ற தவறான முறையில் போலிக் காரணம் ஒன்றைக் கூறி இவ்வாறு படையெடுத்தார். படையெடுப்பின் பின்பு இவர்களால் இரசாயன ஆயுதங்கள் எதனையும் ஈராக்கில் கண்டுபிக்க முடிக்கவில்லை. சர்வதேச சமூகமும் இந்த பொய்மைக்கு எதிராக கிளர்ந்தௌவில்லை என்பது வருந்தத்தக்கது. அடுத்து, ஒபாமா 2011இல் லிபியாவிற்கு எதிராக வான்வழி வழியாக ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தார். அப்போது அவர் பெங்காசியில் ரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். இப்போது சிரியா அமெரிக்காவின் குறியாகும். இதற்கு அவர்கள் கூறும் 'தேடிப்படித்த காரணம்' சிரியா ராணுவம், அங்கே கலகம் செய்திடும் படையினருக்கு எதிராக 'சறின்' எனப் படும் நரம்புகளைப் பாதிக்கும் இரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்துகிறதாம்.

அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளான பிரிட்டனும், பிரான்சும் 'சறின்' வாயுவை ஐ.நா. ஆய்வாளர்கள் புலனாய்வுகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடங்களுக்குச் செல்வதற்கு முன்பேயே சிரியா அரசாங்கம் பயன்படுத்தியது என்று முடிவு செய்துள்ளன. இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று தாங்கள் கூறிய 'எச்சரிக்கை'யை சிரியா அரசாங்கம் மீறி விட்டது என்பதே ஒபாமாவின் கூற்றாகும். அமெரிக்காவின் 'உலகத்தின் பொலிஸ்காரன்' வேடம் உண்மையிலேயே அதிசயமான ஒன்றாகும். வியட்நாமில் சண்டை நடைபெற்றபோது, அமெரிக்கப் படைகள் 'ஏஜண்ட் ஆரஞ்சு' (யுபநவெ ழுசயபெந) என்னும் 20 மில்லியன் கலன் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலைப் பேரழிவுக்கு உள்ளாக்கின, பிறக்கும் குழந்தைகளில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இன்றுவரை ஊனத்துடன் பிறப்பதற்கும் இதுவே காரணமாய் அமைந்தன.

ஈராக்கில், சமீபத்தில்கூட, அமெரிக்கப் படையினர் செறிவு குறைந்த யுரேனியத்தையும், வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளையும் பயன்படுத்தி மக்களுக்கு மிகவும் கொடூரமான காயங்களை ஏற்படுத்தினார்கள். இப்போது இதே ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்தான் சிரியா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும், எனவே அதனைத் தாக்கப்போகிறோம் என்றும் தங்களுடைய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்குக் காரணங்களாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நிரூபிக்க முடியாத கற்பனையான ஒன்றை அல்லது அரைகுறை உண்மையைத் தங்கள் ஆக்கிரமிப்புக்கான காரணமாக, ஏகாதிபத்தியம் காலங் காலமாகக் கூறிவரும் உத்தியையே ஒபாமாவும் இப்போது கூறிக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாகவே சிரியா தங்களுக்கு எதிராக சீறியெழுகிற எதிர்ப்பைப் எதிர்கொண்டு வருகின்றது.

மேலும் சிரிய அரசுக்கெதிராக கிளர்சியில் ஈடுபடும் கிளர்ச்சிப்படையினர் கூறுகின்றனர், சவூதிஅரேபியா தமக்கு வழங்கிய இரசாயன ஆயுதங்களை கையாளத் தெரியாமையினால் ஏற்பட்டதன் விளைவே நஞ்சு இரசாயனத்தின் மரணங்கள். இவ் ஆயுதங்கள் ஆபத்தான இரசாயனங்களைக் கொண்டிருப்பது கூட தமக்கு தெரிந்திருக்கவில்லை என்று மேலும் தெரிவித்தனர் அசோசியேற் பிரஸ் நிருபரிடம். (Syrian rebels in the Damascus suburb of Ghouta have admitted to Associated Press correspondent Dale Gavlak that they were responsible for last week’s chemical weapons incident which western powers have blamed on Bashar Al-Assad’s forces, revealing that the casualties were the result of an accident caused by rebels mishandling chemical weapons provided to them by Saudi Arabia…… “We were very curious about these arms. And unfortunately, some of the fighters handled the weapons improperly and set off the explosions,” one militant named ‘J’ told Gavlak. His claims are echoed by another female fighter named ‘K’, who told Gavlak, “They didn’t tell us what these arms were or how to use them. We didn’t know they were chemical weapons. We never imagined they were chemical weapons.” - Paul Joseph Watson,  Infowars.com)

இப்போது புரிகின்றதா யார் இரசாயன ஆயுதங்களை யாரிடம் இருந்து பெற்று மக்களுக்கு எதிராக பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்று.

அமெ­ரிக்­காவும் அதன் நேச நாடு­களும் சிரி­யா­வுக்கு எதி­ராக ஒருதலைப்­பட்­ச­மான நட­வ­டிக்கை எடுப்­பது குறித்து ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் எச்­ச­ரித்­துள்ளார். ஐக்­கிய நாடுகள் அங்­கீ­கா­ர­மின்றி எந்­த­வொரு இரா­ணுவ தாக்­கு­தலை நடத்­து­வதும்ஒரு ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­யா­கவே அமையும்என அவர் கூறினார். இர­சா­யன ஆயு­தங்கள் சிரிய இரா­ணு­வத்­தி­னரால் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்­கான சான்­றுகள் இருப்பின், அந்த சான்­று­கள் ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபைக்கு அனுப்­பப்­பட்டு அதன் நம்­ப­கத்­தன்மை ஆரா­யப்­பட வேண்டும் என புட்டின் வலி­யு­றுத்­தினார்.

பிரித்தானி பாராளுமன்றம் சிரிய மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை நிராகரித்துள்ளது. அமெரிக்க 'ஜனநாயகம்' செனற்ரற் சபையின் அங்கீகாரத்துடன் கொக்கரித்து நிற்கின்றது. அமெரிக்க காங்கிரஸ் கரம் தூக்கி இன்னும் ஒரு மனித குல அழிவை அமெரிக்கா செய்ய அனுமதிக்குமா? என்பதே இன்றைய கேள்வி. சரிந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை சரிக்கட்ட போர்தான் வழி என்ற நவ முதலாளித்துவத்தின் கொள்கையைத் தூக்கிப்பிடிக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கம் யுத்தத்தை வேண்டி நிற்கிறது. ஆனால் சர்வதேச சமூகமோ யுத்தத்தை வெறுத்து நிற்கின்றது. சர்வதேச சமூகம் ஒன்று திரண்டு யுத்தங்களை நிறுத்தி அமெரிக்காவையும், அதன் கூட்டாளிகளையும் நீதி மன்றத்தில் நிறுத்தவேண்டிய காலகட்டம் இது. இது சாத்தியமா...? சாத்தியப்படுத்த முடியுமா...? என்பதே இன்றைய கேள்வி. மனிதம் நினைத்தால் சாத்தியம் ஆகாததது ஏதும் இல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com