Contact us at: sooddram@gmail.com

 

பசில் ராஜபக்ஷ இன் ஆசீர்வாதத்துடனும்

கிழக்கு மாகாணம் திரும்பும் TNA மீண்டும் புலியிஷத்தை வளர்பார்கள்?

(இராஜ்குமார்)

பத்திரிகை செய்திகள் வாயிலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது ஆலோசகரான பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்புகளின் போது தமது பாதுகாப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட உறுதிமொழி, உத்தரவாதம் ஆகியவற்றையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார். கடந்த மூன்று வருடங்களாக பாதுகாப்பின் நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் திரும்பியிருப்பது தொடர்பாக கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து ஏனையோரும் இன்னும் சில தினங்களில் கிழக்கு திரும்ப உள்ளனர் என அறியமுடிகின்றது.

ஜனாதிபதியுடன் இடம் பெற்ற சந்திப்பின் போது குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரமான முறையில் எவ்வித அச்சுறுத்தலுமின்றி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு தமது கட்சி கோரிக்கை முன் வைத்த போது அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும் இதன் பின்னர் ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் இடம் பெற்ற சந்திப்பிலும் இது தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டு வந்த போது பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியும், உத்தரவாதமும் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றியோ அல்லது முள்ளுக்கம்பியிற்கு பின்னால் நிற்கும் 3 இலட்சம் மக்கள் எல்லாம் இவர்களுக்கு தற்போது இரண்டாம் பட்சம்தான். ஆனந்த சங்கரியாரின் அண்மைக்கால 'இணக்கமான' அணுகுமுறையும் இது போன்ற ஒரு 'அரசியல்' மாற்றத்தின் வெளிபாடாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இடதுசாரியாக தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த 'சங்கரி ஐயா' தனது புதுப்பாதையை சரியான தடங்களில் பயணிப்பார் என நம்புவோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மட்டக்களப்பு விஜயத்திற்கு கருணாவின் அனுமதியும், ஆசீர்வாதமும் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஆயுதம் அற்ற புலிகளுக்கான (அதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு) அனுமதி, (முன்னாள்)ஆயுதம் ஏந்திய புலிகளை அனுமதிப்பதற்கான வெள்ளோட்டமாக செய்யப்படுவதாக அறிய முடிகின்றது. அடுத்து அரசுடன் சேர்ந்து இயங்க சம்மதித்த முன்னாள் புலிகள் முதல்கட்டமாக கிழக்கிற்கும், அதனைத் தொடர்ந்து வடக்கிற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். எங்கே பொறுத்திருந்து பார்ப்போம்.

மாற்று தமிழ் கட்சிகளின் 'பாதுகாப்பு' விலக்கல் இதனை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுவதாவும் மேலும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உண்மை யாராக இருந்தாலும் வெற்றிலைதான் அவர்களின் சின்னம். அன்றேல் அம்பேல்தான்? புரிந்தால் சரி. மாநகரசபைத் தேர்தல் எமக்கு சில பாடங்களை தந்துள்ளது.......?

(இராஜ்குமார்) (ஐப்பசி 07, 2009) (Rajkumar)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com