|
||||
|
யாருடன் இணைக்கப் போகிறார் மனோ கணேசன் (சாகரன்) கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பில் இன்று இரவு அறிவிக்கவுள்ளதாக முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். இது தொடர்பாக ஆராய்வதற்காக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமைக் குழுக் கூட்டம் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவாக முடிவு அறிவிக்கப்படும் என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார். கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியுடனா அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனா இணையும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. வர்க்க நலன்களின் அடிப்படையில் பார்த்தால் இவர் ஐ. தே. கட்சியுடன் இணைத்துக் கொள்ளவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உண்டு. இவரின் வடக்கு கிழக்கு சகபாடிகளின் விருப்பமும்இ நலன்களும் அதை நோக்கியே இருக்கும். தமிழ் குறும் தேசியவாதிகள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக ஐ. தே. கட்சியைதான் தமது நண்பர்களாக கருதி கூடிக் குலாவி வருகின்றனர். ஏகாதிபத்திய நலன்களை இலங்கையில் தூக்கிப்பிடிக்கும் ஐ. தே. கட்சிதான் தமிழ் மக்களை மீட்போன் என்று தொடர்ந்தும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை முள்ளிவாய்கால் சிறைக்கு அழைத்துச் சென்று சிங்கம் கடித்துக் குதற வாய்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். தமிழ் தேசிய் கூட்டமைப்பினரும் அவர்களது சகாக்களும் இணைந்து தமிழ் மக்களை 'புலி சிறை பிடித்துக் கொடுக்க சிங்கம் குதறியது' என்ற முள்ளிவாய்கால் வரலாறை அரங்கேற்றினர் 1957 ம் ஆண்டு தொடக்கம் 1977இ 1983 என்று பல்வேறு இனக்கலவரங்களை தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டு இனச்சங்காரம் செய்தது ஐ. தே. கட்சியே. கருணா அம்மானை 'உடைத்து' அவர்களின் கிழக்கு மாகாண சிறார்களைஇ பெண்களை புலிகள் கடித்துக் குதற வாய்பழித்ததும் இதே ரணில் விக்ரமசிங்க ஐ. தே. கட்சி. இதனை ரணில் பல இடங்களில் பகிரங்கமாக சொல்லியும் இருக்கின்றார். இவை ஒவ்வொன்றும் நடைபெற்று முடிந்த பின்பும் தமிழ் காங்கிரஸும். தமிழரசுக்கட்சியும் இதன் வழித் தோன்றலான தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ் மக்கள் நம்பத்தகுந்த கூட்டாளி ஐ. தே. கட்சி என்றே தமிழ் மக்களிம் கூறி அவ்வாறே செயற்பட்டு வருகின்றனர். தொடந்தும் இவர்களின் வழித்தோன்றல்களான கருவிகள் ஏந்திய புலிகளும்இ கதிரைகளை இறுக்கிப்பிடிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதனையே கனகச்சிதமாக செய்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் இடதுசாரி அமைப்பொன்றனூடாக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கின ஆனந்தசங்கரி ஐயாவும்இ தனிநாட்டிற்காக ஆயுதம் ஏந்திய அமைப்புக்களின் தன்னகத்தே இடதுசாரிக் கருத்துக்களை கொண்டிருந்த புளொட் அமைப்பும் தேர்தல் தோல்விகளின் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொறிக்குள் வீழந்து இனப்பிரச்சனைத் தீர்வுக்கு தமிழ் தேசிக் கூட்டமைப்புடன்(மட்டும்தான்) பேசவேண்டும் என்று தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு என்பதை மறைமுகமாக நிறுவுவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர். இவ்வாறான நிலமைகளே தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. முன்னை நாள் 'கொழும்புப் பிரபாகரன்; கனடாவிற்கு தப்பியோடி அழையாத கூட்டங்கள்இ விழாக்களில் 'விருந்தாளி'யாக மாறி வடையும்இ கோப்பியும் இனாமாக தின்று திரியும் நிலையில்இ தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போதைய 'கொழும்புத் தமிழ் ஈழம்' இன் பிரபாகரன் விபி கணேசனின் செல்வந்த வாரிசு என்று கூறுகின்றனர். மேலும் கொழும்புத் தமிழ் மக்கள் கணேசனுக்கே வாக்களிக் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எனவே சாராம்சத்தில் கணேசன் கூட்டமைப்பின் சகலை ஐ. தே. கட்சின் உறுப்புரமை பெறாத அங்கத்தவராகத்தான் தொடர்ந்தும் இருக்க விரும்புவார். கடந்த பொதுத் தேர்தலில் கணேசனுக்ம்இ ரணிலுக்கும் இடையில் ஏற்பட்ட மாமிஇ மருமகள் சண்டை அவர்களை பிரித்து வைத்திருப்பது போல் தோற்றத்தைக் கொடுத்தாலும் கணேசன் என்றும்இ எப்போதும் ஐ. தே. கட்சியின் சகலனாகவே இருப்பார். அது இணைந்திருந்தால் என்னஇ இணையாமல் 'தனித்து' இருந்தால் என்ன. ஆனால் உள்ளுர் ஆட்சியில் கொழும்பை மட்டும் கையடக்க முடியாமல் போன சிறிலங்கா சுதந்திரக் கட்சி 'ஏதாவது' பண்ணி ஐ. தே. கட்சியை ஒண்டாட்டியாக்க கணேசனுக்கு விலை பேசும். கணேசன் ஒன்றும் விலை போகமுடியாத கொள்கைப் பிடிப்பாளன் அல்ல. அவரும் 'கொள்ளை'ப் பிடிப்பாளன்தான். எனவே பட்டுவாடாவுடன் ஏதும் நடக்கலாம். என்ன அணி மாறினால் தனித்துப் போன தம்பி பிரபாவின் முகத்தில் எப்படி முழிப்பது என்ற பிரச்னைதான். இதுபோன்ற விடயங்களை கையாளுவதில் கில்லாடிகள் ராஜபக்ஷ சகோதரர்கள். அதுதான் கீரியும்இ பாம்புமாய் படமெடுத்தாடும் பிள்ளையானையும்இ கருணா அம்மானையும் கிழக்கில் சமாளித்துக் காட்டி கொண்டிருக்கின்றார்கள். கூடவே வடக்கில் தமிழ் அமைச்சரையும்இ ரங்காவையும் நாமல் சமாளிக்கவா இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் தனது கணேசன் தனது தும்பிக் கையால் வடையையா அல்லது மோதகத்தையா தூக்கப் போகின்றார் என்று அல்லது உபவாசம் தான் இருக்கப் போகின்றார் என்று. (சாகரன்;) (ஐப்பசி 10, 20110 (Saakaran) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |