|
||||
|
மரணத்தினுள் வாழ்ந்தோம் (சாகரன்) ஈழத்து மகள் செல்வியின் வாழ்வு மறுக்கப்பட்டு கொலை மரணம் நடைபெற்று 20 வருடங்கள் ஒடிவிட்டன. நாடகம்இ கவிதைகள் மூலமாகவும்இ உறுதியான கருத்துக்கள் மூலமும் விடாப்பிடியான போராட்டம் நடாத்தி வந்த செல்வியைக் கொன்றது புலிகளே. சிவரமணியை வலிந்த தற்கொலைக்கு தள்ளிய புலிகள் செல்வியை கைது செய்து சித்திரைவதை செய்தே கொன்றனர். புலி ஆரம்பகால உறுப்பினர் பற்குணத்தின் காதலிவையும் பற்குணத்தையும் வற்புறுத்தி தற்கொலை செய்ய வைத்ததில் ஆரம்பித்த பிரபாகரனின் வழி நடத்திலில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெண் கொலைகளை பட்டியலிட்டு கூற முடியாத அளவிற்கு நீண்டது. கருணா அம்மானின் புலிகளுடனான முரண் பாடும் அதனைத் தொடர்ந்த புலிகளில் உடைவு ஏற்பட்டது. இனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதல்கள்இ கருணாவின் ஆட்களை தேடி அழித்தல் என்ற செயற்பாட்டில் பல கருணா பிரிவு பெண் புலிகள் பிரபாகரனின் சகாக்களால் கடித்துக் குதறி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதே வரலாறு. இது சனல் 4 இல் ஆவணப்படுத்தப்படவில்லை. ஏன் எனில் மனித உரிமை அமைப்புக்களுக்கும் சனல் 4 போன்ற மேற்குலக தகவல் பீடங்களுக்கும் தகவல்கள் திரட்டி அனுப்பும் முகவர்கள் பிரபாகரனின் புலி அமைப்பின் பினாமிகளே. எப்படி தாம் செய்த கொலைகளை தாமே பதிவு செய்து அனுப்பி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும். ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக காரை நகர் கடற்படை தாக்குதலில் தன்னுயிர் ஈய்ந்த ஷோபாவுடன் ஆரம்பித்த வரலாற்று மரணங்களைப் போன்று பல தியாகங்களை புரிந்ததே ஈழவிடுதலைப் போராட்டதின் பெண்களின் பங்கு ஆகும். மன்னார் பானு போன்றவர்கள் அடம்பனின் தன்னுயிரை நீய்துதானே பல ஆயிரம் புலிகளின் மரணத்தை தவிர்த்த வரலாறு எந்தனை பேருக்கு தெரியப் போகின்றது. இலங்கை பொலிஸாரின் சித்திரைவதைக் கூடங்களில் புஷ்பராணி, அங்கயற்கண்ணி போன்றோர் பட்ட சித்திரைவதைகள் இன்று புலம் பெயர் தேசங்களில் பிரபாகரனை இன்னமும் நம்பி கொடி பிடிக்கு இளசுகளுக்கு எங்கே தெரியப் போகின்றது. பழசை பழசுகள் இளசுகளுக்கு மறைத்தே புலிகளின் பல வரலாற்றுத் திரிபுகள் நடைபெற்று வந்தன. அதுவே தற்போதும் நடைபெற்று வருகின்றது. அதுதா னோ இன்னமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்தான் பிரிச்சனைக்கு பேசவேண்டும் என்ற கூக்குரல்கள் வலுவடையக் காரணமோ? யாழ்பல்கலைக் கழகத்தில் கவிதை மூலமாகவும்இ மௌனப் புன்சிரிப்பு? செயற்பாட்டு மூலமாகவும் போராட்டம் நடத்திய இரத்தினபூபதி(ஆர்பி) போன்றவர்களின் குரல் புலிகளின் மாற்றுக்கருத்து மறுப்புக்களால் மௌனித்துப் போனதும். தமிழ் சமூகத்தில் புரையேறி இருக்கும் ஏற்றத்தாழ்வுகளால் அமுங்கிப் போனதும் சோக வரலாறுதான். வல்வெட்டித்துறை தயாவர்சனி போன்றவர்கள் புலிகளின் வற்புறுத்திய செயற்பாடுகளினால் குரல்கள் மௌனிக்கப்பட்டு தற்கொலைக்கு தள்ளி துன்பியல் வரலாற்றைக் கொண்டதே ஈழத்து ஆயுதப் போராட்ட வரலாறு. அவுஷ்திரேலியாவில் கலா, கனடாவில் அஞ்சலி, இந்தியாவில் ஞானா அக்கா என்று வீரமிக்க பெண்விடுதலைப் போராளிகளை குடும்ப வாழ்விற்குள் முடங்கிவிட்டது இதே புலிப் பாசிசம் தான். வறுமையிலும், வளங்கள் அற்ற நிவையிலும் பலவேளை சாப்பாடு கிடைக்காமல் துவிச்சக்கர வண்டியிலும், நடையாகவும் இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் கிராமம் கிராமமாக பெண்களில் விடுதலைக்கு அப்பாலே மக்களின் விடுதலைக்காக உழைத்தனர். அன்று குடும்பம்இ அரசுஇ தனிச்சொத்தை கற்று தம்மை புடம் போட்டு இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற இப் பெண் போராளிகள் பலர் இன்று குடும்பம் என்று மட்டும் மட்டுப்படுத்தி கொண்ட நிலமைகளை ஏற்படுத்தியதும் இந்த விடுதலைப் போராட்டதில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 'வெற்றி' களில் ஒன்றாகும். ஈழத்து தமிழ் மக்கள் இன்று உரிமைகளை கேட்டுப் பெற முடியாத கொடுத்தால் கொடுத்ததை வாங்குவது. கொடுக்காவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாத நிலமைகளுக்கு தள்ளப் பட்டதும் இவற்றின் தொடர்ச்சியாக ஏற்பட்டவையே. புலிகளின் விட்டில் பூச்சிக்களாக இணைந்தஇ இணைக்கப்பட்ட பெண்கள் வலிந்து கரும் புலிகளாக்கபட்டது இவற்றின் சோகங்களின் மறுவடிவங்களே. இவற்களில் பலர் புலிகளுக்கு இருந்த ஆண் மிருகங்களால் வலிந்த உறவுகளுக்கு உள்ளாக்கப்பட்டது அவை பல சந்தர்பங்களில் மறைக்கப்பட்டதும் மறைக்க முடியாத சந்தர்பங்களில் கல்யாண பந்தத்தினால் வலிந்த மண உறவுகளுக்குள் இணைகப்பட்டதும் வரலாற்று உண்மைகள். பலரின் மனங்கள் இணையாமல் மணங்களினால் வலிந்து இணைக்கப்பட்டது எங்கள் சமூகத்தில் புலிகளின் பிரசன்ன காலத்தில் அங்கு வாழ்தவர்களுக்குத் தெரியும். இதில் பாதிகப்பட்டவர்கள் பெண்களே. புலிகளின் 'லபக்' இலிருந்து தம் பிள்ளைகளை காப்பாற்ற குழந்தை வயதில் குழந்தைகளை சுமக்கும் நிகழ்வுகளுக்கு தள்ளிய நிகழ்வுகளுக்கு இன்றைய ஈழத்து தமிழ் பெண்களின் புள்ளி விபரம் சான்றுகள் பகிர்கின்றன. இவர்களின் பலர் இன்று 'குழந்தை விதவை' களாக்கப்பட்டது முள்ளிவாய்கால் சோகமாகும். இது புலிகளால் சிறை பிடித்து கொடுக்க சிங்கத்தினால் குதறப்பட்டதினால் ஏற்பட்ட நிகழ்வுகள் ஆகும். இதனை அரங்கேற்ற தமிழ் (குறும்)தேசியம் நிறையவே உதவி செய்தது. பெண்களின் விடிவிற்காக விடாப்பிடியாக போராட புறப்பட்டு புலிகளால் கொல்லப்பட்ட செல்வி போன்றவர்களின் மரணம் தவிர்கப்பட்டிருந்தால் இன்று குழந்தைகளை சுமக்கும் 'குழந்தை விதவை' அவலங்கள் எங்கள் மண்ணில் நிறைவேறி இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்திருக்க முடியும். செல்வி போன்றவர்களின் நினைவு கூறலை 'தைரியமாக' செய்ய 20 வருடங்கள் எடுத்திருக்கின்றது என்றால் பாருங்களேன் புலிகளின் பாசிசம் எவ்வளவு மரணப்பணத்தை ஏற்படுத்pயிருக்கின்றது என்று. மரணத்திற்குள் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல மரணத்திற்குள் வாழ்கின்றோம் என்பதே இன்றைய யதார்த்த நிலையாகும். இவ்விடத்தில் இன்னொன்று விமலேஸ்வரனுக்கு நினைவு கூரல் நிகழ்வு எப்போது....? (Saakaran)(ஐப்பசி 16இ 2011) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |