Contact us at: sooddram@gmail.com

 

கூடங்குளம் அணு மின்நிலையம் எங்கள் கோடிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துமா...?

அணு சக்தி என்ற அரக்கன்

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

கிரோசிமா, நாகசாக்கியில் நடந்தது துன்பியல் மட்டும் அல்ல மனித குலத்திற்கு கிடைத்த சாபம் கூட. தமிழ் நாட்டின் கூடங்குளத்து அணு மின்நிலையத்தால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் எங்கள் தாயகத்தின் கோடிக்குள்ளும் கொழுத்திப் போடுமா? அணு மின்நிலையத்தில் விபத்து நடந்தால் இதற்கான வாய்ப்புக்களை மறுப்பதற்கு இல்லை. கூடவே சம்பூரின் அனல் மின்நிலையம் சுற்று சூழல் மாசுபடுதல் என்பதைத் தடுத்து நிறுத்தும் தொழில் நுட்பத்தை தன்னகத்தே கொண்டிருந்தால் பாதிப்புக்கள் பாரியளவில் இல்லை. இதில் பாரம்பரியமாக வாழ்ந்த மக்களின் இருப்பிடங்கள் பயன்படுத்தப்படுதல், அது தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் என்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு அப்பால் கூடங்குளம் போன்று அணு மின்நிலையம் அல்ல இது. சம்பூரில் அமைக்கப்பட இருப்பது அனல் மின்நிலையம். நம்ம ஊரில் 1960 களில் ஓடிய 'கரிக் கோச்சு' போன்ற தொழில் நுட்பத்தைக் கொண்டது இது. இவ் அனல் மின்நிலைய செற்பாட்டில் சுற்றுச் சுழலில் கவனம் செலுத்தாவிடின் 1970 களில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியெல்லாம் எங்கள் பனை மரங்கள் எங்கும் நீங்காத சீமந்து புழுதி படிந்தது போன்ற நிலமைகளே சம்பூர் சுற்று வட்டாரத்தில் கரித்துகள்களால் சுற்றுச் சூழல் மாசுபட வாய்ப்புக்கள் உண்டு. மற்றயபடி அணு கொடுக்கும் அபாயச்சங்கு அனல் மின்நிலையங்களால் ஏற்படப் போவது இல்லை.

தமிழ் நாட்டின் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு ஆதரவான, எதிரான போராட்டங்கள், தீர்மானங்களில் பிராந்திய (தமிழ்நாடு) அரசியலும் பின்னிப் பிணைந்துள்ளது. மேலும் ரஷ்யாவின் தொழில் நுட்பத்தினால் நிறுவப்படுவதில் அமெரிக்காவிற்கு இருக்கும் விரும்பம் இன்மை தமிழ் நாட்டில் உள்ள என்ஜிஓ களினால் எதிர்ப்பு என்ற வடிவங்களால் வெளிபடுத்த அமெரிக்காவினால் ஊக்கிவிக்கப்படும் என்பதை மறுப்பதற்கும் இடமில்லை. இதில் அப்பாவிப் பொது மக்களை பகடக்காய்களாக பாவிக்க இத்தரப்புகள் முயலும். இதில் வைகோ களும் சீமான் களும் அதிகம் ஈடுபாடுகாட்டாவிட்டாலும் சிறிதளவு குளிர் காய முற்படுவர். இலங்கையில் உள்ள மக்களுக்கு இவ் அணு உலையில் விபத்து எற்பட்டால் எற்படும் பாதிப்புக்களை பற்றி அதிகம் சிந்திக்க வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் இந்தக் கூடங்;குளத்தை இலங்கை, இந்தியா இடையே நடைபெற்று வரும் பனிப் போரை நிஜப் போராக மாற்ற சிங்கள தீவிரவாத சக்திகள் முயலும், முயன்று கொண்டிருக்கின்றன.

இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் அரக்கன் என்றால் அது அணு சக்திதான். அணு சக்தியை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம். அழிவிற்கும் பயன்படுத்தலாம். இந்நிலையில் நாம் எவ்வாறு அணு சக்தியை அரக்கன் என்று மட்டும் விழிக்கலாம். காரணம் இருக்கின்றது. ஆக்கத்திற்கு பயன்படும் இடங்களில் எல்லாம் விபத்துக்கள் ஏற்படும் அபாயங்கள் நிறையவே இருக்கின்றன். அணு சக்தியைப் பயன்படுத்தும் ஆக்கத்தின்போது விபத்து நடைபெற்றால், அது பேரழிவை ஏற்படுத்தும். இந்த விபத்தின் அழிவுகளை யாரும் தடுத்து நிறுத்த முடியாது, மட்டுப்படுத்த முடியாது. காரணம் விபத்துக்களினால் எற்படும் அபாயம் கணநேரத்தில் நிகழும் அதியுயர் வெப்பத்தினால் ஏற்படுவது முதல்காரணம், குறிப்பிட்ட சுற்றப்புறப் பெரும் பகுதி கண நேரத்தில் பஸ்பம் ஆகிவிடும். கூடவே கதிர் வீச்சுத் தாக்கங்கள் காற்றிலும், நீரிலும் உடன் கலந்துவிடும் காற்றும், நீரும் (சமுத்திரத்தின் நீர்) உலகம் பூராகவும் 'விசா' இன்றி தங்கு தடையின்றி பயணிக்கக் கூடியவை.

மேலும், அணு சக்தி ஆயுதங்கள் அழிவிற்கென்றே உருவாக்கப்பட்டன. ஆயுதங்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதாக உரிமை கோரப்பட்டாலும், இவை பெரும்பாலும் அழிவுகளுக்கே பாவிக்கப்பட்டன, பாவிக்கப்படுகின்றன. அழிவுகளை தடுப்பதற்கே ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன என்று காரணம் கூறினாலும். மனித குலத்தை அடக்கி, ஒடுக்கி அழிவுகளை ஏற்படுத்துவதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மற்றைய எந்த ஆயுதங்களும் நேரடியாக சம்மந்தப்பட்ட உயிரை மட்டும் அழிக்க வல்லதாக இருந்தாலும் அணு ஆயுதமே கட்டுப்பாடற்று ஒரு பெரும் பகுதியை அழிக்கவல்லது. (இரசாயன ஆயுதங்களும் இது போன்ற செயற்பாட்டைக் கொண்டிருந்தாலும் முறையான முன் தயாரிப்புக்கள் மூலம் பாரிய அழிவைத் தவிர்க்கலாம்.) இவ் அணு சக்தியினால் ஏற்படும் அழிவு நல்லவர், கெட்டவர் எதிரி, நண்பர் ஆண், பெண் குழந்தைகள், முதியவர்கள் மனிதர், விலங்குகள் செடி, கொடி, தாவரம், கடல் ஜீவராசி என்ற பேதமின்ற சகலரையும் ஒரு கணத்தில் ஏற்படுத்தவல்லது. எனவேதான் இதனை அணு சக்தி என்ற அரக்கன் என்கின்றோம். இரசாயன ஆயுதங்களும் அழிவுகளை ஏற்படுத்த வல்லவையே ஆனால் இவ்வளவிற்கு வகை தொகையில்லாமல் கட்டுப்பாடற்று அழிவுகளை ஏற்படுத்துவதல்ல. மேலும் இரசாயன சக்தியினால் ஆக்கத்தின் போது விபத்து ஏற்பட்டால் அழிவுகளை கட்டப்படுத்த, மட்டுப்படுத்தக் கூடிய வழி முறைகளை, வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அணு ஆக்க சக்தி செயற்பாட்டின் போது ஏற்படும் விபத்து அழிவுகளை கட்டுக்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதே உண்மை நிலை. மேலும் அணு அழிவினால் ஏற்படும் கதிர் வீச்சுத் தாக்கம் விபத்து நடைபெற்று பல ஆண்டுகளின் பின்பும் தொடர்ந்தும் இருக்கும் நிலமைகளே உள்ளன.

இதனை நாம் அமெரிக்க வல்லரசினால் ஜப்பானின் கிரோஷிமா, நாகசாக்கியில் (ர்சைழளாiஅய யனெ யேபயளயமi) போடப்பட்ட அணு குண்டுத் தாக்கத்தின் விளைவுகளை இன்று வரை அனுபவிப்பதிலிருந்து அறிய முடிகின்றது. இதே போல் இரசாயன சக்தி விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தை இந்தியாவின் போபாலில் இன்று வரை உணரப்பட்டாலும் ஒப்பீட்டளவில் இது கிரோஷிமா, நாகசாக்கி அழிவை விட குறைவானது. இதன் அர்த்தம் போபால் அழிவு மனிதகுலத்திற்கு ஏற்படுத்திய அழிவு கிரோஷிமா, நாகசாக்pயுடன் ஒப்பிடுகையில் ஒதுக்கித் தள்ளக் கூடிய என்பதல்ல. அழிவுகள் அழிவுகள் தான். ஓப்பீட்டு ரீதியில் இதனை சொல்ல முற்படுகின்றோம். அவ்வளவுதான்.

டோல்ரன் (துழாn னுயடவழn) என்ற விஞ்ஞானி அணுவைப் பிளக்கலாம் என்பதை நிறுவும் வரை அணு என்பது மேலும் பிளக்கப்படமுடியாத மிகச் சிறிய துகள் என்றே விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்டது, நம்பப்பட்டது. இதன் அடிப்படையிலேயே விஞ்ஞானத் தேற்றங்கள், கணிப்பீடுகள் எல்லாம் உருவாக்கப்பட்டிருந்தன.

அணுவைப் பிளக்கலாம் என்ற டால்ரனின் (துழாn னுயடவழn) நிறுவல் விஞ்ஞான உலகை, சிறப்பாக விஞ்ஞானிகளை ஆட்டம் காணச் செய்தது அன்று என்பதே உண்மை. விஞ்ஞானிகள் உலகம், டால்ரனின் முடிவுகள் பெரும் குழப்பத்தை? ஏற்படுத்துகின்றது என்றும், இவர் விஞ்ஞானத்தின் துரோகி? என்று அவருக்கு துரோகிப் பட்டம் சூட்டி அன்றைய மன்னர் அரசு விஞ்ஞானிகளின் ஜெனீவா மகாநாட்டின் ( என்ன அன்றும் ஜெனீவாவா....? தூக்குத்தண்டனையா....? என்று திறந்த வாயை மூடாமல் நீங்கள் யோசிப்பது புரிகின்றது)  பின்பு அவருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு எழுதியது. பின்பு அதனை நிறைவேற்றித் தொலைத்தது. ஆனால் அவர் கண்டுபிடித்த உண்மையை மட்டும் தூக்கில் ஏற்ற முடியவில்லை. ஆனால் இன்று அவரின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் அமைந்த அணு சக்தி ஆயுதமாக மாறி மில்லியன் மக்களை தூக்கிலிட காத்திருக்கின்ற துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து வளர்ந்து வருகின்ற நாடுகள் வரையும் இன்று தமது தொழிற்சாலைகளுக்கு தேவையான அதீத மின் சக்தியை பெறுவதற்கு அனல் மின்சக்திக்கு அடுத்தபடியாக அணுசக்தியினால் உருவாக்கப்படும் மின்சக்தி அமைகின்றது. ஆமாம் இதனை உற்பத்தி செய்யும் அணுசக்தி மின்நிலையம் ஆகும். இது அமெரிக்காவிற்கும் பொருந்தும் ஈரானுக்கும் பொருந்தும். இந்தியாவிற்கும் பொருந்தும்.

ஒரு காந்தத்தின் இரு முனைகளுக்கும் இடையில் ஒரு கோயில் (ஊழடை) சுருளைச் சுற்றும் போது பெறப்படுவதே மின்சாரம். மிகவும் எளிய முறையிலான செயன் முறை இது. இந்த சுழட்டல் பல வகையில் நடாத்தப்படலாம். சாதாரணமாக தாயகத்தில் சைக்கிளில் உள்ள தைனமோவில் ஓடும் சைக்கிளின் ரயறில் தைனமோவின் சுழலவேண்டிய பகுதியை( சழவழச) தொடுமாறு செய்து சைக்கிள் ஓடும் போது ஏற்படுவது எழிய முறை மின் உற்பற்தி முறை. தாயகத்தில் இரவில் சைக்கிளில் போகும் போது டைனமோ போடாமல் போய் பொலிஸ் இல் மாட்டுப்பட்டு வெறும் 50 சதத்தை மாமா(ஏட்டு) (றாலாமி) வெட்டிச் சமாளித்த அந்த 1970 களின் நடுப்புபகுதிகளை மீண்டுப்பார்த்தால் புரியும். அன்றேல் 1990 களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கான பொருளாதார மட்டுப்படுதல்களை இலங்கை அரசு மேற்கொண்ட போது ஆல் இந்திய றேடியோவின் செய்திகளை கேட்டுப் புழகாங்கிதம் அடைய இந்த சைக்கிள் தைனமோக்களே உதவின என்பதையும் மீட்டுப்பார்க்கலாம்.

 

இந்த காந்த முனைகளுக்கிடையேயான கம்பிச் சுருளைச் சுழட்டுவதற்கு (நாம் அந்தக்காலத்தில் சுழட்டாத சுழட்டல்களா...? பெண்கள் பாடசாலைகளின் வாசல்களில் தவமிருந்த நவீன காதல் மன்னர்களின் சுழட்டல்கள் அல்ல இது) பல வழிகளைப் பாவிக்கலாம் ஏற்கவே கூறியதை தவிர புலிகள் தமிழ் பிரதேசம் எங்கும் தன்னாட்சி செய்த போது பொது மக்களை குளிர்விக்க தமிழ் சினிமாப் படங்கள் போட்டுக் காண்பிப்பர். வுஏ இல் காட்டப்படு;ம் படத்தை ஊர் மக்கள் திரளாக பார்க்கும் போது இதற்கான மின்சாரத்தைப் பெற ஊர் இளைஞர்கள் தங்கள் கைப்பலம் (மசிலை) காட்ட கையால் சுழற்றும் தைனமோக்களை சுழட்டிய அனுபவங்கள் எங்கள் பலருக்கும் உண்டு. இதன் மூலம் மங்கையரின் மனம் கவர்ந்தவர்கள் பலர் நம்மிடையே உண்டு. இதுவும் ஒருவகைச் சுழட்டல்தான். இது சுழட்டலுக்குள் சுழட்டல்.

மழையால் கிடைக்கும் நீரைத் தேக்கி வைத்து நீர் வீழ்ச்சி போன்ற அமைப்பின் மூலம் சுழலக் கூடிய உழண்டிகளை வைத்து (அதுதான் லக்ஸபானா... லக்ஸபானா என்று ஊரில் கதைப்போமே அதைக் கூறுகின்றோம்.) மின் சக்தி பெறுவது இன்னொரு முறை. இம்முறை மூலம் இராட்சத உழண்டிகளை உ(சு)ழட்டி மின்சாரம் உருவாக்கியது. இம்முறையினால்தான் கனடாவின் நயக்கரா நீர் வீழ்சியிலிருந்து மின்சாரம் பெறப்படுகின்றது. இதில் நீர் விழ்ச்சியினால் ஏதாவது விபத்து, ஆபத்து நிகழ்ந்தால் ஏற்படும் அழிவுகள் மட்டுப்படுதப்படக் கூடியன. மேலும் இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியம். மேலும் இவ் நீர் சுழற்சி முறையில் பயிற் செய்கை மற்றும் பல மனித தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். என்ன மழை பெய்ய வேண்டும். இதற்கு மரங்கள் நிறை இருக்க வேண்டும். இதற்கு நாம் இயற்கையை அனுசரித்து நடக்க வேண்டும். இயற்கையை எப்போது மனித குலம் அனுசரித்து போவதை கூடுமானவரை தவிர்த்ததோ அன்று தான் ஆரம்பமானது அதிக பிரச்சனைகள்.

இதோ இன்னொரு வகை. தாயகத்தில் கிராமங்களில் ஒரு வருடத்தில் ஒரு தினம் நடைபெறும் திரு விழாக்களில் சப்பறம், கோயில் கோபுரம், சுற்றாடல், வீதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சுவதற்கு தேவையான மின்சாரத்தை பெறுவதற்கு லைற் மிசின் (நுடநஉவசiஉ புநநெசயவழச) என்று ஒன்று கொண்டு வருவார்கள். இதில் உழண்டியை சுழட்டுவதற்கு டீசல் அல்லது பெற்றோல் போன்ற எரிபொருட்களைப் பாவித்து லைற் மெசினின் 'கோயில் உழண்டி' சுழட்டப்படும.; இதில் சுற்றாடலுக்கு காபனீர் ஒட்சைட்டினால் ஏற்படும் பாதிப்பு இருந்தாலும் எமது தென்னை, பனை, பலா, மாமரங்கள் தமக்கு உணவுக்கு தேவையான காபனீரொட்சைட்டை உறுஞ்சுவதினால் சூழல் மாசுபடுவது தடுக்கப்படுகின்றது. மேலும் கள்ளும் கிடக்கின்றது. கருப்பட்டியும் கிடைக்கின்றது பலாப்பழமும் கிடைக்கின்றது, ஏன் 'கள்ள' மாங்காயும் கிடைக்கின்றது (இந்த எரிபொருள் இன்மையினால்தான் தமிழ் பிரதேசங்களில் எரிபொருள் அற்ற ஏற்கனவே கூறியிருந்த மாற்று வழிகள் உபயோகப்பட்டன. இளைஞர்கள் பலர் படம் ஓடி தமது மேதாவிலாசத்தை காட்டி காதல் கல்யாணம் காட்சி என்ற ரம்ய நிகழ்வுகளுக்கு வித்திட்டதும் இந்த 'கோயில்' சுழட்டல்தான். மறக்க முடியுமா....? இந்த மிச்சாரத்தைப் பெறும் சுழட்டல் வகைகளில் எல்லாம் விபத்து ஏற்பட்டால் ஏற்படும் அழிவுகள் மிக்கக் குறைவு அப்படி ஏதாவது நடைபெற்றாலும் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது சுலபம். விபத்தின் நேரடித்தாக்கம் அன்றுடன் முடிந்து விடும். ஆனால் அணு உலை விபத்து அவ்வாறானது அல்ல.

மேலும் காற்றாலைகளை கொண்ட இந்த உழண்டிகளை உழட்டி மின்சாரம் பெற முடியும். இயற்கை நமக்கு தந்த வரங்கள் நிறைய இதில் நீர், காற்று போன்றவற்றைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய முடியும். இம்முறையினால் இந்தியா, நோர்வே, டென்மார்க், ஒல்லாந்து, சுவீடன் போன்ற இடங்களில் மின்சாரம் பெறப்படுகின்றது. உலகப் பந்தில் 5 இல் நான்கு பங்கு கடலால் சூழப்பட்ட இடங்கள். இங்கெல்லாம் இவ் காற்றாலைகளைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெறலாம். இதில் சுற்றுச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அது மட்டும் அல்லாமல் இவ் வகை மின் உற்பத்தியாக்கிகளினால் விபத்துக்கள் இல்லையென்றே கூறலாம். பராமரிப்பதுவும் சுலபம். காற்றுள்ள இடமெல்லாம் தூற்றிக் கொள்ளலாம் என்று கூடச் சொல்லாம். இது போன்ற இயற்கையை அனுசரித்து பெறக் கூடிய மின்சக்தி முறமைகள் இருந்தும் அதீத மின்சக்தித் தேவைகளை கருத்தின் கொண்டு அணு மின் உலைகளை உருவாக்கி என்றும் எம்மைச் சுற்றி ஆபத்துக்களை வைத்திருப்பது நியாயமா?

மேலும் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சக்தியை மின்சக்தியாக மாற்றும் முறமைகளும் இருக்கின்றன. இதனை சாதாரணமாக எல்லா பொது மக்களும் தமது வீடுகளிலேயெ நிறுவி இனாமாக மின்சாரத்தை பெறலாம். இதனால் பாதிப்புகளும் இல்லை. இந்த இயற்கை தந்த இனாம்களை ஏகபோகங்கள் அனுமதிக்காது என்பதே இதில் உள்ள இரகசியம். இன்னும் சில காலம் சென்றால் குடிக்கும் நீருக்கு கொடுக்கும் காசைப் போல் சுவாசிக்கும் காற்றிற்கும் காசு கொடுக்க வேண்டி சூழல்களை ஏகபோகங்கள் உருவாக்கலாம். யார் கண்டார்கள்.

ஆனால அணு சக்திமூலம் (நியூக்கிளியர் எரிபொருள் என்ற சொல்வார்கள்) மிகப் பெரியளவு மின்கச்தியை சக்தியைப் பெற முடியும் என்பது உண்மைதான். மற்றய முறைகள் மூலம் அவ்வளவு பெரிய சக்திகளைப் பெற முடியாது. தேவைகளை அதிகப்படுத்தும் போதுதான் இவ்வகையான பிரச்னைகள் உருவாகின்றன. முதலில் தேவைகளை மட்டுப்படுத்த வேண்டும் இதன் மூலம் இயற்கையை அனுசரித்து போகும் அணு மின்சக்தி தயாரிப்பை தவிர்த்து ஏனைய பாதுகாப்பான முறமைகளில் மனித குலத்திற்கு தேவையான மின்சக்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அணு மின்சக்தி தவிர்ந்த ஏனையவை சாராம்சத்தில் இயற்கையுடன் சார்ந்து இலகுவாக உருவாக்கி பொதுமக்களால் பாவிக்கப்படக் கூடிய மின் உற்பர்த்தி முறமைகள் ஆகும். இவ் முறமைகளில் பெரும் இலாபம் ஈட்டும் தனி உடமை செயற்பாட்டை நிறுவுவது கடினம். இலாபம் ஒன்றே குறிக்கோள் என்பதை கருத்தில் கொண்ட செயற்படுபவர்களுக்கு அணு மின் உற்பத்தியே சாலச்சிறந்தது.

ஏனைய முறமைகளில் இந்த கொள்ளை இலாபம் பெறுவது ஒப்பீட்டு ரீதியில் குறைவு. எனவே பெரும் பண முதலைகள் மின்சாரத்திற்கு தங்களில் தங்கியிருந்து மனித குலம் வாழும் முறமைகளையே ஊக்கிவித்து செயற்படுவர். அணு மிச்சக்தி விபத்து என்றால் பாதிகப்படுவது சாதாரண பொது மக்களே. இந்த பண முதலைகள் அணு மின்நிலையங்களின் தாக்கம் இல்லாத? காத தூரத்தில் தமது மாட மாளிகையை அமைத்து சீவிப்பர் அணு உலைகளுக்கு அருகில் தமது கொட்டில், குடில்களை அமைத்து வாழும் சாதாரண பொது மக்களே அணு மின்நிலைய விபத்தின் போதும், என்றென்றும் அணு உலை இயக்கத்தின் போது தினம் தினம் கசியும் கதிர் இயகத்தினாலும் செத்து செத்து மடிவர். யாருக்குத்தான் கவலை இந்த குடி மக்களின் மரணங்கள். எனவே அணு சக்தி என்ற அரக்கனை தடுப்போம் மனித் குலத்தைக் காப்போம்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடகோடியில் அமைந்த இடைக்காடு தொண்டைமானாறு சந்தியில் தொண்டைமானாற்றை நன்னீர் ஆக்கும் திட்டத்திற்காக டி.எஸ். சேனநாயக்கினால் திறந்து வைக்கப்பட்ட பாரிய காற்றாடி அதன் உண்மையான செயற்பாட்டை செய்யாமல் பல காலம் சும்மா காற்றிற்கு சுழன்று கொண்டிருந்தது. இந்தக் காற்றாடி மூலம் மின்சாரமும் தயாரித்திருக்க முடியும். பின்பு 1980 வாக்கில் பாராமரிப்பற்ற சூழ்நிலையில் காற்றாடி விழுந்து நொருங்கியது. இதனைப் பயன்படுத்தி தொண்டைமானாறு நன்னீர் ஆக்கப் பட்டிருந்தால் இன்று தொண்டைமானாறு(ஊர் அல்ல ஆறு), தனது கடலில் கலக்கும் பாக்கு நீரிணையில் ஆரம்பித்து ஆனையிறவு வரைக்கும் யாழ்பாணத்தில் ஒரு நன்னீர் ஆறு ஒடியிருக்கும். யாழ்பாணத்தில் இன்னும் விவசாயம் பெருகியிருக்கும் நன்னீர் தட்டுப்பாடு இல்லாமவே இருந்திருக்கும். இது சாராம்சத்தில் கனடாவில் உள்ள நல்ல நீர் ழுவெயசழை டயமந போல் அமைந்திருக்கும். ஆனால் நீளத்தில் சிறியளவானதாக இருந்திருக்கும்.

காற்றாலை, நீர்ச் சுழச்சி போன்றவற்றின் உதவியுடன் பெறப்படும் மின்சாரத் தொழில் நுட்பம் இயற்கை வைத்தியம் போன்றது. பக்கவிளைவுகள் அற்றவை. இயற்கையுடன் இயைந்து செயற்படும் தொழில் நுட்பங்கள். அனல் மின்நிலையம், எரிபொருள் மின்நிலையம் போன்றவவை இயற்கையும், சற்று செயற்கையும் கலந்து செய்யும் வைத்தியம் போன்றது. இதில் உள்ள பக்க விளைவுகள் உண்டு ஆனால் ஒப்பீட்டளவில் குறைவானது. எனவே விபத்துக்கள் நடைபெற்றால் அழிவுகள் பாரியளவில் எற்பட வாய்பப்புக்கள் குறைவு. ஆனால் அணு மின் நிலையம் புற்று நோய்க்கு கதிர் இயக்க சிகிச்சை செய்வது போன்றதாகும் பக்க விளைவுகள் அதிகம். இது மனிதனின் வாழ்வை சில காலம் தள்ளி வைக்க உதவுமே ஒழிய, மனிதனைக் காப்பாற்றாது. இறுதியில் மரணம்மதான். இனிப் புரிந்து கொள்ளுங்கள் அணு சக்தி என்ற அரக்கனை.

கூடங்குளம் என்ன அது உலகின் எப்பாகத்திலும் அணு மின்நிலையம் அமைக்கப்படுவது மின்சார தேவையை பூர்த்தி செய்ய அவசியமானது என்ற வாதத்தை முன்வைத்தாலும் இது எப்போதும் மனித குலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதுதான் உண்மை நிலமை. இதுவும் ஒரு வகை அணு ஆயுதம்தான். இதனால்தான் அண்மையில் ஜப்பானில் எற்பட்ட அணு மின்நிலைய விபத்தின் பின்பு பல நாடுகள் தமது நாடுகளில் செயற்பட்டு வரும் அணு மின்நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்து இருக்கின்றன. புதிதாக உருவாக்க தீர்மானித்து இருந்த அணு மின் நிலையங்களை நிறுவுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளன. அதீத லாபங்களையும் மீறி ஏற்படப் போகும் அதீத ஆபத்து பலரையும் மிரட்டியும்தான் இருக்கின்றது. இது மனித குலத்திற்கு கிடைத்த வெற்றியே!

(நன்றி: பூபாளம்)

(ஓக்ரோபர் 10, 2012)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com